-
11th December 2014, 07:56 PM
#1941
Junior Member
Platinum Hubber
அடிமைப்பெண் விமர்சனம் by JEEVANANTHAM.
வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார் மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.
செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...
இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில் நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல் நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.
பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.
ஏமாற்றாதே....ஏமாறாதே...
தாயில்லாமல் நானில்லை...
அம்மா என்றால் அன்பு....
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.
இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.
கே வி மகாதேவனின் இசையில், கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது
-
11th December 2014 07:56 PM
# ADS
Circuit advertisement
-
11th December 2014, 10:40 PM
#1942
Junior Member
Platinum Hubber

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள்
இன்று போல் என்றும் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க
என என் சார்பாகவும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
-
12th December 2014, 05:02 AM
#1943
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடும் திருமதி சௌகார் ஜானகி மற்றும் திரு ரஜினிகாந்த் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
-
12th December 2014, 05:24 AM
#1944
Junior Member
Platinum Hubber
அடிமைப்பெண் -1.5.1969 முதல் நாள் - ரிபோர்ட்
அடிமைப்பெண் வெளியான முதல் நாள் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் திருவிழா போல் மக்கள் வெள்ளம்
ரசிகர்களின் ஆராவாரம் - படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த
புகழ் மாலைகள் .இந்திய திரை உலகமே எம்ஜிஆரை பாராட்டியது .
முதல் நாள் அடிமைப்பெண் படத்தின் ரிபோர்ட் .
அடிமைப்பெண் - ஹாலிவுட் படத்திற்கு இணையாக எம்ஜிஆர் தயாரித்து உள்ளார் .
காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு - படம் முழுவதும் பிரமாண்டம் . .
எம்ஜிஆரின் சிறந்த நடிப்பு - சிறந்த தயாரிப்பு - ஜெய்பூர் அரண்மனை - பாலைவனகாட்சிகள் -சிங்கத்துடன் மோதும்
சண்டை காட்சி - இனிய பாடல்கள் - உலகளவில் தமிழ் சினிமாவின் பெருமை உணர்த்திய காவியம் .
அடிமைப்பெண் - முந்தய படங்களின் சாதனைகளை முறியடிக்கும் .
சங்கிலியால் கட்டப்பட்ட எம்ஜிஆர் தன்னுடைய தேகத்தின் பலத்தை காட்டி , சங்கிலியை உடைதெறிக்கும் காட்சி
அபாரம் . சிங்கத்துடன் மோதும் போது காட்டும் முக பாவங்கள் - ஜஸ்டின் - மனோகருடன் மோதும் சண்டை காட்சிகள் அருமை .
1969ல் மெகா ஹிட் படம் .எம்ஜிஆரின் அடிமைப்பெண் - முதல் நாள் ரிபோர்ட் சொல்லாமல் சொல்லியது .
.
-
12th December 2014, 05:43 AM
#1945
Junior Member
Platinum Hubber
Adimai Penn – Tribute to the centenary of Indian cinema
One among the box office hits of MGR-Jayalalithaa team work was ‘Adimai Penn’. K Shankar directed movie ran25 weeks at Madurai and 100 days in all major cities of Tamil Nadu. Around three crore people saw this movie. The film ‘Adimai Penn’ told the story of revenge of a kingly family. The villain of the movie is a suburban king Sengodan who kill the king and imprison the queen and son. With the help of princess Jeeva the prince escapes and later captures his kingdom. The prince kills the villain Sengodan and save the queen from the prison. The supporting actors in the movie were R S Manohar and Cho Ramaswamy.Box office hit movie and broken the perivious records in 1969.
-
12th December 2014, 06:17 AM
#1946
Junior Member
Platinum Hubber
-
12th December 2014, 07:16 AM
#1947
Junior Member
Diamond Hubber
-
12th December 2014, 07:32 AM
#1948
Junior Member
Diamond Hubber
இன்று பிறந்த நாள் காணும் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள்
இன்று போல் என்றும் வாழ்க
பல்லாண்டு வாழ்க
என வாழ்த்தும்
தாய்க்கு தலைமகன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
-
12th December 2014, 08:37 AM
#1949
Junior Member
Seasoned Hubber
இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
மக்கள் திலகத்தின் ஆசிகள் என்றும் அவருக்குத் துணை நிற்கும்.
பல்லாண்டு வாழ்க.
-
12th December 2014, 08:40 AM
#1950
Junior Member
Seasoned Hubber
11000 பதிவுகளைக் கடந்து மாபெரும் சாதனை நிகழ்த்தியிருக்கும் எங்கள் மக்கள் திலகம் திரியின் கேப்டன் அருமை நண்பர் திரு.வினோத் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
Bookmarks