-
12th February 2015, 02:34 PM
#31
Junior Member
Seasoned Hubber
Mr C K
Do contribute in this glorious thread with your unique style on NT.
Regards
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th February 2015 02:34 PM
# ADS
Circuit advertisement
-
12th February 2015, 04:07 PM
#32
Junior Member
Veteran Hubber
பரமபதம் : நடிகர்திலகத்தின் புகழேணியில் புதிய நெடுந்தொடர் படிக்கட்டு
வாழ்க்கைத் திருவிழாவில் சாண் ஏறினால் முழம் சறுக்க வைக்கும் வழுக்குமரம்!
பரமபதம் 2 : தூக்கு தூக்கி
ஏணி 1 : கொண்டுவந்தால் தந்தை / சீர் கொண்டுவந்தால் சகோதரி சறுக்கல் 1
ஏணி 2 கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சறுக்கல் : இல்லை தாயைப் பொருத்தவரை கணிப்பு சரியே!!
தந்தைக்கும் தாய்க்கும் மகனே! ஆனாலும் பாசம் மோசமில்லைஎன்றாலும் தந்தை மகனிடம் பொருள் ஈட்டிக் கொண்டுவருவதை எதிர்பார்க்கிறார். தாயோ எந்த எதிர்பார்ப்புமின்றி மகனின் நல்வாழ்வே போதுமென்று எண்ணுகிறார். தந்தை விஷயத்தில் இளவரசரின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போய் இறக்கம் காணுகிறார். தாயின் விஷயத்தில் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. பத்து மாதம் சுமந்து பெற்ற மகனிடம் எந்தத் தாயும் எதையும் எதிர்பர்ப்பதில்லையே !! ஆனால் நல்வாழ்க்கைக்கு தந்தை சொல் மிக்க மந்திரமில்லை சிலசமயம் தாயின் பாசம் செல்லம் மகனின் முன்னேற்றத்துக்கு சத்ருவே!!
சீர்செனத்தி கொண்டு வராவிடில் சகோதரி கூட விருந்தும் மருந்தும் மூன்று நாளே என்னும் அனுபவ கூற்றை மெய்பிப்பாளே !!
ஏணி 3 : கொலையும் செய்வாள் பத்தினி சறுக்கல் 2
காதல் மனைவியே ஆயினும் பெண்ணின் மன ஆழத்தை அளவிடுவது கடினமே ! கெமிஸ்ட்ரி லேப்பில் டைட்ரேஷன் பரிசோதனை செய்யும்போது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் கலவை நிறம் மாறுவது போல் மனைவியாக வந்த பெண்ணின் மனதில் நடைபெற்ற வேதியியல் மாற்றங்களை சரியாக உணர்ந்திடாத இளவரசர் நண்பனின் எச்சரிக்கையையும் நம்பாது தனது கண்களாலேயே அவளின் துரோகத்தை கண்ணுறும்போது உண்மைப் பாம்பின் தீண்டுதலால் ஏறிக்கொண்டிருந்த ஏணியிலிருந்து சறுக்கி விழுகிறாரே !!
ஏணி 4 உயிர் காப்பான் தோழன் சறுக்கல்: 3
தாய்க்குப் பிறகு எதையும் எதிர்பாராதது உண்மையான நட்பே !! மனைவியின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் கண்ணற்ற காதலும் உற்ற நண்பனையே சந்தேகப்பட வைத்து சரிவை அளித்து இறுதியில் அறிவுக் கண் திறந்து உச்சமடைய உதவுகிறது !!
Last edited by sivajisenthil; 13th February 2015 at 10:52 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
12th February 2015, 10:40 PM
#33
Junior Member
Veteran Hubber
Advanced Valentine's Day wishes
பிப்ரவரி 14
அமைதியான நாகரீகமான காதலர் தின நல்வாழ்த்துக்கள்
நடிகர்திலகத்தின் நளினமான முதல் காதல் ! Puppy Love
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவின் சாட்சியாக கடற்கரை காதல் !! Beach Love
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு ....Iron Curtain Love
பூமாலையில் ஒரு மல்லிகை ...Love Fragrance
காதல்மலர் கூட்டம் ......apprentice love
மன்னிக்க வேண்டுகிறேன்....Love Excuse
Last edited by sivajisenthil; 12th February 2015 at 10:44 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
sivaa thanked for this post
-
12th February 2015, 10:45 PM
#34
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Senthilvel Sivaraj
நான் வரைந்தது

Hi Senthil,
Great work for one and only NT
Regards.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th February 2015, 11:09 PM
#35
Junior Member
Regular Hubber
-
13th February 2015, 10:24 AM
#36
Senior Member
Seasoned Hubber
டியர் சிவாஜி செந்தில் சார்,
காதலர் தினத்திற்கு நடிகர்திலகத்தின் அருமையான காதல் பாடல்களை அளித்துள்ளீர்கள். நன்றி.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th February 2015, 10:25 AM
#37
Senior Member
Seasoned Hubber
டியர் செந்தில்வேல் சார்,
தாங்கள் வரைந்த நடிகர்திலகத்தின் ஓவியம் அருமை. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th February 2015, 10:27 AM
#38
Senior Member
Seasoned Hubber
வேந்தர் தொலைக்காட்சியில், ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை, நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப் பற்றி "தடம் பதித்தவர்கள்" என்ற தலைப்பில் தொடர் ஒளிபரப்பாகிறது. (சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் 9 மணி வரையும் முதல் வாரத்தின் பகுதி மறு ஒளிபரப்பாகிறது)
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
13th February 2015, 11:20 AM
#39
Junior Member
Seasoned Hubber
Festive time at Madurai for the re release of Dharmam Enge. Upload the celebration at the theatre
for the benefit of all NT's Fans.
2015 will be the year of NT as lot of movies are lining up one by one starting with Dharmam Enge.
-
13th February 2015, 01:08 PM
#40

Originally Posted by
s.vasudevan
Festive time at Madurai for the re release of Dharmam Enge. Upload the celebration at the theatre
for the benefit of all NT's Fans.
2015 will be the year of NT as lot of movies are lining up one by one starting with Dharmam Enge.
வாசு,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தர்மம் எங்கே திரையிடப்பட்டிருக்கும் மதுரை சென்ட்ரல் திரையரங்கமே ஒரு திருவிழா சூழலில் காட்சியளிக்கிறதாம். தியேட்டர் முகப்பே தெரியாத அளவிற்கு பானர்களும் வரவேற்பு பதாகைகளும் தோரணங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றனவாம். அரங்கம் அமைந்துள்ள டவுன் ஹால் ரோட்டில் போவோர் வருவோர் அனைவரும் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு போகின்றனராம். பலபேர் தங்கள் அலைபேசியில் தியேட்டர் முகப்பை படமெடுக்கும் காட்சி ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் அரேங்கேறுகிறதாம். ரசிப்பின் உச்சகட்டமாக இந்த அலங்காரத்தை பார்த்து பிரமித்துப் போன இரு வெளிநாட்டு பிரஜைகள் நேற்றிரவு உள்ளே வந்து இந்தப் படத்தை பார்க்க முடியுமா என்று கேட்டிருக்கின்றனர். இல்லை நாளை (இன்று) முதல்தான் படம் வெளியாகிறது என்று சொல்லப்பட்டவுடன் ஏமாற்றமாக திரும்பி சென்றனராம். காரணம் இன்று காலை அவர்கள் மதுரையை விட்டு கிளம்புகிறார்களாம்.
Does any political party fund you என்று கேட்டிருக்கிறார்கள். இல்லை படத்தில் ஹீரோவாக நடித்திருப்பவரின் ரசிகர்கள் அவர்களாகவே தங்கள் சொந்த செலவில் செய்திருக்கிறார்கள் என்றவுடன் வியப்படைந்த அவர்கள் தங்களின் அடுத்த கேள்விக்கு வந்த பதிலை கேட்டு வியப்பின் உச்சிக்கே போய்விட்டார்களாம். அப்படி என்ன கேட்டார்கள் என்கிறீர்களா? இந்த ஹீரோ பெயர் என்ன? எங்கே இருக்கிறார் என்று கேட்டிருக்கிறார்கள். பதில் சொன்னவர் ஹீரோ பெயர் சிவாஜி கணேசன் என்று சொல்லிவிட்டு He is no more. அவர் காலமாகி 14 வருடங்கள் ஆகப் போகிறது என்று சொல்லியிருக்கிறார். What? என்று ஆச்சரியத்தோடு கேட்டுவிட்டு we appreciate you என்று சொல்லிவிட்டு விடைபெற்று சென்றிருகின்றனர் ஜெர்மனி நாட்டிலிருந்து வந்த இந்த சுற்றுலா பயணிகள். ஜோடியாக வந்த இந்த இருவரில் பெண்தான் அதிகமாக கேள்வி கேட்டாராம்.
தியேட்டர் அலங்கார புகைப்படங்களை நண்பர் சுந்தர்ராஜன் பதிவிடுவார்.
அன்புடன்
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
Bookmarks