-
6th January 2015, 11:04 AM
#2511
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
.. intha karuvaadu meenai vEga vachchu kaaya vaippaangaLaa..(oru chiinna doubt)..

It is highly salted (preservative) raw fish dried under the sun !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th January 2015 11:04 AM
# ADS
Circuit advertisement
-
6th January 2015, 12:08 PM
#2512
ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் தினம்: 6-1-1966 - வருஷம் 66 ஆ அல்லது 67 என்று சிறு குழப்பம் உள்ளது ?
எல்லாப் புகழும் இறைவனுக்கே
.jpg)
பவித்ரா திரைபடத்தில் இடம் பெற்ற உன்னிக்ரிஷ்ணன் பாடிய 'உயிரும் நீயே உறவும் நீயே '
-
6th January 2015, 01:05 PM
#2513
Senior Member
Senior Hubber
//முள்ளும் மலரும்' பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகின்றன. 'மதுர கானங்கள்' தொடர்களிலேயே என்னை பெண்டு நிமிர்த்திய படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் மனம் முழுக்க ஒரு திருப்தி பரவிக் கிடப்பதை மறுப்பதற்கில்லை. // படிக்கும் போதே ஒரு படைப்பாளி என்ற நிலையில் (?!) என்னால் உணர முடிகிறது வாசுசார்.. ஆனால் அந்த ஸேடிஸ் ஃபேக்*ஷன் -மனதுள்ளாழ்ந்து முகிழ்த்து இருக்கும் எண்ணம் இறக்கி விட்ட பின் ஏற்படும் பரவச நிலை -அதற்கு ஈடு எதுவும் கிடையாது.. மெய்யாலுமே நல்ல முயற்சி..நன்றாகவும் வந்திருக்கிறது..என் சார்பாக ஒரு ஃபைவ் ஸ்டார்..இருங்க இருங்க அடிக்காதீங்க..சரி ஒரு ட்ராபிகனோ ஆரஞ்ச் ஜூஸ் வாங்கிக்கோங்கோ.
இந்தப் படம் போடுவதுஎன்பது (புகைப்படம்) எனக்கும் பிடிபட மாட்டேனென்கிறது..எழுதிக் கொண்டிருப்பதை இந்த வாரத்தில் முடித்து விடுவேன் என நினைக்கிறேன்..கொஞ்சம் சொல்லுங்களேன்..(இந்த போட்டோ பக்கெட்டெல்லாம் எனக்குப் புரியவில்லை..)
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
6th January 2015, 01:07 PM
#2514
Senior Member
Senior Hubber

Originally Posted by
rajraj
It is highly salted (preservative) raw fish dried under the sun !

ஒரு நாவலில் வேகவைத்து என்று வருகிறது..ராஜ் ராஜ் சார்..
-
6th January 2015, 05:15 PM
#2515
Senior Member
Senior Hubber

Originally Posted by
rajraj
vasu: I was joking about dinner. Don't plan on rushing to Cuddalore or Porto Novo to fish for pomfret!

I am a light eater. It becomes even lighter when I travel. When we travel we usually carry dark chocolate and nuts( almond, cashew, pistachio,walnut and hazelnut). You can feed me pattaaNikkadalai or pottukkadalai I miss here !

I like boiled raw peanuts (mallakkottai? ) !

ராஜ்ராஜ், நீங்களும் கடலூரா? மல்லாக்கொட்டையைப்பத்தி சொல்லியிருக்கீங்க. வேற ஊர்காரர்களுக்கு தெரியாது இல்லையா?
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
6th January 2015, 05:34 PM
#2516
Junior Member
Seasoned Hubber
திரு. வாசு சார்,
உங்களின் முள்ளும் மலரும் விமர்சனத்தை நான் பாராட்ட விரும்பவில்லை. என்ன சொல்லி பாராட்டினாலும் அது குறைவாகத்தான் இருக்கும் என்பதால் நன்றி மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கும் பதார்த்தங்கள் சுவை மிக்கவை என்று பார்த்தாலே தெரிகிறது. இருந்தாலும், நீங்கள் கருத்துக்கு விருந்தளித்திருக்கும் எழுத்துக்களின் சுவையை அவை நெருங்க முடியாது.
நீங்கள் குறிப்பிட்டது போல....
அடடா!அருமை! கோவில் மாடு மாதிரி தீனி தின்று ஊரை ஆம்பிளை போல் சுற்றி வந்த மங்காவுக்குள் இருக்கும் நளினமான பெண்மை இப்போது நயமாக வெளிப்படுகிறது காளியே வியந்து போகும் அளவிற்கு. அதுவும் சாப்பாடு சூடாக இருக்கும்போது சுவையாக இருப்பது போல் தான் சூடாக இருப்பதாய் நாசூக்காய் உணர்த்தி தன்னையே சாப்பிட வருமாறு அவள் கோரிக்கை வைத்து அவளுக்குள் ஒளிந்திருக்கும் அந்தரங்கப் பெண்மையை அழகாக, அருவருப்பின்றி, ஆபாசமில்லாமல் வெளிப்படுத்துகிறாள்.
.......... திருக்குறளின் மூன்றாம் பாலை அழகாக, அருவருப்பின்றி, ஆபாசமில்லாமல் வெளிப்படுத்தியிருப்பது மங்கா மட்டுமல்ல, அவளது உணர்வுகளை எழுத்தாக வடித்திருக்கும் நீங்களும்தான். அறுசுவை விருந்தளித்த உங்களுக்கு நன்றிகள் சார். அதான் விருந்தளித்தாகி விட்டதே என்று திருப்திப்படக் கூடாது. தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
திரு.சின்னக் கண்ணன் சார்,
.......‘‘என் சார்பாக ஒரு ஃபைவ் ஸ்டார்..இருங்க இருங்க அடிக்காதீங்க..சரி ஒரு ட்ராபிகனோ ஆரஞ்ச் ஜூஸ் வாங்கிக்கோங்கோ.’’.......
........... உங்கள் பெயர் நீங்கள் பிறந்தவுடனே பெற்றோர் வைத்த பெயரா? அல்லது கொஞ்சம் வளர்ந்த பின், குறும்புகளைப் பார்த்து வைக்கப்பட்ட பெயரா?. அவ்வப்போது நான் மானிட்டரை பார்த்து சிரிக்க காரணமாக இருக்கிறீர்கள். நன்றி.
திரு.கிரு(சிரி)ஷ்ணா சார்,
படாபட் ஜெயலட்சுமி பற்றிய ஆராய்ச்சி கலந்த ‘அரிய’ தகவல்களுக்கு பாராட்டுக்கள்.
திரு.காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் எதிர் நீச்சல் படத்தில் நாகேஷின் கல்லூரித் தோழராக நடித்திருக்கிறார் என்ற தகவலை பதிவிட்ட திரு.பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th January 2015, 06:18 PM
#2517
Senior Member
Diamond Hubber
நன்றி ராஜ்ராஜ் சார்.
தங்களுக்குப் பிடித்த எந்த வகை உணவாயினும் சரி1 நெய்வேலி வந்து சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும். எப்போது வருவீர்கள் என்று முன்னமேயே சொல்லி விடுங்கள்.
அன்பு நண்பர் கல்நாயக் கூறியது போல மணிலா கொட்டை என்று அழைக்கப்படும் வேர்க்கடலை பேச்சுவழக்கில் மல்லாக் கொட்டை இன்னும் கொச்சை வழக்கில் மல்லாட்டை என்று எங்கள் கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டாரங்களில் அழைக்கப்படும். நீங்களும் தஞ்சாவூரை சேர்ந்தவர். அதனால் பேச்சு வழக்கிலும் கூட மிகவும் நெருங்கி விட்டீர்கள். 'மல்லாக் கொட்டை' என்று ரொம்ப நாள் கழித்துக் கேட்க எவ்வளவு சந்தோஷம்!
நீங்கள், நான், கல்நாயக் மூவரும் சேர்ந்து கடலையை அவித்து மாங்காய்த் துண்டுகள், காய்ந்த மிளகாய், சீரகம், சிறிது மிளகுத் தூள், கொஞ்சம் புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து சுண்டலாக்கி ஒரு வெட்டு வெட்டி 'மங்கா'த்தா விளையாடலாம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th January 2015, 06:26 PM
#2518
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
// படிக்கும் போதே ஒரு படைப்பாளி என்ற நிலையில் (?!) என்னால் உணர முடிகிறது வாசுசார்.. ஆனால் அந்த ஸேடிஸ் ஃபேக்*ஷன் -மனதுள்ளாழ்ந்து முகிழ்த்து இருக்கும் எண்ணம் இறக்கி விட்ட பின் ஏற்படும் பரவச நிலை -அதற்கு ஈடு எதுவும் கிடையாது.. மெய்யாலுமே நல்ல முயற்சி..நன்றாகவும் வந்திருக்கிறது..என் சார்பாக ஒரு ஃபைவ் ஸ்டார்..இருங்க இருங்க அடிக்காதீங்க..சரி ஒரு ட்ராபிகனோ ஆரஞ்ச் ஜூஸ் வாங்கிக்கோங்கோ.
இந்தப் படம் போடுவதுஎன்பது (புகைப்படம்) எனக்கும் பிடிபட மாட்டேனென்கிறது..எழுதிக் கொண்டிருப்பதை இந்த வாரத்தில் முடித்து விடுவேன் என நினைக்கிறேன்..கொஞ்சம் சொல்லுங்களேன்..(இந்த போட்டோ பக்கெட்டெல்லாம் எனக்குப் புரியவில்லை..)
மிக்க நன்றி சி.க தங்கள் வளமான பாராட்டிற்கு.
அது என்ன? ஒரு சந்தேகம்? 'படைப்பாளி என்ற நிலையில்' பக்கத்தில் ஒரு ஆச்சரியமும், கேள்விக்குறியும். அதில் என்ன திடீர் சந்தேகம் உங்களுக்கு? உங்களைப் போல தமிழை இலகுவாய் அழகாய் உணர்த்த இங்கு ஒரு சில பேர்கள் தான் இருக்கிறார்கள். வளமான தமிழோடு நகைச்சுவை இழையோட பதிவுகள் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே. தங்கள் தமிழறிவை நினைத்து பலமுறை வியந்து போய் இருக்கிறேன். கிருஷ்ணாவும், நானும் பலமுறை போனில் கூட தங்கள் பதிவுகளை ரசித்து பேசி மகிழ்ந்திருக்கிறோம். ஒரு அருமையான படைப்பாளிக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வரப்படாது. தங்களைப் போல செய்யுளோ, விருத்தமா, இல்லை புதுக் கவிதையோ எழுத தலை கீழாய் நின்றாலும் என்னால் முடியாது. கலைவேந்தன் சார் சொன்னது போல மிக அருமையான படைப்பாளி நீங்கள். உங்கள் தமிழுக்கு இங்கே பலர் அடிமை.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
6th January 2015, 06:41 PM
#2519
Senior Member
Diamond Hubber
கலைவேந்தன் சார்,
மிக்க நன்றிகளும், சந்தோஷமும்.
இன்று மதியம் ராஜ் தொலைக்காட்சியில் 'தேடி வந்த மாப்பிள்ளை' போட்டார்கள். சாப்பிட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். நன் சாப்பிட அமர்ந்ததும் 'சொர்க்கத்தைத் தேடுவோம்' பாடல் ஆரம்பமானது. எனக்கு மிக மிக பிடித்த பாடலது. ஜாலியாகப் பார்த்தபடி சாப்பிட்டேன். அப்போது வினோத் சாரையும், தங்களையும் நினைத்துக் கொண்டே சாப்பிட்டேன். 'தபலா மாமா... டோலக்கு தாத்தா' செம ரகளை. ஆனால் நிறைய கட். மோசமான பிரிண்ட் போல. இந்தப் படமும் எனக்கு பிடித்த படம் கூட. எம்ஜிஆர் அவர்களின் பாணியிலிருந்து சற்றே மாறுபட்டு நகைச்சுவையுடன் நன்றாகப் பொழுது போகும். பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது. அத்தனைப் பாடல்களும் சிறப்பாக அமைந்த ஒரு படம்.
முக்கியமாக ஜோதிலஷ்மி பிரமாதமாக நடித்த படம் இது. படுசுட்டித்தனமாக பாக்கெட் அடித்து (அதுவும் கொள்கையுடன் கூடிய நேர்மையான பிக் பாக்கெட்டி
)சுற்றிவரும் கேரக்டர். செம ஜாலியாகப் பண்ணியிருப்ப்பர். சாமுத்ரிகா லட்சணம் முழுதும் பொருந்திய நடிகையாம் இவர். 'இடமோ சுகமானது' பாடலில் எம்ஜிஆர் அவர்கள், ஜெயலலிதா, ஜோதிலஷ்மி மூவரும் பின்னுவார்கள். ஜோதிலஷ்மியின் கிண்டலான ஆட்டம் அமர்க்களம். இந்தப் பாடல் எனது மிக மிக விருப்பமான பாடலாகும்.
அது போல மதுர கானத்தில் பங்கு கொண்டு பதிவுகள் இடும் அன்பர்கள் எவரையும் விட்டுவிடாமல் தங்கள் பொன்னான நேரங்களுக்கிடையில் அவர்கள் பதிவுகள் ஒவ்வொன்றையும் விடாமல் படித்து நீங்கள் அவரக்ளைப் பாராட்டி உற்சாகப்படுத்துவது மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இதற்கு மிகப் பெரிய விசாலமான மனது வேண்டும். அது உங்களிடம் அதிகமாகவே இருக்கிறது. நன்றி கலை சார்.
Last edited by vasudevan31355; 6th January 2015 at 06:48 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
6th January 2015, 08:46 PM
#2520
Junior Member
Seasoned Hubber
நன்றி திரு.வாசு சார்.
தேடிவந்த மாப்பிள்ளை படம் பார்த்துக் கொண்டே சாப்பிட்டபோது என்னை நினைத்துக் கொண்டதாக நீங்கள் கூறியிருப்பதன் மூலம், சாமானியனான எனக்கு உங்கள் மனதில் இடம் கொடுத்திருப்பது .....நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் 125வது படத்தின் பெயர் உங்களுக்கு பொருந்தும்.
திரு.சின்னக்கண்ணன் சாரின் தமிழுக்கு இங்கே பலர் அடிமை என்று கூறியுள்ளீர்கள். அந்தப் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
Bookmarks