-
14th April 2015, 04:12 PM
#11
Junior Member
Seasoned Hubber
நண்பர்கள் திரு.ராகவேந்திரா சார், திரு.கோபால், திரு.முரளி, திரு.ஆர்.கே.எஸ்., திரு.கல்நாயக், திரு.சின்னக்கண்ணன், திரு.கோபு, மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம், திரு.சிவா, திரு.சிவாஜி செந்தில், திரு.செந்தில்வேல் சிவராஜ், திரு.ஜோ, திரு.டிசிஎஸ், திரு.டிஏசினிமா, திரு.சதீஷ், திரு.சுந்தராஜன், திரு.சந்திரசேகர், திரு.ஹரீஷ், (நினைவுக்கு வந்தவரை கூறியிருக்கிறேன். பெயர்கள் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்) உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
திரு.முரளி, உங்களுக்கு நேற்று இரவே மக்கள் திலகம் திரியில் பதில் அளித்திருந்தேன். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும், திரு.சந்திரசேகர் நேற்று ஒரு இமெயில் பதிவிட்டிருந்தார். அதில் திரு.வேணுகோபால் என்பவர் இந்த திரியை மட்டுமே படிப்பதாக கூறியிருந்தார். அதுபோல, இந்த திரியை மட்டுமே படிப்பவர்கள், என் மீதான உங்கள் குற்றச்சாட்டை பார்த்து விட்டு என்னை தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காக, எனது விளக்கத்தை இங்கேயும் பதிவிடுகிறேன். அதை கீழே தருகிறேன். நன்றி.
------------------
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
சென்ற வாரம் கோபால் எழுதிய பதிவுகளை கண்டிக்கவில்லை என்று நானும் திரு.செல்வகுமார் சாரும் கூறியதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது ஒரு உதாரணம் அவ்வளவே. கருணாநிதி பற்றி எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று திரு.செல்வகுமார் கூறியதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் அப்படி சொல்லவில்லை. அதே நேரம், நண்பர் திரு.ஜோ கூறுவது போல திராவிட இயக்கங்களை பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை உங்கள் திரியில் வைத்துக் கொண்டே கருணாநிதி பற்றி மக்கள் திலகம் திரியில் உள்ள விமர்சனங்களை நீங்கள் கேள்வி கேட்பது என்ன நியாயம்? அதை நீங்கள் தடுக்கலாமே?
என் பதிவுகளில் இருந்த சில முரண்களை சுட்டிக் காட்டியபோது.. என்று கூறியிருக்கிறீர்கள். மாற்றிச் சொல்கிறீர்கள் திரு.முரளி. உங்கள் பதிவுகளில் உள்ள முரண்களைத்தான் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
திரு.மணியனையோ, திரு.தாமரை மணாளனையோ நீங்கள் விமர்சிப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், அந்தப் பிரச்னையில் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் ‘மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வதில் புரட்சித் தலைவர் கைதேர்ந்தவர் என்றும், இன்னும் ஒரு சிவாஜி படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டால் அவமானப்பட்டு விடுவோம் என்று நினைத்த எம்.ஜி.ஆர்.......’ என்றும் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் கேட்டிருந்தேன். ‘அவமானப்பட்டு விடுவோம்’ என்று புரட்சித் தலைவர் உங்களிடம் சொல்லியிருக்க வாய்ப்பில்லாதபோது ஏன் தவறான கருத்தை விதைக்கிறீர்கள்? என்றும் கேட்டிருந்தேன்.
அந்தக் கட்டுரையில் சக்தி கிருஷ்ணசாமியும் மணியனும் லொகேஷன் பார்க்க வெளிநாடு புறப்பட்டு சென்றனர் என்றும் கூறியிருந்தீர்கள். அது சக்தி கிருஷ்ணசாமி அல்ல. சித்ரா கிருஷ்ணசாமி என்றும் உங்கள் முரண்பாட்டை நான்தான் சுட்டிக் காட்டினேனே தவிர, நீங்கள் எனது முரண்பாட்டை சுட்டிக் காட்டியதாக கூறுவது சரியல்ல.
மதுரை மாநாட்டில் புரட்சித் தலைவர் பேசியதை பற்றி நீங்கள் குறிப்பிட்டதற்கு, நான் பதில் சொன்னேன். அப்போது கருணாநிதி எந்த அளவுக்கு கடுமையாக பேசுவார் என்று காட்டுவதற்காக குறிப்பிட்டேன். நான் என்ன சொன்னேன் என்பது திரு.வாசு சாருக்கும், திரு.ராகவேந்தர் சாருக்கும் தெரியும். அதனால், விஷயத்தை விளக்க விரும்பவில்லை. அவர்கள் நல்லவர்கள். திரு.சிவாஜி கணேசன் அவர்களை பற்றி பிறர் தவறாக சொன்னால் துடித்துப் போவார்கள். அதனால் அவர்கள் மனம் புண்படக் கூடாதே என்றும் என்னை தவறாக நினைக்கக் கூடாதே என்றும் மன்னிப்பு கோரினேன்.
நீங்கள் புரட்சித் தலைவரை என்ன வேண்டுமானாலும் சொல்வீர்கள். அதற்கு நாங்கள் காரண, காரியங்களோடு பதில் மட்டும் சொல்ல வேண்டும். உங்களை திருப்பி கேள்வியே கேட்கக் கூடாது. இல்லையா?
ரஷ்ய மை பற்றி பெருந்தலைவர் குறிப்பிட்டதை கூறியிருக்கிறீர்கள். அப்போது தெரிந்து கொண்டேதான் மீண்டும் தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறீர்களா? ரஷ்ய மையால் வந்த வாழ்வு என்று சொல்லியிருக்கிறீர்கள். 1971-ம் ஆண்டு அமைந்த ஆட்சியே கள்ள ஓட்டால்தான் அமைந்தது என்று கூறுகிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?
நான் உங்களை பழித்தேன் என்று கூறுவது திசை திருப்பும் முயற்சி. நான் உங்களை என்ன சொல்லி பழித்தேன்? அவமானப்பட்டு விடுவோம் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் .... என்றெல்லாம் தவறாக எழுதாதீர்கள். இனியாவது அப்படி எழுதாதீர்கள் என்று ஆதாரத்தோடு கூறினேன். இது பழித்தலா? உங்களை நான் பழிக்கவே இல்லையே? என்ன பழித்தேன்?
அப்படி நீங்கள் உங்களை நான் பழித்ததாக நினைத்தால் மன்னிக்கவும். எல்லாரையும் மதிப்பவன் நான். புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 3 Thanks, 0 Likes
-
14th April 2015 04:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks