-
19th April 2015, 09:43 PM
#1171
Junior Member
Senior Hubber
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள் தலைவர் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள் நடித்த பாவமன்னிப்பு திரைப்படம் வரும் 24.04.2015 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக வெளியிடப்படுகிறது. முதன்முதலில் வெளியான மதுரை சென்ட்ரல் திரையரங்கில் சுமார் 50 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் பாவமன்னிப்பு படத்தை ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மதுரை சென்டரல் தியேட்டரில் போட்டோ கார்டு வைக்கப்பட்டது. அப்பொழுது சுமார் 20. 25 வயதுள்ள இளைஞர்கள் இந்த படம் என்று வருகிறது என்றும் அவசியம் பார்ப்போம் என்று சொன்னது மட்டுமன்றி தியேட்டரில் செப்டிக் டேங்க் வேலை பார்க்க வந்தவர்கள் பாவமன்னிப்பு திரைப்படம் பற்றி குறிப்பிட்டு அவசியம் வந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்கள். இத் திரைப்படம் மதுரை சிவாமூவீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் திரையிடும் உரிமை பெற்று முதலாவதாக மதுரையில்
வெளியிடப்படுகிறது.
பாவமன்னிப்பு திரைப்படத்தின் வால்போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு முதன்முதலாக


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
Last edited by SUNDARAJAN; 19th April 2015 at 10:16 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
19th April 2015 09:43 PM
# ADS
Circuit advertisement
-
19th April 2015, 09:44 PM
#1172
Junior Member
Seasoned Hubber
திரு கோபால் - வார்த்தைகளில் வரும் உஷ்ணத்தையும் , பிரிவில் வரும் சோகத்தையும் சமீபத்தில் அனுபவித்தவர்களில் நானும் ஒருவன் - உங்கள் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது - இழந்த இழப்பு என்றுமே ஈடு செய்ய முடியாத ஒன்று .
உங்களுக்கு மன நிம்மதியையும் , சாந்தியையும் தர , நான் நம்பும் இறைவனை ப்ராத்தனை செய்கின்றேன் .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
19th April 2015, 09:55 PM
#1173
Junior Member
Senior Hubber
தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ராகவேந்தர் சார். நடிகர்திலகம்.காம் ஆண்டுவிழாவிற்கு அனைவரும் வாழ்த்து சொல்லி விட்டார்கள். நான் மட்டும் இன்னும் சொல்லவில்லை. காரணம், இன்னும் சில தினங்களில் நமது நடிகர்திலகம்.காம் 100000 பாா்வைகளை நெருங்க இருக்கிறது. அதற்கும் சேர்த்து தாங்கள் வியக்கும் வண்ணம் ஒரு அற்புதமான வீடியோ பதிவு காத்திருக்கிறது என்பதை நமது திரி நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
19th April 2015, 10:14 PM
#1174
Junior Member
Senior Hubber
பாவமன்னிப்பு திரைப்படம் வரும் 24.04.2015 அன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில்

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
Last edited by SUNDARAJAN; 19th April 2015 at 10:18 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
19th April 2015, 10:15 PM
#1175
Junior Member
Senior Hubber
அன்பு இதயங்களே
பாவமன்னிப்பு திரைப்படம் வரும் 24.04.2015 அன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில்

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
Last edited by SUNDARAJAN; 19th April 2015 at 10:18 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
19th April 2015, 10:35 PM
#1176
Junior Member
Senior Hubber

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
19th April 2015, 11:36 PM
#1177
நண்பர் கலைவேந்தன் அவர்களே,
உங்கள் அழைப்பிற்கு நன்றி. நீங்கள் விரும்பிய எண்ணம் நிறைவேற சந்தர்ப்பங்கள் விரைவில் உருவாகட்டும்.
கோபால்,
எவரையும் சிவாஜியை இப்படி அழை அப்படி அழை என்று நிர்பந்திக்காதீர்கள். நண்பர் கேட்டது போல் உங்களால் அதே போல் அவர்களின் அபிமானத்துக்குரியவரை விளிக்க முடியுமா என்று யோசியுங்கள். எப்படி சட்டென்று உங்களால் முடியாதோ அதே போன்று அனைவருக்கும் சில மனத்தடைகள் இருக்கும். ஆகவே அது படிப்படியாக மெல்ல நீங்கட்டும். அதுவரை தொடர்புகள் தொடரட்டும்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th April 2015, 11:44 PM
#1178
3 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக சொன்னால் 16.03.2012 அன்று பாவ மன்னிப்பு திரை காவியம் 51 வருடங்களை நிறைவு செய்தபோது அருமை நண்பர் சுவாமி அவர்கள் பாவ மன்னிப்பு 51 என்ற பெயரில் அற்புதமான பதிவு ஒன்றை செய்திருந்தார்.[அன்றைய தினம்தான் கர்ணன் டிஜிட்டல் வடிவில் மறு வெளியீடு கண்ட நாள்],
இப்போது காலத்தை வென்ற அந்த காவியம் மீண்டும் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியாவதை முன்னிட்டு அந்த பதிவிலிருந்து சில சில பாகங்களாய் பிரித்தெடுத்து மீள் பதிவு செய்யலாம் என்ற எண்ணத்திற்கேற்ப முதல் பாகம் இதோ வாசகர்களுக்காக.
பாவமன்னிப்பு 51
1. கதாநாயகனாக நடிகர் திலகம், கதையின் நாயகனாக நடிகவேள், அருமையான குணச்சித்திரங்களில் காதல் மன்னன், நடிகையர் திலகம், நடிகர் திலகத்தின் நாயகியாக தேவிகா மற்றும் வி.நாகையா,டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு, எம்.வி.ராஜம்மா மற்றும் பலர் நடித்த புத்தா பிக்சர்ஸ் "பாவமன்னிப்பு", ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் நிறைந்த திரைக்காவியம்.
2. இக்காவியத்தின் கதையினை புத்தா பிக்சர்ஸ் குழுவினர் உருவாக்க அதற்கு வசனத்தை எம்.எஸ்.சோலைமலை எழுதினார். அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் ஏ.பீம்சிங். தனது ஸ்டூடியோவை படப்பிடிப்புக்கு அளித்ததோடு, படத்திற்கு ஃபைனான்ஸும் செய்த ஏவிஎம் நிறுவனத்துடன் கூட்டாக இக்காவியத்தை தயாரித்தார்கள் புத்தா பிக்சர்ஸ்.
3. "பாவமன்னிப்பு" கதையின் மூலக்கதாசிரியர் யார் தெரியுமா? நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தான். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! எனினும் அதுதான் உண்மை. 1959-ம் வருடம் ஒரு நாள் பீம்சிங்கிடம் பேசிக் கொண்டிருந்த போது சந்திரபாபு, "அப்துல்லா" என்கின்ற தலைப்பில் தன் மனதில், ஏட்டில் புதைத்து, பதித்து வைத்திருந்த கதையை பீம்சிங்கிடம் கூறினார். ஒருவன் ஹிந்துவாகப் பிறந்து, ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டு, ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது போன்ற கதை அது. ஹீரோ "அப்துல்லா"வாக தான் நடித்து பீம்சிங் அப்படத்தை 'புத்தா பிக்சர்ஸ்' பேனரில் தயாரித்து, இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் சந்திரபாபு. பீம்சிங்கும் ஒப்புக் கொண்டார்.
4. "அப்துல்லா" படம் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கியது. 2000 அடிகள் வரை படம் வளர்ந்திருந்த நிலையில், பீம்சிங் தனது நெருங்கிய நண்பரான ஏவிஎம். சரவணனிடம் எடுத்தவரை திரையிட்டுக் காட்டினார். 2000 அடி படத்தைப் பார்த்து முடித்த சரவணனிடம் பீம்சிங், "எடுத்தவரை எனக்கு திருப்தியில்லை. எவ்வளவு பண்ணியும் சரியா எதுவும் அமையவில்லை. பாபுவுக்கு இந்த ரோல் டூ மச். இந்தப் படத்தை தொடர்ந்து எடுப்பதாக இருந்தால் முதலிலிருந்து ரீஷுட் பண்ணனும். இல்லையேல் படத்தைக் கைவிட வேண்டியது தான்" என்று விரக்தியுடன் கூறினார். அதற்கு சரவணன், "இந்தக் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அப்பச்சி(ஏவிஎம்)யிடம் இது குறித்து பேசுகிறேன். நாம இந்த Projectஐ கூட்டாக சேர்ந்து செய்வோம்" என்றார். அப்பச்சியும் சம்மதம் தெரிவிக்க முதல் மாற்றமாக "அப்துல்லா", "பாவமன்னிப்பு" எனப் பெயர் மாறியது. இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி (Production Executive) பொறுப்பினை ஏற்றார் ஏவிஎம். சரவணன்.
5. புத்தா பிக்சர்ஸ்-ஏவிஎம் கூட்டுத் தயாரிப்பு என்பதால் அடுத்த அதிரடி மாற்றமாக ஹீரோ மாற்றம் நிகழ்ந்தது. சந்திரபாபுவுக்கு இந்த ஹீரோ ரோல் குருவி தலையில் பனங்காய் என்பதால் அவருக்கு பதிலாக நடிகர் திலகம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [அப்பேர்ப்பட்ட பாத்திரங்களிலெல்லாம் நமது திலகத்தை தவிர வேறு யார் நடிக்க முடியும்]. பின்னர் ஏனைய கதாபாத்திரங்களுக்கும் நடிக-நடிகையர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
6. "பாவமன்னிப்பு" திரைப்படத்தினுடைய பூஜை, 20.1.1960 புதனன்று போடப்பட்டு, படப்பிடிப்பும் நல்ல முறையில் தொடங்கியது. படத்திற்கான மொத்த பட்ஜெட் ரூ.11,00,000/- என கணக்கிடப்பட்டு, அந்தத் தொகையை ஏவிஎம் தருவதாகவும், வருகின்ற லாபத்தில் புத்தா பிக்சர்ஸுக்கும், ஏவிஎம்முக்கும் சரிபாதி என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
7. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தில், கதாநாயகன் 'ரஹீம்' என்கின்ற இஸ்லாமிய இளைஞனின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்று முடிவான உடனேயே சிவாஜி அவர்கள், பல முஸ்லீம் பெரியவர்களிடமும், அறிஞர்களிடமும், இளைஞர்களிடமும் இஸ்லாமிய மக்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்து கேட்டு விசாரித்து ஒரு முதல் கட்ட Preparationஐ ஆரம்பித்து விட்டார்.
நன்றி பம்மல் R. சுவாமிநாதன்
(தொடரும்)
அன்புடன்
Last edited by Murali Srinivas; 19th April 2015 at 11:46 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
mappi thanked for this post
-
20th April 2015, 04:27 AM
#1179
Junior Member
Newbie Hubber
முரளி,
நான் எனது கருத்துக்களில் ஒளிவு மறைவு கொண்டவனல்ல. கலைவேந்தன் சொல்வதால் அல்லது நிர்பந்திப்பதால் எதையும் ,எக்காலத்திலும் ,என் மனதுக்கு ஒவ்வவே ஒன்றாத ஒன்றை செய்யவே மாட்டேன். நீங்களும் ,நானும் எப்போதுமே அந்த ரகமே.
நான் கலைவேந்தனை அவ்வாறு கேட்டதற்கு காரணம், அவர் நமது திரிக்கு வந்து ,நமது நண்பர்களுடன் இணக்கமாக விரும்பினார்.ஒற்றுமையை வலியுறுத்தினார். பரஸ்பர மரியாதையை வேண்டினார். அதனால்தான் நான் அந்த நிபந்தனையை வேண்டினேன். அவருக்கு நடிகர்திலகத்தின் நடிப்பு திறனை ஒப்பு கொள்வதில் எந்த தடையும் இல்லை என்று பலமுறை தெரிவித்துள்ளார்.
ஆனால் நீ இதை செய் ,நான் அதை செய்கிறேன் என்று சொல்வது, அவரின் செயலை கோபால் ஒருவரே தீர்மானிக்க முடியும் என்று தன்னுடைய பலவீனத்தை காட்டியுள்ளார். திரு. ரவி,திரு சிவாஜிசெந்தில்,திரு ராகவேந்திரன் போன்றோர் நல்ல முன்னுதாரணமாக நடந்தது அவருக்கு பொருட்டேயல்ல. அவர்களின் பிரிய தெய்வமான நடிகர்திலகத்தை பேர் சொல்லியே அழைப்பார். ஆனால் அவருடைய ரசிகர்களை பூனை குட்டி போல தடவி கொடுத்து ,தன்னுடைய வலையில் விரிப்பார் என்றால் ,அதனை ஏற்கும் நம் திரி நண்பர்களை பார்த்து ,வாழ்த்து தெரிவிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? அவருடைய மதுர கானம்,அல்லது நமது திரிகளில் ஒப்புக்காவது ,நடிகர்திலகத்தின் படங்களை அல்லது நடிப்பை குறிக்கும் பதிவுகள் உண்டா? ஆனால் நமது ரசிகர்களை குறி வைத்து இந்திரன்,சந்திரன் என்று புகழும் பதிவுகள் உண்டு. இப்போது என்னிடம் நிபந்தனை..... வேடிக்கை.
இவர் எனது கணிப்பின் படி பத்திரிகையாளராக இருக்க வேண்டும்.(பதிவுகளில் ஒரு சாமர்த்தியம் தெரிகிறது).அப்படி இருக்கும் பட்சத்தில் இப்படி ஒருதலையாக வெறி எண்ணம் கொண்டவர்கள் ,அந்த தொழிலுக்கு நேர்மையாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழவே செய்கிறது.(நான் பத்திரிகையில் நுழையாததற்கு காரணம் என் இறுகிய உறுதியான முன் முடிவு எண்ணங்கள்)
திரு .ரவி,
தங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி. நீங்கள் நடிகர்திலகம் திரியில் தொடர்ந்து பங்களியுங்கள். தங்கள் பதிவுகள் நிறைய பேரால் ரசிக்க படுகின்றன. எதிர்ப்புக்கு சுணங்காதீர்கள்.நீங்கள் ஒரு நல்ல நிர்வாகியாயிற்றே ?உங்களுக்கு தெரியாததா?புரியாததா? உங்கள் இதயத்திற்கு இதமான,நெருக்கமான இந்த திரியிலேயே தொடர்ந்து பங்களிக்கவும்.
அன்பு இதயங்களே,
என் சொந்த சோகத்தை பகிர்ந்த போது ,இத்தனை பேர் உடன் நின்றது எனக்கு மிக ஆறுதல். நான் சொந்தம் என்று மட்டும் துயர் அடையவில்லை. இறந்த குடும்பம் ,உண்மையிலேயே உன்னதமான நல்லவர்கள். வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள்.நான் மூன்று நான்கு நாட்களாக நடிகர்திலகம் படங்கள், எனக்கு பிடித்த மலையாள படங்கள் இவற்றிலே உழன்று ஆறுதல் தேடுகிறேன். (சமீபத்தில் எலிபத்தாயம்,எஸ்தப்பன்,முகாமுகம்,.ஜே .சி.டேனியல்) ஜெ.சி.டேனியல் நிஜமாகவே என் துக்கத்தை அதிகரித்து விட்டது. மேதைகளை புறம் தள்ளுவதில் இந்தியர்கள் ஒருங்கிணைந்தே செயலாற்றுகிறோம்.
-
20th April 2015, 07:35 AM
#1180
Junior Member
Newbie Hubber
எஸ்வி,
ஒரு நகைச்சுவைக்கு சொல்வதானால் , அனைத்து கிருஸ்துவர்களும் சாத்தானை நினைத்தே வாழ்பவர்கள். ஏனென்றால் தெய்வம் அளவு சாத்தானும் பைபிளில் பேச படுகிறது.
Bookmarks