-
3rd March 2015, 10:22 PM
#371
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
3rd March 2015 10:22 PM
# ADS
Circuit advertisement
-
3rd March 2015, 10:31 PM
#372
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd March 2015, 11:52 PM
#373
Senior Member
Seasoned Hubber
சஞ்சய் அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். ஜெய்யைப் போலவே நல்ல மனம் கொண்ட சஞ்சய் அவர்கள் தமிழ்த்திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து சிறப்பான இடத்தைப் பிடிப்பார். அவருக்கு நம் ஆதரவும் ஊக்கமும் எப்போதும் உண்டு.
All the Best Sanjai
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th March 2015, 12:09 AM
#374
Senior Member
Seasoned Hubber
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் இம்மாதத்திய நிகழ்வு..
மார்ச் 15, 2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில்

ஐம்பதாவது ஆண்டு பொன் விழாக் காணும் உன்னதத் திரைக்காவியம்
ஒரே நாளில் வெளியான இரு படங்களுக்கு ஒரே நாளில் பொன் விழாக் கொண்டாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இதே நாளில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பொன் விழாவும் மார்ச் 15, 2015 அன்று கொண்டாடப் படுகிறது.
விழாக்கொண்டாடும் நண்பர்களுக்கு நமது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
Last edited by RAGHAVENDRA; 4th March 2015 at 12:50 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th March 2015, 12:52 AM
#375
Junior Member
Senior Hubber
Regarding SHANTHI theatre restrucuring my suggesstion is that THE NAME SHANTHI
is maintained commanly as sathyam etc the screens may be classified as 1 23 likeso that th comman identity is maiained very well. Reserving one screen exclusively at a lesser rates for NT old movies western and hindi old movies aswell may be good. AS manimandapam plans not materialised a small statue of NT may be erected with some open space left which will be good enough for fans like me who get assembled there since sixties and discuss various issues related NT. hope murali sir will acceptmy points.
-
4th March 2015, 11:31 AM
#376
Junior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் இம்மாதத்திய நிகழ்வு..
மார்ச் 15, 2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில்
ஐம்பதாவது ஆண்டு பொன் விழாக் காணும் உன்னதத் திரைக்காவியம்
ஒரே நாளில் வெளியான இரு படங்களுக்கு ஒரே நாளில் பொன் விழாக் கொண்டாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இதே நாளில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பொன் விழாவும் மார்ச் 15, 2015 அன்று கொண்டாடப் படுகிறது.
விழாக்கொண்டாடும் நண்பர்களுக்கு நமது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
சகோதரர் திரு ராகவேந்திரா அவர்கள் அறிவது :
மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை பொன் விழா விற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு எங்களின் உளமார்ந்த நன்றி !
எங்கள் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள், "தில்லானா மோகனாம்பாள்" மற்றும் "மிருதங்க சக்கரவர்த்தி" போன்ற படங்களை கண்டு மகிழ்ந்து, பெரும் வியப்புடன். "உலகிலேயே தலை சிறந்த நடிகர் எனது தம்பி கணேசன்" என்று பாராட்டிய மறைதிரு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த, சிறந்த கதையம்சம் கொண்ட இனிய பாடல்கள் நிறைந்த " பழநி " வெளியாகி 50 ஆண்டுகள் காண்பதையொட்டி நடைபெறவிருக்கும் "பொன் விழா" வெற்றி பெற வாழ்த்துக்கள். ! விழாவினை நடத்தும் அன்பர்களுக்கு பாராட்டுக்கள்.
Last edited by makkal thilagam mgr; 4th March 2015 at 12:22 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
4th March 2015, 11:35 AM
#377
Junior Member
Veteran Hubber
THANKS INDIAGLITZ for the NOSTALGIA on NADIGAR THILAGAM CULT CLASSIC BLOCKBUSTER "THILLAANA MOHANAMBAL"
நாஸ்டால்ஜியா - 'தில்லானா மோகனாம்பாள்'
IndiaGlitz [Tuesday, March 03, 2015] 1 Comments
கொத்தமங்கலம் சுப்பு என்கிற கலைமணி ஆனந்த விகடன்ல எழுதுன ஒரு தொடர்கதைதான் தில்லானா மோகனாம்பாள் அப்படிங்கிற பெயர்ல படமா எடுக்கப்பட்டது. உலக அளவிலேயே ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு படைப்பை மிஞ்சுற அளவுக்கு எடுக்கப்பட்ட திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிறலாம்.அதுல முக்கியமான ஒரு படம்தான் இது.
"நாதம்தான் பாரதத்தின் அடிப்படை..." அப்படின்னு ஹீரோவும், "இல்லை... பாரதமே நாதத்தின் அடிப்படை.." அப்படின்னு ஹீரோயினும் போட்டுக்குற செல்லச் சண்டைதான் இந்த தில்லானா மோகனாம்பாள்.
கலைஞர்களுக்கே உள்ள கர்வம், முன் கோபம், தான் இசைக்குறப்போ உலகத்தையே மறந்து போற அந்த மேட்னெஸ், ஆனா ஒரு சின்ன பாராட்டுக்கு கூட உருகிப்போற தன்மை இதையெல்லாம் அச்சுல வார்த்தெடுத்த மாதிரி செய்யப்பட கதாபாத்திரம்தான் சிக்கல் சண்முகசுந்தரம் அப்படிங்கிற நாதஸ்வர கலைஞனோடது. அவர் அழகர் வைகை ஆற்றுல இறங்குற ஒரு பொன்னாள்ல மதுரையில வச்சி சந்திக்கிற நாட்டியத் தாரகைதான் மோகனாம்பாள்.
மோகனாம்பாள் பரதத்திற்குன்னே பொறந்த பொண்ணு. அவளோட இயல்பான நடையே ஒரு நடன பாவம் மாதிரிதான் இருக்கும். குலுங்குற அந்த சலங்கை காற்றின் மூலமா சொல்ற செய்திகள் கூட நம்மள சந்தோசத்துல மூழ்கடிக்கும். இவளும் தன்னோட கலையின் மீதும், திறமையின் மீதும் மிகுந்த பக்தி மற்றும் பாதுகாப்பு உணர்வு கொண்டவள்தான்.
இப்படிப்பட்ட ரெண்டு பேர் ஒரு புள்ளியில சந்திக்கிற முதல் காட்சியிலேயே காதலிக்க ஆரம்பிக்கிறாங்க. கூட்டத்துல ஆயிரம் பேர் இருந்தாலும் இவங்களோட கண்கள் மட்டும் தனி மொழி பேசுது. ஆனா அதுவே பக்கத்து பக்கத்துல இருக்குறப்போ ஒருத்தரை ஒருத்தர் சீண்டிப்பார்க்கிற, கிண்டல் பண்ணிக்கிற ஒரு கவசமா மாறுது. இதை வேண்டி விரும்பியே செய்றாங்க. இதனால அவங்க காதல் பலப்படுது.
சிக்கல் சண்முகசுந்தரம் நாதஸ்வரம் வாசிச்சி முடிச்சதும் அவரை பாராட்ட மோகனா வருவாங்க.. ஒருத்தரை ஒருத்தர் கண் அசைக்காம பார்த்துக்கிட்டே இருப்பாங்க.. ஆனா அடுத்து பேச ஆரம்பிச்சதும் அவங்களையே அறியாம சண்டை போட ஆரம்பிச்சிருவாங்க. இது படம் முழுக்க தொடரும். இதுல முக்கியமான காட்சி அப்படின்னா ரயில்ல போற காட்சி. தமிழின் மிகச்சிறந்த ரொமாண்டிக் காட்சிகள்ல அந்த காட்சியும் ஒன்னு. சிக்கல், மோகனா பக்கத்துல போயி உட்கார டிராமா பண்றதும், அந்த லைட்ட அணைக்க சொல்லி சிக்கனால் தர்றதும்.. பக்கத்துல உக்காந்ததும் ரெண்டு பேரும் மைண்ட் வாய்ஸ்-ல பேசிக்கிறதும்.. அடடடா.. எழுதும்போதே வெட்கம் வெட்கமா வருது!
படத்தை மூணு பாகமா பிரிக்கலாம். ஒன்னு மதுரை நாகலிங்கம் எபிசொட். ரெண்டு சிங்கபுரம் மைனர் எபிசொட்.. மூணு மதன் பூர் மகராஜா எபிசொட். இப்படி ஒவ்வொரு எபிசொட்-ளையும் வர்ற வில்லன்கள் மோகனாவை அவங்களோட அம்மா மூலமா அடைய நினைக்குறாங்க. அதனால காதலர்களுக்குள்ள மனஸ்தாபம் வருது. அதோட முடிவுல ஒன்னு சேர்றாங்க. சிம்பிள் பிளாட்!
வெற்றிகரமா ஓடுன எந்தவொரு படத்தை எடுத்துக்கிட்டாலும் அதுல வர்ற துணைக் கதாபாத்திரங்கள் மற்றும் கிளைக் கதைகள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குறத நீங்க கவனிச்சிருக்கலாம். அப்படி கவனிக்கலை அப்படின்னா இந்தப் படத்தைப் பாருங்க. முதல்ல டி.எஸ்.பாலையா. தவில் வித்வான். சிக்கல் சண்முகசுந்தரத்தோட வலது கை இவர்தான். திட்டு வாங்குறதும் இவர்தான்.. உதவி செய்றதும் இவர்தான்... குறிப்பா சிக்கலோட ஒவ்வொரு கண்ணசைவுக்கும் என்ன அர்த்தம்னு தெளிவா தெரிஞ்ச ஆளு. பல காட்சிகள்ல சிவாஜி நடிச்சி முடிச்சி போனதுக்கப்புறம் இவர் ஒரு சின்ன ரியாக்ஷன் கொடுத்து அந்த காட்சியவே வேற மாதிரி கொண்டு போயிருவாரு. இவரு தப்பான நேரத்துல சொல்ற ஒவ்வொரு வசனமும் சரியான சிரிப்பை நமக்கு கொடுக்கும்.
அப்புறம் இந்தப் படத்தோட வில்லன் நாகேஷ். ஈ.ஆர்.சகாதேவன், கே.பாலாஜி, எல்லாத்துக்கும் மேல எம்.என்.நம்பியார் இப்படி மூணு வில்லன்கள் இருந்தும் இவங்களுக்கெல்லாம் பெரிய வில்லன் இந்தப் படத்துல நாகேஷ்தான். பார்க்குறவங்களுக்கு எல்லாம் ஒரு எலுமிச்சம்பழம் கொடுத்துட்டுதான் பேசவே ஆரம்பிப்பாரு. பேரம் படியலைன்னா கொடுத்த எலுமிச்சம்பழத்தை திருப்பி வாங்கிருவாறு. பேரம் படிஞ்சதுன்னா அந்த ஆளோட சொத்தையே எழுதி வாங்கிருவாறு. இவரு தன்னைப்பத்தி இந்தப் அப்டத்துல ஒரு வசனம் அவரே சொல்வாரு..அது,
"என்னைப் பத்தி விரிவா சொல்லனும்னா ரெண்டே எழுத்துல சொல்லலாம்.. ரெண்டுமே ஒரே எழுத்துதான்.." - அக்மார்க் நாகேஷ் டச்!
நான் முதல்ல சொன்னமாதிரி படத்துல இருக்குற மூணு எபிசொடையும் ஒண்ணா சேர்க்குற பாலம் இவர்தான். இவர் சுணங்கி இருந்தா படமும் சுனங்கியிருக்கும்னு தெளிவா புரிஞ்சிக்கிட்டு பின்னி எடுத்திருப்பாரு.
நாதஸ்வரம் உண்மையில வாசிச்சதென்னவோ மதுரை சகோதரர்கள் எம்.பி.என்.சேதுராமன் மற்றும் எம்.பி.என்.பொன்னுச்சாமி அவர்கள்தான்! ஆனா இதை நாங்கதான் வாசிச்சோம்னு சொன்னா படம் பார்த்ததுக்கு அப்புறம் அவங்களே நம்பமாட்டாங்க. அந்த அளவுக்கு சிவாஜியும், அவரோட தம்பியா நடிச்ச ஏ.வி.எம். ராஜனும் வாழ்ந்திருப்பாங்க. குறிப்பா உச்சஸ்தாயியில வாசிக்கிறப்போ தொடை தானா அந்த பலத்துக்காக மேல தூக்குறத முதற்கொண்டு பெர்பெக்டா பண்ணியிருப்பாங்க. அந்த டெடிகேஷன்தான் இந்தப் படத்தோட உயிர்.
இந்தப் படம் எடுக்கனும்னு முடிவானதும் பத்மினிதான் ஹீரோயின்னு முடிவு பண்ணிட்டாங்க. ஆனா அப்போ பத்மினி அம்மா திருமணம் முடிஞ்சி அமெரிக்காவுல செட்டில் ஆகியிருந்தாங்க. அவங்க நடிச்சாதான் இந்தப் படமே எடுக்கமுடியும்னு சொல்லி அவங்களை மீண்டும் நடிக்க கூட்டு வந்தாங்க. இப்படி அவங்க மேல வச்ச நம்பிக்கையை அவங்க 10000% காப்பாத்தியிருந்தாங்க. இவ்வளவுக்கும் படத்தோட பேரே தில்லானா மோகனாம்பாள் அப்படின்னு ஹீரோயின் பேருதான்! அதுக்கு அவங்களை விட யாரும் ஜஸ்டிபை பண்ணியிருக்கவே முடியாது.
நான் ஒருத்தர பத்தி எழுதாம விட்டா என்னை தேடி வந்து அடிப்பாங்கன்னு தெரியும். எதுக்கு வம்பு? எழுதிர்றேன்.
கருப்பாயி என்கிற ஜில் ஜில் ரமாமணி என்கிற ரோசா ராணி. மனோரமா. "உங்க நாயனத்துல மட்டும்தான் இந்த சத்தம் வருமா .. இல்ல எல்லா நாயனத்துளையும் இதே சத்தம்தான் வருமா?" அப்படின்னு கேட்பாங்களே ஒரு கேள்வி..அவங்களுக்கு இது அவங்க நடிச்ச ஆயிரம் படங்கள்ல ஒன்னா இருக்கலாம். ஆனா படம் முடிஞ்சி வர்றப்போ தங்கப்பல் நாலு தெரிய அவங்க சிரிக்கிற அந்த காட்சிதான் எல்லோருக்கும் மனசுல நிக்கும். அவங்களோட நடிப்பை பத்தி எழுத இந்த ஒரு கட்டுரை போதாது.
அப்புறம் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட நம்ம நெஞ்சுல நிக்கும். குறிப்பா மேரி அப்படிங்கிற நர்ஸ் கதாபாத்திரம். அப்புறம் மோகனாவோட அம்மா கதாபாத்திரம். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
இந்தப் படம் விகடன்ல தொடரா வந்தப்போ கடைசி வாரம் சிக்கல் சண்முகசுந்தரத்துக்கும், தில்லானா மோகனாம்பாளுக்கும் நடக்கப்போற கல்யாணத்துக்கு அடிச்ச பத்திரிக்கைய அப்படியே முழுப்பக்கத்துக்கும் பிரிண்ட் பண்ணியிருந்தாங்களாம். அதுக்கு அவசியமே இல்லாம படத்துல அவங்க காதல் மற்றும் கல்யாணம் நம்ம மனசுலையே பிரிண்ட் ஆகியிருக்கும்.
கொத்தமங்கலம் சுப்பு புகழ்பெற்ற அவ்வையார் படத்தை இயக்குனவரு. அவரோட சங்கீத ஞானம் சினிமா உலகுல ரொம்ப புகழ்பெற்றது. அவரோட ஒரு தொடர்கதைய படமா எடுத்து அதை தொடர்கதையை விட பெருசா பேச வச்ச இந்தப் படத்தோட இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அவர்களை இந்த நேரத்துல நாம நினைவுகூறியே ஆகணும்.
திரை இசை மேதை கே.வி.மகாதேவன் இசையமைச்ச இந்தப் படத்தோட நாதஸ்வர இசையை தினமும் காலை வேளைகள்ல கோவில்ல கேட்காத என் பால்யகாலமே இல்லை. ஒவ்வொரு நாளும் தவறாம காதுல விழுந்த இசை அது. இது என்ன ராகம், என்ன தாளம் எதுவுமே தெரியாத எனக்கே அந்த நாதத்தோட ஒவ்வொரு பிட்டும் துல்லியமா இப்பவும் ஞாபகம் இருக்கு. நலம்தானா பாட்டுலயும் , மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாட்டுலயும் இசை, எழுதுன கண்ணதாசன், பாடுன சுசீலாம்மா எல்லாரும் நம்மள ஒருவித பித்த நிலைக்கு கொண்டுபோயிருப்பாங்க. இப்பவும் கொண்டு போறாங்க.
அதோ காற்றில் ஒலிக்கிறது ஒரு நாதஸ்வர இசை. அதன் லயத்துக்கு இசைந்து ஆடுகிறது ஒரு சலங்கை. என் கண்கள் தானாக மூடுகிறது. தலை ஓசைக்கேற்ப தானாக ஆடுகிறது. நான் என் பால்யத்தின் நாட்களில் இருக்கிறேன். ஏங்குகிறேன். இந்த நிமிடம் இப்படியே தொடரட்டும்!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th March 2015, 12:25 PM
#378
Junior Member
Veteran Hubber
சகோதரர் திரு. ரவி கிரண் சூர்யா அவர்களின் பள்ளித்தோழரும், தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்றழைக்கப்பட்ட மக்கள் கலைஞர் மறைதிரு. ஜெய்ஷங்கர் அவர்களின் இளைய குமாரனுமாகிய திரு. சஞ்ஜய் சங்கர் அவர்கள் தமிழ் திரையுலகில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th March 2015, 06:46 PM
#379
மாநில முதல்வர்களும் பாரதப் பிரதமரும் நடிகர் திலகத்தை தேடி அன்னை இல்லம் வந்ததைப் பார்த்தோம். அயல் நாட்டு அதிபர் ஒருவரே அதே போன்று நடிகர் திலகத்தை நாடி வந்ததை அடுத்து பார்ப்போம்.
1960 மார்ச். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் ஆசிய ஆப்ரிக்க திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த இரண்டு கண்டங்களிலிருந்தும் வந்த பல்வேறு திரைப்படங்கள் விழாவில் திரையிடப்படுகின்றன. இறுதியாக விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் நடிப்பிற்காக ஆசிய ஆப்ரிக்காவிலேயே சிறந்த நடிகர் விருது நடிகர் திலகத்திற்கு வழங்கப்படுகிறது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அதே கட்டபொம்மன் படத்திற்காக G.ராமநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் விழாவின் இறுதி நிகழ்ச்சியான விருது வழங்கும் நேரத்தில் எகிப்து நாட்டின் அதிபர் நாஸர் அங்கில்லை.
இங்கே நாஸர் பற்றி சொல்ல வேண்டும். மன்னராட்சியிலிருந்த எகிப்து நாட்டை ராணுவப் புரட்சி மூலமாக மாற்றியமைத்ததில் நாஸருக்கு முக்கிய பங்குண்டு. முதலில் துணை அதிபராக இருந்த நாஸர் பின் அன்றைய அதிபரை மாற்றிவிட்டு தானே அதிபர் பதவி ஏற்றார். 1956 முதல் 1970 செப்டெம்பரில் அவர் இறக்கும்வரை அவரே அதிபராக திகழ்ந்தார். 1960-களில் அரபு உலகத்தை ஒருங்கிணைப்பதில் முன்னணியில் நின்ற அவருக்கு அணி சேரா நாடுகளின் [Non Aligned Nations] ஆதரவு இருந்தது. குறிப்பாக இந்தியாவும் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் நாஸருக்கு பக்க பலமாக இருந்தனர். இந்த இருவரையும் தவிர அன்றைய யுகோஸ்லோவிக்கியா அதிபர் மார்ஷல் டிட்டோவும் [Marshal Tito] இந்த அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பில் முக்கிய பங்காற்றியது பழைய ஆட்களுக்கு நினைவிருக்கும்.
சூயஸ் கால்வாயை [Suez Canal] ஆக்ரமித்த இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளை அங்கிருந்து விலக வைத்தது சிரியாவுடன் சேர்ந்து ஐக்கிய அரபு குடியரசை அமைத்தது [United Arab Republic] என்று நாஸர் மிக பிஸியாக இருந்த காரணத்தினால் அவரால் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இது நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரு ஏக்கமாகவே இருந்திருக்க வேண்டும்.
அவர் ஏக்கத்தை போக்குவதற்காகவே ஏற்பட்டது போல் உடனே அந்த 1960-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நாஸர் அவர்களின் இந்திய சுற்றுப் பயணம் அமைந்தது 1960 மார்ச் 29 அன்று டெல்லியில் வந்திறங்கிய நாஸரின் அந்த இந்திய சுற்றுபயணத்தில் சென்னையும் இடம் பெற்றிருந்தது.
தன்னுடைய நாட்டில் நடந்த ஒரு விழா, அதில் ஒரு இந்திய நடிகர் விருது பெற்றிருக்கிறார். அந்த நாட்டிற்கே தாம் வந்திருக்கிறோம் என்றவுடன் விருது வழங்கும் விழாவில்தான் கலந்துக் கொள்ள முடியவில்லை. இங்கே வந்திருக்கும்போதாவது அவரை சந்திக்கலாம் என்றெண்ணி நாஸர் நேருவிடம் கேட்க உங்கள் சுற்றுபயணத்தில் இடம் பெற்றிருக்கும் மெட்ராஸ் என்ற ஊரில்தான் விருது பெற்ற நடிகர் சிவாஜி வசிக்கிறார் என்று நேரு சொல்ல நாஸர் உடனே அவரை சந்திக்க முடிவு செய்தார்.
இதே நேரத்தில் நாஸர் இந்திய வருவதும் அதிலும் சென்னைக்கு விஜயம் செய்வதும் நடிகர் திலகத்திற்கு தெரிய வர அவரை வரவேற்று விருந்தளிக்க முடிவு செய்த நடிகர் திலகம் அதற்கு முறைப்படி மத்திய அரசை அணுக மத்திய அரசு அதிகாரிகள் Protocol மரபை சுட்டிக்காட்டி மறுத்து விட்டனர். அயல் நாட்டு அதிபர், உயர் பிரிவு பாதுகாப்பில் இருக்க வேண்டியவர் என்ற காரணத்தினால் அனுமதி மறுக்கப்பட நடிகர் திலகம் நேருவிடம் விஷயத்தை எடுத்துச் சென்றார். பிரதமர் நேரு உடனே வெளியுறவு துறை செயலாளர், எகிப்து தூதர் போன்றவர்களை கலந்து ஆலோசித்த பின் பாராட்டு விழாவிற்கும் விருந்திற்கும் அனுமதி வழங்குவது எனவும் அதே நேரத்தில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு விருந்தோபசார விழாவை ஒரு அரங்கிலே நடத்த வேண்டும் என சொல்லப்பட்டது.
அதன்படி சென்னை children 's theatre என்று அறியப்பட்டிருந்த பாலர் அரங்கத்தில் அந்த விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விழாவின் முழு ஏற்பாடுகளையும் அதற்குண்டான செலவையும் நடிகர் திலகம் ஏற்றுக் கொண்டார். நாஸர் அவர்களுக்கு பல்வேறு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் நடிகர் திலகம். இந்த விழாவில் மற்றொரு சுவையான் சம்பவமும் நடைபெற்றது. விருது பெற்ற கட்டபொம்மன் படத்தை நாஸர் பார்த்திருக்கிறார். கட்டபொம்மன் அவர் மனதில் பதிந்து விட்டான்.
நடிகர் திலகம் நாஸர் முன் வந்து நிற்க நாஸர் அசந்து விட்டாராம். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு மனிதனை அவர் எதிர்பார்த்திருக்க எளிமையே உருவாக நடிகர் திலகம் அவர் முன் காட்சியளிக்க இந்த உருவத்திலிருந்தா அப்பேற்பட்ட ஆக்ரோஷமான நடிப்பு வெளிப்பட்டது என்று வியந்து போனாராம் நாஸர். அன்றைய தமிழக அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த திரு. C சுப்பிரமணியம் அவர்களும் அரசு சார்பில் இந்த விழாவில் கல்ந்துக் கொண்டார்.
.
இந்திய வரலாற்றிலேயே அயல் நாட்டு அதிபர் ஒருவருக்கு ஒரு தனிப்பட்ட நபர் வரவேற்பு விருந்தளிக்கும் வாய்ப்பையும் அனுமதியையும் பெற்ற முதல் மனிதன் நமது நடிகர் திலகம். அதற்கு பிறகும் கூட இது போன்ற அனுமதி வேறு ஏதேனும் தனி நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே!
நமது இந்திய திருநாட்டில் பதவியிலிருந்த மாநில முதல்வர்கள், நாட்டு பிரதமர் அயல் நாட்டு அதிபர் போன்றவர்கள் அனைவரும் எந்த அரசு பதவியிலுமில்லாதிருந்த ஒரு மனிதனை தேடி வந்தார்கள் என்று சொன்னால் அந்த பெருமை அனைத்தும் நமது நடிகர் திலகத்தை மட்டுமே சேரும். வேறு எவருக்கும் இந்த பெருமை கிட்டவில்லை.
கல தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்னரே முன் தோன்றிய நமது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாகவே நடிகர் திலகம் காணப்பட்டார் என்பதாகவே இதை பொருள் கொள்ள வேண்டும்.
அரசியல் தலைவர்கள் தேடி வந்த விஷயம் பற்றி பேசி விட்டோம். ஆஸ்கார் நாயகர் நடிகர் திலகத்தை தேடி அன்னை இல்லம் வந்த செய்தியை அடுத்து பார்ப்போம்!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
4th March 2015, 08:24 PM
#380
Junior Member
Veteran Hubber
எங்கள் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள், "தில்லானா மோகனாம்பாள்" மற்றும் "மிருதங்க சக்கரவர்த்தி" போன்ற படங்களை கண்டு மகிழ்ந்து, பெரும் வியப்புடன். "உலகிலேயே தலை சிறந்த நடிகர் எனது தம்பி கணேசன்" என்று பாராட்டிய மறைதிரு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த, சிறந்த கதையம்சம் கொண்ட இனிய பாடல்கள் நிறைந்த " பழநி " வெளியாகி 50 ஆண்டுகள் காண்பதையொட்டி நடைபெறவிருக்கும் "பொன் விழா" வெற்றி பெற வாழ்த்துக்கள். ! விழாவினை நடத்தும் அன்பர்களுக்கு பாராட்டுக்கள்.
by Makkal Thilagam MGR
திரி நாகரீகம் திரிந்திடாது பதிவர்களின் நட்பு இழை பிரிந்திடாது சரித்திரம் படைத்திட்ட திலகங்களின் பெருமை சரிந்திடாது புகழ் சேவை புரிந்திடுவோம் . அடித்தளமிடும் நண்பர்களுக்கு நன்றிகள் .
செந்தில்
கழனி காக்கும் பழனி நடிகர்திலகம்
உழவின் பெருமை காக்கும் விவசாயி மக்கள்திலகம்
Golden era films marching for Golden Jubilee commemoration!!
Last edited by sivajisenthil; 4th March 2015 at 08:56 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks