Page 186 of 400 FirstFirst ... 86136176184185186187188196236286 ... LastLast
Results 1,851 to 1,860 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #1851
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    அரசியல்வாதியாக இல்லை என்றாலும் ஓர் நடிகராக இவரை ரசிக்காதோர் எவருமில்லை, உங்களால் தான் வாத்தியாரே திரை உலகமும் அரசியல் களமும் ஓர் புரட்சியை கண்டது.
    காற்றுக்கு ஏது கடைசி மூச்சு, இன்றைய தலைமுறையினர் மனதிலும் அனையாத சுடரொலிதான் புரட்சித் தலைவர்!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1852
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    இனிய நண்பர் கலைவேந்தன்

    வணக்கம் ! நலமறிய அவா !

    மார்ச் வரை அலுவல் வேலைகள் மிக மிக அதிக அளவில் உள்ளதால் திரியில் தொடர்ந்து பங்கு கொள்ளமுடியாமல் போகிறது. இது மார்ச் 31 ( financial year end ) வரை இப்படிதான் இருக்கும். விற்பனை பிரிவில் நான் இருப்பதால் target போன்ற விஷயங்கள் சற்று கூடுதலாக செய்யவேண்டிய நிலை.

    இன்றுதான் சிறிது நேரம் கிடைத்து உட்கார்ந்து திரியை பார்க்க முடிந்தது..! நீங்கள் எஸ்வி சார் அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பியதை படிக்க நேர்ந்தது...

    உங்கள் கேள்விக்கெல்லாம் எதற்கு சார் நான் பயப்படவேண்டும் ?
    அதுவும் திரிக்கு வராத அளவிற்கு ...? :-d

    ஒன்று தவறு செய்தால் பயப்படவேண்டும் ... மடியில் கனம் இல்லாதவனுக்கு வழியில் பயம் எதற்கு ?

    என்ன கேட்க நினைத்தீர்களோ கேளுங்கள் !

    எனக்கு தெரிந்தால் பதில் சொல்வேன். தெரியவில்லை என்றால் தெரியவில்லை சார் ..விசாரித்து வேண்டுமானால் சொல்கிறேன் என்று கூறபோகிறேன்..அவ்வளவுதானே ?

    ஆகையால் நீங்கள் தைரியமாக கேட்க நினைத்ததை கேட்கலாம்.

    திரி என்பதே கருத்து பரிமாற்றம், கேள்வி பதில் நிறைந்ததுதானே !


    Rks


    நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.,

    அப்பாடா..! நீண்ட நாட்களாக உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். வந்தீர்களே. சரி, முதலில் ஒரு விஷயம்.

    பெரிய இடத்துப் பெண் படத்தின் வசூல் பற்றி நேற்றிரவு கருத்து தெரிவித்துள்ளீர்கள். திரு.லோகநாதன் தனக்கு கிடைத்த தகவலையும் படங்களையும் பதிவிட்டுள்ளார். எங்கள் வீட்டு சாப்பாடு நன்றாக இருக்கிறது என்றுதான் நாங்கள் கூறுகிறோம். உங்கள் சாப்பாட்டை குறை கூறவில்லை. தர்மம் எங்கே? படத்தை விட பெரிய இடத்துப் பெண் அதிக வசூல் பெற்றது என்று திரு.லோகநாதன் முதலில் கூறவில்லை.

    உங்கள் பதிவுக்குப் பிறகுதான் திரு.செல்வகுமார் , பெரிய இடத்துப் பெண்ணை விட, தர்மம் எங்கே? ரூ.5,000 குறைவாக வசூலானது என்று அதுவும் தியேட்டர் மேனேஜர் திரு.பாலமுருகன் மூலம் கிடைத்த தகவலை தெரிவித்தார். விழா கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்களைப் போடும்போது அதில் இடம் பெற்ற வாசகங்களுக்காக நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட்டதாக, உங்கள் தரப்பில் நியாயம் கற்பிக்க முனைந்தால் நாங்கள் தினமும் கோபப்பட வேண்டியிருக்கும். இன்று கூட உங்கள் திரியில் 342,343வது பதிவுகளை பாருங்கள். தான் உணர்ச்சிவசப்பட்டதற்காக திரு.செல்வகுமார் பெருந்தன்மையுடன் வருத்தமும் தெரிவித்துள்ளார். நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டாம். உணர்ந்தால் சரி. சர்ச்சைகளை தவிர்ப்போமே. அந்த நேரத்தில் நமது அபிமானத்துக்குரியவர்களை அவரவர் வாழ்த்தி பதிவிடுவோமே.

    சரி, இனி நான் கேட்க விரும்பிய கேள்வி..

    எங்கள் திரிகளின் துவக்கத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறீர்கள். ஆயிரக்கணக்கில் பதிவுகளைக் கடந்தவர்களை வாழ்த்துகிறீர்கள். திரு.ராமமூர்த்தி பாங்காக் பயணத்துக்கு வாழ்த்தினீர்கள். திரு.குமார் சார் போல மூத்த நண்பர்கள் திரியில் பங்கு பெற வந்தால் வாழ்த்துகிறீர்கள். எங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துகிறீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சித் தலைவர் நினைவுநாளில் இரங்கல் கவிதை எழுதினீர்கள். அவர் பிறந்த நாளில் வாழ்த்துக்கட்டுரை எழுதினீர்கள்.

    இப்படி எங்கள் சுக துக்கத்தில் பங்கு கொள்பவர், புதிய சாதனை படைத்தால் நாங்களும் வாழ்த்து தெரிவிப்பதுதானே முறை? நீங்கள் 2,000 பதிவுகளை கடந்ததற்காக திரு.எஸ்.வி, திரு.யுகேஷ் பாபு ஆகியோர் உங்கள் திரிக்கே வந்து உங்களை வாழ்த்தினார்கள். நீங்களும் பதில் அளித்தீர்கள். இங்கே உங்களுக்கு மக்கள் திலகம் திரியின் கடந்த பாகத்தில் 289-ம் பக்கத்தில் நான், 290-ம் பக்கத்தில் திரு.சைலேஷ் சார், திரு. செல்வகுமார் சார், 301ம் பக்கத்தில் திரு.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தினோம்.

    ஒருவரை வாழ்த்துவதே அவர்கள் மேலும் ஊக்கம் பெறத்தான். அந்த வாழ்த்தே அவர்களுக்கு தெரியவில்லை என்றால் வாழ்த்தால் பயன் என்ன? இதை ஏற்கனவே தெரிவித்தேன்.

    அந்த வாழ்த்துக்களை நீங்கள் பார்த்தீர்களா?...... இதுதான் நான் கேட்க விரும்பிய கேள்வி.

    பார்க்காவிட்டால் பரவாயில்லை. எங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்கள். உங்களை இங்கே வரவழைக்க வேண்டும், உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ‘பயப்படுகிறாரா?’ என்று கேட்டிருந்தேன். மன்னிக்கவும்.

    கடுமையான வேலைகள் இருந்தாலும் அங்கே வரும்போது இங்கேயும் தலைகாட்டவும். இதுவும் உங்கள் திரிதான். மீண்டும் வாழ்த்துக்கள். நன்றி.



    அடடே, கோபால், எப்ப வந்தீங்க? திரிக்கு வரமாட்டேன் என்ற விரதத்தை கைவிட்டு 5ம் முறையாக திரும்பியிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இம்முறையாவது கோபித்துக் கொண்டு போகாமல் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  4. #1853
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணா திமுக தொடக்க காலத்தில்
    கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில் ,
    குழந்தையைக் கொஞ்சும் எம்ஜியார் .
    அருகில் அண்ணன் நாஞ்சில் மனோகரன் ,
    எஸ்.டி.சோமசுந்தரம் .




    COURTESY FB

  5. #1854
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றும் திரையுலகை ஆளும் இதய தெய்வம்

    நடிகர் திரு. அஜீத் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் மறுவெளியீட்டில் சாதனை படைத்து வெள்ளிவிழா கண்ட ஆயிரத்தில் திரைப்படத்தின் வண்ண சுவரொட்டியையும், திரைப்படம் நடைபெறும் திரையரங்கையும் காண்பிப்பார்கள்.

    நடிகர் திரு. தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் பர்மாவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் சக்கரவர்த்தி திருமகள் திரைப்பட சுவரொட்டியை காட்டுவார்கள். அதேபோல் 1987ம் வருட காட்சிகளில் தலைவரின் திருமுகத்தை தனுஷ் வரைவது போலவும், தலைவரின் திருவுருவத்தை பல இடங்களிலும் காட்டுவார்கள். மேலும், நம்நாடு, எங்கள் தங்கம் ஆகிய திரைப்படங்களின் சுவரொட்டிகளையும் காண்பிப்பார்கள்.

    அன்றும், இன்றும், என்றும் எங்கள் இதய தெய்வம்தான் இந்த திரையுல சக்கரவர்த்தி... இந்த நாட்டை ஆளும் சக்கரவர்த்தி...


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம்

  6. Likes ainefal liked this post
  7. #1855
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத மார்ச் -1969

    பேரறிஞர் அண்ணாவின் மறைவினால் [ 3.2.1969] மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நேரம் . அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன் மற்றும் பல
    படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்தார் .திமுகவில் தன்னுடைய நண்பரை முதல்வர் பதவியில் அமர்த்திவிட்டு தன்னுடைய கட்சியின் பொருளாளர் பதவி மற்றும் சிறு சேமிப்பு துணை தலைவர் பதவியையும் சிறப்பாக கவனித்து கொண்டு வந்தார் .

    மக்கள் திலகத்தின் 101 வது படம் காதல் வாகனம் அக்டோபர் -1968ல் திரைக்கு வந்தது . மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு தினமும் ஆவலை தூண்டும் விதமாக அடிமைப்பெண் படத்தை பற்றிய படபிடிப்பு செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .அதே நேரத்தில் நம்நாடு - மாட்டுக்கார வேலன் - என் அண்ணன் - தேடி வந்த மாப்பிள்ளை - தலைவன் - எங்கள் தங்கம்
    குமரிகோட்டம் - தலைவன் படங்களின் படபிடிப்பு செய்திகளும் வந்த வண்ணம் இருந்தது .மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் முதலில் தமிழ் புத்தாண்டிற்கு வருவதாக விளம்பரம் வந்தது . பின்னர் 1..5.1969அன்று வெளியீடு விளம்பரம் வந்தது . ஏறத்தாழ 190 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் படத்தை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்தது ..

  8. #1856
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1857
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1858
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1859
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  12. #1860
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •