-
13th December 2014, 02:45 PM
#2081
Junior Member
Diamond Hubber
-
13th December 2014 02:45 PM
# ADS
Circuit advertisement
-
13th December 2014, 02:47 PM
#2082
Junior Member
Platinum Hubber
எம்ஜிஆர் -வெற்றி .
நாடக துறையில் அனுபவம் மற்றும் வீர தீர சண்டை பயிற்சிகள் கற்று கொண்டு இருந்ததாலும்அவருக்கு முதலில் கிடைத்த கதா பாத்திரங்கள் மூலம் தன்னை ஒரு ஆல் ரவுண்டராக மாற்றிகொண்டார் . முதலில் ராஜகுமாரி - மந்திரிகுமாரி - மருத நாட்டு இளவரசி - மர்மயோகி மந்திரிகுமாரி சர்வதிகாரி போன்ற ஆக்ஷன் படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை , வாள் வீச்சு சண்டை காட்சிகளை வெளிபடுத்தி 1950களில் தனக்கென்று ஒரு இளம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்
பின்னர் வந்த மலைக்கள்ளன் - குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரை வீரன்படங்கள் எம்ஜிஆரை ஒரு வசூல் மன்னராக உயர்த்திவிட்டது . மேலும் அவர் புரட்சிகரமான வேடங்களில் தோன்றியதால் புரட்சி நடிகர் என்ற பட்டமும் கிடைத்தது .திமுக இயக்கத்தில் அவருடைய உழைப்பு - பிரச்சாரம் மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது .
திமுக இயக்கத்தின் பீரங்கியாக வந்த படம் - நாடோடி மன்னன் . சமூக படங்களில் எம்ஜிஆர் பிரகாசிக்க தொடங்கினார் .திருடாதே - தாய் சொல்லைதட்டதே - நல்லவன் வாழ்வான் படங்கள்1961ல் மாபெரும் தாக்கத்தை உருவாக்கி எம்ஜிஆரை திரை உலக சக்ரவர்த்தியாக உயர்த்தியது .
1960களில் உருவான எம்ஜிஆர் ரசிகர்கள் கூட்டம் இந்தியாவிலும் , வெளிநாடுகளிலும் பல மன்றங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கில் சேர்ந்தார்கள்
எங்க வீட்டு பிள்ளை - ஏற்படுத்திய தாக்கம்
எம்ஜிஆருக்கு இமாலய புகழும் , லட்சக்கணக்கான ரசிகர்களும் கிடைத்தார்கள் . 1967ல் மரணத்தை வென்றார் .வெற்றி தேவதை அரவணைத்து கொண்டாள் . 1967-1977 எம்ஜிஆர் படங்கள் - அரசியல்தேர்தல் களங்கள் எல்லாமே வெற்றி வெற்றி வெற்றி .
சினிமாவிலும் புகழ் - அரசியலிலும் புகழ் . மக்களும் எங்க வீட்டு பிள்ளை யாக ஏற்று கொண்டார்கள் . இப்படி வெற்றி ஒன்றே தனதாக்கி வாழ்ந்து சரித்திரம் படைத்தவர் எம்ஜிஆர் .
courtesy - net
Last edited by esvee; 13th December 2014 at 02:51 PM.
-
13th December 2014, 04:06 PM
#2083
Junior Member
Diamond Hubber
-
13th December 2014, 05:19 PM
#2084
Junior Member
Diamond Hubber
-
13th December 2014, 05:29 PM
#2085
Junior Member
Diamond Hubber
வில்லாதி வில்லன்'' படத்தின் மூலம் டைரக்டராகவும் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தில் அவர் மூன்று மாறுபட்ட வேடங்களில்
நடித்தார்.நடிக்க வந்த புதிதில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால், டைரக்டராக ஆக விரும்பினார், சத்யராஜ். அதற்காக ஒரு கதையையும் தயார் செய்தார். அந்தக் கதை தெலுங்கில் படமாகி வெற்றியும் பெற்றது.
இதற்குள் சத்யராஜ் நடிப்பில் வெற்றி பெற்று பிசியாகிவிட்டதால், டைரக்ஷன் ஆசையை தள்ளி வைத்தார்.
நடிப்பில் நூறு படங்களை தாண்டிவிட்ட பின்னர், மீண்டும் டைரக்ஷன் ஆசை துளிர்க்க, துணிச்சலாக அவர் இயக்க முன்வந்த படமே "வில்லாதி வில்லன்.''
டைரக்ஷன் அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"அமைதிப்படை படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு பலரும் என்னிடம் "இனிமேல் நீங்க என்ன நடிச்சிடப் போறீங்க?'' என்று கேட்டார்கள்.
இந்த நேரத்தில் `நாமே ஒரு படத்தை டைரக்ட் செய்யலாமே' என்று தோன்றியது. அதோடு எனது 125-வது படமாக அமைய இருந்ததால் என் எண்ணம் உறுதிப்பட்டது. `படம் பேசப்பட வேண்டும்; என் நடிப்புக்காக மட்டுமின்றி, டைரக்ஷனுக்காகவும் பேசப்பட வேண்டும்' என்று விரும்பினேன். அப்படியொரு கதையையும் தயார் செய்தேன்.
ஒரு வக்கீல். அவருக்கு கால் நடக்க வராது. வீல் சேரில் தான் வாழ்க்கைப் பயணம். ஒரு வில்லன். ஒரு கண் பார்வை கிடையாது. அடுத்தது இளைஞன். பெரியார், அம்பேத்கார் கொள்கைகளில் ஊறித் திளைத்தவன். இந்த இளைஞன் அம்பேத்கார் மன்ற தலைவனாகவும் இருப்பான். இப்படி மாறுபட்ட 3 கேரக்டர்களின் பின்னணியில் ஒரு கதையை உருவாக்கினேன்.
படத்தில் பம்பாய் மாமி கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்தபோது, `சட்'டென நினைவுக்கு வந்தவர், ராதிகா. அவருக்கு போன் போட்டு பேசினேன். "நான் டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்கிறீங்க. கதை கேட்க எப்ப வர்றீங்க?'' என்று கேட்டேன். "இப்பவே வர்றேன்'' என்று புறப்பட்டு வந்தார்.
நான், "கதை சொல்கிறேன்'' என்று ஆரம்பித்தபோது, "நீங்க என்ன கதை சொல்றது? நீங்க டைரக்ட் பண்ற படத்தில் நான் நடிக்கிறேன். போதுமா?'' என்று சொல்லி முதல் ஆனந்த அதிர்ச்சி கொடுத்துவிட்டார், ராதிகா.
கவிஞர் வைரமுத்துவிடம் விஷயம் சொன்னபோது, வீட்டுக்கே வந்தார். நான் முதன் முதலில் டைரக்ட் செய்யும் படம் என்பதால் பெரியாரும், எம்.ஜி.ஆரும் வருகிற மாதிரி ஒரு பாட்டு வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். வைரமுத்து கொஞ்சமும் தயங்கவில்லை. `புறப்படு தமிழா புறப்படு' என்று எழுதிய பாட்டில் `சொல்லித் தருவேன் தந்தை பெரியார் போல்', அள்ளித்தருவேன் வள்ளல் எம்.ஜி.ஆர். போல்' என்று பொருத்தமாக இணைத்து விட்டார்.
படத்தின் `கிளாமர் நாயகி'யாக நக்மாவை ஒப்பந்தம் செய்தேன். அப்போது கிளாமரில் நக்மா கலக்கிய படம் இதுதான்.
இந்தப் படத்தின் சண்டைக் காட்சியிலும் இதுவரை யாரும் செய்திராத புதுமையை புகுத்த விரும்பினேன்.
சினிமாவில் கம்புச் சண்டை, கத்திச்சண்டை என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். சண்டைக் காட்சிகளில் அவர் மாதிரி லாவகம் யாருக்குமே வராது. இந்த கத்தி, கம்பு என 2 வகை சண்டைகளையும் ஒரே நேரத்தில் செய்ய விரும்பினேன். அதாவது ஒரு கையில் கம்பு, அடுத்த கையில் கத்தி! கம்புச் சண்டையின்போது, சிலம்ப வீச்சின் வேகம் இருக்க வேண்டும்; அதே நேரம் அடுத்த கையில் உள்ள கத்தியைக் கொண்டும் சுழன்று சுழன்று எதிரிகளை பந்தாடவேண்டும்.
படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரிடம் எனது இந்த `கம்பு - கத்தி' சண்டை பற்றி விவரித்து, "முடியுமா?'' என்று கேட்டேன். நான் சொன்ன விஷயம் அத்தனை சாத்தியமில்லை என்பது எனக்கே தெரியும். ஆனாலும் முடியாததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து விட்டால் வெற்றியே கிடைக்கும்.
ராம்போ ராஜ்குமார் ஒருகணம் யோசித்தார். என் கையில் சிலம்பம் வீசும்போது தப்பாத கால் வரிசை, அடுத்த கையில் கத்தி சுழற்றும்போது முன்னேறிப் போவது போன்ற வேகம் இந்த இரண்டும் ஒரே சண்டைக் காட்சியில் சாத்தியமா என்ற யோசனை அவர் மனதில் ஓடியிருக்கிறது. என் ஆர்வத்தில் இருந்த தீவிரம் அவரை ஒப்புக்கொள்ள வைத்திருக்க வேண்டும். "சரி சார்! செய்யலாம்'' என்று ஒப்புக்கொண்டார்.
இதற்குப்பிறகு நாங்கள் எடுத்த முயற்சிகள் வேகமானவை. எம்.ஜி.ஆர். படங்களில் கத்திச்சண்டை போடும் படங்கள், சிலம்பம் வீசும் படங்களை தேடிப்பிடித்து பார்த்தோம். 6 மாத இடைவிடாப் பயிற்சியில் இரண்டு கைகளிலும் இரண்டு வித்தைகள் பக்குவப்பட்டன.
இந்த சண்டைக் காட்சி படமானபோது, எங்கள் யூனிட்டில் உள்ளவர்கள் கூட ஆச்சரியமாய் பார்த்தார்கள்.
டைரக்ஷனோடு படத்துக்கு கதை-வசனமும் நானே எழுதினேன். படத்தை என் மானேஜர் ராமநாதன் தயாரித்தார்.
-
13th December 2014, 05:36 PM
#2086
Junior Member
Devoted Hubber
-
13th December 2014, 05:50 PM
#2087
Junior Member
Platinum Hubber
இந்த வார நக்கீரன் இதழில் வெளியான செய்தி.
-------------------------------------------------------------------------------
-
13th December 2014, 05:51 PM
#2088
Junior Member
Platinum Hubber
-
13th December 2014, 05:52 PM
#2089
Junior Member
Platinum Hubber
-
13th December 2014, 05:53 PM
#2090
Junior Member
Platinum Hubber
Bookmarks