-
10th February 2015, 06:56 PM
#2831
Senior Member
Senior Hubber
ஹாய் கலைவேந்தன்.. பாருங்க ஒரு பாட் செலக்ட் பண்ணி போடலாம்னு வந்தா நீங்க வந்திருக்கீங்க..
இந்தப் பாடல் சிலோனில் கேட்டுக் கேட்டு மனபாடம் ஆனது..படம் பார்த்தது கிடையாது..இருந்தாலும் செமை ஹிட்..
//அடடட மாமரக்கிளியே
உன்னையின்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னையெண்ணி
பச்ச தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக்கிளியே ஏஏ//
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th February 2015 06:56 PM
# ADS
Circuit advertisement
-
10th February 2015, 07:08 PM
#2832
கண்ணா,
உங்கள் சகோதரிகளின் திருமணம் நடைபெற்ற மண்டபங்கள் பற்றிய நினைவலைகள் மற்றும் சமையல்காரர்கல் பற்றிய தகவல்களும் சுவை. ஒரு சின்ன டவுட். குஜராத்தி சமாஜ் கல்யாண மண்டபம் பற்றி சொல்லும்போது தளவாய் அக்ரகாரம் ரோடிற்கு parallel ரோட்டில் வரும் என்று எழுதியிருந்தீர்கள். தளவாய் அக்ரகாரம் என்பது வடக்கு சித்திரை வீதியிலிருந்து [அதாவது மொட்டை கோபுரம் இருக்கும் தெருவிலிருந்து சிம்மக்கல் சொக்கநாதர் கோவிலுக்கு போவதற்கு இடது பக்கம் திரும்புவோமே, அதுதானே தளவாய் அக்ரகாரம்? பழைய இம்பீரியல் தியேட்டர் கூட இருக்கும் அந்த தெருவல்லவா அது?
நீங்கள் குறிப்பிடும் குஜராத்தி சமாஜ் கல்யாண மண்டபம் YMCA -விற்கு அருகில் ஜான்சி ராணி பார்க்கிற்கு எதிரில் அரசியல் கட்சி கூட்டங்கள் எல்லாம் நடைபெறும் மேங்காட்டுப் பொட்டல் என்ற இடத்தில அல்லவா இருக்கிறது. நீங்கள் சொன்னது போல் YMCA பக்கத்தில் சின்ன தெருவுக்குள் சென்று மாடிக்கு செல்ல வேண்டும். மண்டபத்திற்கு வலது பக்கம் கான்சா மேட்டு தெரு, நேரே செல்லும் தெரு தெற்காவணி மூல வீதி. அது நேரே சென்று வெங்கலகடை தெருவில் இணையும்.
அதில் இடது பக்கம் திரும்பினால் அம்மன் சன்னதி. திரும்பாமல் சற்றே தாண்டி சென்று இடது பக்கம் திரும்பினால் RRC நகைக்கடை. அதில் நேராக சென்றாலும் இந்த தளவாய் அக்ரகாரத்தை அடையலாம். Perpendicular என்பதற்கு பதில் parallel என்று சொல்லி விட்டீர்களோ?
கல்நாயக், நிலவு ஒரு பெண்ணாகி பாடல் வாலிதான். அந்தப் படத்தில் நிலவு ஒரு பெண்ணாகி, பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் பன்சாயீ ஆகிய மூன்று பாடல்களும் வாலி எழுதியவை.
கலைவேந்தன், பதவி உயர்விற்கு பாராட்டுகள்!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th February 2015, 07:10 PM
#2833
Junior Member
Seasoned Hubber
நன்றி சின்னக்கண்ணன்,
என்னுடைய போன பதிவில் ஒரு சின்ன தவறு.
நிலவோ அவள் ஒளியோ.... பாடல்தான் அருணகிரிநாதர்.
நிலவே நீ இந்த.... பட்டினத்தார்.
இரண்டும் ஒரே கேசட்டில் வந்தது. அதனாலும், கொஞ்சம் வேலையினாலும் சின்னக் குழப்பம். நன்றி
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th February 2015, 07:11 PM
#2834
Junior Member
Seasoned Hubber
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி முரளி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
10th February 2015, 09:13 PM
#2835
Senior Member
Senior Hubber
//நீங்கள் குறிப்பிடும் குஜராத்தி சமாஜ் கல்யாண மண்டபம் ymca -விற்கு அருகில் ஜான்சி ராணி பார்க்கிற்கு எதிரில் அரசியல் கட்சி கூட்டங்கள் எல்லாம் நடைபெறும் மேங்காட்டுப் பொட்டல் என்ற இடத்தில அல்லவா இருக்கிறது//
கரெக்ட் முரளி..மேங்காட்டுப் பொட்டல் அண்ட் கான்சா மேட்டுத் தெரு.தான் ( தளவாய் அக்ரகாரம் எனத் தவறுதலாகச் சொல்லிவிட்டேன்..—நீங்கள் சொல்லும் இம்பீரியல் தியேட்டர் இடம் தான் தளவாய் அக்ரகாரம்..) அது என்னபழைய இம்பீரிய்ல் தியேட்டர்..இப்போது இல்லையா.. ( சென் ட்ர்ல் மார்க்கட்டும் அந்தப் பக்கம் தானே..) கொஞ்சம் இருங்கள் நினைவிலிருந்து ஒரு ரூட் போட்டுப் பார்க்கட்டா… தானப்ப முதலி தெரு பாண்டியன் சூப்பர் மார்க்கெட் கொஞ்ச்ம் நடந்தால் வலது புறம் மிட்லண்ட் ஹோட்டல்(இப்போதும் அதேவா) இடதுபுறம் திரும்பும் ரோட்டில் திரும்பி நேரே நேரே போனால் பூமார்க்கெட் அப்புறம் அப்படியே நேரே போய் வளைந்தால் த.அக்ரஹாரம் சரியா..
//நேரே செல்லும் தெரு தெற்காவணி மூல வீதி. அது நேரே சென்று வெங்கலகடை தெருவில் இணையும்.// இந்தத் தெற்காவணி மூலவீதி பாண்டிய வினாயகர் கோவில் (சரிதானே) தாண்டி வலது புறம் உள்ள சந்தில் எனது தந்தையின் கடை இருந்தது- ஒரு காலத்தில்.. //ஒய் எம்சிஏ பக்கத்தில் சின்ன சந்தில்..தான். // பெரிய அக்கா கல்யாணத்திற்கப்புறம் அந்தப்புறம் போக சந்தர்ப்பம் வந்ததே இல்லை..
கான்சாமேட்டுத் தெருவில் போனால் தெற்குமாசிவீதி..இடதுபுறம் திரும்பி நேரே போனால் விளக்குத்தூண் வளைந்தால் கீழமாசிவீதி சரியா..( ரொம்ப நாளாச்ச்சுங்க்ணா.. மறந்து போச்) வலது புறம் திரும்பி நேரே போனால் பெருமாள் கோவில்.. அப்படிப் போகாமல் மறுபடியும் வளைந்து நேர் போனால் முருகன் இட்லிக்கடை, நன்மை தருவார் கோவில் ஆரிய பவன் தென் ஸ்ட்ரெய்ட் சாந்திதியேட்டர் நேரு பிள்ளையார் அகெய்ன் ஸ்ட்ரெய்ட் டிவிஎஸ் சிக்னல் அண்ட் ஸ்ட்ரெய்ட் பிஃபோர் போலீஸ் ஸ்டேஷன் (அதுக்குமுன்னால் ஆஞ்சனேயர் கோவிலா) இடது புறத் தெருவிலிருந்து பார்த்தால் தேவி தியேட்டர் வலது புறம் போனால் ஞா.கி சந்தை கொஞ்சம் நடந்தால் கண்ணா வீடு! இந்த பாலம் கட்டினார்களாமே அதன் பிறகு நான் மதுரை சென்றதேயில்லை..இப்போ வீட்டுக்குப் போகணும்னா பாலமடியில் நடக்கவேண்டுமென சகோதரி சொல்லியிருந்தார் ரொம்ப நாள் முன்னால்..
ஸாரிங்க.. கொஞ்சம் தப்பா தளவாய் அக்ரஹாரம்னு எழுதிட்டேன்..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th February 2015, 09:17 PM
#2836
Senior Member
Senior Hubber
//ஜான்சி ராணி பார்க்கிற்கு // பூங்காவின் பெயர் சொன்னதுக்கு நன்றி முரளி.. இந்த தேவி தியேட்டரிலிருந்து வலதுபுற்ம் ஆரப்பாளையம் ரோடுபோகும் பாதையில் (முக்கில் மங்கையர்க்கரசி ஸ்கூல் அதைத் தாண்டி) ஒரு குட்டி பார்க் பெயர் மறந்து விட்டது.. இந்த கர்டர் பாலம் எனச் சொல்லப் படும் தண்டவாளத்திற்கடியில் செல்லும் பாதை இன்னும் இருக்கிறதா..மழை வந்தால் நீச்சல் தான் இல்லை.. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே..
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
10th February 2015, 11:34 PM
#2837
கண்ணா,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற இடங்களும் சரி அவற்றுக்கு போகும் வழியும் சரி மிக சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். தெற்காவணி மூலவீதி வெங்கலகடை தெருவில் இணையும் இடத்தில இடது புறம் திரும்பினால் அம்மன் சன்னதி, வலது புறம் திரும்பினால் ஜடாமுனி கோவில் தெரு. அங்கே ஒரு மாடியில் பாம்பே மீல்ஸ் கடை ஒன்று உண்டு. unlimited சப்பாத்தி பிளஸ் சாதம். அங்கே போயிருப்பீர்கள் என நினைக்கிறேன். அதே போன்று ஒரு கடை சென்ட்ரல் சினிமாவின் எதிர்புற குட்டி தெருவிலும் (கோபால கொத்தன் தெரு) உண்டு.
ஒர்க் ஷாப் ரோட்டில் கர்டர் பாலம் அருகே இருக்கும் குட்டி பூங்காவிற்கு பெயர் பத்மாசனி பூங்கா. மழை பெய்தால் இப்பவும் அப்படிதான் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th February 2015, 12:13 AM
#2838
Senior Member
Senior Hubber
அதே போன்று ஒரு கடை சென்ட்ரல் சினிமாவின் எதிர்புற குட்டி தெருவிலும் (கோபால கொத்தன் தெரு) உண்டு.// பத்மாசனி பூங்கா நினைவூட்டலுக்கு தாங்க்ஸ் முரளி. இந்த கோ.கொ தெரு வாவ்..சூடு சூடாய் சப்பாத்தி..இளம் புது நடிகை நாசூக்காய்ப் போட்டுக்கொள்ளும் உதட்டுச் சாயம் போல மெலிதான செந்நிறத்தில் தக்காளி பிய்த்துப் போட்டு வேகவைக்கப்பட்டிருக்க நடுவில் கொஞ்சம் மொச்சைகொட்டை மொச்சைக்கொட்டையாய் முழி முழித்துக்கொண்டு சிரிக்கும் உருளைக்கிழங்கு.. எத்தனை சப்பாத்தி சாப்பிட்டிருப்பேன்.. ப்ளஸ் தால் அண்ட் ரைஸ்... இப்படி நினைவு படுத்திவிட்டீர்களே..டின்னர் முடித்திருந்தாலும் இப்போது பசிக்கிறது..
ஜ.மு கோவில் தெரு பா.மீ கடைக்குப் போனதாய் நினைவில்லை..போயிருப்பேன்..கோபி அய்யங்கார் ஹோட்டல் சாம்பார்,மாடர்ன் ரெஸ்டாரெண்ட் பொங்கல் வடை..கிருஷ்ணன் கோவில் அருகில் பொன்னுக்கோனார் சூடான பசும்பால்..கிருஷ்ணன் கோவில் சந்துக்குள் போனால் ஒரு ஜிம் கூட இருக்கும்.ம்ம் நன்றி முரளி அகெய்ன்.
ஆமாம் ஒரு நல்ல டைட்டிலா கொடுங்களேன். டெல்லில மாற்றம் இங்கயும் ந.தி த்ரெட் 15 எதாச்சும் ந.தி கட்டுரை சுமாரா எழுத ட்ரை பண்ணட்டா.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th February 2015, 12:15 AM
#2839
Senior Member
Senior Hubber
இரண்டும் ஒரே கேசட்டில் வந்தது.// இன்னும் காசட் தானா கலை.வேந்தன்...யூட்யூப்லயே கிடைக்குமே
-
11th February 2015, 02:25 AM
#2840
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
//நீங்கள் குறிப்பிடும் குஜராத்தி சமாஜ் கல்யாண மண்டபம் ymca -விற்கு அருகில் ஜான்சி ராணி பார்க்கிற்கு எதிரில் அரசியல் கட்சி கூட்டங்கள் எல்லாம் நடைபெறும் மேங்காட்டுப் பொட்டல் என்ற இடத்தில அல்லவா இருக்கிறது//
கரெக்ட் முரளி..மேங்காட்டுப் பொட்டல் அண்ட் கான்சா மேட்டுத் தெரு.தான் ( தளவாய் அக்ரகாரம் எனத் தவறுதலாகச் சொல்லிவிட்டேன்..—நீங்கள் சொல்லும் இம்பீரியல் தியேட்டர் இடம் தான் தளவாய் அக்ரகாரம்..) அது என்னபழைய இம்பீரிய்ல் தியேட்டர்..இப்போது இல்லையா.. ( சென் ட்ர்ல் மார்க்கட்டும் அந்தப் பக்கம் தானே..) கொஞ்சம் இருங்கள் நினைவிலிருந்து ஒரு ரூட் போட்டுப் பார்க்கட்டா… தானப்ப முதலி தெரு பாண்டியன் சூப்பர் மார்க்கெட் கொஞ்ச்ம் நடந்தால் வலது புறம் மிட்லண்ட் ஹோட்டல்(இப்போதும் அதேவா) இடதுபுறம் திரும்பும் ரோட்டில் திரும்பி நேரே நேரே போனால் பூமார்க்கெட் அப்புறம் அப்படியே நேரே போய் வளைந்தால் த.அக்ரஹாரம் சரியா..
//நேரே செல்லும் தெரு தெற்காவணி மூல வீதி. அது நேரே சென்று வெங்கலகடை தெருவில் இணையும்.// இந்தத் தெற்காவணி மூலவீதி பாண்டிய வினாயகர் கோவில் (சரிதானே) தாண்டி வலது புறம் உள்ள சந்தில் எனது தந்தையின் கடை இருந்தது- ஒரு காலத்தில்.. //ஒய் எம்சிஏ பக்கத்தில் சின்ன சந்தில்..தான். // பெரிய அக்கா கல்யாணத்திற்கப்புறம் அந்தப்புறம் போக சந்தர்ப்பம் வந்ததே இல்லை..
கான்சாமேட்டுத் தெருவில் போனால் தெற்குமாசிவீதி..இடதுபுறம் திரும்பி நேரே போனால் விளக்குத்தூண் வளைந்தால் கீழமாசிவீதி சரியா..( ரொம்ப நாளாச்ச்சுங்க்ணா.. மறந்து போச்) வலது புறம் திரும்பி நேரே போனால் பெருமாள் கோவில்.. அப்படிப் போகாமல் மறுபடியும் வளைந்து நேர் போனால் முருகன் இட்லிக்கடை, நன்மை தருவார் கோவில் ஆரிய பவன் தென் ஸ்ட்ரெய்ட் சாந்திதியேட்டர் நேரு பிள்ளையார் அகெய்ன் ஸ்ட்ரெய்ட் டிவிஎஸ் சிக்னல் அண்ட் ஸ்ட்ரெய்ட் பிஃபோர் போலீஸ் ஸ்டேஷன் (அதுக்குமுன்னால் ஆஞ்சனேயர் கோவிலா) இடது புறத் தெருவிலிருந்து பார்த்தால் தேவி தியேட்டர் வலது புறம் போனால் ஞா.கி சந்தை கொஞ்சம் நடந்தால் கண்ணா வீடு! இந்த பாலம் கட்டினார்களாமே அதன் பிறகு நான் மதுரை சென்றதேயில்லை..இப்போ வீட்டுக்குப் போகணும்னா பாலமடியில் நடக்கவேண்டுமென சகோதரி சொல்லியிருந்தார் ரொம்ப நாள் முன்னால்..
ஸாரிங்க.. கொஞ்சம் தப்பா தளவாய் அக்ரஹாரம்னு எழுதிட்டேன்..
madurai description .. nostalgic..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks