Page 34 of 401 FirstFirst ... 2432333435364484134 ... LastLast
Results 331 to 340 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #331
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellbpw thanked for this post
    Likes kalnayak, Russellbpw liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #332
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Senthilvel Sir and Sivaji Senthil Sir,

    EXCELLENT WORK !

    You are truly taking Nadigar Thilagam's fame to the next level.

    Senthilvel Sir...Your rare documents and articles published on Nadigar Thilagam and re-presented here are amazing.

    Kindly preserve these things sir and you can always share these things to people who do not have any commercial intentions and to those who would share these things to others...!

    Am also documenting these things in a structured way and shortly, I will share this FREE OF COST TO ALL FANS who desire to have this...!

    These things should spread to every nook and corner across globe to all genuine Nadigar Thilagam Lovers.

    Regards
    RKS
    Last edited by RavikiranSurya; 1st March 2015 at 11:03 PM.

  5. Thanks Georgeqlj thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  6. #333
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை சென்ட்ரல் - கடந்த 4 வாரம் திரையிட்ட படங்களில் அதிக வசூல் செய்திருப்பது நமது நடிகர் திலகம் அவர்களின் தர்மம் எங்கே திரைப்படம் !

    சந்தேகம் உள்ள நண்பர்கள் கீழ்கண்ட தொலைபேசியை தொடர்புகொண்டு உண்மை தகவலை அறிந்துகொள்ளலாம்....!


    மதுரை சென்ட்ரல் திரை அரங்கம் தொலைபேசி எண்

    Central Cinema Hall

    +(91)-452-4230444

    போஸ்டர் அடித்த கிள்ளைகளுக்கு.... இது கூட்டமே இல்லாத ஆட்டம் கொண்ட அரங்கின் வெளிபகுதி மற்றும் உள் பகுதி .....?

    கண்ணிருந்தும் குருடர்களாக பொய் தகவலை போஸ்டர் அடித்து பரப்ப நினைத்து படுதோல்வி அடைந்துகொண்டிருக்கும் வம்பிழுக்கும் வயிதெரிச்சல்காரர்களுக்கு ......இன்னும் கொஞ்சம் கூட வயிதெரிச்சல் படுங்கள் !!!

    அப்போதுதான் உங்களுக்கு அடுத்த முறை 4 சீட் போஸ்டர் அடிக்க தோதாக இருக்கும் !

    கூட்டம் இல்லாமல் ஆட்டம் போடமுடியாது என்பதை அறிந்தும் அறியாததுபோல நடிக்கும் கிள்ளைகள் இதை உணர்ந்தால் சரி !



    தர்மம் எங்கே தியேட்டர் கொண்டாட்டம் போட்டோக்கள்.









    இடைவேளையில் பொய் தகவலை போஸ்டர் அடித்து பரப்பும் வயிதெரிச்சல்காரர்களுக்கு சகோதரத்துவத்தை வலியுறுத்தி பாவமன்னிப்பு வழங்கும் பாடல் TRAILER வடிவில் !






    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
    Last edited by RavikiranSurya; 1st March 2015 at 11:38 PM.

  7. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  8. #334
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் திலகம் திரியில் உங்கள் பதிவுவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான ஒரு பாயிண்ட்டைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். நான் பலமுறை இங்கே குறிப்பிட்டுள்ளது போல் ஒரு சில தனி நபர்கள் தங்களின் hidden agenda-வை தாங்கள் சார்ந்துள்ள அல்லது பணிபுரிகின்ற பாரம்பரியமிக்க நம்பகத்தன்மைக்கு பேர் பெற்ற ஊடக குழுமங்களிலிருந்து வெளிவரும் பிரசுரங்களில் செயல்படுத்தும் தரம் தாழ்ந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர். ராமநாயுடு என்றாலே வசந்த மாளிகைதான் நினைவிற்கு வரும். அதை மறைத்து வேறொரு படத்தை கொண்டு வருகிறார்கள் என்றால் நடிகர் திலகத்தை இருட்டடிப்பு செய்யும் முயற்சியே. அந்தப் படத்தை பற்றி மட்டும் சொன்னால் கூட பரவாயில்லை என நினைக்கலாம். ஆனால் அந்தப் படம் இத்துனை ஊர்களில் இத்துனை நாட்கள் ஓடியது என்றெல்லாம் சம்பந்தமேயில்லாமல் ராமநாயுடுவின் மறைவு செய்தியில் கொண்டு வருகிறார்கள் என்றால் எந்தளவிற்கு கீழே இறங்குகிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

    தமிழ் ஹிந்துவில் மட்டுமல்ல ஆங்கில ஹிந்துவிலும் இது இப்போது பிரதிபலிக்கிறது. நேற்று ஒரு கட்டுரை ஆங்கில ஹிந்துவில் வெளிவந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் காக்கி உடையணிந்த போலீஸ் கதாபாத்திரங்களைப் பற்றிய ஒரு கட்டுரை. அதில் நேற்று வந்த நடிகர் முதற்கொண்டு இடம் பெறுகிறார். அவர்கள் uniform அணிந்த ஸ்டில்ஸ் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் தமிழ் சினிமாவில் போலீஸ் என்றாலே அனைவரின் மனத்திலும் உடனே தோன்றும் Sp.சௌத்ரி ஸ்டில் இல்லை. உள்ளே கட்டுரையிலும் ஏதோ போகிற போக்கில் ஒரு வரி மட்டும் அது கூட UTV தனஞ்சயன் சொன்னதாக எழுதியிருக்கிறார்கள். இப்படி உண்மைகளை மறைப்பதால் இவர்களுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.

    ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் அவர்கள் ஆனந்த விகடன் ஊழியர்களிடம் ஒரு முறை சொன்னாராம். உன் தனிப்பட்ட கருத்தை செய்திகளில் பிரதிபலிக்காதே. உன் கருத்தை நீ சொல்ல வேண்டிய இடம் தலையங்கம் என்றாராம். அதைதான் இப்படிப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது, அதை புரிந்துக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருந்தால்.

    அன்புடன்

    ஆர்கேஎஸ், குற்றவாளி அசோகன் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட blatant misuse of position-ஐ தடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

  9. Likes kalnayak, Subramaniam Ramajayam liked this post
  10. #335
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    கோபால்,

    ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் அவர்கள் ஆனந்த விகடன் ஊழியர்களிடம் ஒரு முறை சொன்னாராம். உன் தனிப்பட்ட கருத்தை செய்திகளில் பிரதிபலிக்காதே. உன் கருத்தை நீ சொல்ல வேண்டிய இடம் தலையங்கம் என்றாராம். அதைதான் இப்படிப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது, அதை புரிந்துக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருந்தால்.

    அன்புடன்

    ஆர்கேஎஸ், குற்றவாளி அசோகன் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட blatant misuse of position-ஐ தடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.
    முரளி,

    ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அசோகன் ,இதற்கு பொறுப்பாக மாட்டார். ஆனால் ,இந்த மாதிரி ஒருதலை பட்ட விஷம செய்திகளை ,அவர் காதுக்கு கொண்டு சென்றால், அதற்கு பிறகு அவர் தலையிட்டே ஆக வேண்டும். அவர் கைபேசி என்னிடம் உள்ளது. இனிமேலும் ,இந்த போக்கு தொடர்ந்தால் ,அவரை எந்த நேரத்திலும் கூப்பிடும் உரிமை உள்ளவன் நான். அதே போல ராம். அவருடன் ,கடந்த டிசெம்பரில் சுமார் 20 நிமிடம் உரையாடினேன்.

    ஆனால் பாவம், இந்த மாதிரி செய்தி வெளியிடும் நபர்களும் ,வாழ்க்கையில் கஷ்ட பட்டு முன்னேறியவர்கள். தாங்கள் ,சிறு வயதில் மூளை சலவை செய்ய பட்டு ,தொழில் தர்மத்தை புரிந்து கொள்ளாமல் செயல் படும் நடுத்தரர்கள். அவர்களுக்கு புரிவதில்லை. வெளியில் இவர்களை போல பலர் ,இந்த வேலைக்கு தயாராய் காத்திருக்கிறார்கள் என்பது. பொதுவாக, நாம் சம்பந்த பட்ட நபர் திருந்த சந்தர்ப்பம் அளிக்கலாம்.தனி நபரின் குடும்பம்,மற்றும் தொழில் வளர்ச்சி இதனால் சிதைவதில் எனக்கு உடன்பாடில்லை.அதனால் ,நான் பெரும்பாலும் ,எனது செல்வாக்கை,உபயோகிக்க விரும்புவதில்லை. ஆனால் ,இந்த நபர் எல்லை மீறி நம்மை கொதிப்புக்கு ஆளாக்கி ,ஹிந்துவை ,இதயக்கனி ஆக்க முற்பட்டால் , வேறு என்னதான் வழி?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #336
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    சூரியன் எப் எம் அறிவிப்பாளார் திரு யாழ் சுதாகர் அவர்களின் பாராட்டுக் கவிதை

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  12. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  13. #337
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    I too shocked to read the article in The Hindu where against each star's name the movie name has been
    mentioned. No mentioning of the benchmark movie of Thangapathakkam and the great NT. It is really
    shame on The Hindu for the biased article.

  14. Likes Subramaniam Ramajayam liked this post
  15. #338
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மூத்த சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,

    வணக்கம். மதுரை சென்ட்ரலில் கடந்த இரண்டு வாரங்களில் வெளியான தர்மம் எங்கே மற்றும் பெரிய இடத்துப் பெண் ஆகிய படங்கள் பெற்ற வசூலை ஒப்பிட்டு நீங்கள் எழுதியுள்ள பதிவில் இடம் பெற்றுள்ள ஒரு சில வாக்கியங்கள் மிக மிக தவறானவை மட்டுமல்ல என் போன்றோரின் மனதை புண்படுத்தவும் செய்துவிட்டது. தர்மம் எங்கே படத்திற்கு ஞாயிறு மாலை காட்சிக்கு டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன என்று ஒரு அபாண்டமான குற்றசாட்டை கூறியிருக்கிறீர்கள். படத்தை வெளியிட்டது எனது நீண்ட நாள் நண்பர். அவர் எந்த நிலையிலும் இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களுக்கு உடன்பட மாட்டார். ஒரு வேளை படம் சரியாக போகாமல் இருந்திருந்தால் அந்த நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பாரே தவிர இப்படிப்பட்ட வழியை தேர்ந்தெடுக்க மாட்டார். அவரின் Integrity-ஐ நீங்கள் question செய்திருப்பது மிக மிக தவறான செயல்

    உண்மையில் நடந்தது என்ன என்பதை தெரிந்துக் கொள்ளாமல் நண்பர் ஆர்கேஎஸ் மீது உள்ள கோவத்தை மனதில் வைத்து இப்படி சேற்றை வாரி இறைக்கும் செயல் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

    மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன். இப்படி மொத்தமாக காசு கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கும் வசதி சிவாஜி ரசிகனுக்கு இல்லை. சார். அவனுக்கு வேறு எங்கிருந்தும் வருமானம் கிடையாது சார். அது மட்டுமல்ல அப்படி மொத்த டிக்கெட்டுகளை வாங்கி விற்கும் அவல சூழ்நிலை இதுவரை சிவாஜி படத்திற்கு ஏற்படவில்லை சார். இது போன்ற குற்றச்சாட்டுகள் பூமராங் [Boomerang] போன்றவை என்பது உங்களுக்கு நான் சொல்லாமலே தெரியும்.

    நண்பர் ஆர்கேஎஸ் போட்ட பதிவு உங்களை இப்படி எழுத வைத்திருக்கிறது என்று சொல்வீர்கள். அவர் அப்படி பதிவு போட காரணம் என்ன? கடந்த 8,9 மாதங்களில் இதே மதுரை சென்ட்ரலில் நடிகர் திலகத்தின் 7,8 படங்கள் வெளியாகியிருக்கின்றன [உங்கள் பதிவில் மற்றுமொரு திருத்தம். ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை வெளியாவதாக நீங்கள் சொல்வது தவறு என்பதற்கு இதுவே example]. அவை வெளியானபோது தியேட்டரின் முகப்பிலும் அரங்க வளாகத்திலும் வைக்கப்பட்டிருந்த ப்ளெக்ஸ் பானர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து இங்கே பதிந்திருந்தோம். அவற்றில் ஏதேனும் ஒரு இடத்திலாவது எம்ஜிஆர் அவர்களைப் பற்றியோ அவரின் ரசிகர்களைப் பற்றியோ விமர்சனம் இருந்ததுண்டா? அப்படியிருக்க இப்போது பெரிய இடத்துப் பெண் வெளியானபோது தேவையில்லாமல் சிவாஜி ரசிகர்களை பற்றி போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தை அந்தப் போஸ்டர்களையும் எம்ஜிஆர் திரியில் பதிவிட்டிருந்ததையும் கண்டித்துதான் ஆர்கேஎஸ் அந்த பதிவை செய்தார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அவர் உங்கள் பக்கமே வருவதில்லை. இப்போதும் இந்த போஸ்டர் திரியில் வராமல் இருந்திருந்தால் அவர் இந்த பதிவை போட்டிருக்க மாட்டார்.

    மற்றொரு விஷயம். தேவையில்லாமல் நடிகர் திலகம் தன் ரசிகர்களை அழைக்கும் முறையை குறிப்பிட்டு தவறான அர்த்தம் வரும் விதத்தில் அதை வியாக்கியானம் செய்வது அதுவும் ஆசிரியர் தொழிலில் உள்ள உங்களைப் போன்றவர்கள் செய்கிறீர்கள் என்று சொன்னால் இதற்கு மேல் நான் என்ன சொல்வது?

    எங்கள் வருத்தத்தை புரிந்துக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

    அன்புடன்

    .

  16. Likes kalnayak liked this post
  17. #339
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by murali srinivas View Post
    மூத்த சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,

    வணக்கம். மதுரை சென்ட்ரலில் கடந்த இரண்டு வாரங்களில் வெளியான தர்மம் எங்கே மற்றும் பெரிய இடத்துப் பெண் ஆகிய படங்கள் பெற்ற வசூலை ஒப்பிட்டு நீங்கள் எழுதியுள்ள பதிவில் இடம் பெற்றுள்ள ஒரு சில வாக்கியங்கள் மிக மிக தவறானவை மட்டுமல்ல என் போன்றோரின் மனதை புண்படுத்தவும் செய்துவிட்டது. தர்மம் எங்கே படத்திற்கு ஞாயிறு மாலை காட்சிக்கு டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன என்று ஒரு அபாண்டமான குற்றசாட்டை கூறியிருக்கிறீர்கள். படத்தை வெளியிட்டது எனது நீண்ட நாள் நண்பர். அவர் எந்த நிலையிலும் இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களுக்கு உடன்பட மாட்டார். ஒரு வேளை படம் சரியாக போகாமல் இருந்திருந்தால் அந்த நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பாரே தவிர இப்படிப்பட்ட வழியை தேர்ந்தெடுக்க மாட்டார். அவரின் integrity-ஐ நீங்கள் question செய்திருப்பது மிக மிக தவறான செயல்

    உண்மையில் நடந்தது என்ன என்பதை தெரிந்துக் கொள்ளாமல் நண்பர் ஆர்கேஎஸ் மீது உள்ள கோவத்தை மனதில் வைத்து இப்படி சேற்றை வாரி இறைக்கும் செயல் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

    மற்றொன்றையும் சொல்ல விரும்புகிறேன். இப்படி மொத்தமாக காசு கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கும் வசதி சிவாஜி ரசிகனுக்கு இல்லை. சார். அவனுக்கு வேறு எங்கிருந்தும் வருமானம் கிடையாது சார். அது மட்டுமல்ல அப்படி மொத்த டிக்கெட்டுகளை வாங்கி விற்கும் அவல சூழ்நிலை இதுவரை சிவாஜி படத்திற்கு ஏற்படவில்லை சார். இது போன்ற குற்றச்சாட்டுகள் பூமராங் [boomerang] போன்றவை என்பது உங்களுக்கு நான் சொல்லாமலே தெரியும்.

    நண்பர் ஆர்கேஎஸ் போட்ட பதிவு உங்களை இப்படி எழுத வைத்திருக்கிறது என்று சொல்வீர்கள். அவர் அப்படி பதிவு போட காரணம் என்ன? கடந்த 8,9 மாதங்களில் இதே மதுரை சென்ட்ரலில் நடிகர் திலகத்தின் 7,8 படங்கள் வெளியாகியிருக்கின்றன [உங்கள் பதிவில் மற்றுமொரு திருத்தம். ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை வெளியாவதாக நீங்கள் சொல்வது தவறு என்பதற்கு இதுவே example]. அவை வெளியானபோது தியேட்டரின் முகப்பிலும் அரங்க வளாகத்திலும் வைக்கப்பட்டிருந்த ப்ளெக்ஸ் பானர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து இங்கே பதிந்திருந்தோம். அவற்றில் ஏதேனும் ஒரு இடத்திலாவது எம்ஜிஆர் அவர்களைப் பற்றியோ அவரின் ரசிகர்களைப் பற்றியோ விமர்சனம் இருந்ததுண்டா? அப்படியிருக்க இப்போது பெரிய இடத்துப் பெண் வெளியானபோது தேவையில்லாமல் சிவாஜி ரசிகர்களை பற்றி போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தை அந்தப் போஸ்டர்களையும் எம்ஜிஆர் திரியில் பதிவிட்டிருந்ததையும் கண்டித்துதான் ஆர்கேஎஸ் அந்த பதிவை செய்தார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அவர் உங்கள் பக்கமே வருவதில்லை. இப்போதும் இந்த போஸ்டர் திரியில் வராமல் இருந்திருந்தால் அவர் இந்த பதிவை போட்டிருக்க மாட்டார்.

    மற்றொரு விஷயம். தேவையில்லாமல் நடிகர் திலகம் தன் ரசிகர்களை அழைக்கும் முறையை குறிப்பிட்டு தவறான அர்த்தம் வரும் விதத்தில் அதை வியாக்கியானம் செய்வது அதுவும் ஆசிரியர் தொழிலில் உள்ள உங்களைப் போன்றவர்கள் செய்கிறீர்கள் என்று சொன்னால் இதற்கு மேல் நான் என்ன சொல்வது?

    எங்கள் வருத்தத்தை புரிந்துக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

    அன்புடன்

    .
    அருமை சகோதரர் திரு. முரளி சீனிவாஸ் அவர்கள் அறிவது :

    வணக்கங்கள் பல !

    இது நாள் வரை, மதுரை சென்ட்ரல் அரங்கில் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் காவியங்களுக்கு வைக்கப் பட்டிருந்த பேனர்களில், அவரை மட்டுமே புகழ்ந்து வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால், இம்முறை வைக்கப்பட்ட பேனர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை விமர்சித்திருந்த வாசகங்கள் சரியென்று நான் வாதிடவில்லை.

    சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்பு திரியினில் பதிவுகள் வழங்கி வருவது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், அவர் குறிப்பிட்ட "கிள்ளைகள்" என்ற வார்த்தையும், "பாவ மன்னிப்பு" பெறுங்கள் என்று எழுதியதுதான் என்னை சற்று உணர்ச்சி வசப்பட செய்தது.

    மதுரை ரசிகர்கள் மட்டுமே அறிந்திருந்த, நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு எதிர்மறை விமர்சனத்தை
    திரியினில், பலரும் அறியும் வண்ணம், பகிரங்கப்படுத்தி இருக்க வேண்டாமே ! அவர் பதில் தர வேண்டாம் என்றும் நான் சொல்ல வில்லை. அந்த பதில், என்னைப் போன்றோரை காயப்படுத்தாமலிருப்பது நன்று !

    எல்லா பேனர்களையும்,, திரு. லோகநாதன் அவர்கள் பதிவிட்டு கொண்டு வரும்போது, தாங்கள் குறிப்பிட்ட பேனரும் பதிவிடப்பட்டு விட்டது. இது ஒரு over-sight போஸ்டிங்கே தவிர வேறு எந்த உள்நோக்கம் கொண்டவையாக இருக்க முடியாது.

    மக்கள் திலகத்தின் மாறாத அன்பினாலும், பண்பினாலும் கவரப்பட்ட பின்பு தான், நான் பார்க்கும் உத்தியோகத்தில் சேர்ந்தேன். எனவே, முதலில் அவரது பக்தன், பின்புதான் எனது தொழில் பக்தி.

    எனக்கு, மதுரையிலிருந்து வந்த தகவலைத்தான் நான் திரியினில் பகிர்ந்து கொண்டேன். அது உண்மையில்லாத பட்சத்தில், அதை ஆதாரத்துடன் சுட்டி காட்டும்போது, அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் எனக்குண்டு.

    தங்கள் மீது எனக்கு தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. எனது பதிவு தங்களை புண்படுத்தி இருந்தால், எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். .

    என்னுடைய பதிவுகளில் புரட்சித்தலைவரின் புகழ் பாடுவது மட்டுமே பெரும்பாலும் இருக்கும். எப்போதாவது, இது போன்ற சீண்டல்களுக்குத்தான் காட்டமான பதில் இருக்கும். நானும், ஒரு சராசரி ரசிகன் தானே ! எனக்கும், சிற்சில சமயங்களில், இது போன்ற கோப-தாபங்கள் ஏற்பட்டு விடுகின்றன. எனினும், எதிர்காலத்தில், அந்த கோபத்தையும், கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன்.

    நன்றி !

  18. #340
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    செவாலியே விருது அறிவித்த சமயத்தில் நடந்த சில விஷயங்கள்..


  19. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •