-
12th January 2015, 10:58 PM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
venkkiram
இது போன்ற சாதனைக்கெல்லாம் யாருக்குமே அழைப்பிதழ் கொடுத்து விழாவிற்கு வருகை தாருங்கள் என கூப்பிடத் தேவையே இல்ல என்பது எனது கருத்து. இளையராஜா நம் நாட்டின் பொக்கிஷம், விலைமதிக்க முடியாத செல்வம். இந்தியத் திரைப்பட வரலாற்றில் அவரது இந்த சாதனை மிக முக்கியமான நிகழ்வு. அவரது இசையை சுவாசித்தவர்கள், அவரது இசையின் மூலம் கற்றுக்கொண்டவர்கள், அவரது இசையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தவர்கள், அவரது இசையில் கோலோச்சியவர்கள் என எல்லோருமே தானாகவே விழாவிற்கு வருகை தரலாம். அதெல்லாம் ஒரு கடமை.
ரஹ்மான் நம்மை போல் சாதாரண விசிறி அல்ல. விழாவை நடத்தும் பால்கி, சுசீலா, ஜானகி, பாலு, தாசேட்டன் போன்றவர்களை அழைத்திருப்பதாக தகவல். அது போல் ரஹ்மானையும் அழைத்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் எனது பதிவின் சாராம்சம். அது புரியாமல் இதையும் ஒரு சாக்காக வைத்து ரஹ்மானையும் சாதாரன ரசிகராக சித்தரிப்பது ரொம்ப ஓவர். ரஹ்மானை அழைத்து ராஜாவின் சாதனையை பற்றி பேச அவருக்கு நேரம் ஒதுக்கலாம். நம்மை போல் சாதாரன ரசிகர்களுக்கு அல்ல.
Last edited by thozhar; 12th January 2015 at 11:04 PM.
-
12th January 2015 10:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks