-
30th March 2015, 11:53 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thozhar
கஷ்டம் இல்லை. நடக்காது
மெல்லிசை மன்னரும் இசைஞானியும் சேர்ந்து இசையமைத்த படங்களுக்கு, நான் கேள்விப்பட்டது, எம்.எஸ்.வி மெட்டமைப்பாராம். இளையராஜா ஆர்க்கெஸ்டிரேஷன்/அரேஞ்மென்ட் செய்வாராம். இருவரது பாணியும் வேறு என்றாலும் இது ஒரு இயல்பான விஷயமாக அமைந்தது. அதோடு மட்டுமில்லாமல் இருவரது ரசிகர்களும் இரு மேதைகளையும் ஏற்றுக் கொண்ட ஒரு காலகட்டமது. ஆனால் ரஹ்மான் கதை வேறு. நன்றாக இருந்தாலும், இந்த கூட்டு முயற்சி இப்போது நடக்காமல் இருப்பதே நல்லது.
வேண்டுமென்றால் இப்படி செய்யலாம். ரஹ்மானே ராஜாவிடம் சென்று ஒரு ஆல்பம் செய்வோம். உலகளவில் கொண்டுபோகலாம். ஆனால் சேர்ந்து செய்யத் தேவையில்லை. ஆல்பத்திற்கான ஒவ்வொரு தீம்களையும் உங்களுக்கு எப்படித் தோணுதோ அப்படி இசையமைத்துக் கொடுங்கள். அதே தீம்களுக்கு நானும் தனியே இசையமைத்து ரெண்டையும் ஒரே தொகுப்பில் சேர்த்து வெளியிட்டு விடலாம். ரெண்டுபேருக்குமே இசைக்கு தனியான தளம். கொஞ்ச வருடம் போகட்டும். இதெல்லாம் நடக்கும் என நினைக்கிறேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
30th March 2015 11:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks