-
10th November 2014, 01:28 AM
#3311
Junior Member
Devoted Hubber
படம்: சாமி போட்ட முடிச்சு (1991)
பாடல்: மாதுளம் கனியே
பாடியவர்கள்: ராஜா சார், ஜானகி
எழுதியவர்: கங்கை அமரன்
எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை ஆரம்ப காலம் தொட்டு கேட்டு வந்தாலும், படம் பார்க்காததால் இது ஒரு தாலாட்டு பாடல் என்று தான் நினைத்து கொண்டிருந்தேன். டூயட் பாடல் என்று சமீபத்தில் தான் தெரிந்தது. முரளியும் சிந்துவும் மறைந்து விட்டார்கள், ஆனால் அவர்கள் வாயசைத்த இந்த பாடலுக்கு மரணம் இல்லை..
பாடல் பதிவு செய்து அன்று ஆர்கஸ்டிரா புல் ஹவுஸ் என்று நினைக்கிறேன், அவ்வளவு வாத்தியங்கள், அள்ளி தெளித்துவிட்டார்.
இந்த பாடலை அழகான ஆழியாறு அணை பகுதிகளில் படம் பிடித்திருக்கிறார்கள். ஊருக்கு போகும்போதெல்லாம் ஆழியாறு மற்றும் வால்பாறைக்கு செல்வதை ஒரு யாத்திரையாகவே செய்து வருகிறேன். எத்தனை பாடல்கள்? இந்த மலைகளும், மலை சார்ந்த இடங்களும் எத்தனை முறை அவருடைய பாடல்களுக்கு தலையாட்டி இருக்கும்? ம்.....
Last edited by rajaramsgi; 10th November 2014 at 01:40 AM.
-
10th November 2014 01:28 AM
# ADS
Circuit advertisement
-
13th November 2014, 03:05 AM
#3312
Senior Member
Senior Hubber
a song from Sathya which was not Included in the movie
https://soundcloud.com/shanmuganagar...there-same-joy
Thanks to Mr.Venkateswaran Ganesan.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
mappi thanked for this post
-
13th November 2014, 03:18 AM
#3313
Senior Member
Diamond Hubber

Originally Posted by
K
Wonderful composition from Raja. I also mentioned about this song here.
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1149653
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
14th November 2014, 08:37 AM
#3314
Senior Member
Diamond Hubber
ராஜா. ஜானகி. பாஸ் கிடார். கோரஸ். சொர்க்கம்.

சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
1st December 2014, 01:26 AM
#3315
Junior Member
Devoted Hubber
பாடல்: பூ என்றும் பொன்னே என்றும்
படம்: துருவ நட்ச்சத்திரம் (1993)
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: பாலசுப்ரமணியம், சித்ரா
-
1st December 2014, 12:01 PM
#3316
Senior Member
Seasoned Hubber
தும்பீ வா தும்பக் குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்சாலிடாம்...
ஓளங்கள் (1982) / அமோல் பலேகர் /பூர்ணிமா ஜெயராம் / பாலு மகேந்திரா / ஓ. என். வி. குருப் / இளையராஜா / எஸ். ஜானகி...
-
1st December 2014, 03:33 PM
#3317
Junior Member
Devoted Hubber

Originally Posted by
raagadevan
தும்பீ வா தும்பக் குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்சாலிடாம்...
ஓளங்கள் (1982) / அமோல் பலேகர் /பூர்ணிமா ஜெயராம் / பாலு மகேந்திரா / ஓ. என். வி. குருப் / இளையராஜா / எஸ். ஜானகி...
ராகதேவன்,
சரியான நேரத்தில் இதை பகிர்ந்துள்ளீர்கள். நேற்று காலை (2014-11-30) சன் டிவியில் ஒளிப்பரப்பான சன் சிங்கர் நிகழ்ச்சியில் கிட்டார் சதா சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். நீங்களும் பார்தீர்களா? நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவர் கிட்டாரில் தும்பி வா பாடலை வாசித்தார். நிகழ்ச்சியில் சதா அதிகம் பேசவில்லை . சிறிது நொடியே வரும் அந்த இசை தெய்வீக ஒலி, அருமை, கேட்க தவறியவர்களுக்கு இதோ லிங்க்:
மலையாளத்தில் வந்த இந்த அசல் பாடலை ராஜா சார் அப்படியே விட்டிருக்கலாமோ?
DOWNLOAD THE MP3 VERSION OF SADHA PLAYING THUMBI VA (1 min 35 seconds) (no need to have dropbox account, just download without sign up option)
Last edited by rajaramsgi; 1st December 2014 at 08:41 PM.
-
1st December 2014, 07:35 PM
#3318
Senior Member
Seasoned Hubber
Thank you for the link, rajaramsgi!
The guitar rendition is really great.
-
3rd December 2014, 11:04 AM
#3319
Senior Member
Diamond Hubber
பிறந்த நாள் வாழ்த்துகள் சில்க். December 2.
உன்னைப் போல இன்னொருத்தி வருவாளா என்பது சந்தேகம். ராஜாவின் இசையின் மூலம் நாம் நித்தமும் நினைக்கும் சினிமாக் கலைஞர்களில் குறிப்பாக நடிகைகளில் முக்கியமானவர் சில்க். அதுவும் ஜானகி குரல் பல நடிகைகளை அடையாளம் காண ஒத்துழைத்திருக்கிறது. சர்வ உணர்வுகளையும் இசையினால் வடிக்கும் திறமைகொண்ட ராஜா பாலுணர்வு பொங்கும் பாடல்களையும் அதியற்புதமாக படைத்திருக்கிறார். அதிலும் மெதுவான, மிதமான, வேகமான தாளக்கட்டுகளில்.. இந்தத் தளத்தில் ராஜாவை அடித்துக்கொள்ள இன்னும் யாருமே பிறக்கவில்லை.. அதற்கு முன்பும் யாருமே கிடையாது.. சரி.. இன்று சிலாகிக்கப்பட வேண்டியவர் சில்க் என்பதால் ராஜாவை இன்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம். ஒரு (திராவிட) தக்காண பீடபூமிப் பெண்முகம் என்பதற்கு சில்க் ஸ்மிதாவின் முகத்தை உதாரணமாகச் சொல்லலாம். காந்தக் கண்கள். நடனத்திலும் பெயர் போனவர். நடை, உடை, தோற்றம், நிறம் எல்லாமே ஒரு அழகு. குணச்சித்திரப் பாத்திரத்திலும் திறமையானவர். ஆனால் தீனிபோட சரியான படைப்பாளிகள் இல்லை. கவர்ச்சி என்ற தளத்தில் இவர் விட்டுச்சென்ற இடம் இன்னும் காலியாகவே இருக்கின்றது..


Last edited by venkkiram; 3rd December 2014 at 11:17 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
3rd December 2014, 11:17 AM
#3320
Senior Member
Diamond Hubber
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks