-
20th April 2015, 07:52 AM
#11
Junior Member
Newbie Hubber
நான் விரும்பியது சினிமா, பத்திரிகை.
சினிமாவில் நான் நுழையாததற்கு காரணம் அந்த நாட்களில் சூழ்நிலை இன்று போல இல்லை. satellite சேனல்கள் தோன்றாத காலம். டாகுமெண்டரி கிலோ என்ன விலை என்ற காலம். ருத்ரையா போன்றோரின் சுணக்கம் ஒரு காரணம். என் கனவுகளை ,அன்றைய தமிழ் சினிமா தாங்கியிருக்க முடியாது.
பத்திரிகையாளனாக ஆவதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள். ஆனால் , நான் இறுதியான ,உறுதியான, எண்ணங்கள் கொண்டவன் .யாருக்கும் எதற்கும் வளையாதவன். (பெற்றோர்கள்,முதலாளிகள் உட்பட).முக்கியமாக நேர்மையாளன்.
நான் ஒரு நடுநிலை பத்திரிகையாளனானால் , என்னால் எல்லா தரப்பு அரசியல் மற்றும் சினிமா வாசகர்களுக்கு ,பிரதிநிதியாக இயங்க முடியாது என்பதால் அதை தவிர்த்தவன். ஒரு பிரத்யேக அரசியல் சார்பு கொண்ட பத்திரிகையில், அல்லது ஒரு குறிப்பிட்ட நடிகர் சார்பான பத்திரிகையில் இயங்குவது போல , நடுநிலை பத்திரிகைகளில் செயல் படுவது ,மக்களுக்கு செய்யும் துரோகம்.அதை செய்ய விரும்பாததால், திறமை இருந்தும் ,ஆர்வம் இருந்தும் தவிர்த்தேன்.
கலை- நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருக்கும் பட்சத்தில், ஒரு நடுநிலை பத்திரிகையில் இயங்கும் பட்சத்தில், உங்களை உங்கள் விருப்பங்களை மட்டுமல்ல , என்னை, முரளியை,ரவியை,ராகவேந்தரை,எங்கள் விருப்பங்களை சேர்ந்தே சுமக்கிறீர்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன் இயங்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
-
20th April 2015 07:52 AM
# ADS
Circuit advertisement
Bookmarks