-
4th March 2014, 02:54 PM
#171
Junior Member
Seasoned Hubber
விளையாட்டுச் செய்தித் துளிகள்...
§ மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வரும் 68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி யில் தமிழக அணி 3-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாபை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. தமிழக வீரர் ரீகன் ஹாட்ரிக் கோல் அடித்தார். மேற்கு வங்கம்-ரயில்வே அணிகளுக்கு இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
§ ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 129 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 124 ரன்களில் சுருண்டது.
§ ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசத்தை சந்திக்கிறது பாகிஸ்தான்.
§ ஜெர்மனியின் முல்ஹெய்ம் அன்டெர் ரூர் நகரில் நடைபெற்ற ஜெர்மன் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அரவிந்த் பட் சாம்பியன் பட்டம் வென்றார்.
§ ஆடவர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு 12-வது இடத்தைப் பிடித்தார். லியாண்டர் பயஸ் தொடர்ந்து 10-வது இடத்தில் உள்ளார்.
§ உத்தரப்பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெற்று வரும் ஹாக்கி இந்தியா சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பெங்கால் 5-0 என்ற கோல் கணக்கில் மிசோரமை தோற்கடித்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.
-
4th March 2014 02:54 PM
# ADS
Circuit advertisement
-
11th March 2014, 04:36 PM
#172
Junior Member
Seasoned Hubber
விளையாட்டுச் செய்தித் துளிகள்...
# அமெரிக்காவின் இன்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இன்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (6), 3-6, 10-5 என்ற செட் கணக்கில் போலந்தின் ஜெர்ஸி ஜானோவிச்-ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபரை தோற்கடித்த பயஸ் ஜோடி, அடுத்ததாக இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிச்-பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட் ஜோடியை சந்திக்கிறது.
# 7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியில் அந்த அணியின் கேப்டனாக இருந்த ராகுல் திராவிட், ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
# மேற்கிந்தியத் தீவுகளின் பர்படாஸில் நடைபெற்ற முதலா வது டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தைத் தோற் கடித்தது. மே.இ.தீவுகள் வீரர் சாமு வேல்ஸ் 46 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
# இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் போட்டி யில் உலகின் 5-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச் 6-4, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகட்டிடம் தோல்வி கண்டார்.
# 2014 உலகக் கோப்பை கால் பந்து போட்டியை நடத்துவது பிரேசிலுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. இந்தப் போட்டி மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன் என்று பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர் பீலே தெரிவித்துள்ளார்.
-
29th June 2014, 06:01 PM
#173
Senior Member
Seasoned Hubber
Saina Nehwal wins Australian Open Super Series title
http://timesofindia.indiatimes.com/s...w/37445502.cms
-
28th March 2015, 09:00 PM
#174
Senior Member
Seasoned Hubber
-
3rd May 2015, 11:10 AM
#175
Senior Member
Seasoned Hubber
“Fight of the Century (Boxing)”
Floyd Mayweather defeats Manny Pacquiao
http://www.latimes.com/sports/boxing...htmlstory.html
-
10th July 2017, 04:48 AM
#176
Senior Member
Seasoned Hubber
India beats China to the top medals tally at Asian Athletics Championships 2017
http://indianexpress.com/article/spo...tally-4743250/
Bookmarks