-
23rd April 2015, 02:53 PM
#411
Junior Member
Seasoned Hubber
‘தமிழர் தலைவர்’
என் தாயார் பாரம்பரியம் கேரளா (பாலக்காடு) ஆகும். தந்தையின் பாரம்பரியம் கோவை மாவட்டம் (காங்கேயம்) என்ற ஊர் ஆகும். கேரளாவில் இன்னும் பல மாவட்டங்களில் பெயருடன் பிள்ளை என்று சொல்லி அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கப்படுபவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு. இதை எல்லாம் அறியாமல் அரசியலில் உள்ள சிலர் என்னை மலையாளி என்றும் மலையாளத்தான் என்றும் பேசுகிறார்கள். சிலர், பொறாமை உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னை தமிழ்நாடு மக்களும், அயல்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் பல தமிழ்ச் சங்கங்களும் என்னை தமிழன் என்று சொல்வதும் பாராட்டுவதுமே நான் ஒரு தமிழன் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
----- இன்றைய தினஇதழ் நாளிதழில் புரட்சித் தலைவரின் கருத்து.
படிக்கும்போதே கண்களை நீர் மறைக்கிறது. மக்கள் திலகத்தை தமிழர்கள் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் மூன்று முறை முதல்வராக்கினர். செய்தியை பதிவிட்ட திரு.லோகநாதன் சார், திரு.சைலேஷ் சார் ஆகியோருக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 23rd April 2015 at 02:56 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd April 2015 02:53 PM
# ADS
Circuit advertisement
-
23rd April 2015, 03:04 PM
#412
Junior Member
Seasoned Hubber
நன்றி திரு கலைவேந்தன் - நீங்கள் என் பதிவை படித்தீர்கள் என்பதை விட - அங்கு வருகிண்டீர்கள் என்பதை அறிய மனம் இரட்டிப்பு மகிழ்ச்சியை அடைகிறது - ஒன்றுமே பிடிக்காது ஒருவரிடம் என்று யாருமே இருக்க முடியாது சார் - எல்லோரிடமும் குறிப்பிடும் படி சில நல்ல குணங்கள் கண்டிப்பாக இருக்கும் -- நாம் சரியாக தேடினால் கிடைத்து விடும் - அப்படி உங்களுக்கும் கிடைக்க வேண்டும் - அங்கு பதிவுகள் போட வேண்டும் என்பது தான் என் அவா . நிறைவேற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் அறிவேன் .
அன்புடன்
ரவி
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd April 2015, 03:14 PM
#413
Junior Member
Diamond Hubber
Congrats Ravi Sir for crossing the 800th milestone.
-
23rd April 2015, 03:17 PM
#414
Junior Member
Veteran Hubber
Wish you reach the milestone of 1K postings soon!! congratulations Ravi Sir, on your progress path!!
senthil
-
23rd April 2015, 03:52 PM
#415
Junior Member
Platinum Hubber
800 - postings . Congratulations Ravikumar sir
Last edited by esvee; 23rd April 2015 at 03:56 PM.
-
23rd April 2015, 03:55 PM
#416
Junior Member
Veteran Hubber
ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க! குறுந்தொடர்
பகுதி 8 :மூவேந்தர்களின் சம்மரலங்காரம் !
வாட்டி வதைக்கப் போகும் சம்மர் தகிக்க வைக்கும் கோடைகாலம் விரைவில் நெருங்குகிறது!!
அக்னி நட்சத்திர அனலை எப்படி சமாளிப்பது என்று மாற்றி யோசியுங்கள் நண்பரே வழிகாட்டுகிறார்கள் நமது மூவேந்தர்கள் !
முதன்மை தீர்வு : குறைந்த பட்ச ஆடைகள் அல்லது நோ சட்டை!! கூலாக இருக்கலாம்....கவர்ச்சியாகவும் தோற்றமளிக்கலாம்!!
அசத்தலான கம்பீரமான குறைந்த பட்ச ஆடை அலங்காரத்தில் மின்னும் மக்கள் திலகம் !! கோடை வெப்பம் தணித்திட ஆயிரம் குளிர்நிலவுகள் தேவை
என்று வரவேற்கிறார் !!
சிம்பிளான ஆடையில் பசுமரம் பட்டமரம் தத்துவ குத்தாட்டத்தில் கோடையின் வெப்பத்தையும் குளிர்விக்கும் நடிகர்திலக ஈசனார் !!!
இந்த சம்மருக்கு வஞ்சிக்கோட்டை வாலிபனாக மாறுவதே மனதை குளிர்விக்கும் என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் காதல் மன்னர்!!
மாற்றுத் தீர்வு கோடை மழையில் நனைவதே !!
ஆனந்த மழையில் நனைந்து மெய் மறக்கும் ஜோடிகள் நடிகர்திலகம் மாலினியுடன் !
காதலி கைபட்டதும் மழையில் நனைந்து நினைந்து குதூகலிக்கும் காதல் மன்னர் !
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை ....மழையில் மயங்கும் மக்கள் திலகம் அபிநய சரசுவதியுடன்!!
கோடை மழையை வரவேற்று தொடர் நிறைவு பெறுகிறது
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd April 2015, 04:19 PM
#417
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள திரு சைலேஷ் , திரு வினோத் , திரு செந்தில் - மிக்க நன்றி - சாதனையாளர் திரியில் சாதனைகள் பல படைத்த நீங்கள் வாழ்த்து சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் , அந்த பாராட்டல்களுக்கு நான் உண்மையில் தகுதி உடையவனா என்ற அச்சமும் கூடவே எழுகின்றது .
அன்புடன்
ரவி
-
23rd April 2015, 05:42 PM
#418
Junior Member
Diamond Hubber
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் "
எத்தனையோ கல்யாணங்களை செய்து வைத்திருக்கிறார் என் கணவர் கலைவாணர் . அப்போதெல்லாம் ஆடி ஓடி உதவிகள் செய்தவர்
தன் மகள் கல்யாணத்தின் போது சிலையாக நின்றிருந்தார்....
இல்லை , இல்லை ! "எம் ஜி ஆர் " உருவத்தில் நடமாடி எங்கள் குடும்பத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறார் .
...
--- t a மதுரம் அம்மா ( 1965 ல் 'உயிரொளி' தியாகராஜன் எழுதிய பேட்டிக் கட்டுரையிலிருந்து ....)
-
23rd April 2015, 06:09 PM
#419
Junior Member
Seasoned Hubber
[QUOTE=sivajisenthil;1220975]ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க! குறுந்தொடர்
பகுதி 8 :மூவேந்தர்களின் சம்மரலங்காரம் !
முதன்மை தீர்வு : குறைந்த பட்ச ஆடைகள் அல்லது நோ சட்டை!! கூலாக இருக்கலாம்....கவர்ச்சியாகவும் தோற்றமளிக்கலாம்!!
[/COLOR]
திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு,
மூவேந்தர்களை வைத்து தாங்கள் தேர்ந்தெடுக்கும் கருப்பொருள்கள் வித்தியாசமாக உள்ளன. அருணகிரி நாதரின் கந்தரலங்காரம் படித்திருக்கிறேன். வார்த்தைகள் சில பல்லை உடைக்கும். முருகனை அவர் அழகிய தமிழால் அலங்கரிக்கும் பாடல்கள். முருகனின் பெயர் கொண்ட தாங்கள், ‘சம்மரலங்காரம்’ என்ற புதிய சொல்லாட்சியை உருவாக்கி வீட்டிர்கள். கோடையை விரட்டும் வகையில் உங்கள் பாடல்கள் ‘ஜில்’. பாராட்டுக்கள், நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
23rd April 2015, 06:14 PM
#420
Junior Member
Diamond Hubber
திரு ரவி சார் அவர்களே தங்களுடைய 800 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய 800 பதிவுகள் 8 இலட்சம் பதிவுகளுக்கு சமம் சார் . உங்களுடைய எழுத்துக்கள் எல்லோரையும் திருப்தி அடைய வைக்கிறது

Originally Posted by
g94127302
அன்புள்ள திரு சைலேஷ் , திரு வினோத் , திரு செந்தில் - மிக்க நன்றி - சாதனையாளர் திரியில் சாதனைகள் பல படைத்த நீங்கள் வாழ்த்து சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் , அந்த பாராட்டல்களுக்கு நான் உண்மையில் தகுதி உடையவனா என்ற அச்சமும் கூடவே எழுகின்றது .
அன்புடன்
ரவி
Bookmarks