-
1st March 2015, 01:54 PM
#11
Junior Member
Newbie Hubber
கிரேசி மோகன் ஒரு நாடகத்தில் நகைச்சுவை ஞாபகம் வருகிறது.(மாறு வேடம் போட இருக்கும் நபருக்கு அட்வைஸ்).
நீ பாரு ,அப்படியே மவுண்ட் ரோடு 18 B பஸ் பிடிச்சு சைதா பேட்டை இலே இறங்கு. அப்படியே ரைட் எடுத்து போனியானா ஒரு கை பம்ப் வரும். ரைட் வழியா போனா ஒரு குடிசையிலே ......... போஸ்டர் ஒட்டியிருக்கும். அங்கே லெப்ட் திரும்பி மூணாம் வீட்டுலே ஒரு மஞ்ச பெயிண்ட் அடிச்ச வீடு ஒன்னு வரும். அதை தட்டினா , கோதண்டம்னு ஒருத்தன் கதவை திறந்து என்ன வேணும்னு கேட்பான். அவன் கிட்டே மட்டும் போயி மேக் அப் பண்ணிக்காதே. மோசமான மேக் அப் மேன் .
அதே போல , மகாபாரதம் எழுத சொன்னா ,ராமாயணம் பிடித்த ஒருத்தன் ,முழு ராமாயண கதையை எழுதி விட்டு, கடைசியா மகாபாரதமும் ஒரு இதிகாசம் என்பது குறிப்பிட பட வேண்டியதே என்று குறிப்பு எழுதுவது போல தொழில் தர்மம் தலை விரித்து ஆடுகிறது தமிழ் இந்துவில்.
இத்தனைக்கும் எங்கள் பத்திரிகையில் முன்னேறியவர் இதன் ஆசிரியர்.(Asokan)
தொழில் தர்மத்துக்கு பெயர் போனது ஹிந்து.(என் உறவினர் 12 பேராவது பணி புரிந்த பத்திரிகை.)
ராமா நாய்டு இறந்த போது ,குறிப்பிட்டு எழுதியவருக்கு அவர் நேரடி தமிழில் எடுத்த குழந்தைக்காக, வசந்த மாளிகை வெற்றி படங்களை highlight செய்யாமல், ராமுடு பீமுடு பற்றி குறிப்பு. (தெலுங்கில் எவனாவது இதை செய்வானா).ஜமுனா பற்றிய குறிப்பில் ,அவர் நடிப்பில் வந்து பேச பட்ட பல படங்கள் குறிப்பிட படாமல்,வெளி வராத ஒரு படம் பற்றி குறிப்பு.
எங்கே போகிறோம்? இந்த விஷமம் செய்யும் நபர் பத்திரிகை தர்மத்தை குழி தோண்டி புதைக்கிறார். ச்சே . இப்படியும் சிலர்.
Last edited by Gopal.s; 1st March 2015 at 02:06 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st March 2015 01:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks