-
14th December 2014, 07:18 AM
#11
Junior Member
Platinum Hubber
தமிழ் சினிமாவின் அவலநிலை .
தொழில்நுட்ப வளர்ச்சியில் அசூர முன்னேற்றம் கண்டுள்ள திரை உலகில் வியாபாரம் ஒன்றே குறிக்கோள் என்று தயாரிப்பளர்களும் , விநியோகஸ்தர்களும் , திரை அரங்கு உரிமையாளர்களும் , பத்திரிகை மற்றும் ஊடகங்கள்
அதிபர்களும் , விமர்சகர்களும் தங்களுடைய தொழில் தர்மத்தை மறந்து வெள்ளி -சனி - ஞாயிறு மூன்று நாட்கள்
வசூலை நம்பி பொய்யான விளம்பரங்கள் - மித மிஞ்சிய விமர்சனம் -கையூட்டு பணம் கொடுத்து ரசிகர்களையும் மக்களையும் ஏமாற்றுகின்ற அவல நிலை தற்போது வந்துள்ளது .நடிகரின் சம்பளம் கோடிகள் - தயாரிப்பு செலவு - பலகோடிகள் - விளம்பர செலவு- கோடிகள் .. .வியாபாரத்தில் கொட்டிய பணத்தை லாபத்துடன் மீட்க ஒரே நேரத்தில்
எல்லா திரை அரங்குகளை புக் செய்தல் - சமீபத்தில் புதுவையில் உள்ள எல்லா அரங்குகளும் ஒரே படத்தை திரை இட்டார்கள் . கொள்ளை லாபம் சம்பாதிக்க ?
ப்ளாக் விற்பனை மன்னர்கள் பல அரங்குகளில் முன்கூட்டியேடிக்கெட் வாங்கிவிட்டு வாங்கஆள் இல்லாமல் விழி பிதுங்கி நின்ற பரிதாபம் பார்க்க நேர்ந்தது .இன்றைய தமிழ் சினிமாவின் அவலநிலை எப்போது மாறுமோ ?
Last edited by esvee; 14th December 2014 at 07:21 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th December 2014 07:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks