-
9th March 2015, 10:11 PM
#3031
Senior Member
Senior Hubber
பாடினார் கவிஞர் பாடினார் – 3
*
வணக்கம்”
நிமிர்ந்து பார்த்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிற்கு ஆச்சர்யம்.. “வாங்க பால முருகன்.. என்ன இந்தப் பக்கம்”
“சும்மாத் தான் வெங்கடேஷ்ங்க்ணா.. ஜஸ்ட் பார்க்க வந்தேன்..வழக்கம் போல பிஸியா..’
“மியூசிக்கே மூச்சா இருக்கறவனோட பிஸியைக் கேக்கணுமா என்ன.. ஒரு டியூனை என்னோட அஸிஸ்டெண்ட் போட்டுட்டாரு..பாட்டுக்கு யாரைப் போடலாம்னு யோசனையில இருக்கேன்…சொல்லுங்க”
“இதோ” கூடவந்தவரைக் காண்பித்தார் பாலமுருகன் “இவரும் கொஞ்சம் நல்லாவே பாட்டு எழுதுவார்.. டென் த் படிக்கறச் சொல்லவே ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்காராக்கும்..பாரதிதாசனே முன்னுரை எழுதியிருக்கார்”
“ஐ ஸீ” என்று சற்றே அசுவாரஸ்யத்துடன் பார்த்தார் இசையமைப்பாளர்.. ரொம்ப யங்கா இருக்க்காரே நல்லா எழுதுவாரா.. நான் நம்ம கவிஞரையே (கண்ணதாசன்) இன்னொரு பாட்டும் எழுதச் சொல்லிடலாம்னு ப்ரொட்யூஸர்கிட்டக்க சொல்லியிருந்தேன்..ம்ம் சரி.. டைரக்டர் மாதவன் சொல்லியிருந்தவர் தானே இவர்.. டைரக்டரே ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருக்கார்.. என்ன கேக்கறீங்களா..”
ஆஹா “ என்றார் பாலமுருகன்.. கூடவே தலையாட்டினார் வந்திருந்த கவிஞர்.
சிச்சுவேஷன்னு ஒண்ணும் இல்லை.. ஹீரோயின் காலேஜ்ல படிச்சவ ஆனாலும் கிராமத்துப் பொண்ணு
“ஆஹா”
“என்னக் கிண்டல் பண்றா மாதிரி இருக்கு ..சரி விடுங்க.. அவளோட ஹஸ்பெண்ட் நிலத்துல கிணறு தோண்டறான்..ஆழம் ஆழமாத் தோண்டினாலும் தண்ணி வரலை..கட்டக்கடோசில தண்ணிவருது..ஹீரோ மயக்கமாயிடறார்.. ஹீரோயின் அந்தத் தண்ணியையே ஹீரோ மொகத்துல தெளிக்கறார்..அடுத்த சீன் பாட்டு வரணுமாம்..”
“டூயட்டா”
“ஏங்க ஹீரோ நிலத்துல பாடுபட்டு முன்னேறுகிற மாதிரி கதையாம்.. டூயட்லாம் நம்ம கவிஞரே சூப்பராப் போட்டுக் கொடுத்துட்டார்.. இது கிராமக் கூத்து மாதிரி..ரெண்டு பொண்ணுங்களுக்குள்ள சண்டை வர்ற மாதிரி இருக்கணுமாம்..”
“மூணு பொண்ணு வச்சுக்கலாமா” உடன் வந்திருந்த கவிஞர் கேட்க “பரவாயில்லையே சரி யாருக்குள்ள சண்டை வைக்கறாமாதிரி” என்றார் இசையமைப்பாளர்..
“மூணு பொண்ணுன்னா திரிவேணி சங்கமமா வெச்சுக்கலாம் கங்கை யமுனை சரஸ்வதி..ஆனாக்க இது தமிழ்க் கிராமம் ஆச்சுதுங்களே.. காவேரி வைகை அப்புறம் ம்ம் கங்கையையே கொண்டுவந்துடலாம்..
“கொஞ்சம் இருங்க..என் உதவியாளரைக் கூப்பிடறேன்..ராஜா” உதவியாளர் வந்தார் (பிற்காலத்தில் இளையராஜா எனப் பிரபலமானவர்).. “ நீங்க ஒரு மெட்டுப் போட்டீங்கள்ள..அதப் போட்டுக் காட்டுங்க..இவர் எப்படி பாட்டு தர்றார்னு பார்ப்போம்”
ராஜா மெட்டுப் போட அந்தப் கவிஞரின் பயணம் அந்தப்பாட்டிலிருந்து துவங்கியது.. அந்தக் கவிஞரின் பெயர் முத்துலிங்கம்.. பாடல்.. தஞ்சாவூரு சீமையிலே நான் தாவி வந்தபொன்னியம்மா..
சைலண்ட்டாக ஆரம்பிக்கும் பாடல் பொன்னி வைகை கங்கை என கச்சைகட்டிக்கொண்டு மூன்று நதிகளும் சண்டை போடுவது சுவாரஸ்யமாகவே இருக்கும்..(உரையாடல் எல்லாம் என் கற்பனையூரில் நடந்தது!)
*
சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்தில் பிற்ந்தவர் முத்துலிங்கம்..பத்தாம் வகுப்பு வரை படிப்பு வரவில்லை..ஆனால் கவிதை வந்தது.. பத்தாம் வகுப்பையே தனிக்கல்வி முறையில் படித்துத் தேறினார் அவர். பின்னர் முரசொலியில் வேலை வாய்ப்பு..
பட்டிக்காடா பட்டணமா வசனகர்த்தா பாலமுருகனின் பழக்கம் ஏற்பட்டு பின் பொண்ணுக்குத் தங்கமனசில் முதல்பாடல்.. ம.தியின் உழைக்கும் கரங்களில் கந்தனுக்கு மாலையிட்டாள் பாடல் எழுத வாய்ப்பு வந்தது..
தேவனைத் தேடிச் சென்றேன்
தேவியுடன் அவன் இருந்தான்
வீணையுடன் நானிருந்தேன்
விதியை எண்ணிப்பாடுகின்றேன்.. என வாணி ஜெயராமின் உருக்கமான குரலில் வீணை நாதமும் சேர்ந்து கொண்டு மிக அழகாக அமைந்தது அந்தப் பாடல்
அது ஹிட் ஆக தொடர்ந்து ம.தி படங்களில் எழுத ஆரம்பித்தார்..
மீனவ நண்பன் என்ற படம்..ஸ்ரீதர் இயக்கி ம.தி நடித்து முழுவதும் ஷீட் செய்யப்பட்ட நிலை..திடீரென்று எம்.ஜி.ஆருக்கு ஒரு சிந்தனை.. நம்ம முத்துலிங்கத்துக்குப் பாட்டு கொடுத்தீங்களா.. இல்லீங்க..
சரி சரி..அவரை டூயட் எழுதச் சொல்லுங்க
படமே முடிஞ்சாச்சேங்க
பரவால்லை..கனவுக்காட்சியில சேர்த்துக்கலாம்..
அப்படி எழுதியபாடல் தான்
தங்கத்தில் முகமெடுத்து,
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா?
இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ
*
https://www.youtube.com/watch?featur...&v=Uo7QPV9J8YQ
*
இன்று போல் என்றும் வாழ்க படத்திற்கு இவர் எழுதிய அன்புக்கு நான் அடிமை பாடலும் மிகப் பிரபலம்..
அதுவந்த கதையும் கொஞ்சம் சுவாரஸ்யம் தான்.. பாடல் எழுதுகையில் தயாரிப்பாளர் ஏதோ சொல்லிவிட்டாராம்.. கவிஞர்கள் எல்லாம் கொஞ்சம்கோபக்காரர்கள் போல.. எனில் இவருக்கும் சுர்ரென்று கோபம் வந்துவிட்டது..எழுந்து சென்று விட்டாராம். பின் எம்.எஸ்.வியும் டைரக்டரும் தான் அவரை சமாதானப் படுத்தி அழைத்துவந்தார்களாம்..அப்போது எழுதிய பாடல் – அன்புக்கு நான் அடிமை தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை..
ம.தி பாடுவதாக எடுக்கப் பட இன்ஸ்டண்ட் ஹிட்..
**
இவர் எழுதிய மேலும் சில பாடல்கள்
ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ – பயணங்கள் முடிவதில்லை
மணியோசை கேட்டு எழுந்து –அதே படம்
சங்கீத மேகம் தேன்சிந்தும் நேரம் – உதய கீதம்
மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ – கிழக்கே போகும் ரயில்
சின்னச் சின்ன ரோஜாப்பூவே – பூவிழி வசலிலே
இதழில் கதை எழுதும் நேரமிது – உன்னால் முடியும் தம்பி
இதயம் போகுதே –புதிய வார்ப்புக்கள்..
பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன் – எங்க ஊரு ராசாத்தி
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் – தூறல் நின்னு போச்சு
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக் கொள்ளும் (ஈரமா இருந்திருக்குமோ)
நாம் பார்க்கப் போவது
ஆறும் அதுஆழம் இல்லை..அது சேரும் கடலும் ஆழமில்லை
ஆழம் எது அய்யா
அது அந்த சின்ன ரம்யா கிருஷ்ணன் மனசு தான்யா 
https://www.youtube.com/watch?featur...&v=7oEyzJmlE9k
**
அடுத்த பாடலாசிரியர் கவிஞர் என்பதை விட நாவலாசிரியர் , அஸிஸ்டெண்ட் டைரக்ஷன், நடிப்பு எனப் பிரபலமானவர்..
அவர்ர்ர்ர்..
(அப்புறமா வாரேன்)
Last edited by chinnakkannan; 9th March 2015 at 10:36 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th March 2015 10:11 PM
# ADS
Circuit advertisement
-
10th March 2015, 11:25 AM
#3032
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 35: "வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது"
----------------------------------------------------------------------------------------------
இளையராஜாவின் இசையில் அற்புதமான இன்னொரு நிலாப் பாடல். எல்லோரும் கட்டாயம் கேட்டிருப்போம். கேப்டன் விஜயகாந்த், நளினி நடிக்க கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் அம்மா பாடிய நா. காமராசன் எழுதிய இனிமையான பாடல். இங்க வெண்ணிலா ஓடுறது அப்பிடியே கண்ணில ஆடுதுங்களாம். மறுபடியும் காதல் பாட்டுதான்.
பாட்டை படிங்க:
-----------------------
ஆண்: வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடு தான் பாடுது
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடு தான் பாடுது
சொந்தமே தேடுதே சந்தோஷப் பூ மழையே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடு தான் பாடுது
பெண் :வானம் மாலை ஏந்துதே பூமிப் பூக்கள் நாணுதே
வானம் மாலை ஏந்துதே பூமிப் பூக்கள் நாணுதே
காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம்
காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம்
ஆண்: மோகமே ஓடி வா கண்ணிலே ஓவியம்
மோகமே ஓடி வா கண்ணிலே ஓவியம்
நெஞ்சிலே காவியம்
பெண்: துள்ளுதே உள்ளமே அள்ளவா கிள்ளவா
சந்தோஷப் பூ மழையே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடு தான் பாடுது
ஆண்: மார்பில் ஆடும் பாவையே ஆசைக் காதல் தேவியே
மார்பில் ஆடும் பாவையே ஆசைக் காதல் தேவியே
தேகமோ வீணையோ ராகம் பாடுதே
தேகமோ வீணையோ ராகம் பாடுதே
பெண்: மஞ்சமே தேடுதே நெஞ்சமே வாடுதே
மஞ்சமே தேடுதே நெஞ்சமே வாடுதே
மன்னவா ஓடி வா
ஆண் : கன்னியின் வண்ணமே கண்ணிலே மின்னுதே
சந்தோஷப் பூ மழையே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
பெண்: வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது
என்னோடு தான் பாடுது
சொந்தமே தேடுதே சந்தோஷப் பூ மழையே
இருவர் : கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே
லல லாலால லாலல லா... லல லாலால லாலல லா...
லல லாலால லாலல லா... லல லாலால லாலல லா...
பாட்டை பாருங்க:
--------------------------
இந்த மாதிரி பாட்டை கேட்டால் நாளை உனது நாள்னு தைரியமா சொல்லலாம்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th March 2015, 11:39 AM
#3033
Senior Member
Senior Hubber
சி.க.,
முத்துலிங்கம் அறிமுகம் அற்புதம். உங்கள் கற்பனையூறில் நடந்த உரையாடல் உண்மை போலவே தோன்றுகிறது. ஆமாம் முத்துலிங்கம் அருமையான பாத்துக்களாகவே எழுதியுள்ளார். அவர் எழுதிய ம. தி.யின் பாடல்கள் மிகவும் நல்ல பாடல்களே. பலமுறை கேட்டிருக்கிறேன். இளையராஜாவின் ஒரு இசை நிகழ்ச்சியில் முத்துலிங்கம் சொன்ன சில பாடல்களை ராஜா பாட காண நேர்ந்தது (உபயம் ஒரு தொலைக்காட்சிதான்) மிகவும் அரிதாக சிறப்பாக இருந்தது. அவர்கள் இணைந்து கொடுத்த பாடல்கள் மிகவும் நன்றாகவே இருக்கின்றன. முதல் வசந்தம் பாடல் இன்னும் கூட நான் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்தப் பாடல் "மானாடக் கோழி.." என்று துவங்குகிறது.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
10th March 2015, 11:52 AM
#3034
Senior Member
Senior Hubber
கல் நாயக் நன்றி.. அந்தப் பாடல் மானடக் கோழி எந்த பாட்டு..(சத்யராஜ் மலேசியா வாசுதேவ னாடும் பாட்டா- அது நினைவில் இல்லை)
லிஸ்ட் பார்த்தா ஆச்சர்யமா இருக்கில்ல..
உங்களின் நாளை உனது நாள் பாட்டும் கேட்கணும் நினைவில் இல்லை..படம் மட்டும் நினைவில் ( யூ நோ மதுரை சக்தியில் ஒரு மேட்னி போய்விட்டு பட இறுதியில் கரெண்ட் போய்விட ஜெனரேட்டரும் போட்டு அதுவும் ரிப்பேர் ஆக - சஸ்பென்ஸ் தெரியாமல் திரும்ப வந்த படம்..வெகு நாட்கள் கழித்து நண்பனிடம் சஸ்பென்ஸ் கேட்டுத் தெரிந்து கொண்டேன்!)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th March 2015, 01:09 PM
#3035
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
கல் நாயக் நன்றி.. அந்தப் பாடல் மானடக் கோழி எந்த பாட்டு..(சத்யராஜ் மலேசியா வாசுதேவ னாடும் பாட்டா- அது நினைவில் இல்லை)
லிஸ்ட் பார்த்தா ஆச்சர்யமா இருக்கில்ல..
"மானாடக் கோழி" பாடல் ரம்யா கிருஷ்ணன் மற்றும் பாண்டியன் நடிப்பில் S.Janaki-yin பாடல். அது இதோ:
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th March 2015, 05:52 PM
#3036
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 36: "நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு"
------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர் இசையில் நடிகர் விஜய் மற்றும் அனுராதா ஸ்ரீராம் பாடிய வைரமுத்துவின் நிலாப் பாடல். இங்க சும்மா போயிட்டிருக்குற நிலாவை நில்லு நில்லுன்னு சொல்லி திருவாய் மொழிகள் சொல்லச் சொல்லி கேட்குறாங்க. வழக்கமான காதல் பாட்டுதான். விஜய்-யும் நடிகை சுவலக்ஷ்மியும் நடிச்சிருக்காங்க.
இந்தாங்க வரிகளை வழக்கம் போல கொடுத்திடறேன்.
-----------------------------------------------------------------------------
நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு
திருவாய் மொழிகள் சொல்லு சொல்லு
மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு
மனதைத் தமிழில் சொல்லு சொல்லு
கண்கள் சொல்கின்ற பாஷையெல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு
கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை
பழங்கள் பழுத்ததும் பறவைக்கெல்லாம்
மரங்கள் தந்தி என்றும் அடிப்பதில்லை
மௌனத்தைப் போல் பெண்ணின் மனமுரைக்க
மனிதரின் பாஷைக்கு வலிமையில்லை
மொழியே போ போ, அழகே வா வா வா
மொழியே போ போ போ, அழகே வா வா வா
ரதியே ரதியே ரதியே ரதியே
காதல் என்னும் கனிவாய் மொழியில் சொன்னால் சொன்னால்
வளரும் பிறையே பிறையே பிறையே
வானம் எட்டித் தொடவும் முடியும் என்னால் என்னால்
வாயில் வரைந்த ஒரு வார்த்தை சொன்னால்
காற்றைக் கடன் வாங்கிப் பறந்து போவேன்
கால வெளியோடு கரைந்து போவேன்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
வண்டுகள் ஒலித்தது கேட்டதுண்டு
மலர்கள் சத்தமிட்டுப் பார்த்ததுண்டா
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு
கரைகளின் மௌனம் என்றும் கலைப்பதுண்டா
சொல்கிற மொழிகள் தீர்ந்துவிடும்
சொல்லாத காதல் தீர்வதுண்டா
மொழியே போ போ, அழகே வா வா வா
மொழியே போ போ போ, அழகே வா வா வா
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
கெஞ்சக் கெஞ்ச இன்னும் மௌனம் என்ன என்ன
கனவே கனவே கனவே கனவே
கண்ணீர் வற்றிக் கண்ணில் ஜீவன் மின்ன மின்ன
வார்த்தை உன் வார்த்தை நின்று போனால்
வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும்
உடலை என் ஜீவன் உதறிப் போகும்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்
உன் ஜீவன் தொலைக்கத் தேவையில்லை
இரு கண்கள் பேசும் பாஷைகளை
இருநூறு மொழிகள் சொல்வதில்லை
தான் கொண்ட காதல் மொழிவதற்கு
தமிழ்நாட்டுப் பெண்கள் துணிவதில்லை
மொழியே போ போ, அழகே வா வா வா
மொழியே போ போ போ, அழகே வா வா வா
---------------------------------<><><><><><><><><><><><><><>-------------------------------------
இந்தாங்க ஒளி-ஒளி காட்சியும்:
பாட்டில் நிற்கச் சொல்லும் நிலவை, என்னமோ தெரியலை நிலாவே வா-ன்னு கூப்பிடறாங்க.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th March 2015, 11:22 PM
#3037
Senior Member
Senior Hubber
பாடினார் கவிஞர் பாடினார்…- 4
**
ஆயிரம் சொல்லுங்கள்..இந்த கிராமப் புறங்களில் பாடப்படும் நாட்டுப்புறப்பாடல் இருக்கிறதே.. அது கேட்கும் போது மென்மையாய் வரும் தென்றல்பட்டு சலசலக்கும் அருவி, படபடக்கும் இலைகள், தலையாட்டும் மலர்கள், கொஞ்சம்மெல்லத் துள்ளி எங்கும் பறக்க முடியாமல் துவண்டு தரையில் விழும் உதிர்ந்த பூக்க்ள் போன்றவற்றைப் பார்க்கும் போது உண்டாகும் மகிழ்ச்சி வரும்..இல்லியோ..
அடியேனும் முன்பு ஒரு நாட்டுப்புறப் பாட்டு எழுதிப் பார்த்தேன்..(பின்ன இப்படிப் போட்டாத்தான் உண்டு! 
சொல்லிவிட வேணு மின்னு
...சுறுசுறுப்பாய்த் தானி ருந்தேன்
அல்லிமலர்க் கால வெச்சு
..அன்றவளும் போகை யிலே
மெல்லமெல்ல வேகங் கூட்டி
..மேவிமுன்னால் சென்று நிக்க
கள்ளவிழி பாத்த பின்னால்
...காணாமப் போச்சு வார்த்தை..
என்ன..அவ்வளவு கிராமியமா இல்லைங்கறீங்களா..என்ன பண்றதுங்க.. பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை சிட்டில.. ஸோ அங்கிட்டு சாயல் கொஞ்சம்கொஞ்சம் வரும்.. இன்னும் எழுத எழுதப் பழகிடுவேன்னு நெனைக்கேன்..
அதுல பாருங்க ஒரு சினிமால வந்த நாட்டுப் புறப் பாட்டை இப்ப பாக்கலாமா..
ஆத்தோரம் கொடிக்காலாம்
அரும்பரும்பா வெத்திலையாம்
போட்டா சிவக்குதில்லே
பொன்மயிலே உன் மயக்கம்
வெட்டி வேருவாசம் அதிலே வெடலப் புள்ள நேசம்..
வெடலப் புள்ள நேசம்
இத எழுதின கவிஞரைப் பத்திச் சொல்லணும்னா ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் சொல்லியே ஆகணும்..
*
“ மகாலிங்கம்.. ஒண்ணு சொல்லட்டுமா..தப்பா நெனைக்க மாட்டேளோன்னோ””
:உங்களை ஏன் ஓய் நான் தப்பா நெனைக்கப் போறேன்..என் சகோதரியின் ஆம்படையான் வேற.. சொல்லுங்கோ..” இப்படிச் சொன்னவர் கன்னரியேந்தல் மகாலிங்கம்..
“ஒம்ம பையன் சுப்பிரமணிக்கும் வயசாச்சு..என் பொண்ணுக்கும் கல்யாணப் பருவம் வந்தாச்சு.. நல்ல நாள் பாக்கலாமா..”
:பாக்கலாந்தான்..ஆனா மாமா”
“ஷ்.. நமக்கு நெலம் நீச்சுல்லாம் இருக்கு..இருந்தாலும் பிள்ளை வேலை பார்த்தா நன்னா இருக்கும்னு அபிப்ராயப் படற..சரி செஞ்சு புடலாம்.. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய பணக்கார வெயாபாரி நம்ம ஊர்லயே இருக்கான்..அவன் கூட கணக்குக்கு நம்பிக்கையா ஆள் வேணும்னு கேட்டான்..அதனால கல்யாணம் கட்டிக்கிட்டு நம்ம ஊர்லயே வேலையும் பாக்கட்டும்..என்ன சொல்றீங்க..”
“பேஷா” ஆவுடையார்கோவில்க்கருகே உள்ள கன்னரியேந்தல் கிராமத்தில் பிறந்த சுப்பிரமணியன் பெரியவர்களால் நிச்சயிக்கப் பட்டு தன் அத்தை பெண்ணையே திருமணம் செய்து மாமனார் ஊருக்கே ட்ரான்ஸ்ஃபர் (பின்ன எப்படிச் சொல்றது) ஆனார்..அங்கு ஒருகடையில் கணக்கு உத்தியோகமும்(மாதச்சம்பளம் பத்து ரூபாய்) பார்த்தார்..
பின் அந்தக்காலத்தில் நாடகங்களின் மீது ஆர்வமேற்பட அப்பாவிடம் சம்மதம் வாங்கி (அந்தக்காலங்க) நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் சுப்பிரமணியம்..
பின் பின் என்ன ..சினிமா என்று ஒன்று வந்து அதிலும் ஆர்வம் ஏற்பட்டு நடிப்பதற்கும் கதை எழுதுவதற்கும் ஆசை வந்தது சுப்பிரமணியத்திற்கு..
இவரெழுதிய சில நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப் பட, அவற்றில் சிலவற்றிற்கு கல்கி பாராட்டி விமர்சனம் எழுத சுப்புவின் பெயர் பிரபலமாயிற்று..சொல்ல மறந்துவிட்டேனே.. மாமனாரின் ஊர் கொத்தமங்கலம்.. சுப்பிரமணியம் வாழ்க்கையைத் துவங்கிய இடம்.. எனில் கொத்தமங்கலம் சுப்பு என்றே அறியப்பட்டார்..
அப்புறம் சந்திர மோகனா என்ற திரைப்படத்துக்குக் கதை எழுதி (1936) நடிக்கவும் செய்தார்..
கொத்தமங்கலம் சுப்பு பின் ஜெமினி கம்பெனியில் மாதச்சம்பளம் 300 ரூபாய்க்குச் சேர அவரது கனவும் ஓரளவிற்கு நனவானது எனலாம்.. கதைஇலாகாவில் பிரதான எழுத்தாளர், நடிகர், இயக்குனர் ( போன தொடர் இறுதியில அசிஸ்டெண்ட் டைரக்ஷன்னு தவறாய் எழுதியிருந்தேன்),கதாசிரியர் , வில்லிசைக் கலைஞர் , நாவலாசிரியர் எனப்பன்முகத் திறன் இருந்தாலும் கூட இவர் கவிஞராக – பாடலாசிரியராக எழுதிய சில பாடல்கள் மறக்கவொண்ணாதவை (ஹை..என்ன தமிழ்!)
நாவல்னு பார்த்தீங்கன்னா ந.தி நடித்த தில்லானா மோகனாம்பாள் நாவலா இரண்டரை வருடங்க்ளுக்கும் மேலாக விகடனில் வெளிவந்தது.. கோபுலுவின் சித்திரங்கள் மனதைக் கொள்ளைகொள்ளும்.. நாம் படத்தில் பார்த்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் எக்டெண்டட் வெர்ஷனில் இன்னும் வெகு அழகாய் கண் முன் மிளிர்வார்கள்..
சிக்கல் ஷண்முக சுந்தரம் வாசிக்க மோகனாம்பாள் ஆடும் போட்டி – ஆஹா பைண்ட் செய்யப் பட்ட அந்தப் புத்தகத்தில் படங்களுடன் வாசித்தது இன்னுமெனக்குச் சிலிர்ப்பாய் இருக்கிறது..
வடிவாம்பாள் திருந்துவாள், மோகனா ஷண்முக சுந்தரம் திருமணம் செய்து கொள்வர் (இதற்குக் கல்யாணப்பத்திரிகையும் விகடன் அடித்திருந்த நினைவு)
பின் ஒரு குழந்தையும் பிறக்கும்..இருவரும் கப்பல் பயணம் மதன்பூருக்குச் செல்வர் எனப் போகும் நாவல்.. முடிவு நினைவிலில்லை..
தி.மோ தான் திரைப்படத்தில் வந்து இன்னும் நம் நெஞ்சில் இருக்கிறதே..அந்த ச்சிக்கலாருக்கும், மோகனா, தருமன், முத்துராக்கு வடிவாம்பாள், சவடால் வைத்தி என எல்லாருக்கும் முதன் முதல் நாவலில் உயிர் கொடுத்த கொத்தமங்கலம் சுப்பு – விகடனில் வெளியானபோது கலை மணி என்ற பெயரில் எழுதினார்..
இவர் எழுதிய ராவ் பகதூர் சிங்காரம் ஜெமினியே தயாரித்தது..விளையாட்டுப்பிள்ளை என்ற பெயரில்.. ந.தி, பத்மினி, காஞ்ச்..
பட் இவரதுகவிதா உள்ளத்தைச் சொல்லவில்லையே.. ஹை..சொல்லாமல் தெரியவேண்டுமே..
இல்லை இல்லை..சொ.தெ.வே பாடலைஎழுதியவர் இவரில்லை.. இவர் எழுதியபாடல் இன்னும்பல வருடங்களுக்குப் பின்னும் பார்க்க உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்..அது போல மறுபடி வருமா எனச் சந்தேகமே..
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ
பேதைமையாலே மாது இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே
சாதூர்யம் பேசாதடி
என் சலங்கைக்குப் பதில் சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி..
நடையிலே சொல்லடி
ஆடுமயில் எந்தன் முன்னே என்ன
ஆணவத்தில் வந்தாயோடி?
பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடாதேடி நீ படமெடுத்து ஆடாதேடி
யெஸ்.. வஞ்சிக் கோட்டை வாலிபனில் கண்ணும் கண்ணும்கலந்து எழுதியவர் இவரே.. என்னா பாட்டு என்னா ஆட்டம் என வியக்காதவர் யாருமில்லை அந்தக்காலத்தில்.. இந்தக் காலத்திலும்.
ராஜாமகள் ரோஜாமலர் – இதுவும் கொத்தமங்கலம் சுப்புவின் கைவண்ண்ம் தான்..
பலபடங்களில் தன்னுடன் நடித்த சுந்தரிபாய் என்ற மராத்தியப் பெண்மணியைக் காதலித்து இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டார் ( நிழல் நிஜமாகிறதில் வரும் அனுமந்தின் அம்மா) இருவருமே ஜோடியாக பல படங்களில் நடித்திருக்கின்றனர்..
கலைமாமணி, பத்மஸ்ரீ எல்லாம் இவர் பெற்ற பட்டங்கள்..
ஹிந்தோள ராகத்தில் இவர் எழுதிய பாடல் மோட்டார் சுந்தரம் பிள்ளையில் வரும்..என்னவாக்கும் அது…
மனமே முருகனின் மயில்வாகனம்
மானிட தேகமே குகனாலயம்
குரலே செந்தூரின் கோவில் மணி – அதுகுகனே ஷண்முகனே
என்றொலிக்கும் இனி….
ம்ம் செளகாரும் ஒல்லி ஒல்லி மணிமாலாவும் இணைந்து பாடும் பாடல் (மணிமாலா ரொம்ப அழகா இருப்பார் என என் சித்தப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்!)
வழக்கம் போல அந்தக் காலத்திலும் கரெக்ஷன் உண்டு… மானிட தேகமே என்றால் ஒருமாதிரியோ என்னவோ நினைத்தார்களோ..அல்லது பாடுவது பெண்கள் என்பதால் – மாந்தளிர் மேனியே குகனாலயம் –என மாற்றிவிட்டார்கள் – சுப்புவின் அனுமதி பெற்று..
பாட். இதோ.. இதில் வரும் வீணை இசையை மறக்க முடியுமா என்ன..
குபுகுபு குபுகுபு நான் இஞ்ஜின் டகடக டக டக நான் வண்டி.. நகைச்சுவைப்பாடலையும் எழுதியவர் இவர் தான்..
பாடல்களில் எளிய சொற்களைக் கையாள்வது இவருக்கு மிகப் பிடிக்கும்..இவரது பாணி என்று கூடச் சொல்லலாம்..
ஒளவையார் என்று ஒருபடம்.
கே.பி.எஸ் நடிக்க ஸ்டார்ட் ஆக்ஷன் சொல்லப்பட
ஒளவையார் – அதியமான் அள்ளி அள்ளிக் கொடுத்தார் –என்பது போல பேசவேண்டும்.. கே.பி.எஸ் ஏதோ நினைவில் – அதியமான் அள்ளிக் கொடுத்தார் – என்றுமட்டும் சொல்லிவிட …கட்ட்.ட்
டைரக்டர்..- பசின்னா கண்டதையும் சாப்பிடக் கூடாது..இப்படி அல்லிய முழுங்கிட்டீங்களே – என ச் சொல்ல செட்டில் அனைவரும் சிரித்தார்களாம்.. டைரக்டர்… கொத்தமங்கலம் சுப்பு (இது பலவருடங்களுக்கு முன் என் பள்ளி ஆசிரியர் சொன்ன நிகழ்வு- தவறாகக் கூட இருக்கலாம்). ஒளவையாரில் ஒரு முக்கிய கதா பாத்திர்மாகவும் நடித்திருந்தார் கொத்தமங்க்லம் சுப்பு..
இப்படி எல்லாவகையிலும் மறக்கமுடியாத கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு (மறைந்தது 1974) எழுதிய நாட்டுப் புறப்பாடல் வந்த படம் சந்திரலேகா..
ஆத்தோரம் கொடிக்காலாம்
அரும்பரும்பா வெத்திலையாம்
போட்டா சிவக்குதில்லே
பொன்மயிலே உன் மயக்கம்
மாடுகளைக் கட்டிப்போட்டு வெகுநேரமாச்சு
மானமிருண்டு போச்சு
ஆருக்களவாணிகண்டா வந்து வந்து போக்கிடுவார்
மாட்டைப் பார்த்து..: மாமியா வீட்டுக்குப் போறாப்புல
மசமசன்னு நடக்குற
கழனிவெக்கிற நேரமாச்சு வேகமாக ஓட்டு
(கொஞ்சம் வேகமாகஓடும் பாடல் வேகமாக டைப் அடிக்க இயலவில்லை..
https://www.youtube.com/watch?featur...&v=05jFqxsPT2w
*
அடுத்து வரப்போகும் கவிஞர் எழுதிய கணீர்க்குரல் அருவிப்பாட்டு ரொம்பப் பிரபலம் தான்..
அவர்ர்ர்ர்ர்ர்
(அப்புறம் வாரேன்)
//ரொம்ப நீளமாய்டுச்சா//
Last edited by chinnakkannan; 10th March 2015 at 11:55 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th March 2015, 12:10 AM
#3038
Senior Member
Senior Hubber
குயிலாக நானிருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்
ம்ம் சரி அப்புறம்..
நாம அழகா குழந்த பெத்துக்கிட்டு அத வளத்து ஆளாக்கி சூப்பர் சிங்கர் ஜூனியர்ல பாட விட்டு ப்ரைஸ் வாங்க விடணும்!!!
‘...........’
(நல்ல வேளை ஜெய்ஷங்கர் கிட்ட இந்தம்மா இப்படிக் கேக்கலை.. ஓ அது அந்தக்காலமோ!)
https://www.youtube.com/watch?featur...&v=Rc6TEnbfkbs
-
11th March 2015, 01:34 AM
#3039
Senior Member
Veteran Hubber
maname muruganin mayil vaahanam
en maanthaLir meniye guhan aalayam
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th March 2015, 04:41 AM
#3040
Junior Member
Newbie Hubber
சி. க,
உங்கள் கவிஞர் அறிமுக கற்பனையூர் உரையாடல் ரொம்ப ரொம்ப ஜாலி.உங்கள் சரளமான நகைச் சுவை கலந்த எழுத்து பளிச். உங்களுக்கும் என்னைபோல யாப்பிலக்கணத்தில் ஆர்வம் போல?(வெண்பா போல காசு என்பதில் முடித்துள்ளேன்.)
கல்நாயக்,
உங்கள் ஜுகல் பந்தி சி.க வுடன் அடிக்கும் லூட்டி உங்களின் புதிய பரிமாணம். ஒரு வரி ஊசி குத்தல் மட்டுமே உங்கள் பிரத்யேக எழுத்தாக இருந்த காலம் ஒன்று உண்டு.நம் ஆடையழகை பார்த்து, மாற்றணி நண்பர் ஒருவர் ,ஆர்வ கோளாறாய் அலிபாபாவை குறிப்பிட்டு, இந்த ஆடைகளை பார்த்து அனைவரும் பின்பற்றினர் என்று எழுத போக, நீங்கள் கேட்டது.... அப்போது அந்த கால இளைஞர் அனைவரும் தமிழ் நாட்டில் அராபிய உடையிலா அலைந்து கொண்டிருந்தனர் என்று....
நான் விழுந்து விழுந்து சிரித்தேன். மறக்க முடியாத காலங்கள்.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
Bookmarks