-
7th March 2015, 05:52 AM
#11
Junior Member
Newbie Hubber
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.
ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.
ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.
வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.
வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 6 Likes
-
7th March 2015 05:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks