-
3rd December 2014, 11:52 PM
#211
Senior Member
Devoted Hubber
HAPPY 40th BIRTHDAY TO THE RAJA OF BOX-OFFICE Mr. RAJA : [26.1.1972 - 26.1.2011]
MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY !!!
[26.1.1972 : புதன்கிழமை, இன்று 26.1.2011 : புதன்கிழமை, என்னே ஒரு மகத்தான கிழமை ஒற்றுமை !]
இன்று 26.1.2011 குடியரசுத் திருநாளன்று, தனது 40வது பிறந்த நாளை மதுரை சென்ட்ரல் சினிமாவில் ரசிக ரோஜாக்கள் புடைசூழ மங்களகரமாகக் கொண்டாடினார் ராஜா ! இன்றைய வசூல் விவரங்கள் சில தினங்களில் !
ஞாயிறு (23.1.2011) மாலைக்காட்சி வரை மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.34,000/-. ஞாயிறு இரவுக்காட்சி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ,2,000/-. ஆக, ஞாயிறு (23.1.2011) வரை "ராஜா" ஈட்டிய மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.36,000/-.
நேற்று(25.1.2011) மற்றும் முந்தைய நாள்(24.1.2011) மொத்த வசூல் விவரங்கள்: (சற்றேறக்குறைய)
24.1.2011 : திங்கள் : ரூ.7,200/- [ரூபாய் ஏழாயிரத்து இருநூறு]
25.1.2011 : செவ்வாய் : ரூ.7,000/- [ரூபாய் ஏழாயிரம்]
ஆக மொத்தம், முதல் ஐந்து நாட்களில் மட்டும் "ராஜா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.50,200/-.
பழைய பட வசூல் வரலாற்றில், இது ஒரு அசுர சாதனை.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
விவரங்களை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு வளமான நன்றிகள் !
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
3rd December 2014 11:52 PM
# ADS
Circuit advertisement
-
3rd December 2014, 11:53 PM
#212
Senior Member
Devoted Hubber
புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை" திரைக்காவியம், கடந்த வெள்ளி(21.1.2011), சனி(22.1.2011), ஞாயிறு(23.1.2011) ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் சேலம் மாநகரின் 'அலங்கார்' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இத்தகவலை அளித்த ரசிக அன்பு நெஞ்சம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நயமிகு நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th December 2014, 01:44 PM
#213
Junior Member
Junior Hubber

Originally Posted by
sivaa
பதில் அனுப்ப முயன்றேன். இயலவில்லை.
எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!
-
5th December 2014, 08:27 PM
#214
Senior Member
Devoted Hubber

Originally Posted by
AREGU
பதில் அனுப்ப முயன்றேன். இயலவில்லை.
தனிமடல் கிடைத்தது நன்றி
எனது தனிமடல் பார்க்கவும்
-
5th December 2014, 08:41 PM
#215
Senior Member
Devoted Hubber
Real Vasool "RAJA"
ஆரவாரம் ! மகிழ்ச்சி !! சந்தோஷம் !!! ஆம்,
மதுரை சென்ட்ரல் சினிமாவில், 21.1.2011 வெள்ளி முதல் 27.1.2011 வியாழன் வரையிலான ஒரு வார காலகட்டத்தில், தினசரி 4 காட்சிகளில், வசூல் சக்கரவர்த்தியின் "ராஜா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.64,200/- [ரூபாய் அறுபத்து நான்காயிரத்து இருநூறு].
பழைய பட வரலாற்றில், பண்டிகை-விடுமுறை வாரம் என சிறப்பான காரணம் எதுவும் இல்லாமல், ஒரு சாதாரண வாரத்தில், இத்தனை வசூல் என்பது விண்ணை முட்டும் சாதனை. இக்காவியத்தை வெளியிட்டவர் ரூ.50,000/- வந்தாலே பரம திருப்தி என்றாராம். இப்பொழுது அவருக்கு பரிபூரண திருப்தி.
புதன்(26.1.2011) மற்றும் வியாழன்(27.1.2011) வசூல் விவரங்கள்: (சற்றேறக்குறைய)
26.1.2011 : புதன் : ரூ.7,500/- (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு)
27.1.2011 : வியாழன் : ரூ.6,500/- (ரூபாய் ஆறாயிரத்து ஐநூறு)
ஒரு வார (21.1.2011 - 27.1.2011) மொத்த வசூல் (சற்றேறக்குறைய) : ரூ.64,200/- [ரூபாய் அறுபத்து நான்காயிரத்து இருநூறு]
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
வசூல் விவரங்களை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு கனிவான நன்றிகள் !
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
5th December 2014, 08:41 PM
#216
Senior Member
Devoted Hubber
கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரில் உள்ள 'கமலா' டூரிங்கில், தங்கத்தமிழ்த்திருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம் 2.2.2011 புதன் முதல் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.
இத்தகவலை வழங்கிய குடந்தை அன்புள்ளம் திரு.ராமலிங்கம் அவர்களுக்கு குதூகலமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
5th December 2014, 08:42 PM
#217
Senior Member
Devoted Hubber
தாராசுரத்தில் "ராஜா"
கும்பகோணத்துக்கு அருகாமையில் தாராசுரத்தில் உள்ள 'சூரியகாந்தி' டூரிங்கில், 18.2.2011 வெள்ளி முதல் இன்று 20.2.2011 ஞாயிறு வரை, தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா" திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது.
இன்றைய[20.2.2011] மாலைக் காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய 200 பேர் இக்காவியத்தைக் கண்டு களித்திருக்கின்றனர். ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய். மாலைக் காட்சி வசூல் மட்டும் சற்றேறக்குறைய ரூ.2,000/-. இன்றைய காலகட்டத்தில், டூரிங் டாக்கீஸுகளை பொறுத்தமட்டில், இது சிகர சாதனை.
தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய குடந்தை அன்புள்ளம் திரு. ராமலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
5th December 2014, 08:42 PM
#218
Senior Member
Devoted Hubber
பழனியில் உள்ள 'சந்தானகிருஷ்ணா' திரையரங்கில், கடந்த 28.1.2011 வெள்ளி முதல் 31.1.2011 திங்கள் வரை நான்கு நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாக, தங்கத்திருமகனின் தன்னிரகற்ற திரைக்காவியமான "திரிசூலம்" திரையிடப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இச்செய்தியை வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
5th December 2014, 08:44 PM
#219
Senior Member
Devoted Hubber
நாஞ்சில் நகரின் 'பயோனீர்முத்து' திரையரங்கில், கடந்த 7.3.2011 திங்கள் முதல் 10.3.2011 வியாழன் வரை - நான்கு நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக - புரட்சித்திலகத்தின் முழுமுதற்காவியமான "பராசக்தி" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது.
நமது மாடரேட்டர் திரு.நௌ அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் வந்திருந்த போது ஸ்ரீவில்லிபுத்தூரில் "பராசக்தி" ஓடுவதை பார்த்து வியந்து அத்தகவலை 'பராசக்தி போஸ்டர்' புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். [பதிவிட்ட தேதி : 10.11.2010]. அந்த சுவரொட்டியில் 'எழுத்தின் சூப்பர் ஸ்டாரும் நடிப்பின் சூப்பர் ஸ்டாரும் இணைந்து படைத்த' போன்ற அருமையான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வாசகங்களைக் கொண்ட அதே டிசைன் போஸ்டர்கள் தற்பொழுது நாகர்கோவிலின் பிரதான இடங்கள் எங்கும் காணப்படுகிறது.
இனிக்கும் இத்தகைய மிட்டாய் தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு ஸ்வீட் தேங்க்ஸ் !
அன்புடன்,
பம்மலார்.
-
5th December 2014, 08:44 PM
#220
Senior Member
Devoted Hubber
சென்னை பெரம்பூரில் உள்ள 'மஹாலக்ஷ்மி' திரையரங்கில், கடந்த 18.3.2011 வெள்ளி முதல், முற்பகல் 11:30 மணிக் காட்சியாக, கலையுலக ஆண்டவரின் "ஆண்டவன் கட்டளை" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகின்றது.
இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks