-
27th May 2015, 12:53 PM
#2491
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th May 2015 12:53 PM
# ADS
Circuit advertisement
-
27th May 2015, 12:56 PM
#2492
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th May 2015, 01:06 PM
#2493
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th May 2015, 01:09 PM
#2494
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
27th May 2015, 03:04 PM
#2495
பாலும் பழமும்
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு ஏன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே 1961-ம் ஆண்டைப் பொறுத்தவரை இரண்டு phrases மிகப் பொருத்தமாக அமையும். ஒன்று Embarrassment of Riches மற்றொன்று Spoilt for Choices. காரணம் அந்தளவிற்கு எதை எடுப்பது எதை விடுவது என்று குழம்பி போவோம்.
பெரும்பாலானோரிடம் பாவ மன்னிப்பு, பாச மலர் மற்றும் பாலும் பழமும் என்ற மூன்று பா வரிசை காவியங்களும் ஒரே காலண்டர் ஆண்டில்தான் [1961-ல்] வெளியானது என்று சொன்னால் பிரமிப்பாக பார்ப்பதை கவனித்திருக்கிறேன். அவர்களிடம் அது மட்டுமல்ல செக்கிழுத்த செம்மல் வ.உ.சியாகவும் அவர் வாழ்ந்த வருடமும் 1961 என்பதை சுட்டிக் காட்டுவேன். அது மட்டுமல்ல லட்சியவாதியான அரசியல்வாதியாக தியாகத்தின் உருவமாக அவர் இயல்பாக வாழ்ந்த எல்லாம் உனக்காகவும் அதே வருடம்தான் என்பேன், தாய் மகன் பாசம், குடிபோதையில் மகன் வாழ்வு சீரழிவதை கண்டு தாய் தவிப்பதை கண் முன் நிறுத்திய புனர் ஜென்மம் இதே 1961-ல்தான்..நடிகர் திலகம் ஏற்று நடிக்காத புராண கதாபாத்திரங்களே இல்லை என்பதற்கு மற்றொரு ஆதாரமான முருக பெருமான் வேடத்தை அவர் அணிந்த ஸ்ரீவள்ளி வெளிவந்ததும் இதே 1961-ல்தான். இவையெல்லாம் போதாது என்பது போல் 14 கெட் அப்களில் [14 வித்தியாச தோற்றங்களில்] அவர் நம்மை மயக்கிய மருத நாட்டு வீரன் திரைக்கு வந்ததும் இதே 1961-ல்தான் என்று சொல்லும்போது பலரும் பிரமிப்பின் எல்லைக்கு போய் விடுவார்கள். அதனால்தான் இந்த 1961-ஐ பொறுத்தவரை அந்த ஆங்கில phrases அந்தளவிற்கு பொருத்தம் என்று சொன்னேன்.
இனி பாலும் பழமும் படத்திற்கு வருவோம். அந்த மூன்று பா வரிசை படங்களை எடுத்துக் கொண்டோமோனால் பலருக்கு முதல் சாய்ஸாக ரஹீமை பிடிக்கும். பலருக்கு முதல் சாய்ஸாக ராஜு என்ற ராஜசேகரனை பிடிக்கும். மற்ற பலருக்கு முதல் சாய்ஸ் Dr ரவி. எனக்கு மூன்று பேரையுமே ரொம்ப பிடிக்கும் என்ற போதினும் நேரிய நூலிழையில் ரவி வெற்றி பெறுவார். அதற்கு மனதளவில் நான் பிரமிக்கும் காரணம் அவர் ஏற்றிருந்த ரோலும் அதை திரையில் வடிவமைத்த விதமும். உயர்நிலை பள்ளிப்படிப்பிற்கு கூட போகாத ஒருவர் ஒரு சிறப்பு மருத்துவரை தோற்றத்தில், நடையில் பேச்சில் ஏன் மொத்த உடல் மொழியில் கொண்டு வந்தாரே அதற்காக!
பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?
அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1980-ம் வருடம் பிப்ரவரி மாதம். மதுரை ஸ்ரீதேவியில் பாலும் பழமும் எண்ணற்ற மறு வெளியீடுகளில் ஒன்றாக வெளியாகியிருக்கிறது. நாங்கள் நண்பர்கள் சென்றிருந்தோம். எங்களுக்கு முன் வரிசையில் கல்லூரி மாணவிகள் ஒரு குழுவாக வந்திருந்தனர். நான் மேலே குறிப்பிட்ட அந்த டா போட்டு பேசும் காட்சியில் அந்த வசனம் வந்ததும் அவர்கள் அடைந்த சந்தோசம் பக்கத்தில் திரும்பி ஒருவருக்கு ஒருவர் அதை பற்றி சிலாகித்து பேசியது அனைத்தும் பசுமையாக மனதில் இருக்கிறது. பாலும் பழமும் வெளிவந்த பிறகு நடிகர் திலகத்திற்கு ஏற்கனவே இருந்ததை விட பெண் ரசிகைகள் ஏராளமாக பெருகினார்கள் என்று சொல்லுவார்கள். அது எந்தளவிற்கு உண்மை என்பது கிட்டத்தட்ட படம் வெளியான 20 வருடங்களுக்கு பிறகும் அதுவும் அன்றைய நான் குறிப்பிடும் காலகட்டத்தில் [1980] 19,20 வயது பெண்கள் மத்தியிலும் கூட தொடர்ந்தது என்பதற்கு நானே. நேரடி சாட்சி.
<Dig
அந்த காலகட்டத்தில்தான் ஸ்ரீதேவியில் பாலும் பழமும் படத்தை தொடர்ந்து கட்டபொம்மன் வெளியாகி சாதனை படைத்தது நினைவிற்கு வருகிறது. வேறொரு சம்பவமும் நினைவிற்கு வருகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து சினிமா எக்ஸ்பிரஸ் மாதமிருமுறையாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த பத்திரிக்கையின் முதல் இதழ் 1980 பிப்ரவரி 1-ந் தேதியிட்ட இதழாக வெளியானது. வெளியீட்டு விழா முதல் நாள் ஜனவரி 31 அன்று நடைபெற்றது. அந்த பத்திரிக்கையின் நான்காவது இதழ் மார்ச் 15-ந் தேதியிட்ட இதழில் நடுப்பக்கத்தில் நடிகர் திலகம் ராணுவ வீரராக [Army Officer] கம்பீரமாக அமர்ந்திருக்கும் பிரமாண்ட ப்ஃளோ அப் [Blow up] வந்திருந்தது. அந்த நேரத்தில்தான் கட்டபொம்மன் ஸ்ரீதேவியில் வெளியாகியிருந்தது. அந்த சினிமா எக்ஸ்பிரஸ் இதழை வாங்கிக் கொண்டு தியேட்டருக்கு போனது, அங்கே தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவரும் வாங்கிப் பார்த்து குறிப்பாக நடிகர் திலகத்தின் ப்ஃளோ அப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் சிலாகித்தது இன்றைக்கும் நெஞ்சில் பசுமரத்தாணி.
end dig>
அவர் எம்.ஆர். ராதாவை டீல் செய்யும் அழகே தனி. அது போல் சுப்பையா மற்றும் பாலையா ஆகியோரிடம் காட்டும் பணிவு, திருமண விஷயத்தில் தன் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லும் விதம், Chief டாக்டர் நாகையாவிடம் காட்டும் அந்த professional மரியாதை, சௌகாரிடம் மனம் விரும்பி அன்பு செலுத்த முடியாமல் அதே நேரம் வெறுத்தும் ஒதுக்காமல் தவிக்கும் தவிப்பு, நீலா சாந்தியாகி விட மாட்டாளா என்ற உள்மன ஆசை, இப்படி எத்தனை எத்தனை பாவங்கள்!
சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!
கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அபிநய சரஸ்வதி அருமையாக செய்த படங்களில் இதுவும் ஒன்று
கவியரசரும் மெல்லிசை மன்னர்களும் பாடகர் திலகமும் இசையரசியும் கொடி கட்டி பறந்த படம் இது. ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலில் கணவன் மனைவியின் அன்னியோனியத்தை கவியரசர் எப்படி வர்ணித்திருக்கிறார் பாருங்கள்.
காதல் கோவில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
ஆரும் அறியாப் பொழுதினிலே
அடைக்கலமானேன் முடிவினிலே
நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் இரண்டாவது சரணத்தில் இசையரசி பாடும் வரிகளில்
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை .
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் என்னை மெய்மறக்க செய்யும் பாவம், உச்சரிப்பு.
படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.
முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவன் முன்னால்
பரம்பரை நாணம் தோன்றுமா
என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி
என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.
பாலும் பழமும் படத்தை பற்றி இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம். நேரமின்மை காரணமாக பிறிதொரு நேரத்தில் எழுதுகிறேன்..
நான் முன்பொரு முறை பாலும் பழமும் பற்றி எழுதும்போது இப்படி எழுதி முடித்திருந்தேன்.அதையே மீண்டும் இந்த பதிவிற்கு முடிவுரையாக எழுதுகிறேன்
தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.
அன்புடன்
-
Post Thanks / Like - 3 Thanks, 7 Likes
-
27th May 2015, 03:14 PM
#2496
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
என் உள்ளம் மகிழ்ந்த வாழ்த்துக்கள். ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஒரு கோடியாகட்டும். நடிகர் திலகம் இணையதளம் இணையில்லாப் புகழ் பெறட்டும்.
முரளி சார்,
அவன்தான் மனிதனை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள். ஒவ்வொரு வரியும் அற்புதம். அதுவும் தலையெழுத்தை, தலைவிதியை தலைவர் செய்து காட்டும் அற்புதத்தை அது போலவே சுட்டிக்காட்டி எழுதி இதயத்துள் நுழைந்தமைக்கு நன்றி! அருமையான நேரடி ஒளிபரப்பைத்தான் உங்கள் பதிவில் நான் பார்த்தேன்.
முத்தையன் அம்மு,
தலைவரின் ஸ்டில்கள் ஒவ்வொன்றும் அருமை! நன்றி!
Last edited by vasudevan31355; 27th May 2015 at 03:20 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th May 2015, 03:20 PM
#2497
Senior Member
Diamond Hubber
கோபால்,
வழக்கத்தை விடவும் உங்கள் 'திருவிளையாடல்'
மேலும் சுவை. அனைத்தையும் வெகு அழகாக நான்கு பாராவுக்குள் கவர் செய்து விட்டீர்கள். பாடல் காட்சிகளின் இடைவெளி வரை வெளிப்படுத்தியிருப்பது முத்தாய்ப்பு. தலைவர் மீனவனாக சுறா சூறையாடச் செல்வாரே! புறப்படுமுன் வெகு அழகாக வழியனுப்ப வந்தோரைப் பார்த்து கையசைத்து விட்டு செல்வாரே!(ஆசி கூறுவது போல)
அதே போலத்தான் உங்கள் பதிவுகளையும் அவர் படித்திருந்தால் உங்களை வாழ்த்தியிருப்பார்.

சாவித்திரி பொருந்தா ஜோடி வடிவம் பற்றி தாங்கள் எழுதியதைக் கண்டதும் உண்மையாய் இருந்தாலும் 'களுக்'கென்று சிரித்து விட்டேன். ரசமான பதிவு.
அத்தனை காட்சிகளும் அறுசுவை. அதில் எனக்கு பிடித்த ஒன்று.
நிறுத்தி நிதானமாக மனையாள் மன்றாடி கோபப்படவேண்டாம் என்று பீடிகையெல்லாம் போட்டு வேண்டுகோள் விடுக்குமுன்,
அந்த கம்பீர அமர் போஸில் மிக அழுத்தம் திருத்தமாக, அதே சமயம் நிதானம் தவறாமல், கால் முட்டியை கைவிரல்கள் தேய்த்து கொடுத்தபடி புலித்தோல் ஆடை அணிந்த சிவ சிங்கம் கேட்கும்....
"என்ன கேட்கப் போகிறாய்?" (இந்த 'சிங்கத் திருவிளையாடல்' ஒன்று போதும்)
Last edited by vasudevan31355; 27th May 2015 at 03:34 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th May 2015, 05:05 PM
#2498
அவன்தான் மனிதன் பதிவை பாராட்டிய
ராகவேந்தர் சார்,
சந்திரசேகர்
எஸ். வாசுதேவன்
ரவி
வாசு
அனைவருக்கும் நன்றி.
வாசு,
அவன்தான் மனிதன் ஸ்டில்ஸ்ற்கு மனங்கனிந்த நன்றி. இன்னும் சொல்லப் போனால் [நீங்கள் நம்புவீர்களோ தெரியாது] அன்று படம் பார்க்கும்போது தலைவரின் close up ஷாட் வரும். அதாவது ஜெயலலிதாவை குழந்தைக்காக முத்துராமன் வீட்டிற்கு அனுப்பி வைத்தவுடன் அவர் வருகிறார் என்று பார்த்துக் கொண்டே இருப்பார். அப்போது வரும் close up ஷாட். எனக்கு எப்போதும் அவரின் நீண்ட அழகாக வடிவைக்கமப்பட்ட கிருதாவின் மேல் ஒரு தனி மோகம். சிறு வயதில் அதே போன்று வைக்க முயற்சி செய்து சரி வரவில்லை. அந்த காலகட்டத்தில் [1971- 1977 ] அவரின் profile pose ஸ்க்ரீனில் வரும்போது பார்த்துக் கொண்டே இருப்பேன். பத்திரிக்கையில் வருவதையும்தான். அன்றைக்கு அந்த ஷாட் வந்தபோது பழைய நினைவுகள் வந்துவிட்டன. மற்றொன்றையும் கவனித்தேன். எவ்வளவு நேர்த்தியான செவி மடல் அவருக்கு. எந்த மாசும் மருவில்லாமல்! அதை மீண்டும் புகைப்படமாக காட்டியதற்கு நன்றி!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th May 2015, 06:05 PM
#2499
Junior Member
Platinum Hubber
28.5.2015 அன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்கள் எல்லா வளமும் பெற்று ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க என்று அன்புடன் வாழ்த்துகிறேன் .
வினோத்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
27th May 2015, 06:19 PM
#2500
Junior Member
Veteran Hubber
Happy Birthday wishes to Raghavendhar Sir.
For many more happy returns of the day....!
with respectful regards, senthil
NT sings for you too...Raghav sir! You are a candle of this esteemed thread that candidly lights up thousand candles like me to expand the cosmic regime of NT in an ever geometric progression irrespective of generation gaps!!
வாழ்க்கையில் நாம் ஏதோ ஒரு கோணத்தில் யாராலோ எப்போதோ துரத்தலுக்கு ஆளாகிக்கொண்டே இருப்போம். மனோதைரியம் துணிச்சல் தீர்க்க முடிவுகள் நம்மை நிலைநிறுத்தும் இறுதியில் புத்திசாலித்தனமான நகர்வுகள் மூலம் நமக்கு வெற்றியே கிட்டும்!!
இதுவே மானிட வாழ்வியல் வழிகாட்டி ஷான் கானரியின் ஜேம்ஸ் பாண்டிசம் !! இக்காணொளி உங்களை சோர்வு துறந்து சுறுசுறுப்புக்கு தூக்கி விடும் பிறந்த நாள் ஏணியாகட்டும்!!
Last edited by sivajisenthil; 28th May 2015 at 08:08 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks