மலேசியா, பினாங்கில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் விழா நிகழ்சிகளைப் பதிவு செய்த திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு மிக்க நன்றி. பினாங்கு வாழ் எம்ஜிஆர் ரசிகர்கள் தலைவர்பால் கொண்ட பக்தியும் அன்பும் எவருக்குமே கிடைக்காத பேறு. கடந்த ஆண்டு நடந்த விழாவில் நானும், சைதை திரு. ராஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டதும் மிகவும் மகிழ்ச்சியான தருணம். அம்மாநில மக்கள் தலைவர் மீது கொண்ட பாசத்தை அப்போது நாங்கள் கண்கூடாக காண நேர்ந்தது. சுமார் 2000 பேர் அமரக்கூடிய அந்த கூடத்தில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி ஓரத்தில் நின்றவர்கள் 500க்கும் மேல் இருக்கும். நிகழ்ச்சி 7.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 11.30க்கு முடிவடைந்தது. அது வரையிலும் ஆண்களும் பெண்களும் நிகழ்ச்சி முழுவதும் கண்டு களித்த பின்னரே கலைந்து சென்றனர். பெண்கள் நிறைய பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமல்லாது ஒவ்வொரு பாடலையும் தாங்களும் சேர்ந்து பாடினர்.

மேலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எம்ஜிஆர் குமார் அவர்கள் விழாவினை ஒருங்கிணைத்த விதம், நிகழ்ச்சியாளர்கள் சீருடை, லக்கி டிரா, விழா நிகழ்வுகள் என அனைத்தையும் திறம்பட செய்திருந்தார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சென்ற வருடம் நடந்த அந்த விழாவிலிருந்து சில காட்சிகள்:


ஆயிரத்தில் ஒருவனின் விழா மேடை


நிறைந்த அரங்கமும், உள்ளங்களும்





விழாவிற்கு வந்திருந்த சைதை திரு.ராஜ்குமார்


மாணவ மாணவியரின் 'சங்கே முழங்கு' நடனம்


சீருடை அணிந்திருந்த விழா நிகழ்ச்சியாளர்கள்



எம்ஜிஆர் விருது


உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்