Page 147 of 400 FirstFirst ... 4797137145146147148149157197247 ... LastLast
Results 1,461 to 1,470 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #1461
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    congratulations loganathan sir for completing 6000 posts in our god thread

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1462
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    புதுச்சேரி நியூடோனில் ஞாயிறு முதல் (22.02.2015) தினசரி 4 காட்சிகளாக மக்கள் தலைவன் தோன்றும் குடும்பத்தலைவன் திரைக்காவியம் வெற்றிநடை போடுகிறது. கட்டான கட்டழகு கண்ணனின் வண்ண சுவரொட்டிகள் தொடரும்...

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Last edited by kaliaperumal vinayagam; 23rd February 2015 at 05:32 PM.

  4. Likes ainefal liked this post
  5. #1463
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -
    அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.





    என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
    என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
    ஒரு குற்றமில்லாத மனிதன் -
    அவன்கோவில் இல்லாத இறைவன்

    பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா
    ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.
    (பாடுவது)

    பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
    பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
    பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
    பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
    கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
    கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் இம்ம்ம்ம்
    பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

    பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும்
    கேட்கும் இசை இருந்தால் கால்கள் தாளமிடும்
    தன்னை மறந்தது பெண்மை
    துள்ளி எழுந்தது பதுமை
    நூல் அளந்த இடை தான் நெளிய
    நூறு கோடி விந்தை புரிய
    நூறு கோடி விந்தை புரிய


    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே
    பல்லவன் பல்லவி பாடட்டுமே
    பார்த்திபன் காதலி ஆடட்டுமே
    பாடி களைத்ததும் ஆடி களைத்ததும்
    பூ மகள் கண் மலர் மூடட்டுமே
    பல்லவன் பல்லவை பாடட்டுமே...


    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
    ஆடலுடன் பாடலைக் கேட்டு
    ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

    பாடும்போது நான் தென்றல் காற்று
    பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
    நான் வரும்போது ஆயிரம் ஆடல்
    ஆட வந்ததென்ன
    நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?
    பாடும்போது நான் தென்றல் காற்று
    பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று

    பாட்டு.. ஒரு பாட்டு..
    பாட்டு.. ஒரே ஒரு பாட்டு...
    .
    (பாட்டு)


    ஏட்டினிலும் எழுத்தினிலும்
    ஒரே ஒரு பாட்டு -
    அதைஎழுதும்போதும் மயக்கம் வரும்
    ஒரே ஒரு பாட்டு
    தோட்டம் தேடி நடக்க சொல்லும்
    ஒரே ஒரு பாட்டு
    தூக்கமின்றி அலைய வைக்கும்
    ஒரே ஒரு பாட்டு


    தாய் தடுத்தால் கேட்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு -
    பெற்றதந்தையையும் மதிப்பதில்லை
    ஒரே ஒரு பாட்டு
    பாய் விரித்துப் படுக்கும்போதும்
    ஒரே ஒரு பாட்டு
    பாதியிலே விழிக்கச் சொல்லும்
    ஒரே ஒரு பாட்டு
    (பாட்டு)


    உறவு பார்த்து வருவதில்லை
    உருவம் கண்டு பிறப்பதில்லை
    நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு -
    நம்இருவருக்கும் தெரிந்ததுதான்
    காதலென்னும் பாட்டு

    பாட்டுக்குப் பாட்டெடுத்து
    நான் பாடுவதைக் கேட்டாயோ
    துள்ளி வரும் வெள்ளலையே
    நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ


    உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
    அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
    அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
    அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

    பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
    பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
    இரவு ஒன்று பருவங்கள் வேறு
    இன்பம் ஒன்று உருவங்கள் வேறு
    கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
    காதல் வேகம் காற்றிலும் இல்லை
    உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
    ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்

    எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
    எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும்
    எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
    எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
    எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
    அழகே அருகே வருவேனே

    வண்ணம் பாடுதே புது வண்ணம் பாடுதே
    வான் எங்கும் நீல ஒடை தன்னில்
    நீந்தும் வெண்ணிலா வண்ணம் பாடுதே வண்ணம் பாடுதே
    எண்ணம் போல வாழ்வே
    எண்ணம் போல வாழ்வே
    நேரும் என்றே சொல்லுதே
    கண்ணும் கண்ணும் கூடும்
    காதல் கீதம் பாடும்
    நம்மைக் காணவே நாணம் கொள்ளுதே
    நம்மைக் காணவே நாணம் கொள்ளுதே

    நாங்க புதுசா ...
    நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
    நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
    நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
    நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

    பாடினாள் ஒரு பாட்டு
    பால் நிலாவினில் நேற்று
    ஓடினேன் அதை கேட்டு
    தேடினேன் வலை போட்டு
    பூங்குயில் அவள் யாரோ
    பொன் மயில் அவள் பேரோ
    பூங்குயில் அவள் யாரோ
    பொன் மயில் அவள் பேரோ

    அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
    தோள்களில் எத்தனை கிளிகளோ
    அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
    பார்வையில் எத்தனை பாவமோ

    உலகம் சுற்றும் வாலிபனோடொரு
    பயணம் வந்தவள் நான்..
    உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
    உரிமை கொண்டவள் நான்
    உலகம் சுற்றும் வாலிபனோடொரு
    பயணம் வந்தவளே..
    உறவுப் பாடலைப் பாடவும்
    ஆடவும்உரிமை தந்தவளே
    Last edited by Tenali Rajan; 23rd February 2015 at 05:58 PM.

  6. Thanks Russellisf thanked for this post
    Likes ainefal, Russellisf liked this post
  7. #1464
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    ஆறாயிரம் பதிவுகள் கண்ட
    ஆருயிர் நண்பர் லோகநாதன்
    நூறாயிரம் பதிவுகள் தந்து
    பாரார் வியந்திட வாழ்த்துகிறேன்.


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  8. #1465
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like


    6,௦௦௦ பதிவுகள் கண்ட சகோதரர் திரு. லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  9. #1466
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats Mr.Loganathan sir for completing 6000 postings

  10. #1467
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Likes Russelldvt liked this post
  12. #1468
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா - தொடர்ச்சி.....

    ------------------------------------------------------------------------------------------------------------

    திரு. மு. ராசாராம் (இ .ஆ .ப ), செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    செய்தித் துறை என்பது பூட்டு சாவி இல்லாத துறை போன்றது .

    நூற்றாண்டு விழா , என்ற வரலாறு படைக்க உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
    வாழ்ந்த காலத்தில், நாம் வாழ்வது நமக்கெல்லாம் பெருமை.

    புதினம் போல், நாவல் போல், இந்த நூலை, ஆசிரியர் திரு. மணிவண்ணன்
    அற்புதமாக எழுதியுள்ளார்.

    புரட்சி தலைவரின் தமிழ் பணி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
    சென்னையில் 2 வது உலகத் தமிழ் மாநாட்டை பேரறிஞர் அண்ணா நடத்திக் காட்டினார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். , மதுரையில், 5 வது உலகத் தமிழ்
    மாநாட்டை, பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் வழி நடத்தினார்.
    தஞ்சையில் தமிழ் பல்கலை கழகம் உருவாக்கியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
    இதற்கு எவ்வளவு ஏக்கர் நிலம் வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டார் .
    சரியான பதில் கிடைக்காததால், தானே முன்வந்து 1000 ஏக்கர் நிலம் அரசு
    சார்பில் அளிப்பதாக உத்தரவிட்டார். தமிழ்நாட்டில், உலகத் தமிழ் சங்கம்
    உருவாக்கியதும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான். ஆனால் அவருக்குப்பின்
    வந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் சாதகமாக இல்லை.
    பின்னர் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் ரூ.300 கோடி
    ஒதுக்கப்பட்டு, தமிழன்னை சிலை உருவாக ஏற்பாடு நடக்கின்றது.

    1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, மத்திய அரசு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் அளிக்க முன்வந்தது .அது இந்தியில்தான் உள்ளது எனக்கூறி புரட்சி தலைவர் ஏற்க மறுத்தார்.

    ஆரம்ப கட்டத்தில், அனைவரும் சந்தேகப் பார்வையோடு, எதிர்த்த , குழந்தைகள்
    சத்துணவு திட்டத்தை , உலகமே வியக்கும் அளவில் ,சரித்திரத்தில் இடம்பெறும்
    வகையில் அமுலுக்கு கொண்டுவந்து சாதனை புரிந்தார். புரட்சி தலைவர்.
    அவரால் இன்று சுமார் 2 லட்சம் பெண்கள் சத்துணவு கூடத்தில் வேலை பெற்று
    வாழ்கின்றனர்.

    10 ஆண்டுகளுக்கு மேல், பொற்கால ஆட்சி நடத்தி, ஏழை எளியோருக்காக, பல
    நல்ல நல திட்டங்களை செயல்படுத்தியவர் .

    அவரது நூற்றாண்டு காலத்தில், இந்த புத்தகம் வெளியாவது பெருமைக்குரிய
    விஷயம் . இன்றைய சந்ததியைச் சார்ந்த மாணவ, மாணவியர் பாடப் புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு இடம் பெற வேண்டும் என்பது எனது அவா .





    திரு. பாலு மணிவண்ணன் (ஆசிரியர் ): நடிப்பிலும், அரசியலிலும், போற்றத்தக்க,
    மனிதநேயமிக்க மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள் என தனது ஏற்புரையில்
    குறிப்பிட்டார்.

    மேலும், இந்த நூலை எழுதிய தனக்கு அளிக்கப்பட்ட பணமுடிப்பை, ,எட்டாவது
    வள்ளல் எம்.ஜி.ஆர். போல , சும்மாடு பதிப்பகம் நிறுவனத்தாருக்கு பரிசளித்து
    பாராட்டுக்கள் பெற்றார்.





    இறுதியில் திரு. துரைராசு அவர்கள், இந்த நூலை வெளியிட்ட ஆசிரியர்,
    நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பெருமைகள் சேரும் வகையில் பேசிய முக்கிய விருந்தினர்கள், விழாவில் பங்குபெற்று சிறப்பு சேர்த்த பார்வையாளர்கள் , நிகழ்ச்சியை நடத்த உதவிய
    மாநகராட்சி நிர்வாகம் ஆகியோருக்கு நன்றி செலுத்தி விடை பெற்றார்.




    முற்றும் .....!!!!

  13. #1469
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு. சி. எஸ்.குமார். :தங்களின் பேரறிஞர் அண்ணாவின் இருப்பிடம், வாழ்க்கை குறிப்பு , அண்ணாவின் நினைவலைகள், பேரறிஞர் அண்ணா தலைப்பில் வெளியான பாடல் தொகுப்பு, காஞ்சியில் சட்ட மன்ற தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க. சாதனை, காஞ்சியில் மக்கள் திலகத்தின் படங்களுக்கு மக்கள் அளித்த வரவேற்பு, புள்ளி விவரங்கள் பற்றிய பதிவுகள் நன்று.


    நண்பர் திரு. வினோத் : மக்கள் திலகத்தின் படங்களை , நாள் தவறாமல் , வெளியான தேதி அன்று புகைப்படங்களுடன் பதிவிட்டு நினைவுபடுத்துவதற்கு நன்றி.



    நண்பர் திரு. தெனாலி ராஜன் : புரட்சி தலைவரின் வெற்றி, உழைப்பு, பாடல் ஆகிய
    தலைப்புகளில் கவிநயத்தோடு பாடல்கள் தேர்ந்தெடுத்து பதிவிட்ட தங்களின்
    உழைப்பு பாராட்டத்தக்கது.



    நண்பர் திரு. ரவிச்சந்திரன் : கோவை -சண்முகா வில் புரட்சி நடிகரின்
    "புதுமைப் பித்தன் " ஞாயிறு மாலை காட்சி நண்பர் திரு. வி. கே.எம். மற்றும் பக்தர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தேன். நல்ல சவுண்ட். சென்னையில் இந்த
    மாதிரி பிரிண்ட் பார்த்து நெடுநாட்களாகிவிட்டது. இந்த பட சுவரொட்டிகள் பளிச்
    என பதிவிட்டதற்கு நன்றி



    நண்பர் திரு. செல்வகுமார் : தங்களின் நிகரில்லாத மனிதர் எம்.ஜி.ஆர். என்கிற
    செய்திப் பதிவு கண்டு நெகிழ்ந்து போனேன். நன்றி




    நண்பர் திரு. கலியபெருமாள்: புதுவையில், மக்கள் திலகத்தின் "குடும்பத்தலைவன் வெளியீடு பற்றிய தகவலுக்கு நன்றி.


    நண்பர் திரு. சத்யா : தங்களின் வண்ணப்பதிவுகள் அருமை.


    நண்பர் திரு. யுகேஷ் பாபு : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி கவிஞர் வைரமுத்து
    குறிப்பிட்ட செய்திகள் அபாரம்.




    ஆர். லோகநாதன்.

  14. #1470
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று 67வது பிறந்தநாள் கொண்டாடும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நமது திரியின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    *நமது தலைவருடன் நடித்த படங்கள் 28

    *அதில் கருப்பு வெள்ளை படங்கள் 14

    *கலர் படங்கள் 14

    *தேவர் பிலிம்ஸ் அதிக படங்களை தயாரித்து உள்ளது 6 படங்கள்

    *அதிக படங்களுக்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் 15 படங்கள்

    *அதிக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் வி.ராமமூர்த்தி 12 படங்கள்

    *அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன் 9 படங்கள்

    *அதிக படங்களுக்கு வசனம் எழுதியவர் கே.சொர்ணம் 10 படங்கள்

    *ஒரு படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கியுள்ளார் படம் எங்கள் தங்கம்

    *ஆயிரத்தில் ஒருவன் விஸ்வநாதன் ராமமூர்த்தி சேர்ந்து இசை அமைத்த கடைசி படமாகும்

    *கணவன் படத்திற்கு எம்ஜியார் கதை எழுதியுள்ளார்

    *முதல் படம் ஆயிரத்தில் ஒருவன் (1965) கடைசி படம் பட்டிக்காட்டு பொன்னையா (1973) 8வருடங்கள் நமது தலைவருடன் சினிமாவில் நடித்துள்ளார்

    *1968இல் தலைவருடன் அதிகபட்சமாக 8படங்களிலும், 1973இல் குறைந்தபட்சமாக ஒரு படத்திலும் நடித்துள்ளார்

    *இரட்டை வேடங்களில் 2படங்களில் நடித்துள்ளார், அடிமைப்பெண் மற்றும் குமரிகோட்டம்

    *அதிக நாள் தயாரிப்பில் இருந்த படம் ஒருதாய் மக்கள். 3வருடங்கள்

    [/URL]
    Last edited by Muthaiyan Ammu; 24th February 2015 at 03:03 AM.

  15. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •