-
11th May 2015, 09:06 AM
#651
Junior Member
Veteran Hubber
GG's misunderstanding with brother / brother in-law NT! Of course, on screen only!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th May 2015 09:06 AM
# ADS
Circuit advertisement
-
11th May 2015, 12:13 PM
#652
Junior Member
Veteran Hubber
GG and his look alike AVMRajan!
In many long shots one is unable to distingush between GG and Rajan in many movies. Both hail from Pudukkottai. Both are soft heroes. AVMRajan started in following the footsteps of GG and later tried his versatility in a lateral direction of acting towards NT and action towards MT. However, Rajan could not last long due to his typified dialogue deliveries and lack of originality. However, his performances in Pandhayam, Sakkaram and Thunivan are marvelous. In Thillaana he was a replacement of GG to accompany NT, as GG performed the role of Nathaswaram exponent much earlier in Konjum Salangai a fore runner to TM!!
In Mayabazaar GG enacted the role of Abimanyu which was later reprised by AVMRajan in Veera Abimanyu while GG took over the role of Lord Krishna, in the footsteps of NTR in Mayabazaar!!
Last edited by sivajisenthil; 11th May 2015 at 09:45 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
12th May 2015, 11:30 AM
#653
Junior Member
Veteran Hubber
Today is World Nurses' Day in memory of Florence Nightingale!!
இன்று உலக செவிலியர் தினம்
காதல் மன்னரின் திரைக்காவியங்களில் தன்னலமற்ற வெள்ளுடை மருத்துவ தேவதைகள் பெருமைப் படுத்தப் பட்டிருக்கிறார்கள்
from 14 : 36
Last edited by sivajisenthil; 12th May 2015 at 11:34 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th May 2015, 07:27 AM
#654
Junior Member
Veteran Hubber
காஷ்மீர ரோஜாவுடன் காதல் ராஜா
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th May 2015, 04:38 PM
#655
Junior Member
Veteran Hubber
Page filler nostalgia on GG's Kaaththirundha Kankal song
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th May 2015, 11:41 PM
#656
Senior Member
Senior Hubber
சி.செ. மேற்கண்ட படத்தைப் பற்றி ஒருபாராவுக்கு மிகாமல் கூறவும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th May 2015, 06:42 PM
#657
Junior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
சி.செ. மேற்கண்ட படத்தைப் பற்றி ஒருபாராவுக்கு மிகாமல் கூறவும்

si ka
இப்படத்தில்தான் காதல் மன்னர் ஒரு முழுமையான ஹீரோவானார். இரட்டைவேடங்கள் என்பது ஒரு தனிச் சிறப்பு ஜோடியாக நடித்த சாவித்திரிக்கும் 'மாப்பிள்ளை டோய் மணியான மாப்பிள்ளை டோய்' என்ற அதிர்ஷ்ட தருணத்தில் மனம் போல மாங்கல்யம் கிடைக்க இப்படமே அடித்தளம்.எ எம் ராஜா ஜெமினியின் குரலாகவே அறியப்பட்டது இப்படத்திலிருந்துதான் என்று எண்ணுகிறேன். மிகப் பெரிய வெற்றியை எட்டிப் பிடித்து திரையுலக காதல் மன்னராக அச்சாரமிட்டு மூவேந்தர்களில் ஒருவராக நிலையான புகழுக்கு அடித்தளமிட்ட படம்.
Last edited by sivajisenthil; 15th May 2015 at 10:05 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th May 2015, 08:33 AM
#658
Senior Member
Diamond Hubber
சிவாஜி செந்தில் சார்
உங்களுக்காக

பாலா சுசீலா அம்மாவுடன் இணைந்து பாடிய 'சாந்தி நிலையம்' படப் பாடல். சூப்பர் டூப்பருக்கும் மேலே இந்தப் பாடல் ஹிட்டடித்தது. பாலாவின் குரல் கட்டிக் கொண்ட கள்வனாய் நம்மைக் கட்டிப் போட்டது.'மெல்லிசை மன்னரி'ன் இசை மென்மையாய் மனதை வருடியது. திருடியது.

'இயற்கை என்னும் இளைய கன்னி'
அடடா! என்ன ஒரு அருமையான பாடல்! எப்படிப்பட்ட ஒரு ஆரம்ப வரி!
இந்த பாடலை விஷூவலாகப் பார்க்கும் போது எனக்கு ஆச்சர்யங்கள் மேலோங்கியபடியே இருக்கும். இயற்கையின் அழகை இவ்வளவு அற்புதமாக இந்த கேமராமேனால் எப்படி படம் பிடிக்க முடிந்தது என்று? என்ன அருமையான லொகேஷன்! காதல் மன்னனாக ஜெமினி என்றால் அப்சரஸ் அன்னமாக காஞ்சனா தேவதை.
'தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ'
என குறும்பு கொப்பளிக்கும் வரிகள். இதை பாலா தன் குல்கந்து குரலில் கொண்டு வரும் அழகே அழகு.
பாடலின் ஆரம்பத்தில் 'ஆஹா ஆ...ஆ' என்று அம்மா ஹம்மிங் தர, 'ஓஹோஹோ' என்று பாலா தொடர்வது கொள்ளை அழகு. 'காதல் மன்னன்' ரெட் டீ ஷர்ட்டும், ஒயிட் பேன்ட்டுமாக இளமை ததும்ப காதல் புரிவது இன்பம். அக்மார்க் தமிழ் இளைய கன்னிகையாக கார் கூந்தல் அழகி காஞ்சனா. நல்ல ஜோடிப் பொருத்தம். (இதே ஜோடி 'அவளுக்கென்று ஓர் மனம்' படத்தில் 'மங்கையரின் மகராணி'யில் அட்டகாசம் புரியும்) குழைத்து வைத்த இயற்கை வண்ணம். கடலையும் மிஞ்சும் ஏரி வனப்பு. ஏற்றமிகு படகு சவாரி.
'பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட'
என்று பாலா குரல் நம் மனதில் என்றும் ஆட,
'பொட்டு வைத்த வண்ண முகம் நீராட'
என்று கன்னத்தில் விரல் தட்டி, வட்டப் பொட்டிட்டு காஞ்சனா நாமை வாட்ட, தாமரையாள் ஏன் சிரிக்க மாட்டாள்?
'கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ'
என்று ஆண் ஜெமினி கொஞ்சம் பெண் பாவம் காட்டுவதும் ரசிக்கத் தகுந்ததே!
'இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ'
என்ற வளமான கவிஞரின் கற்பனை.
'மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெயில் நேரம்தானே
மஞ்சம் ஒன்று போடலாமே'
என்று ஜெமினி நெஞ்சம் தொட்டு கொஞ்சி, பின் கெஞ்சி, காஞ்ச்சுவிடம் (என்னடா இது! சி.க மாதிரி எழுத ஆரம்பித்து விட்டேன்!
) லைட்டாக அப்ளிகேஷன் போட்டு வைக்க,
தண்ணீரில் சேலை நனையாமல், சேலையை சற்றே தூக்கிப் பிடித்து, காஞ்சனா மான் போலத் துள்ளியபடி,
'தரையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப்பட்டு பேசலாமே'
என அகமகிழ்ந்து சற்று நேரம் கேட்டு சம்மதம் தர சம்மதிக்க ,
இயற்கை உள்ளவரை நாம் இன்புற்று மகிழும் பாடல். நாயகன் நாயகியின் உடைகளில் வண்ணத்துக்கு ஏற்றவாறு எண்ணம் செலுத்தியிருப்பது இப்பாடலின் தனிச் சிறப்பு. அழகான ஆடைத் தேர்வுகள்.
குளுகுளு மலைப்பிரதேசம், இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள், அகன்ற ஆறுகள், கையகல கரையோரப் பூக்கள் மாலையில் மழைத்தூறல் நேரத்தில் மனம் மகிழ வைக்கும் கோணங்கள் என்று
எக்காலமும் நாம் எண்ணி எண்ணி மகிழும் மரகதப் பாடல். தமிழின் மிகச் சிறந்த வண்ண டூயட்களில் எதிலும் முதல்வரின் 'மயக்கமென்ன' விற்குப் பிறகு என்னை மயக்கிய 'இயற்கை என்னும் இளையகன்னி. உங்களுக்கு எப்படியோ?
இளமை கொஞ்சும் பாலாவின் வழுவழு இளநீர்க் குரலில் எத்தனை முறை கேட்டாலும் முதன் முதலாக கேட்பது போன்ற இன்ப உணர்வுதான் எப்போதுமே.

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விடடாள்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக் கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெயில் நேரம்தானே
மஞ்சம் ஒன்று போடலாமே
தரையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப்பட்டு பேசலாமே
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
Last edited by vasudevan31355; 17th May 2015 at 08:36 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th May 2015, 01:44 PM
#659
Junior Member
Veteran Hubber
what a pleasant surprise you have showered on me Vasu Sir!!
Welcome...Welcome ....My happiness has no bounds....feel like crossing an oasis amidst a desert.
அன்பிற்கினிய வாசு சார் !
ஒரு சாதாரண எறும்பாக இத்திரியில் நான் உணவுத் துகள் சேமிக்கும் வேளையில் உங்கள் வரவு ஆனந்தத்தின் உச்சமே ! யானை பலம் வந்தது போல் புல்லரித்து புளகாங்கிதமடைய வைத்து விட்டீர்கள்!! நன்றிகள் கோடி!!
இனி உங்கள் பதிவுகளுடன் சின்னக்கண்ணனும் சேர்ந்து திரியை சுடர் விட்டு பிரகாசிக்க வைக்க வேண்டுகிறேன் !
அன்புடன் செந்தில்
இப்போது என் மன நிலை ....உங்கள் எழுத்து மழையில் நனைந்து ஜெமினி ஆட்டம் போட எண்ணுகிறது!!
Last edited by sivajisenthil; 17th May 2015 at 02:04 PM.
-
17th May 2015, 01:54 PM
#660
Junior Member
Veteran Hubber
இந்த பாடலை விஷூவலாகப் பார்க்கும் போது எனக்கு ஆச்சர்யங்கள் மேலோங்கியபடியே இருக்கும். இயற்கையின் அழகை இவ்வளவு அற்புதமாக இந்த கேமராமேனால் எப்படி படம் பிடிக்க முடிந்தது என்று? என்ன அருமையான லொகேஷன்! காதல் மன்னனாக ஜெமினி என்றால் அப்சரஸ் அன்னமாக காஞ்சனா தேவதை.
by Vasu Sir
The Cinematography was remarkably handled by our ace Cinematographer of Indian screens Mr. Markus Bartley, winning the National Award for this movie! Earlier he had donned the camera for, if I am right, for Chemmeen, Konjum Salangai, Pattanathil Bootham...correct me if I am wrong.
Last edited by sivajisenthil; 17th May 2015 at 02:00 PM.
Bookmarks