-
14th April 2015, 09:09 PM
#3901
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
.தென் சென்னை எம்.பி., சைதை எம்.எல் ஏ , மாவட்ட செயலாளர், பகுதி செயலாளர்
வட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலையில் திரு. எஸ். ராஜ்குமார் ஏற்பாடு
செய்திருந்த தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு இலவசமாக பானங்களும்,
பழங்களும் வழங்கப்பட்ட காட்சி.
சென்னை சைதாப்பேட்டையில் பொதுமக்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்த இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழுத் தலைவர் சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் விழா நிகழ்ச்சிகள் பற்றிய படங்களை பதிவிட்ட சகோதரர் திரு. லோகநாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
14th April 2015 09:09 PM
# ADS
Circuit advertisement
-
14th April 2015, 09:10 PM
#3902
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ravichandrran
கோவை டிலைட்டில் தலைவரின் மீனவ நண்பன் படம் திரையிடப்பட்டுள்ள செய்தியை தெரிவித்த சகோதரர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
14th April 2015, 09:12 PM
#3903
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
‘தலைவரின் பெருமை சொல்லவும் பெரிதே’
பொதிகை தொலைக்காட்சியில் எங்க வீட்டுப் பிள்ளை பொன்விழா நிகழ்ச்சியை இன்று கொஞ்ச நேரம்தான் பார்க்க முடிந்தது. முழுமையாக பார்க்க முடியவில்லை.
விழாவில் கலந்து கொண்ட திருமதி. ஜெயந்தி கண்ணப்பன் பேசும்போது, ‘‘எவ்வளவோ பேர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் மனதில் இன்றும் இருப்பவர்கள் மக்கள் திலகமும் எனது சிறிய மாமனார் கவியரசர் கண்ணதாசனும்தான்’’ என்று கூறினார்.
திருமதி குட்டி பத்மினி கூறிய கதை மனதை கவர்ந்தது.
ஒரு ஊரில் ஒரு மகான். அவர் ஒருவரை அழைத்து அங்குள்ள பன்றியின் காதில் எம்ஜிஆர் என்று கூறச் சொல்லியிருக்கிறார். அவரும் அதேபோல் கூறியவுடன் பன்றி இறந்து விட்டது. சில நாட்கள் கழித்து ஒரு பசுமாட்டின் காதில் அதேபோல எம்ஜிஆர் என்று கூறச் சொல்லியிருக்கிறார். அதுவும் இறந்து விட்டது.
சில ஆண்டுகள் கழித்து ஒரு மகாராஜாவுக்கு பிறந்த இளவரசியான சிறுமியின் காதில் அதேபோல எம்ஜிஆர் என்று கூறச் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே கிடைத்த அனுபவங்களால் அந்த நபர் கூற மறுத்திருக்கிறார். ஆனால், மகான் வற்புறுத்தவே சிறுமியின் காதில் கூறிவிட்டு பீதியுடன் திரும்பியிருக்கிறார் அந்த நபர்.
பூர்வ ஜென்ம நினைவு வந்தவளாய், அவரது கையைப் பிடித்து இழுத்த சிறுமி, ‘‘முற்பிறவிகளில் பன்றியாக இருந்த நான், நீங்கள் கூறிய எம்ஜிஆர் பெயரால் பசுவாக பிறப்பெடுத்து, பின்னர் இப்போது இளவரசியாக பிறந்திருக்கிறேன்’’ என்று கூறினாளாம்.
அப்படிப்பட்ட பெருமையை பெற்றவரை அவரது பெயரை மறவாமல் நினைத்துக் கொண்டே இருக்கும் நாம் பாக்கியம் செய்தவர்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th April 2015, 09:13 PM
#3904
Junior Member
Platinum Hubber

தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்த திரு. எஸ். ராஜ்குமாருக்கு, மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என். ரவி பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் தென் சென்னை எம்.பி., சைதை எம்.எல்.ஏ, பகுதி மற்றும் வட்ட செயலாளர்கள்.
-
14th April 2015, 09:23 PM
#3905
Junior Member
Platinum Hubber

மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என். ரவி அவர்களுக்கு திரு. ராஜ்குமார் பொன்னாடை அணிவித்த காட்சி.
-
14th April 2015, 09:49 PM
#3906
Senior Member
Devoted Hubber
மையம் உறவுகள் அனைவருக்கும், இனிய.... மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
14th April 2015, 10:07 PM
#3907
Junior Member
Platinum Hubber

சைதை எம்.எல்.ஏ. திரு. செந்தமிழன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்
திரு. ராஜ்குமார்
-
14th April 2015, 10:13 PM
#3908
Junior Member
Platinum Hubber

தென் சென்னை எம்.பி. திரு. ஜெயவர்தன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார் திரு. ராஜ்குமார்.
-
14th April 2015, 10:18 PM
#3909
Junior Member
Platinum Hubber

சைதை பகுதி செயலாளர் திரு.என்.எஸ். மோகன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார் திரு. ராஜ்குமார்.
-
14th April 2015, 10:22 PM
#3910
Junior Member
Platinum Hubber

திருவாளர்கள் :கேசவன், கண்ணன், இளங்கோ, ரவிக்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு பானங்கள் வழங்கும் காட்சி.
Bookmarks