-
6th December 2014, 11:32 PM
#11
Junior Member
Seasoned Hubber
தித்திக்கும் பாடல்கள் : 2ம் பதிவு
எல்லோருக்கும் அன்பு வணக்கங்கள் - 
ஏன் என்ற ஒரு கேள்வி இந்த நாட்டில் இன்னும் கேட்காததினால் எவ்வளவு பிரச்சனைகள் - எவ்வளவு அவமானங்கள் - எதையும் சகித்துகொள்ளும் நிலைமை - நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் . . நம்மில் இருக்கும் தன்மான உணர்ச்சி காற்றில் பட்டமாக பறக்கின்றது . எப்படியாவது வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் எப்படியும் வாழலாம் என்ற ஒரு முடிவுக்கு தள்ள படுகின்றோம் - இன்று அரசியலில் பலரை பார்க்கும் போது , ஏன் இவர்கள் எதையுமே அலசுவதில்லை ? ஏன் , எதற்கு என்று கேட்பதில்லை --- அடிமைகளாக வாழ்வதில் வெட்க படுவதில்லை - கேள்விகள் கேட்க்காததினால் அவர்களுடைய முன்னேற்றம் ஒரு பின்னோற்றமாகவே அமைகிறது - இந்த பாடல் ஆயிரத்தில் ஒருவனால் தான் பாட முடியும் - இன்று ஒவ்வொரு அரசியல் வாதியிடமும் , பள்ளி செல்லும் மாணவன் , மானவியிடமும் இந்த பாடல் இருக்க வேண்டியது அவசியம் - பள்ளிகளில் பிராத்தனை பாடலாக இதை வைக்கவேண்டும்
என்ன வரிகள் --- எவ்வளவு புதைந்துள்ள அர்த்தங்கள் - எவ்வளவு தலைமுறைக்கு பொருந்தும் வார்த்தைகள் - அடிமையாக அமையும் வாழ்க்கையில் தவறு இல்லை - அடிமையாகவும் வாழலாம் என்று வாழ்வதுதான் தவறு ..
நம்மை நாமே அலசிப்பார்த்தால் , முன்னுக்கும் , பின்னுக்கும் எவ்வளவு முரண்பாடாக இருக்கின்றோம் என்று தெரிய வரும் - உதாரணத்திற்கு சில
1.லஞ்சம் வாங்குறாங்களேனு கூப்பாடு போடுவோம் ,ஆனா நமக்கு காரியம் ஆகனும்னா லஞ்சம் குடுக்க யோசிக்கமாட்டோம்...
தீ
மிதிக்கிறப்ப, முன்னால ஓடினவன் கால் தடத்தை ஃபாலொ பண்ணி நாலே ஜம்ப்ல தாண்டிடுவோம்..
3.வாசல்ல எறும்புக்கு தீனியா அரிசிமாவு கோலம் போடுவோம்! வீட்டுக்குள்ள பூச்சி மருந்த தெளிச்சு கொன்னுடுவோம்..
4.இந்தியாவை தவிர மத்த எல்லா நாடும் சொர்க்கம்னு நினைபோம் .
5.ஃபாரின் போய்ட்டு வர்றவன்கிட்ட கோடாலி தைலம் வாங்கி வர சொல்லி நச்சரிப்போம் ..
6.பெண்களை கடவுளாக வணங்குவோம்.பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை எதிர்ப்போம்
7.சென்னைக்கு மிக அருகில் அப்படின்னு சொல்லி திண்டிவனத்துல இருக்குற ஃப்ளாட்ட காமிப்போம்...
8.உரிமையை கடமையாகவும்,கடமையை உரிமையாகவும் எடுத்துகிட்டு குழப்பிக்குவோம்
9.மார்கழி மாசம்..கோவில்ல புனல் ஸ்பீக்கர கட்டி..நாலாப்புறமும் ஒரு பயலையும் தூங்க விட மாட்டோம்
10.ஷாப்பிங் மால்ல மறுபேச்சில்லாம பொருள் வாங்கிட்டு வெளில இளனி விக்கறவன்ட பேரம் பேசுவோம்
11.சினிமாக்காரன் விளம்பரத்திற்கு வந்தா பினாயிலா இருந்தாலும் வாங்கி குடிப்போம்
12.வெளிநாட்டுக்காரன்னாலே புத்திசாலின்னு நெனைக்கறது
13.கோவிலில் சாப்பாட்டை பிரசாதம் என்றுசொல்லி வீட்டுக்கும் PARCEL வாங்குவது..
14அனுஷ்கா வந்தா ஜோதிகாவ மறப்போம்,சமந்தா வந்தா அனுஷ்கா மறப்போம்,நஸ்ரியா வந்தா சமந்தாவ மறப்போம்
15. 26 எழுத்து கொண்ட ABCD வரிசையாக சொல்லுவோம் ,ஆனா 18 எழுத்து கொண்ட " கஙசஞ " மாத்தி கூட சொல்ல மாட்டோம் .
16.இண்டர்நெட் கனக்க்ஷன் இருக்கும் அல்லது நெட் பேக் தீரும் வரைதான் மக்கள் போராட்டம், பெண்ணியம் , ஜாதி கொடுமை , மனித நேயம் பற்றி பேசுவோம் நெட் பேக் தீர்ந்த பிறகுலாக் அவுட் செய்து விட்டு தூங்கி விடுவோம்..
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் இந்த பாடலை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் - இன்று கேள்வி கேட்டால் நாளை நல்ல பதில் கிடைக்காமலா போய் விடும் ?
அருமையான பாடல் - வாலியின் ஊர்த்தவ தாண்டவத்தில் உருவான மற்றும் ஒரு பாடல் - மக்கள் திலகம் தன் நடிப்பினால் உயிர் கொடுத்த பாடல் - ஏழைகளின் தன் மானத்தை தட்டி எழுப்பிய பாடல் - சக்கரையில் ஒரு நாள் தித்திப்பு குறையலாம் - ஆனால் இந்த பாடலின் சுவை என்றுமே குறையாது , அதன் இனிமை , அதை பாடிய விதம் , TMS அவர்களின் ஈடுபாடு இந்த பாடலை என்றுமே சிரஞ்சீவியாக வைத்திருக்கும் .
மக்கள் திலகத்தை போல , இந்த பாடலும் ஆயிரத்தில் ஒன்றாக இன்னும் தேனை அள்ளி தெளித்து கொண்டிருக்கின்றது , தெளித்து கொண்டிருக்கும் .
This song delivers the wisdom
அன்புடன் ரவி
Last edited by g94127302; 7th December 2014 at 01:03 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
6th December 2014 11:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks