Results 1 to 10 of 3997

Thread: Makkal thilagm mgr-part -12

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஊழலுக்கு வக்காலத்து

    மேற்குவங்க மாநிலத்தில் சாரதா சீட்டு நிதி நிறுவனம் மூலம் மோசடி நடத்தப்பட்டு மக்களின் பல கோடி ரூபாய் பணம் சுவாகா செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே சில அரசியல்வாதிகள் , எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஊழலில் தொடர்புடையதாக மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த மதன் மித்ரா என்பவரும் சிபிஐயால் கைதாகியுள்ளார். ஊழலில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பது புதிதல்ல. அதற்காக, சிலர் வக்காலத்து வாங்குவதும் புதிதல்ல. ஆனாலும், அந்த அமைச்சருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாங்கும் வக்காலத்து ஆபத்தாக இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அதுவும் கைதானவர்கள் பதவி விலகுவது தார்மீக மரபு. ஆனால், ஊழலில் தொடர்புடையதாக கைதானாலும் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க முடியாது என்று மம்தா கூறுகிறார். இது எங்கு போய் முடியுமோ?

    ஊழல் சமுதாயத்தில் எந்த அளவுக்கு புரையோடிப் போயிருக்கிறது பாருங்கள். ஊழலுக்கு என்றே ஒரு மாநில அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்றால் அது திரு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். 1976ல் ஜனவரி 31ம் தேதி அவரது அரசை திருமதி. இந்திரா காந்தி அம்மையார் டிஸ்மிஸ் செய்தார். விஞ்ஞானபூர்வ முறையில் ஊழல் புரிந்தவர் கருணாநிதி என்று அம்மையார் கூறினார்.

    அப்போது, தேர்தல் பிரசாரத்தில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள், ‘திமுக அரசை நாயை அடித்து தூக்கிப் போட்டது போல போட்டுவிட்டார்கள்’ என்று கூறினார். அதற்கு பதிலளித்த கருணாநிதி அவர்கள், ‘‘நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்ததே நான்தான். எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்’’ என்று கடுமையாக தாக்கினார். இதை இங்கே பதிவு செய்வதற்காக வருந்துகிறேன். இருந்தாலும் கூறக் காரணம் உண்டு. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கருணாநிதி எந்த அளவுக்கு மோசமாக விமர்சனம் செய்வார் என்பதற்குத்தான்.

    பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் இந்திரா காந்தி அம்மையார் பிரதமர் பதவி இழந்து, தமிழகம் வந்தபோது மதுரையில் அவர் மீது கொலைவெறி தாக்குதலை திமுகவினர் நடத்தினர். ஆனால், மூன்றே ஆண்டுகளில் அரசியல் நிலைமைகள் மாறின. புரட்சித் தலைவரின் அரசை இந்திரா காந்தி அம்மையார் டிஸ்மிஸ் செய்தார். திமுகவோடு கூட்டணி என்ற தவறான முடிவெடுத்தார். அப்போது, தமிழன் தமிழனாக வாழ திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முரசொலியில் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் விளம்பரம் கொடுத்தார். அவர் மீது தவறில்லை. காங்கிரஸ் மேலிடம் எடுத்த தவறான முடிவால் யாரை ஊழல்வாதி என்று சொன்னாரோ அதே கருணாநிதியின் ஊழலுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய நிலைமைக்கு அவர் ஆளானார். இந்திரா காந்தி அம்மையார் எடுத்த முடிவு தவறானது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியது. கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து புரட்சித் தலைவர் மீண்டும் முதல்வரானார்.

    ஊழலுக்கு வக்காலத்து வாங்குவதை அரசியல் வரலாறு கண்டிருக்கிறது என்றாலும் மம்தாவின் வக்காலத்து ஆபத்தானது.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 14th December 2014 at 04:07 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •