-
25th March 2015, 08:10 AM
#2961
Junior Member
Seasoned Hubber
-
25th March 2015 08:10 AM
# ADS
Circuit advertisement
-
25th March 2015, 08:10 AM
#2962
Junior Member
Seasoned Hubber
Last edited by Varadakumar Sundaraman; 25th March 2015 at 08:16 AM.
-
25th March 2015, 08:11 AM
#2963
Junior Member
Seasoned Hubber
Last edited by Varadakumar Sundaraman; 25th March 2015 at 08:18 AM.
-
25th March 2015, 08:13 AM
#2964
Junior Member
Seasoned Hubber
-
25th March 2015, 08:22 AM
#2965
Junior Member
Seasoned Hubber
-
25th March 2015, 08:36 AM
#2966
Junior Member
Diamond Hubber
-
25th March 2015, 08:53 AM
#2967
Junior Member
Seasoned Hubber
மனதில் நிறைந்த மக்கள் திலகம்
“மக்கள் திலகம்” என்றதுமே ஏதோ இனம்புரியாப் பரவசம் என் மனதில் ஊற்றெடுக்கிறது. அந்த ஊற்றின் மூலத்தைத் தேடிக் கொண்டே சென்றேன் அது என்னை எனது இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றது .
ஆமாம், எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து, “சக்தி” எனும் இந்த மூன்றெழுத்துடன் பின்னிப்பிணைந்தது இன்று நேற்றல்ல.
அப்படி என்னதான் இந்த மனிதனுடன் என்னைப் பிணைத்தது?
மிக ஆழமான கேள்வி? ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் காலடி வைத்திருக்கும் இந்நிலையில் நான் என்னைக் கேட்கிறேன்.
பதில் மிகவும் விசித்திரமானது.
“மனிதனாக வாழந்திட வேண்டும் மனதில் வையடா, தம்பி மனதில் வையடா !” என்று மக்கள் திலகத்தின் படத்தில் வரும் பாடலொன்றில் வரிகள் உண்டு.
உலகில் நன்னெறி கொண்ட மனிதனாக, மக்கள் மனங்களில் கோலோச்சும் மன்னனாக நடைபோட வேண்டுமென்றால் மக்கள் திலகத்தின் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் எனும் உன்னத கருத்தே இம்மாமனிதனுடன் என்னை இணைத்தது என்பதே உண்மையாகும்.
யார் இவர் ? ஒரு சாதாரண நடிகர் தானே! இவருக்கென்ன இத்தனை விளம்பரம் என்று எண்ணுபவர்கள் இருக்கலாம்.
இவரின் படத்தில் வரும் பாத்திரங்களில் மயங்கி விட்டாய் என்று சொல்பவர்கள் கூட இருக்கலாம் .
சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் இம்மானிதர் மக்களுடைய மனங்களில் பிடித்திருக்கும் இடம் காலத்தால் அழிக்கப்பட முடியாத ஒன்றாக இருப்பதற்குக் காரணம் என்ன என்றாவது நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா ?
மக்கள் திலகம் எனும் இம்மாமனிதருடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இவருடன் பழகிய பலருடன் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவர்களில் முக்கியமானவர் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் கவிஞர் வாலி அவர்கள்.
அவரைப் பலமுறை சந்தித்து அளவளாவும் பாக்கியம் பெற்றிருந்தேன் . எமது ஒவ்வொருமுறைச் சந்திப்பின் போதும் அவர் எனக்கு மக்கள் திலகத்தின் உயரிய பண்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி உன்னதமாக விளக்குவார்.
திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைத் தனது குடும்பத்தில் ஒருவராக மதித்து அவர்களது தேவை என்னவோ அதைத் தனது தேவையாகக் கருதி நிறைவேற்றும் அவரது இளகிய மனம் ஒன்றே அவருக்கு “பொன்மனச் செம்மல்” எனும் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் வல்லமை பெற்றது.
எனது மானசீகக் குரு கவியரசர் கணவிதாசன் அவர்களை தமிழக ஆஸ்தானக் கவிஞராக்கி மகிழ்ந்த அவரது உள்ளத்தை என்னவென்று போற்றுவது.
கவியரசரது விழுதுகளில் ஒன்றான கண்மணி சுப்பு அவர்களின் சந்திப்பின் போது
தனது தந்தையின் வேண்டுகோளை சிரமேல் ஏற்று கவியரசரின் மறைவிற்கு பின்னர் அதைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்த பண்பினை மிக அழகாக எடுத்தியம்பியபோது மக்கள் திலகம் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் மர்மம் புரிகிறது.
நான் படித்த ஒரு சுவையான சம்பவம் எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது .
பணத்தோட்டம் எனும் படத்திற்காக டி.எம்.எஸ் உம் , பி.சுசீலா வும் பாடிய “பேசுவது கிளியா ?“ எனும் பாடலில் ஒரு பகுதி
பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா …
என்று வரும் .
இந்தப் பாடல் எழுதப்பட்ட சமயம் மக்கள் திலகத்தை அவரது தோட்டத்தில் சந்தித்த ஒரு தயாரிப்பாளரிடம் இப்பாடலைக் கேட்டு அவரது கருத்தைக் கூறும்படி மக்கள் திலகம் கேட்டாராம் .
பாடலைக் கேட்ட அத்தயாரிப்பாளர் உங்களது சரித்திரத்தையே இருவரிகளில் கவியரசர் கண்ணதாசனை விட வேறுயாரால் கூற முடியும் என்று சொன்னராம்.
அதற்கு மக்கள் திலகம் அது எப்படி ? என்று கேட்க,
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
எனும் இந்த இருவரிகள் உங்கள் சரித்திரத்தைத் தானே கூறுகிறது என்று கூற மக்கள் திலகம் வியப்பில் ஆழ்ந்து கவியரசரின் திறமையை ரசித்தாராம் .
எனக்கு அப்போது 9 வயது என்று நினைக்கிறேன். எனது தாய்மண்ணாம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.
“எங்க வீட்டுப் பிள்ளை” யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும் யாழுக்கு விஜயம் செய்திருந்தார்கள்.
திறந்தததொரு ஜீப் வண்டியில் பலாலி விமான நிலயத்திலிருந்து பலாலி வீதி வழியாக யாழ் நகருக்கு ஊர்கோலமாக அழைத்து வரப்பட்டார்கள்.
மிகவும் பரபரப்பாக இருந்த என்னை அப்போது விடுமுறையில் வந்திருந்த என் தந்தை எதற்காக இந்தப் பரபரப்பு என்றதும் மக்கள் திலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கேட்டதும் சைக்கிளில் என்னை உட்கார்த்தி யாழ் கந்தர்மடத்தில் பலாலி வீதிச் சந்தியில் எம்.ஜி.ஆரையும் , கன்னடத்துப் பைங்கிளியையும் நேராகப் பார்க்கும் வாய்ப்பை என் அன்புத்தந்தை ஏற்படுத்திக் கொடுத்ததை எப்படி என்னால் மறக்க முடியும்?
அப்பப்பா ! பொன் வண்ணம் என்பார்களே அப்படியான வதனம், அன்பான புன்னகை அவரைப் பற்றி அவ்வயதில் நான் கொண்டிருந்த கற்பனையை அக்காட்சி எவ்விதத்திலும் சிதறடிக்கவில்லை .
பின்பு எனது பதினாறவது வயதில் எங்க வீட்டுப் பிள்ளை மீண்டும் யாழ் வெலிங்டன் தியேட்டரில் திரையிடப்பட்ட போது டிக்கெட் கிடைக்காமல் மதில் வழியாகப் பாய முற்பட்டு தியேட்டர் ஊழியர் என் சட்டையைப் பிடித்திழுக்க முதுகுப் பக்கச் சட்டை கிழிந்து சட்டை அவர் கையிலும் நான் உள்ளேயும் விழுந்த அனுபவம் இனிக்கிறது.
முதுகுப் பக்கச் சட்டை இல்லாமலே அத்திரைப்படத்தை என் நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தது மக்கள் திலத்தின் ஞாபகத்திற்கு ஒரு மகுடமாய் நெஞ்சில் திகழ்கிறது .
மக்கள் திலகத்தின் திரைப்படப் பாடல்கள் எப்போதும் மனதில் அளவிடமுடியாத உற்சாகத்தைக் கொடுக்கும்.
இப்போது கூட லண்டனில் எப்போது எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் பார்ப்பதே என் மனதிற்கு ஆனந்தத்தை அளிக்கும்.
நீ ஆண்டது
அரியணைக் கதிரையல்ல
மக்களின்
அன்பு மனங்களென்பேன்
காலன் உனைக்
கவர்ந்து சென்று
காலங்கள் பல
கடந்தாலும்
காலத்தால் அழியாத
கலங்கரை விளக்காய்
அரசியல் உலகிற்கு
ஆணிவேராகினாய்
மன்னாதி மன்னனாய்
உலகம் சுறும் வாலிபனாய்
உழைக்கும் கரங்களோடு
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலனாக
மக்கள் மனங்களை உழுதாயே !
மதுரை வீரனாய் நீயோ
நீதிக்குத் தலைவணங்கும்
எங்கள் வீட்டுப் பிள்ளையென
தர்மம் தலைகாக்கும் என
கலங்கரை விளக்கானாய்
பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
தனிப்பிறவி நீ என்வாழ்வில்
ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
புதுமைப் பித்தன் நீ
தாய்சொல்லைத் தட்டாமல்
தாய்க்குப்பின் தாரம் என
நல்லவன் வாழ்வான் என்றே
ஆயிரத்தில் ஒருவனானாய்
தமிழர்களின் காவல்காரன்
காத்திருந்தாய் விவசாயிகளை
ஒருதாய் மக்கள் நாமென்று
சங்கே முழங்கென்றாய்
ஊருக்கு உழைப்பவனே
நம்நாடு என் இதயவீணை
பாடிய உன் உள்ளமே
உன் மக்கள் எப்போதும்
குடியிருந்த கோயில்
courtesy.
சக்தி சக்திதா
-
25th March 2015, 09:09 AM
#2968
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
சரோஜாதேவி
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
ஜெயலலிதா
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
வெண்ணிற ஆடை நிர்மலா
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
மஞ்சுளா
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
லதா
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பத்மினி
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
ராஜ சுலோச்சனா
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
அஞ்சலி தேவி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
ராஜஸ்ரீ
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
சாவித்திரி
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பானுமதி
சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
கே.ஆர். விஜயா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
லக்ஷ்மி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
வாணிஸ்ரீ
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
சௌகார் ஜானகி
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
ரத்னா
அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
எல் .விஜயலட்சுமி
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
தேவிகா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
பத்மப்ரியா
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
ராதா சலுஜா
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
காஞ்சனா
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை
அன்பு சகோதரர் வரதகுமார் சுந்தராமன் எனப்படும் திரு. சி. எஸ். குமார் அவர்கள் அறிவது :
வித்தியாசமான தொகுப்பு - அருமை.
இணைய தளத்திலிருந்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது நேற்றைய பதிவுகள் அனைத்தும் வெகு அருமை !
தங்களின் புதுமையான பதிவுகளுக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றி !
-
25th March 2015, 10:31 AM
#2969
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் தாயார் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தாயாரின் ஆன்மா இறைவனடி இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள்
செய்தியை இப்போதுதான் படித்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். கோடி கொடுத்தாலு தாய்க்கு நிகர் இந்த உலகில் ஏதும் இல்லை. ஆறுதல் கூறமுடியாத துயர் இது. தங்களுடைய தாயார் இந்த புவியில் பிறந்து ஆற்றவேண்டிய கடமைகள் அனைத்தும் செவ்வன ஆற்றிவிட்டதால் இறைவன் திரும்ப அவரை தன்னுடன் அழைத்துகொண்டார். இயற்கையின் கொடுமையான செயல்களில் அதிகம் கொடுமையான செயல் நம்முடன் இருப்பவரை இயற்கை தன்னோடு நம் அனுமதியில்லாமல் சேர்த்துகொள்வதுதான்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rks
-
25th March 2015, 10:49 AM
#2970
Junior Member
Veteran Hubber
My heart felt condolences to Mr.Loganathan for his loss. May her soul rest in peace.
Bookmarks