Page 33 of 402 FirstFirst ... 2331323334354383133 ... LastLast
Results 321 to 330 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #321
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #322
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #323
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணன் என் காதலன்


    இந்த பதிவை NT திரிக்கு வந்து பதிவிடும் அருமை நண்பர்களுக்கும் , வர எண்ணியுள்ள தோழர்களக்கும் , வந்தால் வருவேன் என்று இன்னும் முடிவு எடுக்காத சகோதர்களுக்கும் , எது எப்படி இருந்தாலும் கண்டிப்பாக வருவேன் என்று தீர்மானம் எடுத்துள்ள நல்ல இதயங்களுக்கும் காணிக்கையாக்குகின்றேன் .........

    அன்று மழைத்துளிகள் நிறைந்த மாலைப்பொழுது - கரும் மேகங்கள் சூழ்ந்த வானம் வெகுவாக அழ தன்னை தயார் படுத்திகொண்டிருந்தது - ஒருபுறம் காற்று தன் நண்பர்களாகிய புழுதிகளுடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தது - வானத்தில் தோன்றிய மின்னல்கள் தொடர்ந்து பூமியை புகைப்படம் (தனது whatsapp இல் போட) எடுத்துக்கொண்டே இருந்தது . விண்ணுலகில் யாருக்கோ திருமணம் போல - மேள தாளங்களை விட அதிகமான சத்தத்தில் இடி முழங்கிக்கொண்டே இருந்தது . நெஞ்சில் நிறைந்த அந்த மாலை பொழுதை , மனதில் ஆழமாக நிறைந்துள்ள நல்ல சில படங்களை பார்ப்பதன் மூலம் அருமையாக செலவழிக்கலாமே என்று நினைத்தேன் - அப்படி நினைத்ததின் பலன் உடனே கையில் கிடைத்தது - எங்கிருந்தோ ஒரு பியானோ இசை , புல்லாங்குழலுக்கும் இல்லாத அந்த இனிமை காற்றில் மிதந்து வந்தது - இசைப்பது யார் - கண்ணனா ? ஆமாம் - கண்ணனே தான் - யாதவ குலத்தை கலக்கிய கண்ணன் அல்ல - இந்த கண்ணன் வெண்ணையை திருடவில்லை - பல இதயங்களை திருடியவன் - அந்த வகையில் இவனும் ஒரு திருடனே ! மக்கள் அவனை தங்களது நெஞ்சம் என்ற சிறையில் கட்டி தண்டித்தார்கள் - தவறு தவறு ---ஆராதனை செய்தார்கள். அந்த கண்ணனை பற்றியும் அவனை காதலித்த அந்த இரண்டு கோபிகளை பற்றியும் அழகாக எடுத்துச்சொல்லும் படம் இது - சற்றே மாறுப்பட்ட கதை , நடிப்பு - மக்கள் திலகம் தனது தனிப்பட்ட முத்திரையைத் தாண்டி நடித்தபடம் - பாடல்கள் தொடாத தொட்டி பட்டிகள் மிகவும் குறைவு

    கதை : தெரிந்த கதைதான் ஆனால் தெரிந்து கொள்ள முடியாத முடிவு . கண்ணன் ஒரு அநாதை (MGR )- கண்ணன் என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ !!- தன்னை வளர்த்து வரும் கேப்டனிடம் தன் உயிரையே வைத்து இருந்தான் - பியானோ கண்ணன் என்று சொல்லும் அளவிற்கு பியானோ வாசிப்பதில் சிறந்தவனாக இருக்கும் கண்ணனிடம் தன் உறவினர் மகள் மல்லிகாவை (JJ ) இசையை கற்றுக்கொள்ள வைக்கிறார் கேப்டன் ... கண்ணனின் அழகிலும் , பண்பிலும் , இசையிலும் தன் இதயத்தை பறி கொடுக்கின்றாள் மல்லிகா - கண்ணனிடம் சொல்லாமல் ... கண்ணனின் இதயமோ மாலதியிடம் -( வாணிஸ்ரீ ) கண்ணன் மல்லிகாவை தன் உடன் பிறந்தவளாகத்தான் கருதுகிறான் அதனால் அவளின்பால் மனம் அவனுக்கு செல்லவில்லை . கண்ணனுக்கும் மாலதிக்கும் திருமணம் நிச்சியக்கபடுகின்றது - அந்த சமயத்தில் மல்லிகா கண்ணன் ஓட்டிவந்த காரில் அடிபடுகிறாள் - விளைவு அவள் தன் கால்களில் இருக்கும் உணர்ச்சியை இழக்கிறாள் - சுந்தர் ( முத்துராமன் ) கேப்டன்னின் மகன் மல்லிகாவை நொண்டி என்று திட்டி அவளை மணக்க மறுக்கிறான் - மல்லிகாவிற்கு வாழ்வே வெறுத்து விடுகின்றது - தன் கனவுகளை எல்லோருக்கும் தெரியும்படி சொல்லிவிடுகின்றாள் - முடிவு - மாலதியின் தியாகம் , மல்லிகாவின் கழுத்தில் கண்ணனின் மூலம் மூன்று முடிச்சாக விழுகின்றது . இதன் நடுவில் குடும்ப மருத்துவருக்கு ( அசோகன் ) மாலதியின் மீது ஒரு கண் - அதை புரிந்துகொண்ட கண்ணன் மாலதியையும் காப்பற்றுகின்றான் - மருத்துவர் வேடத்தில் நல்லவனாக வரும் நயவஞ்சகன் கண்ணனை தீர்த்து கட்ட முயலும் போது குறிதவறி அது மல்லிகாவின் உயிரை குடித்து விடுகின்றது - மல்லிகாவின் கால்களில் ஒரு பழுதும் இல்லை என்பதும் தெரிய வருகின்றது , சுந்தரின் பிடியில் இருந்து தப்பிக்கவே மல்லிகா ஆடிய நாடகம் என்றும் தெரிய வருகின்றது -- தான் செய்த தவறு , மாலதிக்கு செய்த துரோகம் இவைகளே தனக்கு எமனாக வந்ததை எண்ணி வருந்தி , மாலதியை கண்ணனிடம் ஒப்படைக்கிறாள் மல்லிகா - படம் மாலதி கண்ணன் திருமணத்துடன் முடிவடைகிறது

    நடிப்பு : கண்ணன் - ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு - பல இசைக்கருவிகளை வாசித்து அசத்தி தள்ளுவார் . இரு பெண்களை கருவாக கொண்ட கதையானாலும் , தன் வழியை தனி வழியாக்கிகொண்டு நடிப்பார் . முத்துராமனிடம் நிதானம் , அசோகனிடம் கிண்டல் , வளர்ப்பு தந்தையுடன் பாச பிணைப்பு - காதலிலே நளினம் இப்படி பியானோ வாசித்துக்கொண்டே எல்லோரையும் கவர்ந்து விடுவார் .

    முத்துராமன் - குடுத்த வேடம் குறைவாக இருந்தாலும் நிறைவுடன் செய்கின்றவர் .

    வாணிஸ்ரீ - இன்னும் பல MGR படங்களுடன் நடித்திருக்கலாம்

    JJ - உணர்ச்சிகளை அழகாக வெளிபடுத்துகின்றார் - நடனமும் வெகு அழகு

    பலர் இருந்தும் வேறு எவர் நடிப்பும் சொல்லும் படியாக இல்லை - சிங் காக வரும் அசோகன் இப்படி தமிழை கொலை செய்திருக்கவேண்டாம் - வெறுப்பு வரும் அளவிற்கு பேசுவார் .

    படத்தில் சில குறைகள் :

    1. கண்ணன் ஏன் மல்லிகாவை வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை ? இது ஒரு புரியாத புதிர் .

    2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுக்கின்றன

    பாடல்கள் : எல்லா பாடல்களுமே மிகவும் அருமை - குறிப்பாக - பாடுவோர் பாடினால் ---- சிரித்தாள் தங்கபதுமை ---

    இனிய மாலையில் கன்னணனின் பியானோ வில் மயங்கி அடுத்த நாள் வேலைக்குச் செல்லவேண்டுமே என்ற வெறுப்பில் எழுந்தேன்

    அன்புடன்
    ரவி

  5. Thanks Richardsof thanked for this post
  6. #324
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Just now came to know about the problem re. "to be released movie". MT created social awareness among people [பல புனித நூல்கள் சொல்ல நினைத்த கருத்துக்களை மக்கள் திலகம் பாமரமக்களை சென்றுஅடைய செய்தார்]. NT தனது படங்கள் முலமாக குடும்ப பாசம், பக்தி இது போல பல நல்ல கருத்துக்களை பரப்பினார். Both of them did not face any such problem with any religion/caste/censor Board.
    Last edited by saileshbasu; 21st April 2015 at 10:45 PM.

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellrqe liked this post
  8. #325
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Friends, is there any update on the Ulagam Suttrum Valiban digital re-release ?

  9. #326
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    A Tribute to MGR mother - Sathyabama (Antha Thai Illamal Naan Illai song from Adimai Penn)

  10. Likes Russellrqe, Richardsof liked this post
  11. #327
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    EARTH DAY 2015!

    இன்று உலக பூமி தினம் 2015
    உலகின் அனைத்து ஜீவன்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !!

    மக்கள் திலகத்தின் தொலை நோக்குப் பார்வையில் நம் உலகத்தின் சிறப்புக்கள்
    இந்த உலகம் பிறந்தது இவருக்காக ..இதில் ஓடும் நதிகளும் இவருக்காகவே!!

    பொன்மனச் செம்மலின் உலகம் பற்றிய கருத்துக் கணிப்பு : அழகுக் கலைகளின் சிகரம்!


    புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் நமக்காக

    Last edited by sivajisenthil; 22nd April 2015 at 05:12 AM.

  12. Likes Russellrqe, Richardsof liked this post
  13. #328
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    short & sweet

    இனிய நண்பர் திரு ரவி சார்
    25.4-1968ல் வெளியான கண்ணன் என் காதலன் படம் 47 ஆண்டுகள் நிறைவு பெறும் நேரத்தில் தங்களின் விமர்சனம் பாராட்டுக்குரியது .2000 வார்த்தைகளில் சொல்வதை விட 200 வார்த்தைகளில் நச்சென்று நீங்கள் பதிவிட்டு இருப்பது சிறப்பாகும்.நன்றி நண்பரே .
    Last edited by esvee; 22nd April 2015 at 05:46 AM.

  14. Thanks Russellrqe thanked for this post
  15. #329
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sathya vp View Post
    dear friends, is there any update on the ulagam suttrum valiban digital re-release ?
    expecting in the month of may -2015

  16. #330
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  17. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellrqe liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •