-
1st March 2015, 10:50 PM
#11
Junior Member
Devoted Hubber
கோலாகலமாக நடந்த கமலின் உத்தம வில்லன் இசை வெளியீடு விழா
திரையுலகம் மற்றும் ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ‘உத்தம வில்லன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் லிங்குசாமி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும், திரையுல பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். உத்தம வில்லன் படத்தில் மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்விழாவை இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தொகுத்து வழங்கினார். முதலில் இவ்விழாவில் மறைந்த இயக்குனர் பாலசந்தர் கமலைப் பற்றி பேசிய ஒலிநாடா ஒலிபரப்பப்பட்டது. பின்னர் கமல் தனது குருநாதர் இயக்குனர் சிகரத்தை பற்றி உருக்கமாக பேசிய ஒலிநாடா ஒலிபரப்பப்பட்டது. தன் கதாபாத்திரத்தை பற்றி இயக்குனர் சிகரம் பேசும் கானொளி காண்பிக்கப்பட்டது.
இப்படத்தின் நாயகி பூஜா குமாரின் நடன நிகழ்ச்சி, மற்றும் நடிகர் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தனது உத்தமவில்லன் படத்தில் நடித்தது பற்றிய அனுபவங்களை கூறினார்கள். கமலின் பிரபல பாடல்களுக்கு நடனக்குழுவினர் நடனமும் அதையடுத்து இப்படத்தின் டிரைலரும் ஒளிபரப்பப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா ஆகியோர் படத்தின் பணியாற்றியது குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் லிங்குசாமி பேசும்போது, திருப்பதி பிரதர்ஸ் மூலம் உத்தம வில்லன் படத்தை தயாரித்திருப்பது எங்களுக்கு பெருமை என்று கூறினார். இயக்குனர் அரவிந்த் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறினார்.
http://cinema.maalaimalar.com/2015/0...audio-rel.html
Last edited by Ravi Ravi; 1st March 2015 at 10:59 PM.
-
1st March 2015 10:50 PM
# ADS
Circuit advertisement
Bookmarks