- 
	
			
				
					27th September 2014, 07:08 PM
				
			
			
				
					#631
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர் 
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
		
		- 
		
			
						
						
							27th September 2014 07:08 PM
						
					
					
						
							 # ADS
						
					
			
			
				
					
					
						Circuit advertisement
					
					
					
					
						
						
						
					
				 
				
			 
				
			
		 
		
	 
- 
	
			
				
					8th February 2015, 05:34 PM
				
			
			
				
					#632
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					11th February 2015, 01:18 PM
				
			
			
				
					#633
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							நீண்ட இடைவெளிக்கு பின்பு,  PONMANACHEMMAL M.G.R. FILMOGRAPHY NEWS & EVENTS என்கின்ற இந்த திரியினில், அன்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க,  மீண்டும் நம் மக்கள் திலகம் நடித்த காவியங்கள் பற்றிய தொகுப்பினை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்.
நம்  கலைச்சுடர் அவர்கள் நடித்த 35வது காவியம் 
 
முதல், 
திரி தொடர்கிறது.  திரி பதிவாளர்கள், பதிவிடப்படும் அந்தந்த காவியம் குறித்த பொதுவான தகவல்களை மட்டும் இந்த திரியினில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். 
இந்த திரியில் இடம் பெறும் காவியங்கள்  படைத்த மறு வெளியீட்டு சாதனைகளை, சகோதரர்  திரு. ராமமூர்த்தி அவர்களால் துவக்கப்பட்ட  " மறு வெளியிட்டிலும் மக்கள் திலகத்தின் சாதனைகள்"  என்ற திரியினில் பதிவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 
						
					 
					
				 
			 
			
			
				
				
				
					
						Last edited by makkal thilagam mgr; 11th February 2015 at 01:26 PM.
					
					
				
				
				
				
				
				
				
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					11th February 2015, 01:21 PM
				
			
			
				
					#634
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							பொன்மனச்செம்மல் நடித்த 35வது காவியம்  " அலிபாபாவும்  40 திருடர்களும்" பற்றிய தகவல் :
1. படம் வெளியான தேதி :   14-01-1956
2. படத்தை தயாரித்த நிறுவனம் :    மாடர்ன் தியேட்டர்ஸ்
3. கதாநாயகன் : மக்கள் திலகம்      
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் :    அலி பாபா
5. கதாநாயகி ::    பி.பானுமதி    
6. கதை,  வசனம்  :   ஏ. எல்.  நாராயணன்
7.  பாடல்கள் :     ஏ. மருதகாசி  .
7. இசை அமைப்பு :    என். தட்சிணாமூர்த்தி
8. இயக்குனர் : டி.ஆர். சுந்தரம்
9.  பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் :   பி.எஸ்.வீரப்பா,   கே . சாரங்கபாணி,  கே. ஏ. தங்கவேலு,  எம்.ஜி. சக்கரபாணி , ஒ. ஏ. கே. தேவர்,  எம். என். ராஜம், வித்யாவதி  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++
படத்தின் சிறப்பம்சம் :
1.  தென்னகத்தின், தமிழகத்தின் முதல் முழு  நீள  வண்ணக்காவியம்.  
2.  நூறு நாட்களை கடந்த வெற்றிக்காவியம்.
==================================================  ============================
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					11th February 2015, 01:25 PM
				
			
			
				
					#635
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							 பொன்மனச்செம்மல் நடித்த 35வது காவியம் " அலிபாபாவும்  40 திருடர்களும்" கதை சுருக்கம் :
பாக்தாத் நகரின் ஆடலழகி மாறி மார்ஜியானா.  அவள் ஆட்டத்திலே மக்கள் பரவசமடைந்திருக்கும் சமயத்தில், அமீர் காசிம்கானின்  தளபதி  ஷேர்கான்,  அவளை அரண்மனைக்கு  இழுத்து செல்ல முயலுகிறான்.   அந்த சமயத்தில்  அலிபாபா குறுக்கிட்டு ஷேர்கானை விரட்டி . அடிக்கிறான்.        
அலிபாபா, அமீர் காசிம்கானின் உடன் பிறந்தவன்.  அமீரால்   வஞ்சித்து விரட்டப்பட்டவன். அலிபாபாவின்  தீரத்தை கண்டு  மார்ஜியானா. தன்  மனதை பறி  கொடுக்கிறாள்.
தங்கைஆயிஷாவின் விருப்பப்படி, மார்ஜியானாவையும்,  அவளது சகாவான தவுலத்தையும், தன் வீட்டிலேயே தங்க வைக்கிறான், அலிபாபாவும்.   தவுலத்தும்   ஒரு நாள்  எதிர்பாராத விதமாக, கள்வர் தலைவன் அபு ஹுசேன்  குகையை கண்டு பிடித்து  விடுகிறார்கள் .  அலிபாபா, அந்த குகைக்குள் நுழைந்து,  தவுலத்தின் உதவியுடன் ஏராளமான பொன்னை மூட்டை கட்டிக்கொண்டு புறப்படுகிறான்.
அலிபாபா எப்படி அவ்வளவு பொன் தேடினான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அமீர்கான் அவனை விருந்துக்கு அழைக்கிறான். விருந்துக்கு சென்ற அலிபாபா அண்ணன் அமீர்கானின் கபட நாடகத்தில் மயங்கி, “மாய வார்த்தையை”  அவனுக்கு சொல்லி விடுகிறான்.  உடனே, அபாண்ட பழி சுமத்தி, அலிபாபாவை கைது செய்து, மரண தண்டனை விதிக்கிறான் அமீர்.
மார்ஜியானா, அலிபாபாவை, தன் கையாலே நடனமாடிக் கொல்வதற்கு அனுமதி பெற்று, நடனமாடியபடி, தன் கையிலிருந்த கத்தியால் அலிபாபாவின் கட்டுக்களை அறுத்து விட்டு விடுகிறான்.
கட்டறுபட்ட அலிபாபா அங்கிருந்த வீரர்களுடன் கத்தி சண்டையிடும் பொழுது, அமீர் காசிம்கான், மர்ம குகையை அடைந்து அங்குள்ள பொருட்களை மூட்டை கட்டி கொண்டு திரும்புகையில், கதவு திறக்கும் மந்திரத்தை மறந்து விடுகிறான். அப்போது அங்கு வந்த அபு ஹுசைன் அமீர் காசிம்கானை கொன்று, தலைகீழாக தொங்க விடுகிறான்.
அமீரை தேடி வந்த அலிபாபா, அவனின் பிணத்தை தன் வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறான்.
அபு ஹுசைன் பிணத்தை காணாததால் அலிபாபாதான் எடுத்துச் சென்றிருக் க வேண்டும் என அறிந்து, தன் சகாக்களை பீப்பாயில் அடைத்து, மாறு வேடத்தில், அலிபாபாவின் அனுமதியுடன், அவன் மாளிகையை அடைகிறான்.
மாறு வேடந்தாங்கியவனை அடையாளம் கண்டு கொள்கிறாள் மார்ஜியானா. இதையறிந்த அபு ஹுசைன், மார்ஜியானாவை இரகசியமாக சிறை செய்கிறான்.
மிகுதியை காண வெள்ளித்திரைக்கு வாருங்கள் !
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					11th February 2015, 01:28 PM
				
			
			
				
					#636
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							பொன்மனச்செம்மல் நடித்த 35வது காவியம் " அலிபாபாவும்  40 திருடர்களும்"   பாடல்கள் :
பாடல்  1  :  அழகான பொண்ணு நான், அதுக்கேத்த கண்ணுதான்   (தனித்த பெண்குரல் பாடல்)
பாடல்  2  :  சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே   (ஆண் பெண் ஜோடிப்பாடல்)
பாடல்  3  :  மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்த போதிலே
                         (கதாநாயகன்-கதாநாயகி காதல் பாடல்)
பாடல்  4  :  நாம் ஆடுவதும் பாடுவதும் காசுக்கு  (நடனம் மற்றும் குழுப்பாடல்)
பாடல்  5     உன்னை விட மாட்டேன், உண்மையில் நானே !  (தனித்த பெண்குரல் பாடல்)
பாடல்  6      உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா... செய்யடா
                        (தனித்த ஆண் குரல் பாடல்)
பாடல் 7        சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க   தனித்த பெண்குரலில் நடனப்பாடல்)
பாடல் 8  :     அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி, அமீர் பூபதி   (தனித்த பெண்குரல் பாடல்)
பாடல் 9         என் நா(ஆ)ட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே,  நானதில் தவறேனே
                          (தனித்த பெண்குரல் பாடல்)
                                                                              ***** 
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					11th February 2015, 10:46 PM
				
			
			
				
					#637
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					18th February 2015, 12:06 AM
				
			
			
				
					#638
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							அன்பு பேராசிரியர் அவர்களுக்கு, 
நன்றிகள் கோடி. எங்கள் வேண்டுகோளை ஏற்று மீண்டும் பொன்மனச் செம்மல் திரியை சுடர்விடச் செய்தமைக்கு.அலிபாபாவும் 40 திருடர்களும். தென்னகத்தின் முதல் வண்ணப்படம். (கேவா கலர்). சிவப்பு வண்ணம் சற்று தூக்கலாக இருக்கும் கேவா கலர் இயற்கையான வண்ணமாக இல்லாவிடினும் முதல் படம் என்ற அளவில் அது அளித்த பிரமிப்பு இன்னமும் மாறவில்லை. மக்கள் திலகத்தின் அழகு படிப்படியாக பொலிவு பெற்று மெருகேறி மலைக்கள்ளன் படத்தில் கலைச்சூரியனாக பிரகாசித்தது என்றால் இந்தப் படத்தில் அதற்கும் மேல் . சாகசச் காட்சிகளில் அதிக அளவு சிரமம் எடுத்துக் கொண்டு மக்கள் திலகம் அவர்களே தாவுவது வேகமாக குதிரை மீது ஏறிச் செல்வது உயரத்தில் இருந்து குதிப்பது மேசைகளின் மீது தாவி வழுக்கிய படி செல்வது என அத்தனை சண்டைவீரர்கள் செய்வதையும் டூப் போடாமல் தானே செய்து பிரமிப்பூட்டியிருப்பார் . ஆனால் சமீப  காலமாக இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் கூட எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு படத்தை முடித்தார் சுந்தரம். எம்.ஜி.ஆரால் கூட டூப் நடித்த காட்சிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற ஒரு கதை (எம்.ஜி.ஆர் இரண்டு நாள்கள் அவசரமாக சென்னைக்கு சென்று விட்டதால் டூப்பை வைத்து சண்டைக் காட்சி, காதல் காட்சி ஆகியவற்றை முடித்து படத்தை வெளியிட்டார் என்று ஒரு பத்திரிக்கையில் வந்தது . அதை அப்படியே பலரும் உண்மைத் தன்மையை அறியாமலே பிரசுரித்து வருகிறார்கள். பேராசிரியர் சார் நீங்கள் இது பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். ) இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர் படம். இன்றைக்கும் ரசிக்கும் வகையில் உள்ள அருமையான படம்.
						
					 
					
				 
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					24th February 2015, 03:32 PM
				
			
			
				
					#639
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					
 Originally Posted by 
jaisankar68
					
				 
				அன்பு பேராசிரியர் அவர்களுக்கு, 
நன்றிகள் கோடி. எங்கள் வேண்டுகோளை ஏற்று மீண்டும் பொன்மனச் செம்மல் திரியை சுடர்விடச் செய்தமைக்கு.அலிபாபாவும் 40 திருடர்களும். தென்னகத்தின் முதல் வண்ணப்படம். (கேவா கலர்). சிவப்பு வண்ணம் சற்று தூக்கலாக இருக்கும் கேவா கலர் இயற்கையான வண்ணமாக இல்லாவிடினும் முதல் படம் என்ற அளவில் அது அளித்த பிரமிப்பு இன்னமும் மாறவில்லை. மக்கள் திலகத்தின் அழகு படிப்படியாக பொலிவு பெற்று மெருகேறி மலைக்கள்ளன் படத்தில் கலைச்சூரியனாக பிரகாசித்தது என்றால் இந்தப் படத்தில் அதற்கும் மேல் . சாகசச் காட்சிகளில் அதிக அளவு சிரமம் எடுத்துக் கொண்டு மக்கள் திலகம் அவர்களே தாவுவது வேகமாக குதிரை மீது ஏறிச் செல்வது உயரத்தில் இருந்து குதிப்பது மேசைகளின் மீது தாவி வழுக்கிய படி செல்வது என அத்தனை சண்டைவீரர்கள் செய்வதையும் டூப் போடாமல் தானே செய்து பிரமிப்பூட்டியிருப்பார் . ஆனால் சமீப  காலமாக இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் கூட எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு படத்தை முடித்தார் சுந்தரம். எம்.ஜி.ஆரால் கூட டூப் நடித்த காட்சிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற ஒரு கதை (எம்.ஜி.ஆர் இரண்டு நாள்கள் அவசரமாக சென்னைக்கு சென்று விட்டதால் டூப்பை வைத்து சண்டைக் காட்சி, காதல் காட்சி ஆகியவற்றை முடித்து படத்தை வெளியிட்டார் என்று ஒரு பத்திரிக்கையில் வந்தது . அதை அப்படியே பலரும் உண்மைத் தன்மையை அறியாமலே பிரசுரித்து வருகிறார்கள். பேராசிரியர் சார் நீங்கள் இது பற்றி உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். ) இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர் படம். இன்றைக்கும் ரசிக்கும் வகையில் உள்ள அருமையான படம்.
			
		 
	 
 
மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம், மிக மிக  கண்டிப்பானவர்.  படப்பிடிப்பின் போது,  நமது மக்கள் திலகத்தின் எதிர் பாராத தாமத வருகையினால், ஒரு சில காட்சிகள்  டூப் போட்டு, எடுக்கப்பட்டன என்பது உண்மையே.  ஆனால், அந்த பத்திரிகை கூறியபடி,  அந்த டூப் காட்சிகள், நம் பொன்மனசெம்மல் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை என்பது தவறான செய்தி.   நான் கேள்விப்பட்ட வரையில்,  மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம்,  திரைக்கலைஞர்களை  பயமுறுத்த இப்படிப்பட்ட தந்திரங்களை கையாள்வார் என்பதே !   ஆனால்,, காதல்  மற்றும் சண்டை காட்சிகளில், முழுமையாக இறுதியில் நடித்தவர் நம் மனம் கவர்ந்த மக்கள் திலகமே !  
இன்னும் ஓரிரு தினங்களில், நமது பொன்மனச்செம்மல் நடித்த 36வது காவியம்  " மதுரை வீரன் " பற்றிய தகவல் பதிவிடப்படும். 
						
					 
					
				 
			 
			
			
				
				
				
					
						Last edited by makkal thilagam mgr; 24th February 2015 at 03:35 PM.
					
					
				
				
				
				
				
				
				
			 
			
			
		 
	 
		
	
 
			
	 
- 
	
			
				
					26th February 2015, 09:05 AM
				
			
			
				
					#640
				
				
				
			
	 
	
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
				
				
				
				
			
		 
		
			
				
				
						
						
							
						
				
					
						
							பொன்மனச்செம்மல் நடித்த 36வது காவியம்  " மதுரை வீரன் "   பற்றிய தகவல் :
1. படம் வெளியான தேதி :       13-04-1956
2. படத்தை தயாரித்த நிறுவனம் : கிருஷ்ணா  பிக்சர்ஸ்  
3. கதாநாயகன் : மக்கள் திலகம்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் :  வீரன்
5. கதாநாயகி :: பி.பானுமதி
6.  வசனம் :  கவியரசு கண்ணதாசன்
7. பாடல்கள் :    கவியரசு கண்ணதாசன்,  உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ்,   .
8.  இசை அமைப்பு :    ஜி. ராமநாதன் 
9.  இயக்குனர் :  டி. யோகானந்  
10.  பங்கு பெற்ற ஏனைய கலைஞர்கள் :   பத்மினி, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்,  டி.ஏ. மதுரம் ,  திருப்பதி சாமி, ஒ. ஏ. கே. தேவர்,:டி எஸ். பாலையா,  டி. கே. ராமசந்திரன், ஆர். பாலசுப்ரமணி,  மற்றும் பலர்.
11.  பின்னணி  பாடியவர்கள்  :  டி  எம். சவுந்தரராஜன், பி. லீலா,  எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி. பானுமதி    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++
படத்தின் சிறப்பம்சம் :
1.  திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளிலும் 100 நாட்கள் ஒடிய  முதல் தமிழ் திரைப்படம்.     
2.  33 திரையரங்குகளில்,  நூறு நாட்களை கடந்த சாதனையை ,  இன்றும்  எந்த கருப்பு-வெள்ளை  படமும் முறியடிக்க வில்லை.  
==================================================  ============================


இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
						
					 
					
				 
			 
			
			
				
				
				
					
						Last edited by makkal thilagam mgr; 4th March 2015 at 02:11 PM.
					
					
				
				
				
				
				
				
				
			 
			
			
		 
	 
		
	
 
- 
	
	
		Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
	
	
	
	
 
			
	 
		
		
Bookmarks