Results 1 to 10 of 126

Thread: கவிதை எழுதுவோம் வாருங்கள்.

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரசம் (சுடச் சுட)

    **

    கண்ணை முழிச்சு நேரம் பார்த்தா
    மணியோ இப்போ ஆறா அச்சோ..

    அம்மா படிச்சுப் படிச்சுச் சொன்னாள்
    அத்தை வீடு அண்ணா நகரில்
    ஆட்டோ பிடிச்சு ப் போகப் பேசி
    மறுபடி வரவும் ஒன்பது ஆகும்

    அப்பா ஆறரை வாக்கில் வந்தால்
    சூடாய்ச் சின்னதாய் சாம்பார் வச்சு
    குக்கரில் இருக்கும் சாதம் எடுத்து
    சூடு பண்ணி பின்னே ஃப்ரிட்ஜில்
    வெண்டை ஃப்ரைதான் ஓவனில் வைத்து
    மெல்லிய சூட்டில் தட்டில் போட்டு
    கொடுடி என்றாள் ஓமறந்தேனே
    ப்ளஸ்டூ படிக்கிறே சாம்பார் வைக்கத்
    தெரியா தென்றால் திட்டுவாள் எனவே
    சரியெனத் தலையை ஆட்டிவிட் டாச்சு
    இப்போ பேந்த முழிக்கவும் ஆச்சு

    ஃபேஸ்புக் ப்ரண்டிடம் கேட்டால் அவளோ
    அடியே எனக்கு சாப்பிடத் தெரியும்
    சாம்பார் எல்லாம் அம்மா செய்வாள்
    என்றே சொல்லி சைன் ஆஃப் பண்ண
    என்ன செய்யலாம் என்றே திகைத்தால்

    அச்சோ வாசலில் பைக்கின் சத்தம்
    அப்பா வந்தாச் என்ன செய்வேன்

    உள்ளே வந்த அப்பா சோர்வாய்
    என்னடி அம்மா எங்கே எங்கே

    அத்தை வீடு போயிருக் காப்பா
    இப்போ இதோ வந்தே விடுவாள்
    ஆனால் அப்பா சாம்பார் வைக்கச்
    சொன்னாள் அம்மா எனக்குத் தெரியாதே.

    சரிசரி கவலைப் படாதே நீயும்
    வாவா நாமும் ரசமாய்ச் செய்யலாம்

    சொன்ன அப்பா உள்ளே சென்று
    உடையை மாற்றி பெர்முடாஸ் அ\ணிந்து
    ப்ரெஷனப் ஆகி லோஷன் மணக்க
    கிச்சனின் உள்ளே புகுந்தே ஃப்ரிட்ஜில்
    இருந்த சிலபல தக்காளி எடுத்து
    வேக வேகமாய் கட்தான் செய்து
    பின்னே சின்னதாய்ப் பாத்திரம் எடுத்து
    கடுகு உளூந்து எண்ணெய் விட்டு
    சிம்மில் அடுப்பை ஏற்றி விட்டே
    கடுகு பருப்பும் பொன்னிறமாக
    கொஞ்சம் வெடிக்கும் போதில் பழத்தை
    சரிவாய்ப் போட்டுப்பின்னர் ரசத்தின்
    பொடியைப் போட்டு சற்றே உப்பு
    பின்னர் தண்ணிர் எல்லாம் விட்டு
    கொதிக்க வைக்க சற்றைப் போதில்
    எங்கும் மணமாய் ஆஹா அழகு..

    டைனிங்க் டேபிளில் சமர்த்தாய் நானும்
    பாத்திரம் தட்டு கறியும் சாதம்
    எல்லாம் வைக்க அப்பா ரசத்தின்
    பாத்திரம் வைக்க இருவரும் ஒருகை
    பிடித்தே சாப்பிட அடடா அமிர்தம்..

    உண்டு முடித்தபின் சொன்னேன் டாடி
    ஆஹா பேஷ்பேஷ் சூப்பர் டாடி
    அம்மா வைவிட நீதான் பெட்டர்.
    கையைப் பிடித்துக் குலுக்க உதறி
    அப்பா பட்டார் அழகாய் வெட்கம்!

    **
    Last edited by chinnakkannan; 6th February 2015 at 12:30 PM.

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •