Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    செல்வகுமார் சார்,

    உங்கள் புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

    நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு சொன்னது போல் ஏதோ ஒரு communication gap நமக்குள் அதாவது திரிகளுக்குள் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனாலேயே நாம் விவாதம் முடிவடையாமல் நீண்டுக் கொண்டே போகிறது. அவரிடம் சொன்னது போல் விவாதங்களை வளர்க்காமல் நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில அடிப்படையான குற்றசாட்டுகளுக்கு மட்டும் ஒரு சிறு விளக்கமளிக்க விரும்புகிறேன்.

    கோபால் பற்றிய குற்றசாட்டு. நான் நேற்றே சொன்னது போல் மிக அதிகமாக எடிட் செய்ததும் கோபாலின் பதிவுகளைத்தான். அதிகமாக அறிவுரை சொன்னதும் அல்லது கண்டிப்பு வார்த்தைகளை பயன்படுத்தியதும் கோபாலிடம்தான். இதற்கும் மேலாக நேற்று கண்டிக்கவில்லையே அதற்கு முதல் நாள் கண்டிக்கவில்லையே என்று சொன்னால் என்ன சொல்வது. ஒன்றை மட்டும் சொல்கிறேன் இனி மேல் நீங்கள் சுட்டிக் காட்டும்படியான யார் மனதையும் புண்படுத்தும் பதிவுகள் எதுவும் கோபால் தரப்பிலிருந்து வராது.

    திரு ரவி அவர்கள் பற்றி கோபால் எழுதிய பதிவை குறிப்பிட்டிருக்கிறீர்கள். என்னுடைய ஞாபகம் சரியாக இருக்குமென்றால் அந்த வரிகள்/வார்த்தைகள நீக்கப்பட்டு விட்டன. இல்லை அது நீக்கப்படாமல் இன்னும் இருக்கிறது என்று சொன்னால் அதை தேடித் பிடித்து நீக்கி விடுகிறேன். இதில் எந்த பாகுபாடும் இல்லை. காரணம் எந்த பதிவாவது எவரையேனும் காயப்படுத்தும் விதம் இருந்தால் அதை நீக்குவதற்கும் அதை பதிவிட்டவரை அப்படி செய்யாதீர்கள் என சொல்வதற்கும் நான் தயங்கியதேயில்லை.

    உதாரணமாக இதே திரு ரவி அவர்கள் முன்பு நடிகர் திலகம் திரியில் பதிவுகள் செய்தபோது கர்ணன் படத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு பதிவை போட்டபோது அதை படித்துவிட்டு நீங்களும் இளைய சகோதரர் யுகேஷ் பாபு அவர்களும் நடிகர் திலகம் திரிக்கு வந்து அவருக்கு கண்டனம் தெரிவித்தபோது உங்களை ஆதரித்து ரவி அவர்கள் எழுதியது தவறுதான் என்று சொன்னவனும் நான்தான் என்பதை மறந்திருக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன்.

    இரண்டாவது விளக்கம் திராவிட இயக்க தலைவர்கள் பற்றி கடுமையான விமர்சனம். திராவிட இயக்க தலைவர்களை விமர்சிக்க வேண்டும் என்று வேண்டுமென்றே செய்வதில்லை. நடிகர் திலகம் கடந்து வந்த கலையுலக அரசியல் பாதைகளைப் பற்றி பேசும்போது அந்த நேரத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்று வரும்போது அதற்கு காரணமாக இருந்த மனிதர்கள் மற்றும் சூழல்கள் பற்றி பேசும்போது இந்த விமர்சனம் தவிர்க்க முடியாததாகிறது.

    தவிரவும் எப்படி திராவிட இயக்கங்கள் தமிழகத்திற்கு நன்மை செய்தன என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதே போன்று அவை தமிழகத்திற்கு தீமையே செய்தன என்று நாங்கள் நினைப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் அப்படி நினைக்க கூடாது என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா! அரசியல் சார்ந்த விமர்சனம் வைக்கப்பட்டால் அது தவறாக் இருந்தால் சுட்டிக் காட்டலாம். அல்லது விமர்சகரின் வாதம் சரியானது அல்ல என்பதை நிறுவலாம். நான் முன்பே சொன்னது போல் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது.

    உங்கள் பதிலுக்கு நன்றி!

    அன்புடன்
    Last edited by Murali Srinivas; 15th April 2015 at 02:02 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •