-
19th May 2015, 06:07 AM
#11
Junior Member
Newbie Hubber
பாகப் பிரிவினை - 1959
Part-1
பாக பிரிவினை படம் நெய்வேலி அமராவதியில் 1969 இல் திரையிட பட்ட போது என் அன்னை இந்த படத்தின் சிறப்புகளை பற்றி நிறைய சிலாகித்தார். என்னுடன் தை பூசத்தில் நான் வாங்கிய பாட்டு புத்தகம் ஒன்று இருந்தது. அதில் முடிவில் குழந்தைக்கு என்னவானது? கண்ணையனின் கை கால்கள் மீண்டதா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்று பல கேள்விகளுடன் கதை சுருக்கம்.சுருக்கமே இரண்டு பக்கம்.
அப்போது சிவாஜியின் பழைய படங்களை தேடி தேடி பார்த்து கொண்டிருந்த நேரம்.வழக்கம் போல குணா,பக்கிரி, சந்திரசேகர்,பன்னீர்,போன்றோருடன் இதை முதலில் பார்த்த நினைவு. முதல் முறை பார்த்த போது மனதில் நச்சென தைத்தது சிவாஜியின் நடிப்பும்,சிவாஜி-எம்.ஆர்.ராதா ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும்.
இந்த படத்தை ஒரு எட்டு வருடம் சிவாஜி புது பட மோகங்களில் (1969 - 1977) மறந்தே போனேன். அவ்வப்போது இந்த படத்தின் அபார வெற்றி குறித்தும், இதன் மொழி மாற்ற படங்களில் நடிக்க நிறைய இந்திய நடிகர்கள் திணறி மறுத்ததும் பற்றிய செய்திகள் படிப்பேன். ஏனோ திரும்பி பார்க்கும் அளவு ஆர்வம் வரவில்லை.அப்போது மலையாள நண்பி ஒருவர் (பெயர் பார்வதி மேனோன் என்று நினைவு.வயதில் மூத்தவர் )நிறைகுடம் என்ற மலையாள படத்தை பற்றி சொல்லி, இதில் கமல் என்ற புது நடிகர் வித்யாசமாக நடித்ததை குறித்து கதையை சிலாகித்தார். எனக்கு சட்டென்று பாக பிரிவினை நினைவில் தோன்றியது. பிறகு நண்பன் ஹரிச்சந்திர பாபு ,பீ.டெக் 2ஆம் வருடம் படித்த போது முதல் நாள் முதல் ஷோ மிட்லண்ட் தியேட்டரில் 16 வயதினிலே என்ற படத்திற்கு புக் செய்து ,நாங்கள் 20 பேர் ஹாஸ்டலிலிருந்து (இம்பாலாவில் சோளா பட்டுரா)போனோம். படம் அசர வைத்தது. ஈர்ப்பு கொண்டு மீண்டும் பார்க்க தூண்டியது.
பத்திரிகைகள் கொண்டாட ஆரம்பித்தன. நல்ல படம் என்பதில் எனக்கு உடன்பாடுதான். நடிகர்களின் பங்களிப்பு,இசை ,வெளிப்புற படப் பிடிப்பு,திரைக் கதை எல்லாமே பிடித்தே இருந்தது.
ஆனால் பத்திரிகைகள் வழக்கம் போல மிகை படுத்தி , இதுதான் ரியலிச நடிப்பு, தமிழ் பட உலகின் திருப்பு முனை, அசல் கிராமம்,அசல் மக்கள், ரியலிச படம் என்று போட்டு தாக்கி ,மூளை சலவை செய்ய எனக்கோ ஒரு எண்ணம். என் நண்பர்களிடம் சொல்லி , மாதமொரு திரையீட்டில் பாக பிரிவினை போட செய்தேன் எங்கள் ஆடிடோரியத்தில் . பார்த்த மாணவர்களுக்கு ஷாக். 1959 லேயே இப்படியொரு படம் ,இப்படியொரு நடிப்பா? கமல் ,இதை பிரதியெடுத்து நடிக்க முயன்றும் பாதியளவு கூட செய்யவில்லையே? இந்த பட கதையமைப்பில் இருந்த இயல்பு தன்மை,பாத்திர வார்ப்புகளில் இருந்த அசலான கிராம மணம்,எடுத்து கொண்ட கருவில் சமூக அக்கறை துளி கூட பதினாறு வயதினிலே படத்தில் இல்லையே ,ஏன் ,ரஜினி கூட எம்.ஆர்.ராதாவின் அருகே வர முடியவில்லையே என்று என் அத்தனை நண்பர்களும் அதிசயித்தனர். once more கேட்டு திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்தோம்.
இந்த கேள்வி என் மனதில் இன்று வரை நிழலாடுகிறது. என்னவோ பதினாறு வயதினிலே க்கு முன்பு வெளிப்புற படப்பிடிப்பே நடக்காத மாதிரியும், அந்த படம்தான் தமிழ் பட திருப்பு முனை என்றும் ,பீம்சிங்,கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றவர்களை தொபெரென்று போட்டுவிட்டு , பாரதிராஜா (எனக்கும் பிடிக்கும்)இவரின் நூற்றுகணக்கான போலிகள் (செல்வராஜா,பாக்கியராஜா,etc etc )இவர்களை பத்திரிகைகள் கொண்டாடின. இத்தனைக்கும் துளி கூட ரியலிச சாயல் இல்லாமல், sensationalism ,pseudo -eusthetics ,கிச்சு கிச்சு காமெடிகள்,ஓட்ட வைத்தார்போல காட்சிகள், உண்மையில்லா பாத்திர வார்ப்புகள்,cliche ஆன படங்கள்,சம்பந்தமில்லா montage ,மொக்கை நடிப்பு என்று நூற்று கணக்கில் படங்கள்.(மகேந்திரன் விதிவிலக்கு,பாலு மகேந்திரா கொஞ்சம் தேறுவார்).ஷ்யாம் பெனெகல்,கிரீஷ் கர்னார்ட், அடூர் படங்களில் இருந்து உருவிய சில காட்சிகள்.(மூலத்தின் சாரத்தை உள்வாங்காமல்).எனக்கு குமட்டியது.மூச்சு திணறியது.
பதினாறு வயதினிலே துவக்கமே அபத்தம். பொருந்தா காதலில், ஒரு நாயகி சப்பாணிக்காக காத்திருப்பதாக. இது ரொமாண்டிக் வகை காதலல்லவே?அனுதாப வசதி காதல்தானே ,என்ன build up சம்பந்தமில்லாமல் என்ற சிரிப்பு வரும்.பிறகு ஓரளவு சுவையான காட்சிகள். ஆனால் டாக்டர் காட்சிகள் படத்தின் நம்பக தன்மையை தொபெலாக்கி விடும். டாக்டர் செவ்வாய் கிரகத்திலிருந்தா வருகிறார்? என் கிராமத்து நண்பர்களே இதை பற்றி ஏளனம் செய்துள்ளனர். பிறகு சப்பாணி-மயில் காட்சிகள் ஈர்ப்புள்ளவை. சுவாரஸ்யம். ஆனால் முடிவு? ஒரு சாதா தமிழ் பட கற்பழிப்பு சார்ந்த முடிவு. எந்த பாத்திரங்களிலும் அசல் தன்மையில்லை. வாழ்க்கை பதிவுகள் இல்லை.(குசும்பு,நையாண்டி,sadism இவை தவிர)
பிறகுதான் பாக பிரிவினை அருமை முழுதும் துலங்க ஆலம்பித்தது.(அப்போது வீ.சி.ஆர் கூட வராத காலம்) சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் தேடி தேடி பார்த்தேன். எனக்கு பீம்சிங்-சோலைமலை, பீம்சிங்-கே.எஸ்.ஜி இணைவு அவ்வளவு பிடிக்கும். (ஆரூர் தாஸ் இணைந்தது ஒரு விபத்தே)இப்போது பாகபிரிவினை படத்தை விரிவாக அலசுவோம்.
(தொடரும்)
Last edited by Gopal.s; 19th May 2015 at 09:47 PM.
-
Post Thanks / Like - 4 Thanks, 8 Likes
-
19th May 2015 06:07 AM
# ADS
Circuit advertisement
Bookmarks