-
25th December 2014, 07:58 PM
#11
Junior Member
Veteran Hubber
ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளாகிய இன்று,, அவர் வேடத்தில் மனிதப்புனிதராம் நம் மக்கள் திலகம் அவர்கள் நடிக்க முடியாமல் போன “ஏசு நாதர்” காவியத்தை பற்ற்றிய சில செய்திகளை, அனைவருக்கும் “ கிறிஸ்துமஸ்” நல்வாழ்த்துக்களுடன் பதிவிடுவதில் ஆனந்தம் கொள்கிறேன்.
மக்கள் திலகம் நடிப்பில் உருவாக, “இயேசு நாதர்” துவக்கக் விழா 1969 ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 26 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை சத்யா ஸ்டுடிவில்,சிறப்பாக நடைபெற்றது.
நீண்ட வெள்ளை அங்கியுடன், உடலை சுற்றி தோளிலே சரிந்த சிவப்பு துண்டும், தோள் அளவு தாழ்ந்த தலைமுடியும், எழில் நிறைந்த குறுந்தாடியும், கனிவு சிந்தும், புன்னகையுடன் ஏசுநாதராக வேடம் புனைந்து காட்சி அளித்த நம் பொன்மனசெம்மலை கண்டதும், துவக்க விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மெய் சிலிர்த்து போனார்கள். அப்படியே ஏசுநாதரை போன்றே தோற்றமளித்த அவரை வணங்கியவர்கள் பலர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அப்போதைய கத்தோலிக்க ஆர்ச் பிஷப் அருளப்பா அவர்கள், நமது புரட்ச்த்தலைவரின் வேட பொருத்தத்தை கண்டு வியந்து, ஏசுபிரானின் வேடம் தாங்கிய திரு. எம். ஜி. ஆர். அவர்களின் உடல் அமைப்பு தனக்கு பிரமிப்பை ஏற்படுத்துவதாக கூறினார்.
பாதிரியார் அடைக்கலம் அவர்களோ, இன்னும் ஒரு படி மேலே போய், “ஏசு பிரானின் வேடத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை விட சிறந்த நடிகர் யாரும் இல்லை என்றார்.
பின்பு, வாழ்த்தி பேசிய ஆர்ச் பிஷப் அருளப்பா அவர்கள், “தேர்தலில், வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற நாளில், பேரறிஞர் அண்ணா அவர்கள், ஏழை எளியவர்களின் நலனுக்காக ஏசு பிரான் சிலுவையை சுமந்ததைப் போல், தான் இந்த அரசு பாரத்தை சுமக்க ஆரம்பித்துள்ளதாக கூறியதை நினைவ கூர்ந்த பொழுது, அனைவரின் கண்களிலும், கண்ணீரை வரவழைத்தது. அப்போதுதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் காலமாகி சுமார் 1௦ மாதங்கள் ஆகியது.
இறுதியில் நமது மக்கள் திலகம் உரையாற்றிய போது, “இங்கே நான் அமைதியாக இருக்கிறேன் என்று பலரும் பேசினார்கள். ஏசு நாதரைப் பற்றி அறிந்தவர்கள் அமைதியாக இருக்க கடமைப்பட்டவர்கள் என்றும், அதனால்தான், நான் அமைதியாக இருந்தேன்”
என்று தன்னடக்கத்துடன் கூறினார். இந்த நிகழ்வு, ஏசு நாதரே நேரில் வந்து பேசியது போல் இருந்தது அன்று பலரும் சிலாகித்தனர்.
தயாரிப்பாளர் தாமஸ் நன்றி கூறினார்.
இந்த ஏசு நாதர் காவியத்தை, வின்சென்ட் அவர்கள் ஒளிப்பதிவில், ஜோசப் தளியத் அவர்கள் இயக்குவதாக இருந்தது.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
25th December 2014 07:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks