-
22nd May 2015, 06:02 AM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
It is not a hit.
அதனால என்ன? இப்படி ஒரு கலையம்சங்கள் நிறைந்த, பின்நவீனத்துவ கூறுகள் உள்ள ஒரு படைப்பு நல்ல சினிமா ரசனையுள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதும், பொதுஜன குடும்ப மக்களை பார்த்து ரசிக்க வைத்ததுமே பெரியதொரு சாதனைதான். வரும் காலங்களில் ஒவ்வொருமுறையும் தொலைக் காட்சியில் இப்படம் ஒளிபரப்பப் படும்போது பார்க்கும் மக்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால் படைப்பு மாபெரும் வெற்றியாக அமையும். அந்த வகையில் அன்பே சிவமும் வெற்றிப் படம்தான். காலப்போக்கில் மக்களால் நிராகரிக்கப்படும் படங்களுக்கு மத்தியில் கமலின் படங்கள் பெரும் அங்கீகாரம் தனிப்பட்டது. இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே எந்த சினிமாக் கலைஞனுக்கும் வாய்க்காதது கமலுக்கு மட்டுமே.

Originally Posted by
Gopal,S.
Infact ,recently movies like Kanchana, VIP grossed much better than Linga,UV Etc.
கமலின் படங்களில் ரொம்ப சுமாராக சிலவற்றை பொருக்கி எடுத்தாலும், அவை கூட நீங்கள் குறிப்பிடும் படங்களின் தரத்தோடு மேம்பட்டு இருக்கும். எந்த விதத்திலும் ஒப்பீடு செய்யக் கூட தகுதியில்லாப் படங்கள் இவை.

Originally Posted by
Gopal,S.
Its high time Kamal and Rajini took stock of themselves and tried to give much better Quality Films. They cant carry themselves long.
அறிவுரைக்கு பஞ்சமில்ல. முப்பத்தி மூணு வயதிலேயே தேவர் மகன் என்ற படைப்பை செதுக்க முடிந்திருக்கிறது கதை, திரைக்கதை, வசனத்தால்.. கலையம்சம் பொருந்திய வணிக வெற்றிப் படங்களின் வரிசையில் இந்த வயதிலும் தொடர்ந்து தசா, விஸ்வரூபம் போன்ற படைப்புக்களை அளிக்க முடிகிறது. இந்த 'கமல் ரஜினி' என்ற வார்த்தைப் பிரயோகமே இருவரும் ஒரே காலத்தில் சினிமாத் துறையில் செயல்பட்டு வரும் கலைஞர்கள் போன்ற வரலாற்று ஆவணங்களுக்கு மட்டுமே பயன்படும். அதனால் எல்லாவற்றுக்கும் கமலையும் ரஜினியையும் இணைத்து ஒரு வார்த்தையை உருவாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. இருவரும் சமமாக ஒப்பிடப் படக் கூடியவர்களே இல்லை.

Originally Posted by
Gopal,S.
UV is brilliant in patch and losing out with purposeless Uththaman Episode.
உத்தமவில்லனில் சிலாகிக்க பல விஷயங்கள் இருக்கின்றது. உத்தமன் படலத்தில் கூட, பாடல் காட்சிகள் அட்டகாசம். அதனால் ஒட்டுமொத்தமாக ஒருவர் உத்தமன் படலத்தை நிராகரிக்கிறார் என்றால் அவரது ரசனைதான் அங்கே நகைப்புக்குரியது.

Originally Posted by
Gopal,S.
But K.B is a question mark?Is it a fitting tribute to his Guru?
உள்ளூர் பள்ளித் தலைமையாசிரியரை உலகப் பல்கலைக் கழகத்தில் ஒரு நாள் பாடம் எடுக்க வாய்ப்புக் கொடுத்ததே பெரிய விஷயம். Obviously UV is a fitting tribute to KB. Even KB not acting in UV, the way KH reads out the his own poem on KB would be a fitting tribute. ஏனெனில் படத்தின் மையக் கருத்தோடு தனது குருவினை தொடர்பு படுத்துவதே கமல் பாலச்சந்தருக்கு செய்யும் மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன்.

Originally Posted by
Gopal,S.
UV is a significant landmark Film and a good beginning for internalised private Film making not joining the mainstream. We can follow this path to give movies have a specific unique appeal.
UV is one of the significant landmark films under Kamal's umbrella. Apoorva SagothararkaL, Thevar Magan, Hey Ram, Mahanathi, Virumandi and Avvai Shanmugi are already in the list of milestone films.
Last edited by venkkiram; 22nd May 2015 at 06:11 AM.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd May 2015 06:02 AM
# ADS
Circuit advertisement
Bookmarks