-
4th February 2015, 01:44 PM
#201
Junior Member
Platinum Hubber
வேலூர் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற செயல் வீரரும் , மூத்த ரசிகருமான திரு a.கோபால்
அவர்கள் நேற்று காலை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் .
தகவல் . திரு வேலூர் ராமமூர்த்தி .
Last edited by esvee; 4th February 2015 at 03:55 PM.
-
4th February 2015 01:44 PM
# ADS
Circuit advertisement
-
4th February 2015, 02:18 PM
#202
Junior Member
Diamond Hubber
-
4th February 2015, 02:19 PM
#203
Junior Member
Diamond Hubber
-
4th February 2015, 03:42 PM
#204
Junior Member
Veteran Hubber
வேலூர் கே.கே.நகர் முள்ளிபாலயம் பகுதியை சேர்ந்த மக்கள்திலகத்தின் தீவிரபக்தர் மற்றும் எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு எம்ஜிஆர் பித்தன் A.கோபால் அவர்கள் நேற்று இறைவன் அடி சேர்ந்தார் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இன்று அவருடைய இறுதிசடங்கில் கலந்து கொள்கிறேன் என்ற செய்தி நமது திரியின் நண்பர்களுக்கு தெரிவிக்கிறேன்
-
4th February 2015, 03:43 PM
#205
Junior Member
Veteran Hubber
-
4th February 2015, 03:44 PM
#206
Junior Member
Seasoned Hubber
வேலூர் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற செயல் வீரரும் மூத்த ரசிகருமான திரு.ஏ.கோபால் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
4th February 2015, 03:44 PM
#207
Junior Member
Veteran Hubber
-
4th February 2015, 03:44 PM
#208
Junior Member
Veteran Hubber
-
4th February 2015, 04:06 PM
#209
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Sathya VP
மன்னாதி மன்னன் - 6
துயர் துடைப்பவர்
தலைவர் உடல் நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றவாறே இங்கு தேர்தலில் நின்று வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வராகி, முப்பிறவி எடுத்து தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைத்த நன்னாள் இன்று.
நான் ஆணையிட்டால், சங்கே முழங்கு திரைப்படங்களின் வெளியீட்டு தினமும் இன்றுதான். நான் ஆணையிட்டால் படத்தில் நல்ல வேளை... நான் பிழைத்துக் கொண்டேன்.. பாடலில் தலைவர் என்ன சுறுசுறுப்பு. அதிலும் பாடலின் முடிவில் சறுக்கலான மேடையில் சின்னச் சின்னதாய் ஸ்டெப்ஸ் வைத்து வேகமாக இறங்கும் லாவகம்.. அந்த ஸ்டைலும் .... ஸ்பீடும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
தலைவர் உயிர் பிழைத்து தாயகம் திரும்பிய இதே நாளில் வெளியான நான் ஆணையிட்டால் படத்தில் ... நல்ல வேளை... நான் பிழைத்துக் கொண்டேன் ...பாடல் எவ்வளவு பொருத்தம்.
-----
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து மீண்டும் முதல்வராக மன்னாதி மன்னன் தமிழகம் திரும்பிய இந்த நாளில் விஜய் டி.வி. மன்னாதி மன்னன் நிகழ்ச்சியை யூ டியூப்பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 75,000.
மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க வகையில் அனைவரையும் கவர்ந்தவர் பேராசிரியர் இளங்கோவன். இவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். (டி.வி.யில் பெயரைப் போடாததால் இதே போல எல்லாரும் பெயரைக் கூறி அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாமோ என்று தோன்றியது.)
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இவர் ஒரு சயின்டிஸ்ட். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு ஜூனியர். இவர் கூறிய கருத்து முக்கியமானது. இவர் சிறுவயதில் தலைவரின் ரசிகராக இருக்கும்போது அவரைச் சேர்ந்தவர்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உருப்பட்டதில்லை. அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள், ரிக்க்ஷாக்காரர்கள்தான் என்று கூறியிருக்கின்றனர்.
அவர்கள் அவ்வாறு கூறியதே, எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்து நாமும் படித்து முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற உணர்வைத் தந்ததாகக் கூறினார். படித்து வாழ்க்கையில் முன்னேறி இன்று ஏரோநாட்டிக்கல் துறையில் 3 நாடுகளில் ஹெச்.ஓ.டி.யாக இருப்பதாகவும் முன்னேற வேண்டும் என்ற உணர்வை அளித்தது தலைவர்தான் என்றும் குறிப்பிட்டார்.
வாழ்க்கையில் முன்னேற நேரடியாக மட்டுமின்றி எவ்வளவு பேருக்கு மறைமுகமாக ஊக்கசக்தியாகவும் தலைவர் விளங்கியிருக்கிறார் என்பதை நினைத்தால் பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. திரு.இளங்கோவன் குறிப்பிட்டதைப் போன்ற அனுபவம் எனக்கும் உண்டு. என் உறவினர்களிலே பலர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் உருப்பட்டதில்லை என்று என்னிடமே கூறியுள்ளனர். இன்று நானும் வாழ்வில் முன்னேறி என் உழைப்பில் என் குடும்பத்தை காப்பாற்றி கவுரவமாக வாழ்ந்து வருகிறேன். இதே அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
தலைவரின் கருணை உள்ளத்துக்கு எடுத்துக்காட்டாக துயரமான நேரத்தில் அவரை நேரில் பார்த்த இளுங்கோவனே சாட்சி. தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்டபோது தலைவர் அங்கு சென்றிருக்கிறார். அப்போது சிறுவனாக இருந்த திரு.இளங்கோவன், கூட்டத்தில் புகுந்து தலைவரைப் பார்த்ததை வர்ணித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலைவர் ஆறுதல் கூறியிருக்கிறார்.
அப்போது, தலைவரின் கண்ணீல் இருந்து நீர் பெருகியதாக திரு.இளங்கோவன் தெரிவித்தார். எந்த அளவுக்கு ஒரு மனிதன் மக்களின் துன்பத்தை தனது துன்பமாக நினைத்து வேதனைப்பட்டிருந்தால் இப்படி கண்ணீர் பெருகியிருக்கும்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1 லட்சம் நிதியுதவியும் தலைவர் அளித்து அவர்களின் துயர் துடைக்க உதவியதையும் திரு. இளங்கோவன் குறிப்பிட்டார்.
சங்கே முழங்கு படத்தில் நாலு பேருக்கு நன்றி பாடலில், வார்த்தையின்றி போகும்போது மவுனத்தாலே நன்றி சொல்வோம் என்று வரும். மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மக்கள் திலகத்துக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் ஏது? அவருக்கு மவுனத்தாலே நன்றி சொல்வோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th February 2015, 05:32 PM
#210
Junior Member
Diamond Hubber
எங்கள் மன்னாதி மன்னன் மூன்றாவது பிறவி எடுத்து தமிழ்நாட்டிற்கு வந்த நாள்
இன்று Febrauray 4.. என் வாழ்க்கையில் மறக்கமுடியாத , ஒரு நாள்....1985. பிப்.4. அன்று ..,மக்கள் திலகம், பொன்மன செம்மல், , புரட்சித்தலைவர்,,தமிழக முதல்வர், எம்.ஜி.ஆர். அவர்கள், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, , மறு பிறவி எடுத்து, , சென்னை திரும்பிய நாள்...அன்றைய தினம், அதிகாலையிலேயே,, நான், உட்பட, அனைத்து பத்திரிகையாளர்கள், பரங்கிமலை மைதானத்தில் , காத்திருந்தோம்.. பாதுகாப்பு அதிகாரிகள், எங்களிடம் பாஸ் இருந்தும், பத்திரிகையாளர்களை ,100 அடி தூரம் தள்ளி நிறுத்திவிட்டனர்...சூரியன் உத்யமாகும் நேரம், , எம்.ஜி.ஆர். அவர்கள் வந்த 4777 எண்ணுள்ள கார், ,படியில்லாமல், அமைத்திருந்த, ,சறுக்கு பாலம் வழியாக ,மேடைக்கு வந்ததும், ,தமிழகம் முழுவதிலுமிருந்து, வந்திருந்த லட்சக்கணக்கான மக்கள், ஒரே நேரத்தில் ," புரட்சி தலைவர் வாழ்க," என்று போட்ட கோஷம், வானமே அதிர்ந்தது...
மேடைக்கு காரிலிருந்த இறங்கிய எம்.ஜி.ஆர். வழக்கம்போல் கை அசைத்து , சிரித்துக்கொண்டே, தள்ளி நிறுத்தி வைக்கப்பட்ட எங்களை (நிருபர்களை) பார்த்து சைகையில், ஏன் அங்கே, இருக்கிறீர்கள், வாருங்கள் முன்னே,..என்று கை அசைத்தவுடன், எங்களுக்குள் கேமராவுடன், முட்டி மோதிக்கொண்டு , மேடை அருகே சென்றுவிட்டோம்..நூற்றுக்கணக்கான புகைப்பட நிருபர்களோடு, போட்டி ,போட்டுக்கொண்டு நான் தினமலருக்காக, எடுத்த பிலிம் ரோலுடன், மீனம்பாக்கம்,, விமானநிலையம் சென்று, 9 மணி விமானத்தில் ஏறி மதுரை வந்தேன்.....அன்றைய தினம் காலை 11 மணிக்கே...எம்.ஜி.ஆர். சென்னை வந்தார், என்ற தலைப்பில் நான் எடுத்த படங்களுடன், தினமலர் ,விசேஷ பதிப்பு வந்து , அதை மக்கள் வாங்கி மகிழ்ச்சியுடன் பார்த்த நிகழ்ச்சியை, எப்படி மறக்க முடியும்.! ..(இப்போது போல் கணினி மூலம் படம் அனுப்ப வசதி இல்லாத நேரம் .)
Face book நண்பர்களுக்காக நான் சிரமப்பட்டு எடுத்த படங்களில் சிலவற்றை, பதிவு செய்துள்ளேன்...எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்.,Madurai
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks