-
7th March 2015, 08:12 PM
#2141
Junior Member
Seasoned Hubber
-
7th March 2015 08:12 PM
# ADS
Circuit advertisement
-
7th March 2015, 08:33 PM
#2142
Junior Member
Seasoned Hubber
MGR movies telecasted on Sun TV on last week from 22/02/2015 to 27/02/2015, here is the promotional video
-
8th March 2015, 08:24 AM
#2143
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிடுவார். ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது.
எம்.ஜி.ஆரின் சிறப்பு அவரது ஈகை குணம் தான். நடிகர் பாலாஜியின் நாடகக் குழுவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் சேலத்தில் நாடகம் நடைபெற இருந்தது. காரிலேயே சேலம் சென்றோம். உளுந்தூர்பேட்டை தாண்டி ஒரு கிராமத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது எனக்குத் தாகம் ஏற்பட்டது. ரோடு ஓரத்தில் இருந்த ஒரு குடிசையின் அருகில் காரை நிறுத்தினோம். நான் காரை விட்டு இறங்கியதும் ஒரு வயதான பெண்மணி, என்னிடம், 'என்ன வேணும்?' என்று விசாரித்தார். 'குடிக்கத் தண்ணீர் வேணும்!' என்றதும் குடிசைக்குள் சென்று, பெரிய செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். வெயில் நேரத்தில் ஜில்லென்று உள்ளே இறங்கிய அந்த தண்ணீர் ரொம்ப இதமாக இருந்தது.
நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுவதற்கு முன், நடிகர் பாலாஜி, தமது பர்ஸிலிருந்து நூறு ருபாய் நோட்டை எடுத்தார். அதை அந்தப் பெண்மணியின் கையில் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அவர், ஆச்சர்யத்துடன் ருபாய் நோட்டையே சில வினாடிகள் பார்த்துக்கொண்டு இருந்தார். சட்டென்று ருபாய் நோட்டைப் பிடித்தபடி, தமது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, பாலாஜியைப் பார்த்து, 'எங்கள் எம்.ஜி.ஆர் வாழ்க!' என்றார். சில நிமிடங்களுக்கு ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போனோம். அப்பறம் விஷயத்தை நாங்களாகவே புரிந்துகொண்டோம்.
அந்த கிராமத்து மூதாட்டியைப் பொறுத்தவரை, 'எம்.ஜி.ஆர்' என்கிற மனிதர் மட்டும்தான் முன்பின் தெரியாத ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்வார். ஏழை மக்களுக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அது நிச்சயமாக எம்.ஜி.ஆரை தவிர வேறு ஒருவராக இருக்கவே முடியாது என்பது, அவரது மனத்தில் பதிந்து விட்டது. இவரைப் போன்ற நம்பிக்கைகொண்டு ஏழை எளியவர்கள், இன்னுமும் நிறையப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
- ' நான் நாகேஷ் ' நூலிலிருந்து .
-
8th March 2015, 11:00 AM
#2144
Junior Member
Devoted Hubber
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.

இனிய மையம் நண்பர்கள், வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள் - சைலேஷ்பாசு, யுகேஷ்பாபு, கலியபெருமாள் விநாயகம், எஸ்வி, கலைவேந்தன், முத்தையன் அம்மு, எம்.ஜி.ஆர். ராமமூர்த்தி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். (திரு செல்வகுமார்) சத்தியா விபி மற்றும் அனைவருக்கும், எனது இதயம்கலந்த நன்றியினை வணக்கத்துடன் தெரிவித்து இங்கே மீண்டும் எனது பதிவினை தொடங்குகிறேன். 14.2.2015 அன்று இதயவலி பாதிப்பு வந்த பின்னே சென்னை முகப்பைர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எனக்கு இருதய அறுவை சிகிச்சை 26.2.2015 நடைபெற்றது. எனக்காக நமது இதய தெய்வம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் தங்களின் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியினை காணிக்கை ஆக்கி அவரின் புகழ் பாட என்னை அர்ப்பணித்து கொள்கிறேன். நலமுடன் இருக்கிறேன்.
"அணுவை பிளந்து ஆழ்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" இது அவ்வையாரின் திருக்குறள் பற்றிய கருத்து. அதேபோல எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து அணுவை பிளந்து ஆழ்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" போன்றவர். அவரின் பிறப்பு, குழந்தை பருவம், இளைமை காலம், நாடக, திரைப்பட, அரசியல் காலங்கள் ஏற்பட்ட சோதனைகளை வெற்றி கொண்டு வீர நடை போட்ட மனித புனிதர் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அறிஞர்களாலும், தமிழ் பண்டிதர்களாலும் ஆராய்ச்சி செய்யபட வேண்டியவர்.
எம்.ஜி.ஆர். என்ற மந்திரம் சிறு வயது முதல் எனது உள்ளத்தில் பதிவானது. எனது தாயோ, தந்தையோ, ஆசிரியரோ எனக்கு இவர்தான் எம்.ஜி.ஆர். என்று எடுத்து சொல்லாத போதிலும் எனது இதயத்தில் எவ்வாறு ஊடுருவி, ரத்தத்தோடு இணைந்தார். அவரின் புகழை, பெயரை குறைத்து, மறைக்கும் முயற்சியில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் காணமல் போய்விடுவார்கள் மேலும் தோல்வி காண்பார்கள். திரைப்பட துறையில், அரசியல் களத்தில் புகழோடு விளங்கிய அவர் இன்னும் 27 ஆண்டுகள் கடந்த பின்னும் புகழோடு (எள் அளவும் குறையாமல்) மக்களோடு மக்களாக உயிரோடு இருக்கிறார். கவனித்து கொண்டும் இருக்கிறார். சரியான நேரத்தில், தக்க சமயத்தில் மீண்டும் எழுந்து வருவார்.
எந்த விதமான விளம்பரமோ, போஸ்டர்களோ போடாமல் புகழ் பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
உலக அளவில் புகழ் பெற்ற புரட்சி தலைவன்.
Last edited by Tenali Rajan; 26th March 2015 at 05:15 PM.
-
8th March 2015, 01:33 PM
#2145
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் தெனாலி ராஜன் அவர்களுக்கு வணக்கம்.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, பரிபூரண குணமாகி, உடல்நலம் பெற்று
வீடு திரும்பிய தாங்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன் மீண்டும்
மக்கள் திலகம் திரியில் பதிவிட்டு பயணிக்க ஆரம்பித்துள்ளதற்கு நல்வாழ்த்துக்கள்.
பல்வேறு அலுவல்கள் காரணமாக மருத்துவமனைக்கு வர இயலவில்லை.
அடுத்த வாரத்தில் தங்களை இல்லத்தில் சந்திக்கிறேன். தங்கள் உடல்நலத்தை
பேணி காக்க, போதிய ஒய்வு எடுத்துக் கொள்ளவும். நன்றி.
ஆர். லோகநாதன்.
-
8th March 2015, 01:40 PM
#2146
Junior Member
Platinum Hubber
-
8th March 2015, 01:43 PM
#2147
Junior Member
Platinum Hubber
-
8th March 2015, 02:18 PM
#2148
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Tenali Rajan
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
இனிய மையம் நண்பர்கள், வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள் - சைலேஷ்பாசு, யுகேஷ்பாபு, கலியபெருமாள் விநாயகம், எஸ்வி, கலைவேந்தன், முத்தையன் அம்மு, எம்.ஜி.ஆர். ராமமூர்த்தி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். (திரு செல்வகுமார்) சத்தியா விபி மற்றும் அனைவருக்கும், எனது இதயம்கலந்த நன்றியினை வணக்கத்துடன் தெரிவித்து இங்கே மீண்டும் எனது பதிவினை தொடங்குகிறேன். 14.2.2015 அன்று இதயவலி பாதிப்பு வந்த பின்னே சென்னை முகப்பைர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எனக்கு இருதய அறுவை சிகிச்சை 26.2.2015 நடைபெற்றது. எனக்காக நமது இதய தெய்வம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். தங்களின் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியினை காணிக்கை ஆக்கி அவரின் புகழ் பாட என்னை அர்ப்பணித்து கொள்கிறேன்.
"அணுவை பிளந்து ஆட்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" இது அவ்வையாரின் திருக்குறள் பற்றிய கருத்து. அதேபோல எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து அணுவை பிளந்து ஆட்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" போன்றவர். அவரின் பிறப்பு, குழந்தை பருவம், இளைமை காலம், நாடக, திரைப்பட, அரசியல் காலங்கள் ஏற்பட்ட சோதனைகளை வெற்றி கொண்டு வீர நடை போட்ட மனித புனிதர் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அறிஞர்களாலும், தமிழ் பண்டிதர்களாலும் ஆராய்ச்சி செய்யபட வேண்டியவர்.
எம்.ஜி.ஆர். என்ற மந்திரம் சிறு வயது முதல் எனது உள்ளத்தில் பதிவானது. எனது தாயோ, தந்தையோ, ஆசிரியரோ எனக்கு இவர்தான் எம்.ஜி.ஆர். என்று எடுத்து சொல்லாத போதிலும் எனது இதயத்தில் எவ்வாறு ஊடுருவி, ரத்தத்தோடு இணைந்தார். அவரின் புகழை, பெயரை குறைத்து, மறைக்கும் முயற்சியில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் காணமல் போய்விடுவார்கள் மேலும் தோல்வி காண்பார்கள். திரைப்பட துறையில், அரசியல் களத்தில் புகழோடு விளங்கிய அவர் இன்னும் 27 ஆண்டுகள் கடந்த பின்னும் புகழோடு (எள் அளவும் குறையாமல்) மக்களோடு மக்களாக உயிரோடு இருக்கிறார். கவனித்து கொண்டும் இருக்கிறார். சரியான நேரத்தில், தக்க சமயத்தில் மீண்டும் எழுந்து வருவார்.
எந்த விதமான விளம்பரமோ, போஸ்டர்களோ போடாமல் புகழ் பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
உலக அளவில் புகழ் பெற்ற புரட்சி தலைவன்.
-
8th March 2015, 02:37 PM
#2149
Junior Member
Platinum Hubber
-
8th March 2015, 02:40 PM
#2150
Junior Member
Platinum Hubber
Bookmarks