Page 27 of 402 FirstFirst ... 1725262728293777127 ... LastLast
Results 261 to 270 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #261
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    മനസിലായെ! In English understood.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #262
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வினோத் சார்
    எனக்கு நினைவு தெரிந்தவரை காஞ்சிபுரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் 1967 முதல் 1977 வரை தீவிரமாக இருந்துள்ளேன் .அதே போல் என்னுடைய நண்பர்கள் சிலர் சிவாஜி மன்றத்தில் ரசிகராக இருந்தார்கள்.மறந்து கூட எம்ஜிஆர் பெயரை சொல்ல மாட்டார்கள் அதே போல் நாங்கள் கூட சிவாஜி பேரை சொல்ல மாட்டோம் .இரு சாராரும் அடை மொழியில் பெயரை கூறுவோம். காவல்காரன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 11 ஆண்டுகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் வெளியான நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் திருவிழாவாகவே காட்சி தந்தது . சிவாஜி ரசிகர்கள் நம் படத்தை பல் வேறு கோணங்களில் விமர்சனம் செய்தார்கள். பதிலுக்கு நாமும் அவர்கள் படம் வந்த நேரத்தில் விமர்சனம் செய்தோம் . சில சமயங்கள் நாகரீகம் எல்லை மீறி போனதுண்டு .



    காலங்கள் மாறியது

    மக்கள் திலகமும் முதல்வரானார் .எல்லா துறையிலும் புகழுடன் வாழ்ந்து பல சரித்திர சாதனைகள்
    புரிந்து தெய்வமாகி விட்டார் .மக்கள் திலகமும் சிவாஜியின் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .இருவரும் மேடையில் அண்ணன் - தம்பி என்று பாச மழையில் நனைந்தார்கள் .மக்கள் திலகம் உடல் நலன் குன்றிய போது சர்வ மத பிராத்தனையில் திரு சிவாஜி கலந்து கொண்டு பிராத்தனை செய்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த மக்கள் திலகத்தை சந்தித்தார். இதுதான் அன்பு . இருவரும் பரஸ்பர உறவில் தங்களை அடையாளம் காட்டிய போது ஒரு சில ரசிகர்கள் இரண்டு பக்கமும் இன்னும் அந்த கால கட்டத்தில் நிறப்து வியப்பாக உள்ளது .

    நகைச்ச்சுவை என்ற பெயரால் நாமும் பல உதாரணங்களை கூறலாம்.கிண்டல்செய்யலாம்.நமக்கு அது தேவை இல்லை .திரு கோபால் அவர்கள் திரியில் அவருடைய அபிமான திரு சிவாஜி படங்களை
    தோற்றத்தை ,கருப்பு தினம் ,குப்பை படங்கள் , என்று கூறியதை போல் நம் ரசிகர்கள் ஒரு நாளும் கூற மாட்டார்கள் .எம்ஜிஆர் என்ற அந்த மூன்றெழுத்து கோபாலுக்கு மட்டும் சிம்ம சொப்பனமாக இருப்பது வியப்பில்லை.அவர் 50 ஆண்டுகள் பின் நோக்கியே வாழ்கிறார் .அப்படியே இருந்து போகட்டும்.


  4. #263
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    வினோத் சார்
    எனக்கு நினைவு தெரிந்தவரை காஞ்சிபுரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் 1967 முதல் 1977 வரை தீவிரமாக இருந்துள்ளேன் .அதே போல் என்னுடைய நண்பர்கள் சிலர் சிவாஜி மன்றத்தில் ரசிகராக இருந்தார்கள்.மறந்து கூட எம்ஜிஆர் பெயரை சொல்ல மாட்டார்கள் அதே போல் நாங்கள் கூட சிவாஜி பேரை சொல்ல மாட்டோம் .இரு சாராரும் அடை மொழியில் பெயரை கூறுவோம். காவல்காரன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 11 ஆண்டுகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் வெளியான நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் திருவிழாவாகவே காட்சி தந்தது . சிவாஜி ரசிகர்கள் நம் படத்தை பல் வேறு கோணங்களில் விமர்சனம் செய்தார்கள். பதிலுக்கு நாமும் அவர்கள் படம் வந்த நேரத்தில் விமர்சனம் செய்தோம் . சில சமயங்கள் நாகரீகம் எல்லை மீறி போனதுண்டு .



    காலங்கள் மாறியது

    மக்கள் திலகமும் முதல்வரானார் .எல்லா துறையிலும் புகழுடன் வாழ்ந்து பல சரித்திர சாதனைகள்
    புரிந்து தெய்வமாகி விட்டார் .மக்கள் திலகமும் சிவாஜியின் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .இருவரும் மேடையில் அண்ணன் - தம்பி என்று பாச மழையில் நனைந்தார்கள் .மக்கள் திலகம் உடல் நலன் குன்றிய போது சர்வ மத பிராத்தனையில் திரு சிவாஜி கலந்து கொண்டு பிராத்தனை செய்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த மக்கள் திலகத்தை சந்தித்தார். இதுதான் அன்பு . இருவரும் பரஸ்பர உறவில் தங்களை அடையாளம் காட்டிய போது ஒரு சில ரசிகர்கள் இரண்டு பக்கமும் இன்னும் அந்த கால கட்டத்தில் நிறப்து வியப்பாக உள்ளது .

    நகைச்ச்சுவை என்ற பெயரால் நாமும் பல உதாரணங்களை கூறலாம்.கிண்டல்செய்யலாம்.நமக்கு அது தேவை இல்லை .திரு கோபால் அவர்கள் திரியில் அவருடைய அபிமான திரு சிவாஜி படங்களை
    தோற்றத்தை ,கருப்பு தினம் ,குப்பை படங்கள் , என்று கூறியதை போல் நம் ரசிகர்கள் ஒரு நாளும் கூற மாட்டார்கள் .எம்ஜிஆர் என்ற அந்த மூன்றெழுத்து கோபாலுக்கு மட்டும் சிம்ம சொப்பனமாக இருப்பது வியப்பில்லை.அவர் 50 ஆண்டுகள் பின் நோக்கியே வாழ்கிறார் .அப்படியே இருந்து போகட்டும்.

    You are very correct my Dear Brother C.S. Kumar.

    To my knowledge, in my School Days, few colleagues
    identified themselves as Sivaji Fans, purposely criticize our beloved God M.G.R. starred movies, in order to find faults, which warranted unnecessary, despite the great success of our MT Films and acceptance by the Tamil Cine Fans. We, the majority MGR fans, offend them in several ways and made them to keep quiet.

    After quitting out by our Great M.G.R. from the Tamil Cine Field, in the year 1977, to assume office as CM of Tamil Nadu, some of these few colleagues (Sivaji Fans) turned out to be the sympathizers of our beloved God M.G.R., in Politics and started seeing Thalaivar Films many times and appreciated his natural acting.

    I can quote even name of these colleagues.

    We cannot correct persons, born with inborn qualities of Refusal to think, Broad-mindedness, and not accepting the Golden Words Phrase / Idiom / Slogan, quite often, quoted by our beloved Great Peraringar Anna "மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்"

    Last edited by makkal thilagam mgr; 20th April 2015 at 10:37 AM.

  5. #264
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    சட்டமன்ற நிகழ்வு - 1982

    பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் 1982ம் வருடம் ஜூலை மாதம், உலகமே போற்று வியந்த "சத்துணவு" திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த சத்துணவு திட்டமானது, பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த "மதிய உணவு" திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நம் புரட்சித்தலைவர் நடைமுறைப்படுத்திய "சத்துணவு" திட்டத்தின் படி, தமிழகமெங்குமுள்ள ஏழை குழந்தைகள், ஆண்டு முழுவதும் பயன் பெறுவர். இதற்காக, அப்போது தமிழக வரவு - செலவு திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    இது குறித்த மான்ய கோரிக்கை விவாதம் நடந்த போழ்து, அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. குமரி அனந்தன் அவர்கள், (1980 சட்டமன்ற தேர்தலில், இவர் தோற்றுவித்த காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு, நம் புரட்சித்தலைவரின் ஆதரவுடன் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆனவர்) எழுந்து, இந்த சத்துணவு திட்டம் தேவையற்றது, இதற்கு ஒதுக்கப்படும் 200 கோடி ரூபாயில் ஒரு தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். உடனே, நம் பொன்மனம் கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள், தனக்கே உரிய பெருந்தன்மையுடன், எழுந்து, "குமரி அனந்தன் அவர்களே ! தாங்கள் சொன்னபடி தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேர்களுக்கு வேலை கிடைக்கும் ? என்று வினவினார்.

    "எப்படியும் ஆயிரம் பேருக்காவது வேலை கிடைக்கும்" என்று பதிலுரைத்தார் திரு. குமரி அனந்தன்.

    மீண்டும், நம் இதய தெய்வம், புன்னகை வேந்தன் புரட்சித்தலைவர் அவர்கள், சிரித்துக்கொண்டே, "தமிழ் நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள் ஆகியவற்றில் ஒரு மையத்துக்கு ஒரு சத்துணவு அமைப்பாளர், அவர்களுக்கு உதவியாக 2 சமையல் செய்யும் ஆயாக்கள், என மொத்தம் 60,000 பேர், அதுவும் பெண்கள், வேலை பார்க்கிறார்கள் தெரியுமா" என்று புள்ளி விவரத்துடன் புட்டு புட்டு வைத்ததை கூறியதும், அமைதியாய் அமர்ந்து விட்டார் அனந்தன் அவர்கள்.

    அன்று சட்டமன்றத்தில், சத்துணவு திட்டத்தை திரு. குமரி அனந்தன் போலவே கலைஞர் கருணாநிதி அவர்களும் குறை கூறினார். ஆனால், திரு. கலைஞர் கருணாநிதி அவர்களே பின்னாளில் முதல்வராக (அதுவும் புரட்சித்தலைவர் மறைந்த பிறகுதான்) பொறுப்பேற்ற பிறகு, கூடுதலாக ஒரு முட்டையுடன் இந்த சத்துணவு திட்டத்தை தொடர்ந்தார்.

    இதை இப்போது குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் -

    தற்போது நடைமுறையில் இருக்கும் பல மக்கள் நல திட்டங்கள், தீர்க்க தரிசனத்துடன், நம் தமிழ் நாடாண்ட மன்னவனாம், மக்கள் நலத்தையே குறிக்கோளாக கொண்டு, ஓய்வே கொள்ளாத ஒப்பற்ற தெய்வமாய், மக்கள் என்றும் போற்றும் மக்களின் முதல்வரான நம் பொன்மனச்செம்மல் அவர்களால் தொடங்கப்பட்டு, அவருக்குப்பின் வந்தவர்களால் கைவிடப்படாத அளவுக்கு, வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

    Last edited by makkal thilagam mgr; 20th April 2015 at 10:38 AM.

  6. Likes ainefal liked this post
  7. #265
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக சென்ற வெள்ளிகிழமை முதல் ஏவிஎம் வசம் உள்ள "அன்பேவா" திரையிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன் !

    ரசிகர்கள் சார்பில் ரசிகர்மன்ற வினைல் பேனேர் மற்றும் கட்சி வண்ணத்தில் காகித மாலை அணிவிக்கபட்டுளது !

  8. #266
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravikiransurya View Post
    திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக சென்ற வெள்ளிகிழமை முதல் ஏவிஎம் வசம் உள்ள "அன்பேவா" திரையிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன் !

    ரசிகர்கள் சார்பில் ரசிகர்மன்ற வினைல் பேனேர் மற்றும் கட்சி வண்ணத்தில் காகித மாலை அணிவிக்கபட்டுளது !
    Thank you my dear brother Ravi Kiran Surya - for the Information. If you have any related photograph you can post in our M.T.Thread.

  9. #267
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  10. Thanks eehaiupehazij thanked for this post
  11. #268
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    https://www.youtube.com/watch?t=188&v=kbHbRtEzYkk

    Thanks AB Sir, for referring to both the Thilagams.
    Last edited by saileshbasu; 20th April 2015 at 02:29 PM.

  12. #269
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R

    கடந்த நூற்றாண்டின் அதிசயம். எழுபதாண்டு கால வாழ்க்கை.வெறும் இருபத்தைந்தாயிரத்து ஐநூறு நாட்கள் வாழ்ந்த, குறைந்த மனித வாழ்நாளின் அதிக பட்ச, உச்ச சாதனைகளை புன்னைகை மாறாமல் நிகழ்த்தி, புன்னகை மாறாமல் மறைந்து விட்ட அதிசயம்.
    கை வைத்த இடத்தையெல்லாம் பொன்னாகவும், கால் வைத்த இடத்தையெல்லாம் இமயமாகவும் மாற்றிக் காட்டிய ஆச்சர்யம்.
    சிறுவயதில் வாசித்த படக் கதைகளில் வரும் சாகாசக் கார கதாநாயகர்களின் பிம்பம் கலையாமல் தமிழ் மக்கள் மனத்தை வசியம் செய்த பேராளுமை…
    வாழ்நாள் முழுதும் அள்ளிக் கொடுப்பதையே முழுநேரமாய் செய்திருந்தால் கூட இத்தனை கதைகள் இவரைப் பற்றி சாத்தியமா என்பது விடையற்றதொரு வினா…
    சரித்திர கால தமிழ் இளவரசனாக திரையில் தோன்றி நாம் கண்களுக்குள் நிறைந்த வீரம்…
    சமகால மன்னனாக தமிழ் மனங்களை நிறைத்த கம்பீரம்…
    சேரனுக்கு உறவெனினும், செந்தமிழர் நிலவு என என்றென்றும் தமிழ் வானில் உலவும் பவுர்ணமி…

    1980 களின் தொடக்கம். கடலூர் கமலம் திரை அரங்கம். ஒரு மாலை வேளை. பஞ்சாமிர்தம் குச்சி ஐஸ் விரல் இடுக்குகளில் பிசு பிசுத்து, முழங்கை வரை வடிகிற பதினோரு வயது சிறுவனாக பெருங்கூட்டத்தில் இருந்து ஒதுங்கி நிற்கிறேன்.அப்பா எப்படியும் படம் பார்க்க டிக்கட் வாங்கி விடுவாரா?? மனம் பதைக் கிறது… வரும் போது அப்பா எதிர் காற்றில் சைக்கிள் மிதித்தவாறே ” படம் வந்து பதினெட்டு வருசமாகுது… நாலாவது தடவையா இங்க போட்டிருக்காங்க…” அப்பா.. வாத்தியாரின் மிகப் பெரிய ரசிகர்.தலைக்கு மேல் பதாகையில் நெற்றியில் புரளும் சுருள் முடி துலங்க மக்கள் திலகம் புன்னகை செய்கிறார். மாலை நேரக் கடற்காற்றில் பதாகை மெல்ல அலையென அசைய புரட்சித் தலைவரின் புன்னகை தீர்க்கமாக மனத்தில் வந்தமர்கிறது.
    “சசி… வா போகலாம்” அப்பா முகத்தில் ஏமாற்றம்.

    “அப்பா…டிக்கட்…????”
    “…ம்ம்… நாளைக்கு வரலாம் டிக்கட் கெடைக்கல..”

    தொண்டை அடைக்க…”அப்பா…ட்ரை பண்ணிப் பாருங்கப்பா…” பதாகையில் நாகேஷின் முகம் அஷ்ட கோணல் காட்டி அலைக் கழிக்க அப்பா…”வாடா படம் பாக்க போகலாம்…” சட்டைப் பையிலிருந்து கைகளில் டிக்கெட் எடுத்து சிரிக்கிறார்.”தியேட்டர் மேனேஜர் தெரிஞ்சவர் தான்…டிக்கட் வாங்கிட்டேன்”
    சந்தோஷம் பொங்க அண்ணாந்து பார்க்கிறேன்…

    “ஆயிரத்தில் ஒருவன்”

    பதாகையில் மக்கள் திலகம் கண்சிமிட்டி சிரிக்கிறார்… எனக்கு மட்டும் பிரத்தியேகமாக… அப்பா கையைபிடித்து அவசரப் படுத்துவதையும் தாண்டி நின்று பார்க்கிறேன்… அண்ணாந்து பார்க்கிறேன்…

    பார்க்கிறேன்… அன்று தொடங்கி கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அலுக்காமல், ஆச்சர்யம் கலையாமல், ஆர்வம் குலையாமல் குழந்தையாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன். வாழ்வின் கால வெளியில் எத்தனையோ பழையன கழிந்தும், புதியன புகுந்தும், நினைவுகள் உதிர்ந்தும், உறவுகள் மலர்ந்தும் இருந்தாலும், mgr என்ற தனி மனிதனின் நினைவுகளும்,அவர் பற்றிய வியப்பும், அவர் அளித்த நம்பிக்கைகளும் என்னைத் தொடந்து கொண்டிருப்பது அவர் மீது கொண்ட ஈர்ப்பைத் தாண்டிய நேசம்.

    வாசித்த இலக்கியமும், புதினங்களும், பின் நவீனத்துவமும், மாய யதார்த்த புனைவுகளும், புதுமைப் பித்தன், லா.ஸா.ரா, தி.ஜா, கு.பா.ரா, நா.பிச்சமூர்த்தி, அசோகமித்திரன்….இரா.முருகன்… இன்னபிற இலக்கிய ஆளுமைகளின் தாக்கமும், mgr ஐ என்னிலிருந்து விலக்கவேயில்லை. எழுத்தாளர் கலாப்ரியா ஒருமுறை சுபமங்களா நேர்காணலில் தன்னை நெல்லை mgr ரசிகர் மன்றத்தில் செயல்பட்ட ஒரு அடிப்படை ரசிகனாகவே முன்னிறுத்தியிருந்ததைப் போல, mgr என்ற ஒற்றை மந்திரச் சொல் மட்டும் என்னை என்றும் குழந்தையாகவே உணரச் செய்கிறது. கடந்த பதினைந்து வருட காலத்தில் உலக சினிமா மெல்ல அறிமுகமாகி, எனக்கு திரைப்படத்தின் வெவ்வேறு ரசனைச் சாளரங்களைத் திறந்து விட்டபோதிலும்,

    “நேத்துப் பூத்தாளே ரோஜாமொட்டு… பறிக்கக்கூடாதோ லேசாத் தொட்டு…”

    என அறுபது வயது mgr, பஞ்சகஜம், சிலுக்கு ஜிப்பாவில் லதாவைச் சுற்றி உரிமைக்குரல் கொடுப்பது தொலைக்காட்சியில் ஒலிப்பதை நின்று ரசித்து, மகிழாமல் இன்றுவரை என்னால், தாண்டிப் போக முடிந்ததே இல்லை.

    “தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாகக் கொடுத்தே பழக்கப் பட்டவன் இந்த மணிமாறன்”
    –என்ற குரல் கேட்கும் போதெல்லாம் போகிற போக்கில், லட்சம் நம்பிக்கைகளை மனத்தில் விதைத்துச் செல்கிறது.

    “புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ?
    மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ?”

    –என்ற அறைகூவல் ஒலிக்கும் போதும், தூண்களுக்கு இடையில் தாவி அவர் எதிரிகளை தாக்கும் போதும் மனசு குழந்தையென இன்று வரை குதூகலித்து மகிழ்கிறது.

    வருடங்களைத் தாண்டி என்றும் தொடர்கிற இந்த நம்பிக்கை, இந்த மகிழ்ச்சி, இந்த குதூகலம்… இது என்ன வகை ஈர்ப்பு? என்ன வகை ரசனை? என்ன வகை உளவியல்? என்னைப் போன்ற கோடிக் கணக்கான தமிழ் மனங்களை வென்றெடுத்து சிறைப் படுத்தி வைத்திருப்பது எது?


    courtesy- vallamai
    thiru sasikumar

  13. #270
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மனிதராக நிலைத்த, பேச்சாற்றலும், சொலல் வல்லனுமாகிய கலைஞரை சோர்வுறச் செய்து எளிதாய் இகல் வெல்ல வைத்த — இவரின் ஆற்றல் எது?

    நாடகத் தன்மைக் குறைந்த இயல்பான நடிப்பா?

    பட்டுக்கோட்டை, கண்ணதாசன் மற்றும் வாலியின் வரிகளும், tms -ன் குரலும், அதற்கேற்ற இவரின் அசைவுகளும் காட்சியமைப்புமா?

    திட்டமிட்டு, அளந்து அடியெடுத்து வைத்து, அரசியலில் முன்னேறிய நேர்த்தியா?
    தான் ஈடுபட்ட திரைத்துறையில் சகலமும் கற்றுத் தெளிந்த ஈடுபாடா?
    தான் செயல்பட்ட எல்லாத் தளங்களிலும் கொண்டிருந்த கண்டிப்பான ஆளுமையா?
    எல்லா இடங்களிலும் வெற்றி பெற விழைந்து செயல்படுத்திய மதிநுட்ப ராஜ வியூகமா?
    தனது குறைகளை மறைத்து, நிறைகளை மட்டுமே வெளிப் படுத்திய லாவகமான தலைமைக்குண தந்திரமா?
    இவை அனைத்தும் தான் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாது.
    இவற்றைத் தாண்டிய ஒரு தகுதி…
    இவற்றுக்கும் மேலான ஒரு உணர்வுபூர்வமான, உளப்பூர்வமான தகுதி…
    எது?
    அன்பு…
    தன்னிலை மறந்த பேரன்பு…
    …சக மனிதரிடம் அவர் கொண்டிருந்த எல்லையில்லா பேரன்பு…

    நான்கைந்து வருடங்களுக்கு முன்… mgr -ன் பிறந்த தினம். ஒரு தொலைக்காட்சியில் அவரின் பழைய படப் பதிவுகளின் செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது… ஏதோ அவசர வேலையில் வெளியே கிளம்பிக்கொண்டு இருந்தவன், இந்தப் காட்சிகளைக் கண்டு நின்றுவிடுகிறேன்… தொப்பியும், கருப்புக் கண்ணாடியுமாக, தமிழக முதல்வராக… மேடையில் நின்று ஆதரவற்ற எளிய பெண்களுக்கு புடவையும், அரிசியும்,உதவித் தொகையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்… மக்கள் கூட்டம் பேரன்பில் கூச்சலிடுகிறது… ஒவ்வொருவராக வரிசையில் நின்று மெல்ல அருகில் வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி, புன்னகைத்து அன்பாகக் கொடுத்தனுப்புகிறார். அப்போது, அப்போது, மேடையின் கீழே, இழுத்துப் போர்த்திய கிழிசல் புடவையோடு ஏறத்தாழ ஒரு ஐம்பது வயதுப் பெண்மணி வரிசைக்குள் வர காவலர் அந்தப்பெண்மணியை விலக்குகிறார். அதை கவனித்த mgr, அந்தப் பெண்மணியை தன்னிடம் வரவிடுமாறு சைகையில் சொல்ல, அந்த பெண்மணி வற்றி வதங்கிய உடலோடும், கிழிசல் மறைத்த உடையோடும், தயங்கித் துவண்ட நடையோடும், மெல்ல…மெல்ல..நெருங்கி mgr அருகே வருகிறார். கைகூப்பி வணங்குகிறார். வணக்கம் சொல்லிய முதல்வர் ஏதோ கேட்டவாறே,புடவை,அரிசி,உதவித்தொகை இருக்கும் பையை கொடுக்க, அந்தப் பெண்மணி அதீத சங்கோஜம் கொண்டு, அவரிடமிருந்து விலகி தனது கிழிந்த புடவைத் தலைப்பை விரித்து அதில் வாங்கிக் கொள்ள முனைகிறார். Mgr அருகே வரச் சொல்லி சைகை காட்டியும், அந்தப் பெண்மணியின் பஞ்சடைந்த கண்கள் மெல்லத் தாழ்கின்றன… கூச்சத்திலும், தாழ்வு மனப்பான்மையும் mgr -ன் முகத்தை நேரிட்டுக் காண மருகித் தயங்குகின்றன… அருகே இருந்த உதவியாளரிடம் கையிலிருப்பதைக் கொடுத்து விட்டு, பொன்மனச்செம்மலின் கரங்கள் அந்த பெண்மணியின் இரு கரங்களையும் பற்றுகின்றன… மெல்ல அந்த கரங்களை பற்றி, தனது இரு கன்னங்களிலும் வைத்துக் கொள்கிறார். சில நொடிகள் கடக்கின்றன… சிறுவயதில் தான் கண்ட தனது தாயின் ஏழ்மையை இவர் நினத்தாரோ? அல்லது, திரையரங்கில் மட்டுமே பார்த்து வியந்த, கனவு நாயகனின் கைகள் தனது கைகளைப் பற்றிய நெகிழ்வை அந்தப் பெண்மணி உணர்ந்தாரோ? இருவருமே கலங்கி நிற்கின்றனர்… கண்ணாடியை உயர்த்தி கண்ணீரைத் துடைத்து, அந்தப் பெண்மணியின் விழிநீரை கைக்குட்டையால் துடைத்து உதவிப் பொருட்களை அதிகமாகவே வழங்கி, வணங்கி வழியனுப்புகிற mgr…

    உடல் முழுக்க சிலிர்க்கிறது… அந்தப் பெண்மணி மனம் எத்தனை நெகிழ்ந்திருக்கும்? எத்தனை இயல்பாக அந்தப் பெண்ணின் தாழ்வு மனத்தை தகர்த்தெறிந்தார்?
    என்ன விதமான அன்பு? எத்தனை அழகான வெளிப்பாடு?
    மரபு தாண்டிய பேரன்பு… தமிழ் மண்ணின் பெரும்பான்மையான ஏழை, எளியோர் தமது சொந்தமாகவே எண்ணி அனைத்துக் கொண்ட நேசம்…
    தமிழ் மண்ணையும், தமிழரையும் தமது வாழ்வெல்லாம் மனத்தில் சுமந்த ஈரம்…. ஈழம் மலர உதவிக் கரம் நீட்டிய மாண்பில் தழைத்திருந்த மனித நேயம்…

    மனித நேயமும், அன்பும் தான் அவர் வாழ்ந்த நாட்களின் கடைசி நாள் வரை தமிழ் மக்களின் மன்னாதி மன்னனாக வலம் வரச் செய்தது. மறைந்தாலும் மக்கள் மனங்களில்… பேரரசனாக இன்றும் தொடர காரணம் மனிதர்களிடத்தில் அவர் கொண்ட பேரன்பைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்?

    “பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
    வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்”

    –என்ற பாடல் வரிகள் ஒலிக்க படத் தொகுப்பு நிறைவுற்று நெடுநேரமாகியும்… எழுந்து சென்று பணிகளைத் தொடர இயலாமல் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
    மனசுக்குள் நினைவுகள் கலவைகளாக புரண்டன…



    courtesy- vallamai
    thiru sasikumar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •