-
14th December 2014, 10:06 AM
#2131
Senior Member
Diamond Hubber
விமானத்திற்குள் எடுக்கப் பட்ட பாடல்கள் என்றால் இரண்டு தான் நினைவுக்கு வருகின்றன..எழுதியதற்குப் பொருத்தமெல்லாம் இல்லை.. வேறு வேறு சூழல்களில் இருக்கும் விமானப் பாட்டுக்கள் தந்திருக்கிறேன்.
சி.க.
உங்கள் மாமியார் மரணச் செய்தியைப் படித்து சோகமானது உண்மை. விதி வலியது. யாரால் மாற்ற இயலும்? அதுவும் சடென் டெத் என்றால் ஏக டென்ஷனாகும். ஆபிஸ் கெடுபிடிகள் எங்குமே இப்படித்தானோ!பார்மாலிட்டீஸ் என்ற பெயரில் சித்ரவதைகள். ஆனால் வேறு வழியில்லை.
நான் இன்னும் விமானப் பயணம் மேற்கொண்டதே இல்லை. பாருங்கள்.. இணையத்தின் மூலம் நட்பானவர்கள் பலரும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இங்கே இந்தியாவில் ஹைதராபாத் ரவி சார் பெரும்பாலும் ஏர்போர்ட்டில் இருந்தபடியேதான் எனக்கு கால் பண்ணுவார். இரண்டு நாட்களுக்கு முன் கூட மும்பை ஏர்போர்ட்டிலிருந்து கால் பண்ணினார். கோபாலும் பலமுறை அப்படித்தான் பண்ணுவார். இப்போது கூட நெய்வேலியின் மேல் பறக்கும் குட்டி விமானத்தின் சத்தம் கேட்டு வெளியே ஓடிப் போய் அண்ணாந்து கண்டுபிடித்து பார்த்து விடுவதுண்டு. பறந்து விரிந்து அடர்ந்து கிடக்கும் மரங்களின் இடைவெளிகளுக்கு மத்தியில் இத்துன்னூண்டு கோயம்புத்தூர் போகும் விமானம் தென்படும்போது ஒரு சிறு மகிழ்ச்சிதான். சென்னை சென்றால் தலைக்கு மேலே பெரிசு பெரிசா பறக்கும் விமானங்களை பார்க்க ஆசையாய் இருக்கும். ஆனால் பிரஸ்டிஜ்? ஆசையை அடக்கிக் கொண்டே யாராவது கேலியாக நினைக்கப் போகிறார்கள் என்று மனம் முழுக்க விமானத்தை நினைத்துக் கொண்டு வெளியே பார்வையில் அலட்சிய பாவம் காட்டி நானும் நடிகர் திலகமாகி விடுவது உண்டு. கொஞ்சம் விமானம் அநதப் பக்கம் போனவுடன் ஓரக்கண்ணால் பார்த்து கொஞ்சம் திருப்திப்பட்டுக் கொள்வதும் உண்டு.
இதைச் சொல்ல என்ன வெட்கம்? எல்லோருக்கும் உள்ளதுதானே!
Last edited by vasudevan31355; 14th December 2014 at 04:25 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th December 2014 10:06 AM
# ADS
Circuit advertisement
-
14th December 2014, 10:26 AM
#2132
Senior Member
Senior Hubber
//ஆனால் திறமை,ஈடுபாடு,தியாகம்,அறிவு,நேர்மை,தொழில் தேர்ச்சி இவையெல்லாம் வெற்றி-தோல்வி பாராமல் மனித குலத்தால் கொண்டாடி மகிழ பட வேண்டும். ஏனென்றால் ,இந்த அம்சங்கள் ஒருவனுக்கு இருந்தால் ,அவனால் சமூகம் பல விதங்களில் பயன் பட முடியும்.// கோபால் .. புதிய தொடர் ஆரம்பித்ததற்கு நன்றி..இன்னும் இன்னும் எழுதுங்கள்..
நான் இன்னும் விமானப் பயணம் மேற்கொண்டதே இல்லை. // அது சி.கவுடன் போக வேண்டும் என்று இருக்கிறது.. நேரில் சந்திக்கும் போது பேசுவோம்.. ராஜ்கபூர் பற்றி அப்புறம் எழுதுகிறேன் வாசுசார்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th December 2014, 03:11 PM
#2133
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள திரு.வாசு சார் அவர்களுக்கு,
எனக்கும் நேற்று கொஞ்சம் வேலை இருந்ததால் உடனே பதிலளிக்க முடியவில்லை. மன்னிக்கவும். கடவுள் இருக்கின்றார் பாடலை தாங்கள் வர்ணித்திருக்கும் விதம் அருமை. அந்தப் பாடலை தரவேற்றியதற்கும் நன்றி.
புத்தன் மறைந்து விட்டான், அவன் தன் போதனை மறைகின்றதா? வரிகளுக்கு தங்கள் மனதில் தோன்றிய எண்ணத்தை மிகவும் ரசித்தேன். மக்களின் திலகத்தின் பாடல் வரிகள் என்றாலும் கூட, அதில் நடிகர் திலகம் அவர்களைப் பற்றிய எண்ணமே உங்களுக்கு இருப்பதன் மூலமும் தேவையின்றி அடுத்தவரை காயப்படுத்தாத உயர் பண்பின் மூலமும் திரு. சிவாஜி கணேசனின் உண்மையான ரசிகர் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் ஒருவரும் திரு.சின்னக்கண்ணன் சாரின் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் அற்புதமான பாடலுடன் விரைவில் வருகிறேன். நன்றி.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
14th December 2014, 05:46 PM
#2134
Senior Member
Diamond Hubber
பாடல் இரண்டு
பாணி ஒன்று
தொடர் 4
நானே வருவேன்
அங்கும் இங்கும்
அடிக்கடி ஒலிக்கும் பாடலைக் கேட்டு குழம்பும் ஜெய்சங்கர். பேயா ஆவியா பிசாசா அல்லது பெண்ணா? வெள்ளை சேலை அணிந்து கொண்டு மலைப் பகுதிகளில் திரிந்தபடியே பாடும் ஜெயலலிதா. பின்னாலேயே தொடர்ந்து செல்லும் மக்கள் கலைஞர்.
அதே போலத்தான் இது.
வா அருகில் வா
தா உயிரைத் தா
என்றழைக்கும் மங்கை.
முகம் காட்டாத மங்கை வெள்ளை சேலை அணிந்து இரவில் நிலவொளியில் சவுக்குத் தோப்புகளினூடே பாடியபடி செல்ல, பின்னாலேயே பதறித் துடித்தபடி கண்டுபிடிக்கத் துரத்தும் கலைநிலவு ரவிச்சந்திரன். அந்த மங்கை வேறொருவன் அணைப்பில் மயங்கி பாடியபடி நடக்க, துரத்தும் ரவியை இன்னொருவன் துரத்த, சப்தநாடிகளும் ஒடுங்காமல் என்ன செய்யும்?
Last edited by vasudevan31355; 14th December 2014 at 05:51 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th December 2014, 05:53 PM
#2135
Senior Member
Diamond Hubber
-
14th December 2014, 05:56 PM
#2136
Senior Member
Diamond Hubber
//அது சி.கவுடன் போக வேண்டும் என்று இருக்கிறது//
ஆஹா! காத்திருக்கிறேன் சி.க.சார்.
கோபால் வியட்நாம் அழைத்துப் போக, நீங்கள் துபாய் அழைத்துப் போக, ராஜேஷ்ஜி டெக்சாஸ் அழைத்துப் போக, என் பாடு கொண்டாட்டமே. உள்ளூரிலேயே ரவி சார் வேறு திருப்பதி கூப்பிட்டிருக்கிறார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th December 2014, 07:39 PM
#2137
Junior Member
Seasoned Hubber
உண்மையான ரசிகன்
மீனாட்சி பாலகணேஷ்
கல்யாண மண்டபத்தின் இரைச்சலிலும், சப்தங்களிலும், உறவினர்களின் குசல விசாரிப்புகளிலும் பொழுது போனதே தெரியவில்லை. இளம் தம்பதிகளை வாழ்த்தி, பரிசையும் கொடுத்தாயிற்று. சிற்றுண்டியே பலமாக இருந்ததால், மதிய உணவுக்குக் கடைசிப் பந்திக்குப் போகலாம் என எண்ணிக் கொண்டேன். ‘வள, வள’ என அரட்டை அடிக்கப் பிடிக்கவில்லை. எல்லாத் திருமணங்களிலும், நாதஸ்வர வித்வானைத்தான் ஒருவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். திருமணங்களில் அவருடைய பங்கு ஒரு இன்றியமையாத கடமை. ஆனால், அவரை வாழ்த்தவும் ரசிக்கவும் ஆட்கள் அபூர்வம்- என்னைப் போல ஓரிருவரைத் தவிர!
இப்போது அவர், கொஞ்சம் ‘ரிலாக்ஸ்டாக’ ‘அலை பாயுதே’ வாசித்துக் கொண்டிருந்தார். அவர் முன்பு இருந்த காலியான ஆசனங்களில் ஒன்றில் நான் போய் அமர்ந்து கொண்டேன். இன்னும் ஒரு மனிதரும் அங்கே அமர்ந்திருந்து, தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தார். மெல்ல நாதஸ்வர வித்வான் வாசிப்பை நிறுத்தலாமா, இடைவேளை விடலாமா என யோசிக்கத் துவங்கும் முன்னர், அவரிடம் ஒடோடிப் போய், “ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே, பாட்டை வாசிப்பீர்களா?” என்று கேட்டேன். தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து வந்து ஒரு பெண்மணி ஏதோ ஒரு பாட்டைக் கேட்கிறார்களே என அவர் மகிழ்ந்து போய் விட்டார். “ஓ, கட்டாயமாக,” என்று கூறி விட்டு உற்சாகமாக வாசித்தார்.
கண்ணை மூடிக் கொண்டு, ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் நாதஸ்வர வித்வான் சண்முகசுந்தரம் வாசித்து ஜனங்களைப் பரவசத்திலாழ்த்தும் அந்தக் காட்சியை மனக்கண்ணில் கண்டு களித்தேன். குற்றாலமும், குறவஞ்சியும், அந்த அற்புதமான சூழலும் மனதில் தோன்றி உள்ளத்தைக் களிப்படையச் செய்தன. பாடல் முடிந்ததும், வித்வானும் குழுவும் உணவு அருந்தத் தயாராகி விட்டனர். நானும் எனது நன்றியைத் தெரிவித்தேன். “இப்பவெல்லாம் யாரம்மா ஜாஸ்தி இது மாதிரி கேட்கிறாங்க? பெரிய பெரிய வித்வான்கள் விடிய விடிய வாசித்தது, ஜனங்கள் ரசித்துக் கேட்டது, அதெல்லாம் ஒரு காலம்,” எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
அந்த இன்னொரு ரசிகரும் இப்பொது எழுந்து வந்து என்னுடன் உரையாட ஆரம்பித்தார். மிகவும் சிறிய வயதில் தான் கேட்ட நாதஸ்வர வித்வான்களின் வாசிப்பையெல்லாம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர் மிக சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சியைக் கூறினார்.
இந்த சென்னை 2014 டிசம்பர்- மார்கழி சங்கீத சீஸனில் இதைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
******
“எங்க ஊர் சுவாமி கோவிலில் திருவிழா. பெரிய பெரிய வித்வான்கள் வந்து பாடுவதும், நாதஸ்வரம் வாசிப்பதும் வழக்கம். அன்றைக்கு நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களுடைய நாதஸ்வரக் கச்சேரிக்கு ஏற்பாடாகி இருந்தது. அந்தக் காலத்தில் எங்கள் ஊர் சம்பிரதாயம் என்னவென்றால்,வெளியூரிலிருந்து பெரிய வித்வான் வாசிக்க வந்தால், உள்ளூர் வித்வான் அதே மேடையில் அவரை வரவேற்கிற மாதிரி முதலில் ஒரு பத்து நிமிஷம் வாசிப்பார். அதற்குப் பெயர் ‘எடுத்துக் கொடுக்கிறது’ என்பது. அதாவது பெரிய வித்வானை உள்ளூர் வித்வான் வரவேற்று, மரியாதை பண்ணி, அறிமுகம் செய்கிறது மாதிரி. அப்புறம் தான் பெரிய வித்வான் தொடர்ந்து வாசிக்க ஆரம்பிப்பார். இதெல்லாம் ராத்திரி ஒன்பது- பத்து மணிக்குத்தான் ஆரம்பம். கூட்டமான கூட்டம் ராஜரத்தினம் பிள்ளைவாளின் வாசிப்பைக் கேட்கக் கூடியிருக்கிறது.
“பிள்ளைவாளும் மரியாதையை ஏற்றுக் கொண்டு தன்னுடைய வாசிப்பைத் துவக்கியிருந்தார். என்ன ராகம் என்று நினைவு இல்லை. ஆனால் அவர் அப்போது தான் ஆரம்பித்து ‘உலாத்திக்’ கொண்டிருந்தார். அப்படி என்றால் என்ன தெரியுமா? ராகத்தை, ஆலாபனையை ஆரம்பித்து, ஒரு நாலைந்து வட்டங்களுக்குள்ளேயே திரும்பத் திரும்ப வலம் வருவார்கள். ராகத்தின் ஒவ்வொரு கூடுதல் நெளிவும் சுளிவும் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பிக்கும். பின்னே? நாலைந்து மணி நேரம் அல்லவா, விடிய விடிய வாசிக்கணுமில்லையா? அதனாலே பிள்ளைவாள் ‘உலாத்தி’க் கொண்டிருந்தார். கூட்டம் இதுலேயே கிறங்கிப் போய் தலையாட்டிக் கொண்டு இருக்கிறது!
“எங்க ஊரிலே ஒரு மனுஷர்- பேரு சீதாராம ஐயர். ஒரு பரதேசி மாதிரி இருப்பார். யாரையும் லட்சியம் பண்ண மாட்டார். ஊரே பிள்ளைவாள் வாசிப்பைக் கேட்க கல்யாண வீட்டுப் பந்தலிலே கூடிக் கிடக்கிறது. இவரானால் இங்கே ஊர்க்கோடியிலே, ஏதோ ஒருத்தர் வீட்டுத் திண்ணையிலே படுத்துத் தூங்கிக் கொண்டு இருக்கிறார்! ஒருமணி நேரம் ஆயிற்று; ரெண்டு மணி நேரமும் ஆயிற்று. ஒரு மனிதனும் மூச்சு விடவில்லை; ஒரு சிறு சப்தமுமில்லை; எல்லாரும் சங்கீதத்தில் மயங்கிக் கிடக்கிறார்கள். காற்றிலே மிதந்து வரும் நாதஸ்வர இசை சீதாராம ஐயரைத் தட்டிக் கூட எழுப்ப முடியவில்லை! இப்படியும் ஒரு ஞான சூன்யமா என்று எல்லாரும் நினைத்துக் கொண்டோம்.
“கொஞ்ச நேரத்துல பிள்ளைவாள் ‘உலாத்த’லை முடித்துக் கொண்டு பிருகாக்களையும், ஸ்பெஷல் பிடிகளையும், சங்கதிகளையும் வாணவேடிக்கை மாதிரி அள்ளி விட ஆரம்பித்தார். இதுவரை யாருமே கேட்டிராத கந்தர்வ கானம் அல்லது தேவகானம் அது! கூட்டம் தேன் குடித்த நரிகள் மாதிரி மயங்கிக் கிடக்கிறது.
திடீரென்று ஒரு சலசலப்பு! பார்த்தால் அங்கே வித்வானுக்கு முன்னால் மேடையின் எதிரில் நிற்கிறார் சீதாராம ஐயர். கண்ணிலிருந்து நீர் காவேரி மாதிரி வழிகின்றது. தலை இப்படியும் அப்படியும் பிள்ளையவர்களின் நாதஸ்வரத்திலிருந்து எழும் ஒவ்வொரு சங்கதிக்கும் ஆடுகின்றது.
பிள்ளைவாளும் வாசிப்பின் இடையிடையே இவரைப் பார்த்துக் கொள்கிறார். முழுமையாக வாசித்து முடித்தவர் அப்படியே எழுந்து போய் – அவர் கண்களிலும் நீர் வழிகிறது- சீதாராம ஐயரை ஆலிங்கனம் செய்து கொள்கிறார்- “நீர் தானய்யா உண்மையான, பரம ரசிகன்!” என்று கூறுகிறார். கூட்டம் பிரமித்துப் போய் அப்படியே உட்கார்ந்திருக்கிறது …………………..”
ஆமாம். அருமையான இசையை எல்லாராலும் கேட்டு அனுபவிக்க முடியும். ஆனால் கந்தர்வ கானத்தையும் தெய்வீக இசையையும் உணர்ந்து அனுபவிக்க சீதாராம ஐயர் போன்றவர்களால் தான் இயலும். அதையும் அந்த இசையின் பிறப்பிடமான ராஜரத்தினம் பிள்ளையவர்கள் போன்ற வித்வானால் தான் இனம் கண்டு கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு சான்று அல்லவா !
******
நானும் ஒரு அழகான ராகப் பிரயோகத்தைக் கேட்டதைப் போல இந்தக் கதையைக் கேட்டு விட்டு, உவகையில் நிறைந்து பொங்கிய உள்ளத்துடன் செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயலாமே எனச் சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி என் கணவருடன் விரைந்தேன்.
courtesy - net
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th December 2014, 08:35 PM
#2138
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
ராஜேஷ்ஜி டெக்சாஸ் அழைத்துப் போக, என் பாடு கொண்டாட்டமே.
If Rajesh brings you to Texas make sure he brings you to my place. There is a lot to see here!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th December 2014, 09:53 PM
#2139
Senior Member
Senior Hubber
கோபால் வியட்நாம் அழைத்துப் போக, நீங்கள் துபாய் அழைத்துப் போக,// துபாய் இல்லீங்க வாசு சார். மஸ்கட். இங்கிட்டிருந்து வேணும்னா துபாய் போய்க்கலாம்..! உள்ளூர் என்றால் டெல்லி காஷ்மீர் அல்லது பாக்டோக்ரா டார்ஜிலிங்க் ( இந்த வருடம் போய்வந்திருந்த இடம்) அழகு இடங்கள்..
கலைவேந்தன் சார்.. நீங்கள் பதிந்திருந்தது தி.ஜானகிராமனின் சாந்தி (வேறு பெயரா) சிறுகதையை நினைவு படுத்தியது..அதிலும் இது போலத் தான்..
நானே வருவேன் வா அருகில்வா படங்களில் எல்லாம் பெண்கள் பாடுவது போலப் பேய்க் காட்சி..இங்கு பாடுவது ஆண்..பார்த்து உடன் ஆடுவது..ம்ம் பேய்..அது பாடுபவனுக்கும் நமக்கும் தெரியாது அடுத்த காட்சிகள் வரும் வரை ! படம் யாமிருக்க பயமே..(பார்க்கவில்லை என்றால் பார்க்கலாம் வாசு சார்..)
Last edited by chinnakkannan; 14th December 2014 at 09:55 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th December 2014, 01:03 AM
#2140
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
பாடல் இரண்டு
பாணி ஒன்று
தொடர் 4
நானே வருவேன்
அங்கும் இங்கும்
அடிக்கடி ஒலிக்கும் பாடலைக் கேட்டு குழம்பும் ஜெய்சங்கர். பேயா ஆவியா பிசாசா அல்லது பெண்ணா? வெள்ளை சேலை அணிந்து கொண்டு மலைப் பகுதிகளில் திரிந்தபடியே பாடும் ஜெயலலிதா. பின்னாலேயே தொடர்ந்து செல்லும் மக்கள் கலைஞர்.
அதே போலத்தான் இது.
வா அருகில் வா
தா உயிரைத் தா
என்றழைக்கும் மங்கை.
முகம் காட்டாத மங்கை வெள்ளை சேலை அணிந்து இரவில் நிலவொளியில் சவுக்குத் தோப்புகளினூடே பாடியபடி செல்ல, பின்னாலேயே பதறித் துடித்தபடி கண்டுபிடிக்கத் துரத்தும் கலைநிலவு ரவிச்சந்திரன். அந்த மங்கை வேறொருவன் அணைப்பில் மயங்கி பாடியபடி நடக்க, துரத்தும் ரவியை இன்னொருவன் துரத்த, சப்தநாடிகளும் ஒடுங்காமல் என்ன செய்யும்?
onnu kaviyarasar, onnu vaali ayya rendume isaiyarasi kuralil azhagu paadal
Bookmarks