-
19th April 2015, 10:28 AM
#191
Junior Member
Seasoned Hubber

MAKKAL THILAGAM MGR IN KALAI ARASI - 19.4.1963
53RD ANNIVERSARY TO DAY
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th April 2015 10:28 AM
# ADS
Circuit advertisement
-
19th April 2015, 11:21 AM
#192
Junior Member
Platinum Hubber
திரு ஏ .வி .எம் . சரவணன் அவர்கள் எழதிய மனதில் நின்றவர்கள் கட்டுரையில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் பதிவுகள் எல்லாம் சூப்பர் . நன்றி திரு குமார் சார் .
-
19th April 2015, 11:24 AM
#193
Junior Member
Platinum Hubber
என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்) திரைக்கு வந்த 1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த தாய்க்கிராமம் எழுமலையில், எம்.ஜி.ஆர்- பானுமதி நடித்த கலையரசியை இரண்டாம் ஆட்டமாகப் பார்த்துவிட்டு நள்ளிரவுக்குப் பின்னால் வீடு வந்து சேர்ந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும்.
கலையரசி என்னும் சினிமா நினைவில் இருக்கிறது என்றவுடன் அந்தப் படத்தின் கதைப்போக்கும், நிகழ்வுக் கோர்வைகளும், காமிராவில் காட்சித் துண்டுகள் பதிவு செய்யப்பெற்ற நுட்பங்களும், பதிவு செய்வதற்காக படப் பிடிப்புக் குழுவினர் செய்திருக்கக் கூடிய உழைப்பும், அதன் வழியே உருவாக்கப்பட்ட காட்சிகள் அடுக்கப்பட்ட முறையும், திரையில் விரிந்த காட்சியில் நடித்திருந்த நடிகர்களின் வெளிப்பாடும், அதன் வழி உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் நம்பகத் தன்மையும், நம்பகத்தன்மையை உருவாக்கும் நோக்கத்தில் காட்சிகளுக்காக அமைக்கப்பெற்ற பின்னணிக் காட்சிகளும், இவையெல்லாம் உண்டாகும்போது அலுப்புத் தோன்றி விடாமல் இருப்பதற்காகச் சேர்க்கப் பெற்ற இசைக் கோர்வைகளும், அதன் வழி உருவாக்கப்பட்ட வாழ்க்கை பற்றிய கருத்துநிலையும் என ஒரு திரைப்பட உருவாக்கத்தின் தொடர்புச் சங்கிலிகள் எல்லாம் இன்னும் தங்கி இருக்கின்றன என்று நினைத்து விட வேண்டாம். கலையரசி திரைப்படம் சார்ந்து இவற்றில் ஒன்று கூட எனக்கு நினைவில் இல்லை. நினைவில் இல்லை என்று சொல்வதைவிட இவை எவற்றையும் கவனித்து அப்போது படத்தைப் பார்த்தவன் அல்ல என்று தான் சொல்ல வேண்டும். இப்போதும் நினைவில் இருப்பதெல்லாம் கலையரசி என்ற அந்தப் படத்தின் பெயரும் அதில் நடித்த நாயக நடிகர் எம்.ஜி.ஆர். என்பதும் மட்டுமே.
ரசிகன் (fan) என்பவன் ஒரு நடிகனின் பெயருக்காகவும் அந்தப் பெயர் உருவாக்கும் பிம்ப அடுக்குகளுக்காகவுமே தொடர்ந்து ரசிகனாக இருக்கிறான். பெயருக்காக ஒரு நடிகரின் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகன் அந்தப் படத்தின் வசனமோ, பாடலோ, காட்சியோ, இவைகள் இணைந்து உருவாக்கும் பிம்ப அடுக்குகளோ, அவனது வாழ்வின் பகுதியாக, நினைத்துக் கொள்ளத் தக்க ஒன்றாக ஆகும்போது அந்தப் படத்தை பிடித்த படமாகப் பட்டியலிட்டுக் கொண்டு மறக்காமல் வைத்திருக்கிறான். எம்.ஜி. ராமச்சந்திரன் நடித்த சில படங்களை அதற்கு முன்பே நான் பார்த்திருந்தாலும், கலையரசி என்ற அந்தப் படம் தான் என் நினைவில் இருக்கும் படங்களில் ஆகப் பழைய படம். கலையரசி என்ற பெயரைச் சினிமாவாக நான் நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பறக்கும் தட்டுக் காட்சிகள் மட்டுமே. அந்தக் காட்சிகள் என் நினைவை விட்டு அகலாமல் இருக்கக் காரணம் அன்று என்னைப் படம் பார்க்க அழைத்துச் சென்ற எனது பெரியம்மா மகனான அந்த அண்ணனோடு எனக்கிருந்த உறவும், கலையரசி என்ற பெயரோடு பின்னாளில் எனக்குள் நுழைந்த ஒரு பெண்ணின் முகமும் என்பது எனக்குள் இருக்கும் ரகசியம். அந்த ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.
விதிகளின்படி பார்த்தால் அந்தப் படம் பார்க்கப் போகும் போது எனக்கு அரை டிக்கெட் வாங்க வேண்டும். அரை டிக்கெட் இரண்டணா தான். (ஒரு அணா என்பது 6 பைசாக்கள்) முழு டிக்கெட் தொகையான நான்கு அணாவே என்னிடம் இருந்தது. ஆனால், அந்த அண்ணனிடம் டிக்கெட்டுக்கான நாலணா காசு இல்லை. நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு படம் பார்க்கப் போனோம். என்னிடம் இருக்கும் நாலணாவை அவரிடம் தந்து விட வேண்டும். அதற்கீடாக என்னைப் போகும் போதும், வரும் போதும் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு போய்ப் படம் காட்டித் திரும்ப வேண்டும். இதுதான் அந்த ஒப்பந்தம். ஒப்பந்தத்துக்கு ஒத்துக் கொண்டு என்னிடம் இருந்த நான்கு அணாவை அவரிடம் கொடுத்து விட்டு அவரது தோளில் உட்கார்ந்து கொண்டேன். தோள் மாற்றி தோள் மாற்றித் தூக்கிக் கொண்டு போனவர் டிக்கெட் எடுக்கும் இடத்தில் தூங்குவது போல நடிக்கச் சொன்னார். நானும் அவரது தலையில் சாய்ந்து தூங்குவது போலப் பாவனை செய்து படுத்துக் கொண்டேன். ”படம் பார்க்காமல் தூங்கும் சிறுவனுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை” என்று சொல்லி, அரை டிக்கெட்டும் வாங்காமல் உள்ளே அழைத்துப் போய் கலையரசி படத்தை எனது காசில் பார்த்தார். திரும்ப வரும்போதும் அவரது கழுத்தில் என்னை உட்கார வைத்து இரண்டு கால்களையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தார். தரையில் கால் வைக்காமல் நள்ளிரவுக்குப் பின் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் அந்தரத்தில் செய்த பயணத்தின் போது காற்றில் அசைந்த மரங்களின் உருவங்கள் எல்லாம் விலகிச் செல்லும் மேகங்கள் போலத் தோன்றின. கலையரசி படத்தில் பறக்கும் தட்டில் பயணம் செய்யும் பானுமதியைப் பிடிக்கத் தனது கைகளையே இறக்கைகளாகப் பாவித்து அசைத்து அசைத்துச் செல்லும் எம்.ஜி.ஆர் போல அவரது தோளில் அமர்ந்து பயணம் செய்து வீடு வந்து சேர்ந்தேன்.
கலையரசி சினிமாவுக்குத் தோளில் வைத்துத் தூக்கிப் போன அந்த அண்ணனோடு சேர்ந்து ,எங்களூருக்குப் பக்கத்தில் இடம் மாற்றி இடம் மாற்றி அமைக்கப்படும் டூரிங்க் டாக்கீஸ்களில் பார்த்த படங்களைக் கணக்கில் வைத்துக் கொள்ள வில்லை. வாரத்துக்கு ஒரு படமாவது பார்த்து விடுவோம். நாற்பது வயதிற்குள்ளாகவே கேன்சர் நோயில் மரணத்தைச் சந்தித்த அவரிடம் தான் எனது பள்ளிப் பருவக் காதலியான கலையரசியைப் பற்றியும் பேசி இருக்கிறேன். நாடகக் குடும்பத்தைச் சேர்ந்த பாட்டுக்காரியான கலையரசியைப் பின்னாளில் சந்திக்க நேர்ந்ததும், விடலைப் பருவக் காதலில் விழுந்ததும் கூட அந்தப் படம் என் மனதை விட்டு அகலாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதுதான் அந்த ரகசியம். எனது பிடித்தமான படங்களின் பட்டியலுக்குள் கலை அரசி என்ற சினிமா இடம் பிடித்த காரணம் போல , ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து அவர்களுக்குப் பிடித்த விருப்பப் பட்டியலை உருவாக்கிக் கொள்கிறார்கள். திரைப்படம் என்னும் கலை மற்றும் வியாபாரம் சார்ந்த உருவாக்கங்களில் மட்டுமல்லாமல். எல்லா வகைக் கலைப்படைப்புகளையும் –படிக்க நேர்கிற இலக்கியப் படைப்புகளையும் அவரவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றித் தங்களின் மூளைக்குள் பதிவு செய்து வைத்துக் கொள்வதே தொடக்கநிலை ரசனையின் அடிப்படை. அந்தத் தொடக்கநிலை ரசனை சார்ந்த பிடித்தவைகளின் பட்டியலில் இருக்கும் பொதுக் கூறுகளையும் தனித் தன்மைகளையும் அளவுகோல்களாகக் கண்டறிந்து அக்கலைப்படைப்புகளைப் பற்றிப் பேசவும் எழுதவும் முடியும்போது ரசிகன் தேர்ந்த பார்வையாளன் என்னும் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்து விடுகிறான். தேர்ந்த பார்வையாளன் சொல்லும் காரணங்களும் அவற்றின் பின் இருக்கும் உணர்வெழுச்சிகளும் அல்லது தர்க்கங்களும் பலருக்கும் பொதுவானதாக மாறும் போது அல்லது தோன்றும் போது விமரிசன அளவுகோல்கள் உருவாகி விடுகின்றன. தேர்ந்த பார்வையாளன் விமரிசகன் என்னும் அடுத்த கட்டத்தை நோக்கித் தாவி விடும் பாய்ச்சல் நடக்கும் வித்தை அப்படிப் பட்டதுதான். கடந்த இருபது ஆண்டுகளில் நான் எழுதிய திரைப்படக் கட்டுரைகளில் இருக்கும் விமரிசனக் குறிப்புகள் அல்லது மதிப்பீடுகள் அப்படி உருவானவையே தவிரத் தனியாகத் திரைப்படக் கலை சார்ந்த படிப்பைக் கற்றுத் தேர்ந்து உருவாக்கிக் கொண்ட இலக்கணங்களின் அடிப்படையில் உருவாக்கிக் கொண்டவை அல்ல என்பதைச் சொல்ல நான் எப்போதும் தயங்குவதில்லை.
COURTESY- EDHUVARAI - THIRU RAMASAMY
-
19th April 2015, 02:33 PM
#194
Junior Member
Platinum Hubber
-
19th April 2015, 02:35 PM
#195
Junior Member
Platinum Hubber
-
19th April 2015, 02:35 PM
#196
Junior Member
Veteran Hubber
The Trinity of Tamil Screen : MT, NT and GG!
ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
பகுதி 4 :ஒப்பனை சொப்பனங்கள் : தமிழ் திரை மூவேந்தர்களின் பசுமரத்தாணி திரைத் தோற்ற மனப்பதிவுகள்!!
ஒப்பனை இல்லாத ஒரு திரைப்படம் என்பது சாத்தியமற்றதே
வாழக்கையில் நம்மால் சாதிக்க முடியாததை நமது ஆதர்ச கதாநாயகர் திரையில் சாதிப்பது ஒப்பனைகளின் மூலமே
உண்மை வாழ்வில் நம்மால் அநீதி இழைக்கும் யாரையும் சவுக்கால் விளாச முடியாது ......ஆசை இருந்தால் கூட! அதை நம் சார்பாக மக்கள் திலகம் நிறைவேற்றும்போது மனம் நிறைகிறதே! என்னைப் பொறுத்த வரை மக்கள் திலகத்தின் ஒப்பனை துடிப்பும் துள்ளலுமாக வாழ்நாள் முழுவதும் மனதில்
பசுமரத்தாணியாக இறங்கியது அவரது வாழ்நாள் உச்ச சாதனைப் படமான எங்கவீட்டுப் பிள்ளையின் இந்த முத்திரைப் பாடலிலேதான் ! அந்த கால கட்டத்தில் இந்த சவுக்கடி ZORROவாக தன்னை கற்பனை செய்து பாராதவர் எவருமில்லையே! எம்ஜிஆரிடம் சவுக்கடி வாங்க நம்பியாராக மாறவும் துடித்தவர் நிறைந்ததால்தான் இந்த ஒரே பாடல் அவரை ஆட்சி நாயகனாகவும் காட்சி மாற்றம் காண வைத்தது !!
காசு... பணம் ... துட்டு...மணி ....மணி .....நமக்கெல்லாம் என்றும் கற்பனைக் கனவே! பொன்னும் மணியும் வைரமும் கோமேதகமும்...கரன்சியும் காயின்களும்....கனவில் மட்டுமே நமக்கு சாத்தியம்!
மிகவும் ஹேண்ட்சம்மான தோற்றப் பொலிவில் தேவதையாக விஜயலலிதாவுடன் பசுமரத்தாணியாக நச்சென்று உலகின் ஸ்டைல்மன்னன் தானே
என்று நடை பயில்கிறார் நடிகர்திலகம் !! நம் கனவுக்குள் கனவாக அவர் என்றும் ஒளிவீசுவது இக்காட்சியமைப்பிலேதான்!! அவரோடு சேர்ந்து
நம்மையும் செல்வத்தின் வளத்தில் வெல்வெட்டின் விரிப்பில் மிதக்க விடுகிறாரே !!
இயற்கையிலேயே அலை பாயும் அழகிய ஹேர் ஸ்டைலுக்கு சொந்தக்காரர் திரைக் காதல் உருவகத்தின் மொத்த குத்தகைதாரரான காதல் மன்னர்.
என்னைப் பொருத்தவரை சிறந்த ஒளிப்பதிவுக் கோணங்களில் அவர் மிகமிக எடுப்பாக கச்சிதமான உடல்கட்டில் பொருத்தமான உடையலங்காரத்தில் பசுமரத்தாணியாக நெஞ்சில் நுழைந்தது சாந்தி நிலையம் படத்தின் அழியாத இந்த ஓவியக் காட்சியமைபபில்தான்!!
Last edited by sivajisenthil; 19th April 2015 at 03:02 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th April 2015, 02:38 PM
#197
Junior Member
Platinum Hubber
தின இதழ் -தொடர்ச்சி....

Last edited by puratchi nadigar mgr; 19th April 2015 at 02:49 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th April 2015, 05:39 PM
#198
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வேங்கையன் புரட்சிகரமான வசூல் சாதனை.
அடிமைப்பெண் -ஒரு வார வசூல் -ரூ.1,09,000/-
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
மகிழ்ச்சியான தகவல் தெரிவித்த திரு.எஸ்.குமார் அவர்களுக்கும் அதை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கும் வேங்கையனைக் காண ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை அள்ளி வழங்கிய மதுரை வாழ் மக்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
19th April 2015, 05:41 PM
#199
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
திரு வினோத்
உங்களை அதிகம் பார்க்க முடியாதது எனக்கு , திருமண வீட்டில் நாதஸ்வரத்திர்க்கும் , மேளதிர்க்கும் பதிலாக புல்லாங்குழலை வைத்து சமாளிப்பதைப்போல உள்ளது . ஆரோக்கியமான பதிவுகளை போடும் நீங்கள் ஆரோக்கியமாக என்றும் இருக்க இறைவனை ப்ராத்தனை செய்கிறேன் .
அன்புடன்
ரவி
நல்ல உவமை திரு.ரவி சார். ரசித்தேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
19th April 2015, 05:43 PM
#200
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
அன்பு நண்பர்களே,
கணினியின் செயல்பாடு கோளாறு காரணமாக சுமார் இரண்டு மூன்று வாரங்களாக நம் மய்யத்தில் பங்கு கொள்ள இயலவில்லை. தற்பொழுது தான் சரி செய்யப்பட்டது. தங்களுடைய பாகம் 15ஐக் கண்டவுடன் முதலில் பாராட்ட வேண்டும் என எண்ணினேன். அதற்கேற்ப என் முதல் பதிவு தங்களுக்கு பாராட்டாக அமைவதில் மகிழ்ச்சியே.
எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் தங்களுக்குள் உள்ள வேகம், ஈடுபாடு, ஆர்வம் யாவையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவை. குறுகிய காலத்தில் ஒரு உத்வேகத்துடனும் ஒரு வைராக்கியத்துடனும் 10 பாகங்களுக்கும் மேல் நிறைவு செய்து தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
கணினி செயல்பாடு சரியாகி 3வாரங்களுக்கு பிறகு வந்தும் ,முதலில் மக்கள் திலகம் திரியின் 15-ம் பாகத்துக்கு வாழ்த்து சொன்ன தங்கள் உயர் பண்புக்கு நன்றி திரு. ராகவேந்திரா சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks