-
25th May 2015, 11:05 PM
#2421
Senior Member
Seasoned Hubber

நண்பர்களே,
நம் இதய தெய்வம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் நோக்கத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப் பட்ட நமது நடிகர் திலகம் இணைய தளம், அதிலிருந்து சற்றும் வழுவாமல், இன்று சிறப்பானதொரு மைல்கல்லை அடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சிக்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் உரிமையாளராவார். அதற்குக் காரணமும் அவரே யாவார். நம் நடிகர் திலகம் இணைய தளத்தின் Tagline, "With your company in our heart and soul, we shall reach great heights!". எல்லாம் வல்ல இறைவனருளாலும் நடிகர் திலகத்தின் ஆசியாலும் இந்த வரிகள் ஜீவனுடன் விளங்குகின்றன. அதற்கொப்ப நமது இணைய தளமும் சிறப்புடன் நடை போடுகிறது. இந்த வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் நமது இணைய தளமான www.nadigarthilagam.com, நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் அதிகார பூர்வமான இணையதளமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் மற்றோர் மைல்கல்லாக இன்றைய தினம் இவ்விணைய தளத்தின் பார்வையாளர் எண்ணிககை
1,00,000
என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. இதற்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதற்குக் காரணம், நம் இணைய தளத்தில் பார்வையாளர் எண்ணிக்கை என்பது முதன் முதலாக நம் இணைய தளத்தைப் பார்வையிட வரும் வருகையை மட்டுமே கணக்கில் கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கிட்டத் தட்ட ஒரு லட்சம் சிவாஜி ரசிகர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் மற்றும் பல்வேறு நட்சத்திரங்களின் ரசிகர்களையும் ஈர்த்து வரவழைத்துள்ளது.
இதற்காக ஒவ்வொருவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஆசியுடன் நமது நடிகர் திலகம் இணைய தளம் மென்மேலும் வெற்றியுடன் நடைபோடும் என்பதில் ஐயமில்லை.
புதிய பொலிவுடன் பல்வேறு புதிய அம்சங்களுடன் நமது இணைய தளம் மேலும் சிறப்புற அமைக்கப் பட்டு வருகின்றது. தங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் மட்டுமே இது சாத்தியம்.
நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
25th May 2015 11:05 PM
# ADS
Circuit advertisement
-
25th May 2015, 11:26 PM
#2422
மனம் நிறைந்த வாழ்த்துகள் ராகவேந்தர் சார்.
உங்கள் சேவை மென்மேலும் சிறக்க
வாசகர் எண்ணிக்கை மென்மேலும் பெருக
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th May 2015, 11:47 PM
#2423
Junior Member
Regular Hubber
வாழ்த்துக்கள் திரு ராகவேந்திரா சார் எண்ணிக்கை மென்மேலும் பெருகும்.நடிகர்திலகத்தின் ஆசி எப்பொழுதும் தங்களுக்கு உண்டு.
-
26th May 2015, 03:59 AM
#2424
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர்,
இந்த இணைய தளத்திற்கு 7 கோடி ஹிட்ஸ் வரும் நாளே ,உண்மை தமிழர்களுக்கு பொன்னாள் . மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
26th May 2015, 04:03 AM
#2425
Junior Member
Newbie Hubber
முத்தையன்,
தங்களின் ஸ்டில் தேர்ந்தெடுப்பு, ரசிகர்களின் உச்ச பட்ச ரசனையை அறிந்து , செயல்படுவதாக உள்ளது. தங்களின் அனுபவம் கை கொடுக்கிறது. அருமை. நடிகர்திலகம் ராஜா பட ஸ்டில்களை எதிர்நோக்கியுள்ளேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th May 2015, 10:36 AM
#2426
Junior Member
Seasoned Hubber
ராகவேந்திரா சார் - சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை .
-
26th May 2015, 10:49 AM
#2427
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943

தற்பொழுது சற்று உடல்நலம் குன்றி உள்ளார் என்று கேள்விபட்டேன். நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த மூத்த கலைஞர்களில் தனி சிறப்பு உடையவர். அவர் உடல் நலம் தேறி நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல அந்த இறை ஆற்றலை வேண்டும்
-
26th May 2015, 11:11 AM
#2428
Junior Member
Seasoned Hubber
Congratulation Mr Raghavendra Sir for crossing one more milestone. Behind this we can see your untired effort in making this
website as sucessful one.
Regards
-
26th May 2015, 11:17 AM
#2429
Junior Member
Seasoned Hubber
AVAN THAN MANITHAN - what a memorable function and it can't be described in words. Gate crashing crowds never seen
in the history of Russian Centre. Festive atmosphere prevailed upto the climax scene. The book release function went off
very well with a splendid speech by Mr YGM as well as from Mr Ramkumar Ganesan.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th May 2015, 11:47 AM
#2430
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks