-
7th May 2015, 08:06 AM
#3541
Senior Member
Diamond Hubber
கலை சார்,
நன்றி!
பாலியல் பிரச்னை, திருநங்கைகள் விஷயம், டி.என்.அனந்தநாயகி விஷயம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சட்ட மசோதா விஷயம், கருணாநிதியின் நகைச்சுவை நையாண்டி விஷயம், நடராஜர் எந்தெந்த ஊரில் எப்படி காலைத் தூக்கி ஆடுகிறார் என்ற விஷயம், 1971ம் ஆண்டு தேர்தல் இத்தனை விஷயங்களுடன் சேர்ந்து ஆனந்தன் திருநங்கையாக மாறி வேஷம் கட்டி பாட்டு பாடும் விஷயம் என்று ஒரே பந்தில் ஒன்பது ரன் (பார்த்தீர்களா கலை! என்னையுமறியாமல் எண்ணிக்கை எப்படி வந்தது என்று. பிளான் பண்ணாமலேயே வருகிறது. நான் என்ன செய்ய!?
) அடிக்க உங்களால் மட்டுமே முடியும். (ஆமாம்! அடங்காப்பிடாரி பெண் பாலா? ஆண்பாலா? ஆண்பாலாக இருந்தால் அடங்காப்பிடாரனா? பிடாரன் என்று தனியே சொன்னால் பாம்பு பிடிக்கும் பாம்பாட்டிதானே? அப்போ அடங்காமல் ஆடும் 'திருநங்கை' ஆனந்தனை என்ன சொல்வது? (அப்படியே 'டிஸ்கோ' சாந்தி மாதிரியே இருக்கும். ம்.. விதை ஒன்னு போட்டா துரை ஒன்னா முளைக்கும்?)
முடியலை கலை சார்.

அதற்கு முன்னால் ஒன்று. வாள் வீச்சில் சிறந்தவரான ஆனந்தன் எம்.ஜி.ஆர் அவர்களிடம் 'நீரும் நெருப்பும்' படத்தில் காட்டில், வாழைத் தோப்பில் நடக்கும் கத்திச் சண்டையில் 'தோரஹா' ரேஞ்சிற்கு பேன்ட் சட்டையெல்லாம் கிழிந்து, உள்ளாடைகள் தெரியுமளவிற்கு சிதைந்து சின்னாபின்னமானதை என்னவென்று சொல்ல!
'ஜாம் ஜாம் ஜாம் என்று சந்தோஷமா' தளிர் நடை போட்ட 'யானை வளர்த்த வானம்பாடி' மகன் ராஜ பீமனுக்கா இந்த நிலைமை?
கருணாநிதி ஜோக் ஒன்று நான் சொல்லட்டுமா? உங்களுக்குத் தெரியாததா?
காவல்துறை அசிஸ்டன்ட் கமிஷனர் (A.C) ஒருவருக்கு பாராட்டு விழா ஒருமுறை இவர் தலைமையில் நடந்ததாம். விழாவில் பரிசு வாங்கப் போகும் கமிஷனர் முதல்வர் கருணாநிதி (அப்போது
) முன்னால் சில வார்த்தைகளை மேடையில் பேச வேண்டுமாம். அதற்கு அவர் தன்னை முன்னமேயே தயார்படுத்திக் கொண்டிருந்தாராம். அவரது நண்பர்கள் "முதல்வர் முன்னால் தைரியமா பேசிடுவே இல்லே" என்று கேட்டனராம். "அது என்ன பிரமாதம்? முதல்வரே ஆச்சர்யப்படும் அளவிற்கு வெளுத்து வாங்கிட மாட்டேன்?" என்று அலட்சியமாக பதில் தந்தாராம் அந்த காவல் துறை உதவி ஆணையர்.
இப்போது மேடைக்கு வந்தாகி விட்டது. கருணாநிதி அந்த அதிகாரிக்கு பதக்கம் அணிவித்து விட்டார். இப்போது அந்த அசிஸ்டன்ட் கமிஷனர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து பேச வேண்டிய நேரம். அதுவரை தைரியமாய் இருந்த கமிஷனர் கருணாநிதி முன்னால் பேச எழுந்தவுடன் நெர்வஸ் ஆகிவிட்டார். வாய் குழறுகிறது. வார்த்தைகள் மட்டுமல்ல... கையும் காலும் உதற ஆரம்பித்து விட்டது. அந்த மேடை குளிர்சாதன வசதி செய்யப்பட்ட (Air Condition) மேடை வேறு. அப்படியும் அந்த கமிஷனருக்கு பயத்தில் வேர்க்க ஆரம்பித்துவிட்டது. பரிசு தந்தவர் பேச்சில் பேய் ஆயிற்றே!
ஒருவழியாக கமிஷனர் கருணாநிதிக்கு நன்றி கூறி முகத்தில் உள்ள வேர்வையை கர்ச்சிப்பால் துடைத்தபடி தன் இருக்கையில் அமர்ந்தார்.
இப்போது கருணாநிதி பேச வேண்டும். கருணாநிதி பேச எழுந்தவுடன் என்ன சொன்னார் தெரியுமா?
"AC யிலும் A.C க்கு இப்படி ஏன் வேர்க்கிறது?"
அப்போது அந்த கமிஷனரின் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
எப்படி கலை? ஆளை விடுங்க சாமி.
இந்தாங்க.
‘வெத்தல போட்ட பத்தினி பொண்ணு சுத்துது முன்னாலே'
(கலை சார்,
ஒரு சிறு திருத்தம். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் 'விஜயபுரி வீரன்' அல்ல. ஏ.வி.எம்.தயாரித்த 'வீரத் திருமகன்' படம்.)

பாடலின் நடுவில் 'தானனனன்னா' 'லாலலலல்லா' என்றும், 'அஞ்சுது கொஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது பார் கண்ணாலே' என்றும் 'டாண் டாண் டாண் டாண் ' என்றும் 'கிறீச்' குரலில் ஒலிக்கும் குரல் 'பலகுரல் மன்னன்' சதன் அவர்களுடையது.'சொர்க்கம்' படத்தில் 'சொல்லாதே யாரும் கேட்டால்' என்று பாடியபடி 'நடிகர் திலகம்' காரின் முன்னால் ஸ்டைலாக நடந்து வருவாரே... அப்போது அவருடைய கார் டிரைவராக வருபவர்தான் சதன் என்று நான் சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரியுமே. "நான் ஏங்க சொல்லப் போறேன்' என்ற பாவனையில் சதன் வாயை மூடிப் பொத்தி வருவது சூப்பராக இருக்கும் கலை சார்.)
Last edited by vasudevan31355; 7th May 2015 at 08:58 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th May 2015 08:06 AM
# ADS
Circuit advertisement
-
7th May 2015, 11:16 AM
#3542
Senior Member
Senior Hubber
கலை வேந்தன் .. நன்றி.. ஃபார் யுவர் ரைட் அப்.. நைஸ் ரைட் அப்..
அடுத்தது எப்போங்க்ணா..
வாசு ..ங்க்ணா.. கொஞ்சம் குத்திவிட்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நு காற்று விரைவாக வெளியேறும் பலூனைப் போல..ஆஹா ஒரு பாட்டுக்கு எவ்வளோ வர்ணனைகள், அரசியல் நிகழ்வுகள்.. நைஸ்.. அண்ட் தாங்க்ஸ்..
Last edited by chinnakkannan; 7th May 2015 at 11:37 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th May 2015, 12:29 PM
#3543
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 11
SRI SURYANARAYANA MELUKO
இந்த பாடல் எந்த படத்திலும் இருந்து எடுக்கப்பட்டதல்ல - மனதை உருக வைக்கும் பாடல் - கிடைத்த அந்த வினாடியில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை படுகிறேன் - இந்த பாடலை எந்த மதத்தினரும் கேட்கலாம் . Beautiful songs with lyrics. Beautiful picturization of the exact flowers mentioned in the song , describing Lord Surya narayana,who is the Life Giver to entire living beings on earth. The song also describes various stages of Sun God's movements in a day.
5 நிமிடங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு கேளுங்கள் - நீங்கள் வேறு புதிய உலகத்தில் இருப்பதைப்போல உணர்வீர்கள் - அந்த உலகத்தில் பகைமை இல்லை , விரோதம் இல்லை , கர்வம் இல்லை , அகந்தை இல்லை - எல்லோரும் சமம் - எங்கு திரும்பினாலும் சந்தோஷம் ஒன்றையே உணர்வீர்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th May 2015, 12:50 PM
#3544
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 12
இரவுக்கு 1000 கண்கள் - பகலுக்கு ஒன்றே ஒன்று - குலமகள் ராதை
இங்கே இரவுக்கு 1000 கண்கள் என்பது நட்சத்திர கூட்டத்தை குறிப்பதாகும் - ஆனால் பகலுக்கோ சூரியன் என்ற ஒரே கண் தான் உள்ளது
"பெண்மையின் பார்வை ஒருகோடி.....அவை பேசிடும் வார்த்தை பல கோடி. " எப்படிப்பட்ட வார்த்தைகள் - அழகிய குரல் - படத்தில் பாடுபவரும் ஒரு அழகி - படத்தின் கதாநாயகனோ , மன்மதனை அழகில் தோற்க அடித்தவன் - பாடல் மட்டும் அழகாக இல்லாமலா இருக்க முடியும் ?
" அங்கும் இங்கும் அலை போலே , தினம் ஆடிடும் மானிடர் வாழ்விலே - எங்கே நடக்கும் , எது நடக்கும் , அது எங்கே முடியும் யாரறிவார் ???"
இந்த வரிகள் - உயிரோட்டோம் உள்ள வரிகள் - அதனால் தான் இப்படிப்பட்ட பாடல்கள் , காலங்கள் பல கடந்தும் கேட்க்கும் இனிமையை இழப்பதில்லை.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
7th May 2015, 01:57 PM
#3545
Senior Member
Senior Hubber
//" அங்கும் இங்கும் அலை போலே , தினம் ஆடிடும் மானிடர் வாழ்விலே - எங்கே நடக்கும் , எது நடக்கும் , அது எங்கே முடியும் யாரறிவார் ???" // வெகு அழகான பாடல் .. தாங்க்ஸ் ரவி..இதை வைத்தே ஒரு சிறுகதை “ச்ச்ச் ச்யாமளி” கதைகள் இழையில் போஸ்ட் செய்திருந்தேன்...
-
7th May 2015, 03:06 PM
#3546
Junior Member
Seasoned Hubber
வாசு சார், ரவி சார், சின்னக் கண்ணன் பாராட்டுக்கு நன்றி.
வாசு சார்,
எனது பதிவுக்கு பதிலாக விஷுவல் ட்ரீட்டுடன் பெரிய விருந்தையே படைத்து வீட்டீர்கள்.
‘விதை ஒன்னு போட்டா துரை ஒன்னா முளைக்கும்’...... வயிறு வலிக்க சிரித்தேன்.
திரு.கருணாநிதி அவர்களின் நகைச்சுவை டாப்.
இதேபோல, அவர் தலைமையேற்ற ஒரு விழாவில், ஒரு நாதஸ்வர வித்வான் பிரமாதமாக வாசித்தார். நாதஸ்வரத்தை சபையில் கம்பீரமாக அந்த வித்வான் வாசிப்பாரே தவிர, பேச வராது. எனவே, எழுதி வைத்துக் கொண்டு நன்றியுரை வாசித்தார். என்றாலும், சபைக் கூச்சம் காரணமாக நடுக்கத்துடனேயே, சபையினரின் சிரிப்புக்கிடையே உரையை வாசித்தார்.
அது முடிந்ததும் திரு. கருணாநிதி கூறினார்...
‘நாதஸ்வரம் வாசிக்கும்போது மட்டுமல்ல, நன்றியுரை வாசிக்கும்போதும் நம்மை ரசிக்க வைக்கிறார்.’
கால் மாற்றி ஆடிய நடராஜரைப் போல, அவசரத்தில் வீரத்திருமகனை, விஜயபுரி வீரனாக மாற்றி விட்டேன். தவறை சுட்டிக் காட்டி திருத்தியதற்கு நன்றி.
ஒரே பந்தில் 9 ரன் என்று கூறியிருக்கிறீர்ளே? எண்ணிப் பார்த்தால் 8 தான் வருகிறது. இருந்தாலும் நீங்கள் தெரியாமல் ஒன்று குறைக்கவில்லை. நடிகர் திலகத்தின் முன் வாய் பொத்தி நிற்கும் சதன் படத்தை போட்டிருக்கிறீர்களே... அதுதான் அந்த 9வது ரன். நன்றி சார்.
ரவி சார்,
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்களும் வர்ணணைகளும் அருமை.
‘‘5 நிமிடங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு கேளுங்கள் - நீங்கள் வேறு புதிய உலகத்தில் இருப்பதைப்போல உணர்வீர்கள் - அந்த உலகத்தில் பகைமை இல்லை , விரோதம் இல்லை , கர்வம் இல்லை , அகந்தை இல்லை - எல்லோரும் சமம் - எங்கு திரும்பினாலும் சந்தோஷம் ஒன்றையே உணர்வீர்கள்’’
...........இங்கு வரும்போது அந்த சந்தோஷத்தை உணர்கிறேன். நன்றி சார்.
சின்னக்கண்னண்,
நன்றி. நேற்று கூட பிளான் எல்லாம் செய்யவில்லை. நீங்கள் கொடுத்த ஹிண்ட்டை பார்த்ததும் தோன்றியது. அப்பப்போ இப்பிடி எதுனா இஸ்து வுடுங்க.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th May 2015, 03:08 PM
#3547
Senior Member
Senior Hubber
சி.க., 3ஆம் தேதி வரையிலான உங்கள் பதிவுகள்:
பெண்களின் பருவங்களைப் பற்றிய உங்கள் பதிவுகள் அருமை. அதுவும் மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் எல்லா விவரங்களும் தெரிந்து கொண்டேன். மரத்தைப் பற்றிய பதிவும் நன்றாக இருந்தது. என்ன மரம் வரும் பாடல் உடனடியாக உங்களுக்கு எதுவும் தோணவில்லையா? உங்களுக்கே இப்படி என்றால், எனக்கு?. வெகு சிரமப் பட்டு போராடி இதோ நடிகர் திலகத்தின் படத்திலிருந்து ஒரு புளிய மரப் பாடல் (ஆடியோ மட்டுமே):
இன்னொரு புளிய மரப் பாடல் இதோ: (என்னத்த சொல்றதுஇதைப் பத்தி, எனக்கு ஒண்ணும் தெரியலையே?)
பொங்கும் பருவத்திற்காக கொடி மலரில் காஞ்சனாவின் 'கண்ணாடி மேனியடி, தண்ணீரில் ஆடுதடி' பாடலும் அதே படத்தில் ஏ.வி.எம். ராஜனைப் பார்த்து துள்ளிக் குதிக்க பதிலுக்கு ஏ.வி.எம். ராஜன் பாடும் பாடல் "சிட்டாக துள்ளித் துள்ளி.." என்று பாடும் பாடலும் வெகு பொருத்தம்.
"ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்" என்று தேவிகா பாடலைப் படித்ததும் அது என்ன படம் என்று போடக்கூடாதா என்று மனதில் உங்கள் மேல் கோபம் கொண்டேன். பின்னால் வந்தது பாருங்கள் தாயே உனக்காக என்று அவ்வளவு அற்புதமான பதிவுகள். உங்களுடன் வாசுதேவனும் பங்கெடுத்துக் கொண்டாரா. எல்லோரையும் எங்கேயோ அழைத்துக் கொண்டு போய் விட்டீர்கள். நன்றி. நீண்ட நாட்களுக்கு முன் 'தாயே உனக்காக' படம் ஒரு முறை டி.வியில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அப்போதே பிடித்திருந்தது. பாடல்கள் நினைவில் இல்லாமல் இருந்தது. சேர்த்து விட்டீர்கள். அத்துடன் உங்கள் கார்கில் பயணித்த பதிவு நல்ல முத்தாய்ப்பாக இருந்தது.
மற்றபடி நான் இல்லாததினால் நீங்கள் நல்ல பௌர்ணமி பாடல்களாக போட்டு அதகளப் படுத்தி விட்டீர்கள். என் வேலையையும் குறைத்து விட்டீர்கள்.
உங்களுடைய மற்ற பதிவுகளுக்காக பதில்கள் பின்னொரு பதிவில். மீண்டும் நன்றி.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
7th May 2015, 03:34 PM
#3548
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th May 2015, 03:47 PM
#3549
Senior Member
Senior Hubber
சிவாஜி செந்திலிடமிருந்து ஒரு வார்த்தையைச் சுட்டு...
நிலா கதிரவன் மறுபடி வருவதற்குள் ஒரு Gapfiller!
மதுரை குரு தியேட்டரில் கல்லூரி இறுதியாண்டில் பார்த்த நினைவு.. படத்தில் இந்தப் பாட் மட்டுமே நினைவிருக்கிறதே தவிர கதை நடிக நடிகையர் எதுவுமே நினைவில்லை..ரவிக்கு எழுதிய ஒரு கமெண்ட்டில் இந்தப் பாடலை நினைவு கூர்ந்தேன் (ச்ட்டுனு மனசுல வந்ததுங்க்ணா..) நல்லாவே இருக்கும்.. நான் கேக்க முடியாது இப்போ..லேட்டர் ஒன்லி..
அந்தப் பாட் உங்களுக்காக.. படம் பிரம்மச்சாரிகள்..
சந்திரனைப் பார்த்தால் சூரியனாய்த் தெரிகிற்து
செங்கரும்பு கூட வேம்பாகக் கசக்கிறது
பச்சைக்கொடி அச்சம் தரும் பாம்பாய் அசைகிறது..
(குட்டி சுரேஷ் அண்ட் சுலோச்சு
)
-
7th May 2015, 04:06 PM
#3550
Senior Member
Senior Hubber
ரவி,
உங்களை எப்படி பாராட்டுவது என்று உடனடியாக எனக்கு தோன்றவில்லை. என்னை நிலவிற்கு போய் விட்டதாக எழுதினார்கள். அது என்ன கிரகம்? அது ஆப்டர் ஆல் ஒரு துணைக் கோள் தானே. அங்கு உயிர்கள் இல்லை. உயிர்களுக்கான எந்த ஆற்றலும் இல்லை. நீங்கள் எழுதுவதோ ஒரு நட்சத்திரத்தைப் பற்றி. அதைச் சுற்றி எத்தனை கோள்கள், எத்தனை துணைக் கோள்கள். சூரியனால் இந்த பூமியில் எத்தனை எத்தனை உயிர்கள் பிறந்து வாழ்கின்றன. அப்பாடி!!! நீங்கள் சுட்டெரிக்கும் இந்த கோடைக் காலத்தில் சூரியனுக்கு பயணம் செய்திருக்கிறீர்கள். இதற்கு அபாரத் திறமை வேண்டும்தானே?
நான் இரவு நேரத்தில் வந்து நிலவுப் பாடல்களை தரலாம் என்றால் முடியவில்லை. பகலில் கோடை வெயிலில் கதிரவன் காய்க்க, நீங்கள் (அட நீங்களும் ரவி என்ற சூரியன் தானே!!!) மதுர கானப் பாடல்களில் அருமைக் கதிரவன் பாடல்கள் போட்டு தூள் கிளப்ப, நான் எங்கே நிலவுப் பாடல்களை தருவது? தந்தாலும் கதிரவன் ஒளியில் தெரியுமா? அதனால் நிறுத்தி வைத்தேன். (எழுதாம இருக்கிறதுக்கு எப்படியெல்லாம் யோசிச்சு சாக்கு சொல்ல வேண்டி இருக்கிறது!!!). துவக்கமே அருமை. நடிகர் திலகத்தின் கர்ணன் படப் பாடலான "ஆயிரம் கரங்கள் நீட்டி ..." விட்டு வேறெந்தப் பாடலைக் கூறித் துவக்குவது? இதுதான் இங்கே பொருத்தமோ பொருத்தம்.
அட உடனே மக்கள் திலகத்தின் "ஆடிவா பாடலா"? கலைவேந்தனையும் குளிர (குளிர் காய) வைத்துவிட்டீர்கள்!!! தொடருங்கள் அய்யா. தொடருங்கள். நானும் நிலவை தொடர்வதற்கு பார்க்கிறேன்.
Last edited by kalnayak; 7th May 2015 at 04:13 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
Bookmarks