-
14th January 2015, 11:15 AM
#1221
Junior Member
Platinum Hubber
Engaveettu pillai - golden jubilee year very nice postings. Thanks Roop sir
-
14th January 2015 11:15 AM
# ADS
Circuit advertisement
-
14th January 2015, 11:26 AM
#1222
Junior Member
Platinum Hubber
Thanks for the information Kumar Sir
''Neeya Nanaa ?'' programme about Makkal Thilagm MGR 9 am on 16th jan @ vijay tv.
-
14th January 2015, 02:48 PM
#1223
Junior Member
Platinum Hubber
வேட்டைக்காரன் -1964
வேட்டைக்காரனில் எம்.ஜி.ஆரை கௌபாய் டிரஸ்ஸிலும் நாலு வயது பையனுக்கு அப்பா வேஷத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்தார் தேவர். அத்தனை வருடங்கள் எம்.ஜி.ஆரின் தாயாக, பாசம் பொழிந்த கண்ணாம்பா காலமாகியிருந்தார். புதிய அன்னை எம்.வி. ராஜம்.
மகாதேவன், வேட்டைக்காரன் படத்தில் மெட்டுப் போட்ட பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரப் புகழையும் பெருமையையும் தேடித் தந்தன.
தேவர். 1963 தீபாவளி அன்று வெளியானது பரிசு. எம்.ஜி.ஆரும், சாவித்ரியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்து படம் வெற்றிகரமாக ஓடியது. டி. யோகானந்தின் படம் அது. தேவரும் வேட்டைக்காரனில் அதே ஜோடியைப் பயன்படுத்த முடிவு செய்தார். சரோவுக்குப் பதில் சாவித்ரி வந்தார்.
வேட்டைக்காரன் படத்தில் சாவித்ரி நடிப்பதற்காகக் காட்சிகள் வலுவூட்டப்பட்டன. அதை எம்.ஜி.ஆர். வரவேற்றார். சரோஜா தேவிக்கும் கூடுதலாகவே கவர்ச்சியாக எம்.ஜி.ஆருடன் சாவித்ரி ஆடிப்பாடினார். மெதுவா மெதுவா தொடலாமா உன் மேனியிலே என் கை படலாமா
எம்.ஜி.ஆரின் புதிய கெட்-அப் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. சென்னை சித்ரா தியேட்டர் அல்லோலகல்லோலப்பட்டது. திரையிலும் தியேட்டருக்குள்ளேயும் எல்லாம் தொப்பிகளாகவே தெரிந்தன.
வேட்டைக்காரனுக்காக சித்ரா தியேட்டர் வாசலில் ரசிகர்களே காடும் மலையும் சூழ்ந்த அரங்கம் அமைத்தார்கள். அதில் வேட்டைக்காரன் தோற்றத்தில் எம்.ஜி.ஆருக்குச் சிலை. ஏறக்குறைய ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவானது. தீ அணைப்பு எஞ்சின்களுக்கு மட்டும் ஏழாயிரம் கொடுத்தார்கள்.
வாள் வீச மட்டுமே எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அவர் பேன்ட் ஷர்ட் அணிந்து நடித்தால் படம் ஓடாது என்கிறக் கருத்து கோடம்பாக்கத்தில் நிலைபெற்றிருந்தது. தேவர் அதை மாற்றிக் காட்டினார். சமூகப் படங்களிலும் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.
courtesy.
(பா. தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் புத்தகத்திலிருந்து)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th January 2015, 04:22 PM
#1224
Junior Member
Seasoned Hubber
சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
கடந்த 2 நாட்களாக அலுவல் நெருக்கடியால் திரியை பார்க்க முடியவில்லை. இன்றுதான் பார்த்தேன். உங்கள் பதிவையும் பார்த்தேன். மிகுந்த வேதனை அடைந்தேன். திரு.குமார் சார் அவர்கள் மூத்த ரசிகர். தனது கருத்தை கூறியுள்ளார். அதை நீங்கள் ஏற்கலாம். அல்லது ஏன் மீள் பதிவு செய்கிறேன் என்று விளக்கம் அளிக்கலாம். இல்லை, ஏற்காமல் இருக்கவோ, விளக்கமே அளிக்காமல் இருக்கவோ கூட உங்களுக்கு தாராளமாக உரிமை உண்டு. ஆனால், அதற்காக, திரியில் பார்வையாளனாக மட்டுமே இருப்பேன் என்று கூறுவது வேதனை அளிக்கிறது.
தலைவரின் அபூர்வ படங்களை பதிவிடுகிறீர்கள். நெட், பேஸ்புக்கில் இருந்து நல்ல தகவல்களை பதிவிடுகிறீர்கள். இங்கு மட்டுமல்ல, திரு.சிவாஜி கணேசன் அவர்கள் திரியிலும் அவர்களே பார்த்திராத படங்களை பதிவிடுகிறீர்கள். பொன்மனச் செம்மலின் ரசிகர்கள், தொண்டர்களின் பெருந்தன்மைக்கும், பரந்த மனப்பான்மைக்கும் காழ்ப்புணர்ச்சியற்ற தன்மைக்கும் எடுத்துக் காட்டாக நமது பிரதிநிதியாக நீங்கள் அங்கு பதிவிடுகிறீர்கள் என்று மகிழ்கிறோம். ஏற்கனவே நான் கூறியதை போல இங்கே தனி நபர்களை விட தலைவருக்குத்தான் மரியாதை. மூத்த சகோதரனின் அழைப்பை ஏற்று தொடர்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th January 2015, 04:33 PM
#1225
Junior Member
Seasoned Hubber
[QUOTE=puratchi nadigar mgr;1199659]ஞான ராஜசேகரன் (அரசு உயர் அதிகாரி ): நான் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் படங்கள் அதிகம் பார்த்ததுண்டு . எம்.ஜி.ஆர். படங்கள் அவ்வளவாக பார்த்தது
இல்லை.ஒரு சமயம் என்னை நாடி வந்த நண்பர் ஒருவர், எம்.ஜி.ஆர். அவர்களிடம்
உதவி கேட்டு கடிதம் எழுதி தரும்படி வேண்ட , போஸ்ட் கார்டில் எழுதி நான்தான்
போஸ்ட் செய்தேன். சினிமாவில் தான் எம்.ஜி.ஆர். நல்லவர், நிஜத்தில் அப்படி இல்லை என்று பலபேரிடம் நான் வாதம் செய்துள்ளேன் . இந்த காலத்திலும்
சினிமா நடிகர்களை நம்பி இப்படியும் ஆட்கள் இருக்கின்றார்களே என்று சொல்லி
திரிவேன். என்ன ஆச்சர்யம் என்றால், ஒரு வாரம் கழித்து, கணிசமான தொகை
மாதா மாதம் , மணிஆர்டர் மூலம் அந்த நபருக்கு பல ஆண்டுகள் வந்துகொண்டு இருந்தது . அந்த நபர் என்னிடம் கூறியதும் வாயடைத்துப் போனேன் .அன்றைய சூழ்நிலையில், அவருடைய தகுதிக்கு, அந்த கடிதத்தை பொருட்படுத்தி இருக்க வேண்டாம் . இருப்பினும் அடுத்தவருக்கு உதவும் குணம் இன்றைக்கு யாருக்கு இருக்கு.தன்னிடம் உதவி என்று கேட்டு எந்த வடிவில் வந்தாலும், அதை ஏற்று , அந்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றிய எம்.ஜி.ஆர். அவர்களின் பண்புகள் அறிந்து நெகிழ்ந்து போனேன். அதன்பிறகு தான் நிறைய எம்.ஜி..ஆர். படங்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்து, அவருடைய வெற்றியின் ரகசியத்தை தெரிந்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் அப்பால் தனித்து நிற்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு சிறந்த மனிதநேய பண்பாளர் .[/color]
திரு.லோகநாதன் சார்,
தலைவர் பற்றிய விஜய் டி.வி நிகழ்ச்சியில் பேசியவர்களின் பேச்சுக்களை பதிவிட்டதற்கு நன்றி. ஒளிப்பதிவு செய்யும்போது குறிப்பு எடுத்திருக்க முடியாது. வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். பேச்சுக்களை மனதில் வாங்கி பதிவிட்ட தங்களின் திறமைக்கும் பாராட்டுக்கள்.
குறிப்பாக, ஞான.ராஜசேகரனின் பேச்சு இதயத்தை தொடுகிறது. போஸ்ட் கார்டில் எழுதிப் போட்டதற்கே மாதா மாதம் ஒரு மனிதருக்கு தலைவர் பணம் அனுப்புகிறார் என்றால் சிறந்த நடிகர், திறமையாளர், சினிமாத் துறையில் எல்லாம் தெரிந்தவர், அரசியலில் ராஜதந்திரி, என்பதையெல்லாம் தாண்டிய, ‘ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி’யாகத் திகழ்ந்தார் என்பதற்கு அவரைப் பற்றி தவறாக பேசி வந்த ஞான.ராஜசேகரனின் வாக்குமூலமே சான்று. திரு. ராஜசேகரன் தலைவரைப் பற்றி குறை கூறி வந்தாலும் தனது நண்பர் ஒருவர் உதவி கேட்டு வரும்போது அவருக்கு உதவுவதற்காக யாரை அணுகலாம் என்று எண்ணியபோது தலைவரைப் பற்றிய நினைவே அவருக்கு வந்துள்ளது. இதிலிருந்து எதிர்ப்போருக்கு கூட ஆழ்மனதில் தலைவர் உதவுவார் என்ற நம்பிக்கை இருப்பதையே காட்டுகிறது. இதுநாள் வரை தலைவர் செய்த இந்த உதவி யாருக்கும் தெரியாது. இதுபோன்று அவர் ஏழைகளுக்கு கொடுத்தது இன்னும் எத்தனை கோடிகளோ?
அவன் கொடுத்தது எத்தனை கோடி?
அந்த கோமகன் திருமுகம் வாழி!
பதிவுக்கு மிக்க நன்றி லோகநாதன் சார்.
திரு. செல்வகுமார் சாரின் தாய்க்குத் தலைமகன் ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தின் பொக்கிஷப் பதிவுக்கு நன்றி.
திரு.தெனாலி ராஜன் அவர்களின் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பேரறிஞர் அண்ணாவுடன் தலைவர், அவரது அண்ணன் திரு.சக்ரபாணி, திரு.கருணாநிதி, திரு.பி.எஸ்.வீரப்பா ஆகியோர் இருக்கும் அபூர்வ புகைப்படப் பதிவுக்கு நன்றி.
ராஜ் டி.வி ராஜ் டிஜிட்டல், மற்றும் மெகா டி.வியில் தலைவர் பிறந்த நாளன்று திரையிடப்படும் படங்கள் பட்டியலை வெளியிட்ட திரு.குமார் சார் அவர்களுக்கு நன்றி. ஒரே நாளில் டி.வி.க்களில் 7 படங்கள். இன்னும் ஜெயா டி.வியில் வேறு இருக்கிறது. இந்த அளவுக்கு தனியார் டி.விக்களில் அதிக எண்ணிக்கையில் படம் வெளியிடப்படுகிறது என்றால் அது தலைவர் படங்கள் மட்டுமே.
திரு.சைலேஷ் பாசு அவர்களின் நாடோடி மன்னன் தலைவர் பஞ்ச் வசனம் சூப்பர்.
திரு.ரவிச்சந்திரன், திரு.முத்தையன் அம்மு, பதிவுகள் அருமை.
சாண்டோ சின்னப்பா தேவர் புத்தகத்தில் இருந்து வேட்டைக்காரன் படம் பற்றிய தகவல்களை பதிவிட்ட திரு.எஸ்.வி.சாருக்கு நன்றி.
எங்க வீட்டுப் பிள்ளை பதிவுகளுக்காக திரு.ரூப் குமார் அவர்களுக்கு நன்றி
திரு.ராமமூர்த்தி சார், தங்கள் வேலூர் ரெக்கார்ட்சை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
திரு.சத்யா அவர்களின் காலண்டர் பதிவுகள் அற்புதம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 14th January 2015 at 05:34 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th January 2015, 04:45 PM
#1226
Junior Member
Seasoned Hubber
எங்க வீட்டுப் பிள்ளை
எங்க வீட்டுப் பிள்ளை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று முடியவில்லை. இரண்டே இரண்டு காட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.
கோழை ராமுவாக வரும் தலைவர் வீட்டில் இருந்து குழந்தை கொடுத்த பர்சுடன் வெளியேறி ஓட்டலுக்கு சென்று டிபன் சாப்பிடுவார். ஏற்கனவே, அங்கு இளங்கோவாக நடிக்கும் தலைவர் டிபன் வகையறாவை ஒரு வெட்டு வெட்டியிருப்பார். ராமு மறுபடியும் 2 இட்லி என்று சர்வரிடம் கேட்கும்போது, களைத்துப் போன சர்வர் மறுபடியும் முதல்லே இருந்தா என்று அலுப்பும் திகைப்புமாக சொல்லும்போது நான் இப்பத்தானே.. என்று தலைவர் மென்று முழுங்கும் இடம். பிறகு இட்லி வந்ததும் அதைப் பிட்டு முதல் துண்டை வாயில் போட்டுக் கொண்டதும் சிரிக்கும் தலைவரின் சிரிப்பு.... சொல்ல வார்த்தைகள் இல்லை. பயமில்லாமல் சுதந்திரமாக முதல் முதலில் உணவை சாப்பிடும் நிம்மதியும் திருப்தியும் அந்த சிரிப்பில் தெரியும்.
ரத்னா தன்னைப் பற்றி கேட்டதும் அவரிடம் ராமு, தான் யார் என்பதை சொல்வார். பயந்த சுபாவம் என்பதால் உண்மைகளை சொல்வதற்கு முன் தயங்கி, தயங்கி அந்த அறையில் திறந்திருக்கும் கதவை சாத்தி விட்டு வருவாரே. யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்ற பயத்தை எப்படி வெளிக் காண்பித்துள்ளார் பாருங்கள். இந்தப் படத்துக்கே அவருக்கு சிறந்த நடிகர் பட்டம் கிடைத்திருக்க வேண்டும். உழைத்து சம்பாதித்த பொருளை பிறருக்கு அள்ளிக் கொடுத்து மகிழ்வித்தது மட்டுமின்றி, நடிப்பாலும் நம்மை மகிழ்வித்த அவரை எங்க வீட்டுப் பிள்ளை என்று மக்கள் கொண்டாடுவதில் வியப்பென்ன? படத்தை பற்றி நிறைய எழுத வேண்டியுள்ளது. எழுதுவேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 14th January 2015 at 05:12 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th January 2015, 05:16 PM
#1227
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Sathya VP
சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
14th January 2015, 05:31 PM
#1228
Junior Member
Diamond Hubber
"எங்க வீட்டு பிள்ளை"- அடடா!!!!! பேர் பொருத்தம் !! பெயர் பொருத்தம் !!! என்னவொரு பொருத்தம் !!! - என்னை போன்ற சாதாரண ரசிகர்களை கோடானுகோடி - பரம ரசிகர்களாக உயர்த்திய காவியங்களில் - தலையானது... எனில் மிகையன்று...கடந்த 1981-1982 ஆம் ஆண்டுகளில் மறு வெளியீடுகளில், விபரம் அறிந்த வயதில் பார்த்தபொழுது ஊடுருவிய உணர்வுகள்- பரவசங்கள் இப்பொழுது காணும்பொழுதும் சற்றும், இம்மியளவு கூட குறையவில்லை...தவிர கூடத்தானே செய்கிறது!!!!! என்பதே மக்கள்திலகத்தின் காந்த, வசிகர சக்தி...
-
14th January 2015, 05:36 PM
#1229
Junior Member
Diamond Hubber
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக... மக்கள்திலகம் என்றும் கொண்டாடிய தமிழர் திருநாள் ......

Originally Posted by
MGR Roop
Who will forget this scene.
-
14th January 2015, 06:37 PM
#1230
Junior Member
Devoted Hubber
கதிர்காம கந்தனோ, கண்டியில் பிறந்தானே, காவிய தலைவனே, காலத்தை வென்றவனே,
உயர்கோன் அரசனே மக்கள் திலகம்-தெய்வம்-வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

''நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தீர்களே, இரண்டுக்குமிடையே நீங்கள் கண்ட வேற்றுமை என்ன?''
''நிறைய இருக்கிறது. ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். நான் நாடகங்களில், அதுவும் முக்கியமாக 'என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். வேண்டும்போது உணர்ச்சிவசப்பட்டு துயரத்தை வரவழைத்துக் கொள்வேன். அது ரொம்பவும் இயற்கையாக இருக்கும். சினிமாவிலும் அம்மாதிரியே இயற்கையாக அழவேண்டும் என்ற ஆசை எனக்கு! ஆகவே 'கிளிசரின் போட்டுக் கொள்ள மாட்டேன் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். அதேபோல் படப்பிடிப்பின்போது இயற்கையாகவே அழுதேன். அந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே தெரியவில்லை. ஏனெனில், இயற்கையாக அழுததால், அந்த விளக்குச் சூட்டில் கண்ணீர் கன்னத்துக்கு வரும் முன்பே உலர்ந்துபோய்விட்டது! பிறகுதான் சினிமா வேறு, நாடகம் வேறு என்று புரிந்து கொண்டேன். நானும் பிறரைப்போல் 'கிளிசரின் போட்டுக்கொள்ள ஆரம்பித்தேன்.''
- விகடன் பொக்கிஷம். THANKS TO CHANDIRAN VEERASAMY FROM FACEBOOK.
Bookmarks