-
25th April 2015, 04:21 PM
#11
Junior Member
Platinum Hubber
நண்பர் திரு. முத்தையன் அவர்களின் விவசாயி, திருடாதே, பட்டிக்காட்டு பொன்னையா படப் பதிவுகள் அற்புதம்.
நண்பர் திரு. சி.எஸ்.குமார் அவர்களின் வல்லமை பதிவுகள், மலரும் நினைவுகள்,
(காஞ்சிபுரம்), மற்றும் முக நூல் பதிவுகள் அத்தனையும் அருமை.
நண்பர் திரு. ரவி. (ஹைதராபாத் ) அவர்கள் 800 பதிவுகள் முடித்து விரைவில் 1000 பதிவுகள் எனும் சிகரத்தை தொடுவதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
தங்களின் கண்ணன் என் காதலன் திரைப்படம் பற்றிய விமர்சனம் , பாடல்கள் , மக்கள் திலகத்தின் நடிப்பு இசை, நடன அசைவுகள் பற்றிய கருத்துக்கள் ஆகிய
அனைத்தும் என்னைக் கவர்ந்தது.
மேலும் பல படங்களின் விமர்சனங்கள் தங்களின் பார்வையில் பட்டு , இத்திரியில் விரைவில் பதிவாகும் என்று நம்புகிறேன்.
நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்களின் அரிய புகைப்பட பதிவுகள் கண்களுக்கு விருந்து.
நண்பர் திரு. சிவாஜி செந்தில் அவர்களின் மூவேந்தர் பட பாடல்களின் பதிவுகள்
வித்தியாசமானவை. ரசிக்கும்படி உள்ளன.
கொங்கு மண்டலத்தில், வெளியாகும் புரட்சி தலைவரின் படங்களை அவ்வப்போது
திரியில் பதிவிட்டு வரும் (தனிப்பிறவி - கோவை சண்முகா, நினைத்ததை முடிப்பவன் - கோவை டிலைட் ) நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நட்புடன்
ஆர். லோகநாதன்.
-
25th April 2015 04:21 PM
# ADS
Circuit advertisement
Bookmarks