-
24th April 2015, 07:08 PM
#1301
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
24th April 2015 07:08 PM
# ADS
Circuit advertisement
-
24th April 2015, 08:14 PM
#1302
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
sivaa
இது எந்தப்பட ஸ்டில்?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அன்பு நண்பர் திரு.சிவா அவர்களுக்கு,
இது ‘மோகனப் புன்னகை’ படத்தின் ஸ்டில். ‘தலைவி... தலைவி.. என்னை நீராட்டும் ஆனந்த அருவி...’ என்ற அருமையான பாடல் இந்தக் காட்சியில் இடம் பெறும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
மக்கள் திலகம் திரிக்கு வந்து, இலங்கைக்கு மக்கள் திலகம் வந்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படத்தை பதிவிட்டதற்காக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th April 2015, 08:55 PM
#1303
Junior Member
Senior Hubber

Originally Posted by
KALAIVENTHAN
அன்பு நண்பர் திரு.சிவா அவர்களுக்கு,
இது ‘மோகனப் புன்னகை’ படத்தின் ஸ்டில். ‘தலைவி... தலைவி.. என்னை நீராட்டும் ஆனந்த அருவி...’ என்ற அருமையான பாடல் இந்தக் காட்சியில் இடம் பெறும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
மக்கள் திலகம் திரிக்கு வந்து, இலங்கைக்கு மக்கள் திலகம் வந்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படத்தை பதிவிட்டதற்காக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Exactly it is mohanapunnagai still MGR fans mundi kondu vittargal.
GOOD AND HEALTHY MEASURE AMONG OUR THEADS.
-
24th April 2015, 10:20 PM
#1304
Junior Member
Seasoned Hubber
மெதுவாக மறையும் "அந்த காலம் "
இந்த புதிய பகுதி ஒரு சின்ன மாறுதலுக்காகவும் , இரண்டு திரிகளுக்கும் சம்பந்தப்பட்ட , பொதுவான சமாசாரங்களைப் பற்றியும் , நம்முடன் மெதுவாக கரைந்து போய் கொண்டிருக்கும் அந்த இனிய நாட்களை பற்றியும் , மிக குறைந்த அளவில் , யாரையும் சம்பந்த்தப்படுத்தாத அரசியலை உடையதாகவும் அதே சமயத்தில் இன்றைய தலைமுறை எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை சரியாக புரிந்து கொள்வதற்காகவும் எனக்குள் எழுந்த சில எண்ண துளிகள் - கண்டிப்பாக யார் மனதும் புண் படுவதற்காக அல்ல ....
இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை செல்ல ஒரு வாய்ப்பு வந்தது - ஓவ்வொரு கால் இடைவெளிக்கும் நடுவே அமைக்கப்பட்ட வரவேற்ப்பு , சாதனை விளம்பரங்கள் , கட்டிடங்களை மறைத்து எழுப்பப்படும் , விண்ணை முட்டும் cut outs கண்களில் அகப்படவில்லை - மனதில் யாரோ ஐஸ் கட்டிகளை இறக்குவது போல இருந்தது - உதடுகளில் , கேட்க்காமலேயே புன்னகை வந்து குடிகொண்டது - என்னை கூட்டி சென்ற காரின் வேகத்தைக்காட்டிலும் , மனம் பல மடங்கு வேகமாக பின்னோக்கி செல்ல ஆரம்பித்த நேரத்தில் கண்களில் தென்பட்டன சில பெரிய விளம்பரங்கள் - cutouts - இதுவரை நான் பார்த்து ரசித்தது வெறும் ஸ்க்ரீன் சேவரைத்தானா ? - நிஜமான காட்சிகள் வேறா ??? ஐஸ் கட்டிகள் இறங்கின மனதில் நெருப்பில் நன்றாக காய்ச்சிய ஈட்டியை யாரோ சொருகுவதைப்போல இருந்தது . Cutouts யை தவறாக சொல்லவில்லை - அதில் எழுதப்பட்ட வார்த்தைகள் -- இந்திரனே ! சந்திரனே ! - கண்ணதாசனும் வாலியும் இப்பொழுது இருந்திருந்தால் அவர்களுக்கும் இப்படி வர்ணிப்பது ஒரு சவாலாகவே இருந்திருக்கும் - சில வாக்கியங்களை பார்க்கலாமா?
1. எங்கள் உயிரே ! உயிருக்கு உயிர் தந்த உயிரே !! ( யாராவது விளக்க முடியுமா ?)
2. நீ எங்கள் சுவாசிக்கும் மூச்சு - நீ இல்லை என்றால் எங்களுக்கு ஏது பேச்சு ?
3. உன்னை ஒருநாள் எதிர்த்தது காலம் - இன்றோ உன்னிடம் தஞ்சம் புகுந்தது எதிர் காலம் .
4. நீ தான் எங்கள் உயிர் துடிப்பு ( நல்ல வேளை , வரவேற்க படுபவர் ,ஒரு மருத்துவ டாக்டர் அல்ல - இருந்திருந்தால் - வாசகங்கள் இப்படியும் இருந்திருக்கும் ---- " நீதான் எங்கள் பைபாஸ் சர்ஜெரி ; நீ தான் எங்கள் angiography !! "
5. ஏழைக்கு நீ தருவாய் பொருள் - நீ தானே எங்களுக்கு பரம்பொருள் !!
எண்ணங்கள் பின்னோக்கி செல்கின்றன -- சாதனைகள் படைத்தவர்கள் , தடம் படைத்தவர்கள் , சாகும் போதும் வங்கியில் ஒரு பைசா சேர்காதவர்கள் , ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டு , இறைவனாக ஆனவர்கள் , விளம்பரங்கள் என்ன விலை என்று கேட்டவர்கள் , புகழ்பவர்களை கண்டால் , விரோதிகளாக நினைத்தவர்கள் இப்படி பட்ட மனிதருள் மாணிக்கங்கள் இருந்து , வாழ்ந்த ,பிறரை வாழவைத்த மகான்கள் இருந்த தமிழ் நாடு இன்று சாதனைகளை வாசகங்கள் மூலம் , வார்த்தைகளின் வர்ண ஜாலங்கள் மூலம் வெளிப்படுத்தி தன் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கின்றது - நின்றால் அது ஒரு சாதனை - அடுத்த வீட்டுக்கு செல்ல நேரிட்டால் அது ஒரு சாதனை , பிறந்த நாள் வந்தால் அது ஒரு மிகப்பெரிய யாருமே சாதிக்க முடியாத சாதனை !! சாதனைகள் வேதனைகளாக சென்னையின் வீதிகளில் திரிந்து கொண்ருக்கும் அந்த பரிதாபமான காட்ச்சிகளை கண்கள் பார்க்க மறுத்தன - இங்குதான் பிறந்தோம் , இங்குதான் படித்தோம் - ஆனால் படித்தவைகள் தெருவின் ஓரம் நிற்க , படுத்துபவைகள் அலங்காரமாக வீதிகளை அழகு படுத்திக்கொண்டிருந்தன ---- புத்தன் , இயேசு , காந்தி பிறந்த இந்த நாட்டில் வெள்ளயனைப்போல நம்மை அரசாளும் இந்த வெட்டி விளம்பரங்கள் என்று நம்மை விட்டு வெளியேறும் ?? நினைப்பது ஒரு சாதனை அல்ல ! நினைப்பதை முடிப்பது தான் சாதனை - நீங்கள் செய்யும் உதவிகளில் நேர்மை இருந்தால் , பாராட்டுக்கள் தேடிவரும் விளம்பரம் இல்லாமல் .... திலங்களின் பாடல் வரிகள் மனதை சற்றே சாந்தபடுத்தின - சுமையை , துக்கத்தை சற்றே குறைத்தவண்ணம் ஊர் திரும்பினேன்
" நான் ஏன் பிறந்தேன் ? நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் ?"
" நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள் ?"
இந்த கேள்விகளுக்கு நம் தலை முறையில் விடை இருந்தது ; இந்த தலைமுறைக்கு விடை கிடைக்குமா ?? காலம்தான் பதில் சொல்லவேண்டும் .
அன்புடன்
ரவி
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
24th April 2015, 11:10 PM
#1305
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
24th April 2015, 11:38 PM
#1306
Senior Member
Seasoned Hubber
திலக சங்கமம்
பொம்மைக் கல்யாணம்

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தைத் தொடர்ந்து இவ்விணையின் அடுத்த திரைக்காவியமாய் மலர்ந்தது பொம்மைக் கல்யாணம். மே 3, 1958ல் வெளியான பொம்மைக் கல்யாணம் திரைப்படத்தில் குறிப்பிடத்தக்கது, நடிகர் திலகம் கால்பந்து வீரராக நடித்தது. விளையாட்டிலும் பல விளையாட்டு வீரர்களின் பாத்திரங்களிலும் நடித்திருந்தார் என்பது சிறப்பு. ஏ.எம்.ராஜா அவர்களின் கொடி பட்டொளி வீசிப் பறந்த நேரம், இளைஞர்கள் சொக்கி விழுந்த குரலில் தங்கள் அபிமான நடிகர் நடிக்க வேண்டும் என அந்நாளைய ரசிகர்கள் ஆசைப்பட்டனர். நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மட்டும் என்ன பின் தங்கி விடுவார்களா. மனோகரா வணங்காமுடி பாடல்களின் மூலம் ஏ.எம்.ராஜா சிவாஜி ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பெற்றிருந்தார்.
அந்த ஆவலைத் தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் திரை இசைத்திலகத்தின் இரு இனிய பாடல்கள் டூயட்டாக மலர்ந்தன என்றாலும் அதில் ஒன்று சோகம். இன்பமான பாடல் இன்பமே பொங்குமே என அமர்க்களமாய்த் துவங்க நடிகர் திலகத்தின் அட்டகாச ஆணழகன் தோற்றம் அந்நாளில் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை வெகுவாகக் கவர்ந்தது. சமூகப் படத்தில் கூலிங்கிளாஸ் அணிந்து கதாநாயகன் மக்களை ஈர்ப்பதில் முன்னணி வகித்தவர் நடிகர் திலகம். பராசக்தியிலேயே காரில் துவங்கிய இந்த ஸ்டைல், எதிர்பாராதது படத்தில் தூள் கிளப்பியது. அதைத் தொடர்ந்து இந்த இன்பமே பாடல் காட்சி பல புதிய ரசிகர்களை நடிகர் திலகத்திற்கு பெற்றுத் தந்தது. அதற்கு இந்த கருப்புக் கண்ணாடி வெள்ளுடை மிக முக்கியமான காரணம்.
மருதகாசியின் வைர வரிகளில் திரை இசைத்திலகத்தின் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பாட்டை ஏ.எம்.ராஜா ஜிக்கி குரல்களில் கேட்டு நடிகர் திலகம் ஜமுனா இணையைத் திரையில் பார்த்து ரசியுங்கள்.
குறிப்பாக மணம் வீசும் சோலையில் சரணத்தின் போது ஊஞ்சலில் ஜமுனா ஒய்யாரமாய் ஆட, கூடவே ஆடிப்பாடி துள்ளும் இளமையில் தலைவரின் ஆட்டம் நம்மை சொக்கவைக்கும்..
Last edited by RAGHAVENDRA; 24th April 2015 at 11:42 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
24th April 2015, 11:46 PM
#1307
பாவமன்னிப்பு 51 - பாகம் 6
36. "பாவமன்னிப்பு" திரைக்காவியம் குறித்து பீம்சிங்:
"மனிதனுக்கு மனிதன் உண்டாகும் பிரச்னைகளை, கோபதாபங்களை ஒருவருக்கொருவர் அன்பு வழியில் தீர்த்துக் கொண்டால், உலகத்தில் எத்தனை மதங்களும், மார்க்கங்களும் இருந்தாலும் 'எல்லோரும் மனிதர் தானே' என்கிற பொது எண்ணம் உண்டாகி, அனைவரும் மண்மாதாவின் குழந்தைகள் போல ஒற்றுமையாக வாழ முடியும் என்பது என் நம்பிக்கை, ஆசை. அந்த ஆசையின் படப்பிடிப்புதான் நீங்கள் காணும் 'பாவமன்னிப்பு'. உலகமெலாம் அன்பு வழி நடந்து எல்லோரும் சகோதரர்களாகப் பழகி வாழ என் முயற்சி கடுகளவாவது துணை புரியுமானால், அதை என் வாழ்நாளில் கிடைத்த பெருமையாகக் கருதுவேன்."
37. "முஸ்லீம் வாலிபர்கள் இந்தப் பாத்திரத்தைப் போலல்லவா வாழ வேண்டும் என்று எண்ணும்படி அதிக சிரமமெடுத்து நடித்த படம்" என இக்காவியம் குறித்து நடிகர் திலகம் கருத்து கூறியுள்ளார்.
38. "பாவமன்னிப்பு" காவியத்தில் நடித்தது குறித்து தேவிகா:
"ஆசியாவின் சிறந்த நடிகரான சிவாஜி அண்ணாவுடன் நான் 'பாவமன்னிப்பு' படத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு முறையும் அவர் 'நீ சிறப்பாக நடிக்க வேண்டும்' என்று ஊக்கம் ஊட்டும் போது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன். சில வேளைகளில் கஷ்டமான பாவங்களை சித்தரித்து காட்டுவது எப்படி என்று அவரே நடித்துக் காட்டியிருக்கிறார். 'பாலிருக்கும் பழமிருக்கும்' பாடல் காட்சியில் நடிக்கும்பொழுது சிவாஜி அண்ணா அவர்கள், 'இந்தக் காட்சியில் கிறிஸ்தவப் பெண்ணுக்குள்ள அமைதி, பண்பு ஆகிய குணநலன்களுடன் இயற்கையாகக் காட்சி அமைய நீ நடிக்க வேண்டும். இந்தக் காதல் காட்சியில் நடிக்கும்பொழுது நெளிந்து நெளிந்து நடிக்காமல் அமைதியாகவும், அடக்க ஒடுக்கமாகவும் நீ நடிக்க வேண்டும்' என்று எனக்குக் கூறி ஊக்கம் அளித்து காட்சியின் தன்மையை விளக்கிக் காட்டினார். அதன்பின் அவர் அளித்த ஊக்கத்தினால்தான் அக்காட்சியில் சிறப்பாக நடித்தேன். படம் வெளியான பிறகு இந்தப் பாடல் காட்சியும் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பெற்றுவிட்டது. சிவாஜி அண்ணா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்றும் சொல்லுவேன். 'பாவமன்னிப்பு' வெளிவருவதற்கு முன்பே அவர் என்னைப் பார்த்து 'இந்தப்படம் வெளிவந்ததும் உனக்கு நல்ல பெயர், புகழ் வரும்' என்றார். எனக்கென்னவோ தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் முடிவில் அவர்தான் வெற்றி பெற்றார். 'பாவமன்னிப்பு' படம் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுவிட்டது. பொது நன்மைக்காக எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் கைகொடுத்து உதவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நீடூழி வாழப் பிரார்த்திப்போமாக."
39. பாக்ஸ்-ஆபீஸ் மெகாஹிட் காவியமான "பாவமன்னிப்பு", இந்திய அரசின் விருதினையும் வென்றது. 1961-ம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மிகச் சிறந்த திரைப்படம் என்று இப்படத்திற்கு "வெள்ளிப்பதக்கம்" விருதும், அகில இந்திய நற்சான்றிதழும் இந்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
40. "பாவமன்னிப்பு", "சப் கா சாத்தி" என்கின்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஹிந்திப் பதிப்பாகவும் வெளிவந்தது. 1972-ல் வெளியான இந்த ஹிந்திப்படத்தில் சஞ்சய்கான் கதாநாயகனாக நடித்திருந்தார். ஜெமினி, சாவித்திரி ரோல்களில் வினோத்கன்னாவும், பாரதியும் நடித்திருந்தனர். இப்படத்தை பீம்சிங்கே இயக்கினார்.
41. நடிகர் திலகத்தின் 'ரஹீம்' கதாபாத்திரம், கவிப்பேரரசு வைரமுத்துவின் மனம் கவர்ந்த பாத்திரமாகும். அவர் கலந்து கொள்ளும் சிவாஜி விழாக்களில் இப்பாத்திரம் குறித்து அவர் சிலாகித்துச் சொல்லாத மேடைகளே இல்லை. 'சிரித்துக் கொண்டே அழவதையும், அழுது கொண்டே சிரிப்பதையும் உலகில் சிவாஜியால் மட்டுமே சித்தரித்துக் காட்ட முடியும்' என்று வைரமுத்து சிவாஜி விழாதோறும் நடிகர் திலகத்துக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
42. வெள்ளித்திரை மறுவெளியீடுகளிலும், சின்னத்திரைச் சேனல்களிலும் "பாவமன்னிப்பு"க்கு கிடைக்கும் அமோக வரவேற்பே தனிதான். Vcd, dvd வடிவத்திலும் இக்காவியத்திற்கு ஏக கிராக்கி.
நன்றி பம்மல் R. சுவாமிநாதன்
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
24th April 2015, 11:58 PM
#1308
பாவமன்னிப்பு - இன்று - மதுரை சென்ட்ரல் [24.04.2015]
காலைக் காட்சிக்கு முத்திரை பதித்த ரஹீம் மதியக் காட்சியிலும் சாதனை புரிந்திருக்கிறார். வேலை நாளான வெள்ளிக்கிழமை மதியக் காட்சிக்கும் பெருமளவில் மக்கள் வந்திருந்து ஆத்ரவளித்திருக்கின்றனர். காலைக்காட்சி முடிந்து மக்கள் கூட்டம் வெளியே வருகிறது. மதியக் காட்சி பார்க்க வந்திருக்கும் கூட்டமும் அதோடு சேர டவுன் ஹால் ரோடே திருவிழாக் கோலம் கண்டிருக்கிறது.
இப்படி பிரச்சனைகள் இல்லாமல் போனால் அது எப்படி நடிகர் திலகத்தின் படமாகும்? சோதனை நேரங்களை எதிர்கொண்டு அதிலும் சாதனை படைப்பதுதானே நடிகர் திலகத்தின் படங்கள்! மாலை 5.30 மணி அளவில் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. நன்றாக பெய்த அந்த மழை இரவு 7.30 மணி வரை நீடித்திருக்கிறது. பிறகும் நிற்காமல் தூறல் மழையாக தொடர்ந்திருக்கிறது. இரவுக் காட்சிக்கு டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு கவுண்டர் அடைக்கப்படும் 11 மணி வரை இதே சூழல்.
இதையும் எதிர்கொண்டு மாலைக்கட்சிக்கும் இரவுக் காட்சிக்கும் சேர்த்து சுமார் 500 மனிதர்கள் படம் பார்த்திருக்கின்றனர். மொத்தத்தில் இன்று நான்கு காட்சிகளுக்கும் சேர்த்து 900 மனிதர்கள் படம் பார்த்திருக்கின்றனர். வசூல் கணக்கில் சொன்னால் ரூபாய் 19 ஆயிரத்திற்கு அருகில். தீபாவளி பொங்கல் அல்லது விஷேச நாட்கள் அல்லாத ஒரு சாதாரண வேலை நாளில் அதிலும் ஒரு கருப்பு வெள்ளைப் படம் மதுரை சென்ட்ரலில் மறு வெளியீட்டில் முதல் நாளில் அதிகபட்சமாக வசூல் செய்த படம் (கலர் மற்றும் கருப்பு வெள்ளை படங்கள் அனைத்தும் அடங்கும்) என்ற பெருமையை பாவ மன்னிப்பு தட்டி செல்கிறது.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th April 2015, 08:32 AM
#1309
Junior Member
Senior Hubber
மக்கள் தலைவர் சிவாஜியின் அன்பு இதயஙகளே
பாவமன்னிப்பு காவியத்தின் வேலை காரணமாக மூன்று நாட்கள் என்னால் திரிக்கு வரமுடியவில்லை. படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. அதை சற்று விரிவாக பின்னர் எழுதுகிறேன். தற்பொழுது பாவமன்னிப்பு திரைபடத்தின் போஸ்டர்கள் மற்றும் போட்டோ கார்டு பார்வைக்கு,

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th April 2015, 08:35 AM
#1310
Junior Member
Senior Hubber
மக்கள் தலைவர் சிவாஜியின் அன்பு இதயஙகளே
பாவமன்னிப்பு காவியத்தின் வேலை காரணமாக மூன்று நாட்கள் என்னால் திரிக்கு வரமுடியவில்லை. படம் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. அதை சற்று விரிவாக பின்னர் எழுதுகிறேன். தற்பொழுது பாவமன்னிப்பு திரைபடத்தின் போஸ்டர்கள் மற்றும் போட்டோ கார்டு பார்வைக்கு,

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks