-
30th May 2015, 08:53 PM
#441
Senior Member
Veteran Hubber
chinnakkaNNan: Here is another 'kattazhagu' song for you:
kaN padume pirar kaN padume nee veLiye varalaamaa un
kattazhagaana meniyai ooraar kaNNukku tharalaamaa
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th May 2015 08:53 PM
# ADS
Circuit advertisement
-
30th May 2015, 10:08 PM
#442
Senior Member
Senior Hubber
பாடினார் கவிஞர் பாடினார் – 9
*
ரொம்ப நாள் ஆனதினால recap மாதிரி போன அத்தியாயத்தின் இறுதிப் பகுதி
*
அடுத்ததாக வரப்போகும் கவிஞர் பிறைசூடனுக்கு என்னாயிற்று..
இளையராஜா பாட்டிற்குப் பாட்டெழுத வேண்டும். மெட்டெழுதுவதற்குக் காஸெட் ஒரு நாள் முன்னமே வந்தாயிற்று.. ஆனாலும் ரெகார்டிங்கிற்காக டாக்ஸியில் கிளம்பி பாதி தூரம் போகும் வரை அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை..அப்புறம் என்ன செய்தார்..
*
இனி
*
தானானா தானேனா தான தானா…
கால் டாக்ஸி தான்.. கம்பெனி செலவு.. நல்ல ஏஸி.. குளிரக் குளிர பின்சீட்டிலும் அடித்தது..ஆனால் அதை மீறியும் கவிஞர் பிறைசூடனுக்கு வியர்த்தது..
எழுத வேண்டியது டூயட் பாடல்.. தானானா தானேனா தான தானா…
அரை மணி நேரம் தாண்டியவுடன் சட்டென்று யோசனை..
ஒரு டீக்கடையோரம் நிறுத்தப்பா
நிறுத்தினார் டிரைவர்..இறங்கி ஒரு டீ போடுங்க என்று கேட்கும் போதே கவிஞரின் நெற்றி முடிச்சுகள் இயல்பு நிலைக்கு வந்தன.. ஏனெனில் அந்தக் கடையில் ஒலித்த பாடல் தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா..
ஆஹா.. ஒரு பாடல் அவருடைய திரை வாழ்க்கைக்கான முதல் பாடலைப் பிரசவிக்கக் காரணமாயிருந்தது..
ட்ரைவர் பேப்பர் பேனா இருக்காப்பா
பேனா இருக்குங்க பேப்பர்..
டீக்கடைக்காரரே இருக்குங்களா..
இந்தாங்க கணக்கு எழுதற் நோட்புக் .. நீங்களே கிழிச்சுக்குங்க
கிழிக்காமல் மணி மணியாய் வரி வரியாய் வரிகள் பெஞ்சில் உட்கார்ந்தவாறே எழுதி விட்டார் முழுப்பாடலையும்..
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட
*
இதைக் கிழிச்சுக்குவாங்க..
நீங்க யாரு..
கவிஞன்..சினிமாப் பாட்டுக்கு எழுதப் போறேன்..
டீக்கடைக் காரர் முகத்தில் புன்னகை.. நினச்சேன்..சூழ்நிலை வெயில் எதுவும் பொருட்படுத்தாம வேக வேகமா எழுதினீங்களே.. நல்லதுங்க..அந்த நோட்புக்ல நா எதுவும் பெரிசா எழுதலை.. நான் எழுதினதைக் கிழிச்சுக்கறேன்.. நீங்களே நோட் வச்சுக்கங்க..என்னைக் கொஞ்சம் நினைவும் வச்சுக்கங்க..அதென்னங்க இங்க்லீஷ்ல சொல்வாங்களே.. ஆல் தி பெஸ்ட் சார்..
ஒரு கணம் வியப்பு, மறுகணம் மகிழ்ச்சி..பரபரவென அவர் கேட்ட காகிதங்களைக் கிழித்துக் கொடுத்து நோட்புக்குடன் டாக்சி ஏறி ஸ்டூடியோ சென்று இசையமைப்பாளர் இளையராஜாவிடம் சென்று கொடுத்தால் படித்த ராசாவின் நெற்றிச் சுருக்கங்கள் முதலில் தோன்றி மெல்ல மறைய புன்னகை மலர..எங்கே என தனது டீம் ஐக்கூப்பிட்டு பாடச் சொல்லி… ரீ ரெகார்டிங்க் அன்றே அப்பொழுதே..
இப்படித் தான் ஆரம்பித்தது பிறைசூடனின் திரைப் பயணம்.. இருப்பினும் தொடர்ச்சியாக இல்லை..சற்றே பிடிவாதக் குணம் கொண்டவராம்..திரைப்பாடல்களில் ஆழ்ந்த ஞானம்..
இவரைப் பார்த்தது முதன் முதலில் கலைஞர் டிவியில் வந்த ஒரு இசை நிகழ்ச்சி..பாடலாம் டூயட் பாடலை.. ஒவ்வொருபாட்டுக்கும் அதன் சூழலை வெகு அழகாக விளக்கியிருந்தார்.பிறைசூடன்.
சில பல நல்ல பாடல்களுக்குச் சொந்தக் காரர்…
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா – ராஜாதி ராஜா..ச்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேருமென்னடி – உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் ( எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று)
சோலைப் பசுங்கிளியே – என் ராசாவின் மனசுல
கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே
*
செம்பருத்தி ஆர்.கே செல்வமணியின் முதல், ரோஜாவின் முதல் படம் என நினைக்கிறேன்.. பானுமதியின் பேரன் பிரசாந்த்.. சோகமாய்ப்பாடும் பாடல் இவர் எழுதியது தான்..
*
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒண்ணும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே
ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கரமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான் - அது
அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான்
அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மைபா
சொல்லடி ஞானப்பெண்ணே
*
பாட்டியைப் பற்றி பேரன் நினைந்து பாடும் பாடல் வெகு அழகாக இருக்கிறது தானே..
இவர் பாட்டெழுதிய இன்னொரு அழகான பாடல் அதுவும் ப்ரஷாந்த் தான்.. கூட 36 வயது அப்போது ஆகாத ஜோதிகா..
ம்...ரசிகா ரசிகா என் ரசிக ரசிக பெண் ரசிகா
திரு ரசிகா ரசிகா எனை திருடி போன திரு ரசிகா
அதில் எனக்குப் பிடித்த வரிகள்:
உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்...
நமது தேடல்கள் தான் என்று முடிந்திருக்கிறது..எப்போதும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறதுவாழ்வின் இறுதிவரை..
சுஜாதா எஸ்.பி.பி படம் ஸ்டார்..
இன்னும் இவர் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம்..ம்ம்
*
எல்லா விதமாகவும் வெகு அழகாக இனிக்கும் தமிழில் அருவியாய் கொட்டக்கூடியவர் அந்த ப் பெரிய கவிஞர்.. எல்லாவிதமாக எழுதக் கூடியவர் என்றாலும் நாசூக்காய் சிருங்காரத்தை எழுதுவதில் வல்லவர்..ஆனால் அவருடைய தமிழ் இருக்கிறதே.. தமிழன்னை நாடி நரம்புகளில் பொங்கிப் பிரவாகிக்கிறாள் இன்றும் என்றே சொல்லவேண்டும்..
அவரிடம் டைரக்டர் சொன்ன சிச்சுவேஷன்..
*
அந்தப் பெண்ணுக்கு சிறுவயது. ஆனால் விதி வசத்தில் தொழில்- செய்வதில் ஈடுபடுத்தப் பட்டு விடுகிறாள்.. இருப்பினும் ஆழ் மனத்தில் ஒரு எண்ணம்..ம்ம் படிக்கவேண்டும் எப்படியாவது.. என .. இரவில் வேலை பகலில் படிப்பு..எப்படியோ தொடர்ந்துவிட மறு நாள் முக்கியப் பரீட்சை..இரவில் ஒரு வாலிபன் வர..என்னசெய்ய தொழிலாயிற்றே.. அவனிடம் கேட்கிறாள் “சீக்கிரம் விட்டுடுங்க..எனக்கு நாளைக்குப் பரீட்சை..”
வந்தவன் அதிர்கிறான்..அவனும் இது போன்ற அனுபவத்திற்குப் புதிதானவன்..அந்தச் சிறுமியின் கண்களைப் பார்க்கிறான்..பின் உள்ளறையில் கொஞ்சம்மறைவாய் படுக்கைக்கு அப்பால் பிரித்து வைக்கப் பட்டிருக்கும் புத்தகங்கள்..
நீ இப்பவே படி.. நான் இந்தப்பக்கம் தூங்கறேன்
அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர்.. பின் படிக்க ஆரம்பிக்கிறாள்..
காலப் போக்கில் அந்தப் பெண்ணை விடுதியிலிருந்து விடுவித்து திருமணமும் செய்து கொள்கிறான்.. அவள் கண்களிலிருந்து விழும் நீர்த்துளிகள் அவன் கால்களைக் கழுவுகின்றன
*
இதான் சிச்சுவேஷன் கவிஞரே.. இங்க ஒரு சாங்க் போடணும்..
போட்டுடலாம்..மெட்டு
இதோ.. இசையமைப்பாளர் சொல்ல கவிஞர் எழுதிய பாடல் என்ன , கவிஞர் யார் என்றால்..
ப்ளீஸ் வெய்ட் ஃபார் த நெக்ஸ்ட் எபிசோட்..
நா அப்புறம் வாரேன்
Last edited by chinnakkannan; 30th May 2015 at 10:38 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
31st May 2015, 01:17 AM
#443
Senior Member
Seasoned Hubber
திலக சங்கமம் & Sivaji Ganesan - Definition of Style 23
குலமகள் ராதை
பொதுவாகவே தமிழ்த் திரையுலகில் ஆண்களைத் திரும்பத் திரும்பத் திரைப்படத்திற்கு வரவழைக்கும் சக்தி காதலுக்கு உண்டு.. அதை விட அதிகம் அதன் தோல்விக்கு உண்டு... வயது வித்தியாசமின்றி ஆண் இனம் சினிமாவில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி உள்செலுத்திக் கொண்டு ஆறுதல் தேடுவது காதல் தோல்விக் காட்சிகளிலும் அதனையொட்டிய பாடல்களிலும் தான். இது சினிமாவின் வெற்றிக்கு ஒரு ரகசியமாகக் கூட கொள்ளலாம்.
அப்படி ஆணினத்தை வரவழைக்கும் சக்தி காதல் தோல்விப் பாடல்களுக்கு உண்டு என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர் கவியரசர் கண்ணதாசன். அவர்களின் மனதில் தனக்கெனத் தனியிடத்தை கவியரசர் பெற்றார் என்றால் அதில் பெரும் பங்கு காதல் தோல்விப் பாடல்களையே சாரும்.
இதற்குப் பெரிதும் உதாரணமாக விளங்குவது இரண்டு பாடல்களைச் சொல்லலாம். நூற்றாண்டுத் தமிழ்த்திரையுலகில் மெல்லிசை மன்னர்கள் கொடிகட்டிய காலத்திலும் சரி, அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்கள் படைத்த காதல் தோல்விப் பாடல்களைப் போல் அமரத்துவம் பெற்ற பாடல்களை யாராலும் படைக்க முடியவில்லை என்பதே உண்மை.
அதுவும் இந்த இரண்டு பாடல்கள் -
குலமகள் ராதை படத்தில் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
மற்றும்
வானம்பாடி படத்தில் கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் ..
இந்த இரண்டு பாடல்களும் அந்தக் கால இளைஞர்களை மட்டுமின்றி எக்கால இளைஞர்களையும் ஈர்க்கக் கூடிய சிரஞ்சீவித்துவமான வரிகளைக் கொண்டு அமைந்தவை. இந்த அளவிற்கு காதல் தோல்வியின் வலியை ஆழமாக வேறு எந்தப் பாடலும் சித்தரிக்கவில்லை என்பது நிதர்சனம். எத்தனையோ பாடல்களை பதிலாக கூற முற்படலாம். ஆனால் தாக்கம் என்பது இந்த இரு பாடல்களுக்குப் பிறகே எனக் கூற முடியும்.
குறிப்பாக வெளியான நாள் தொட்டு இன்று வரை திரையரங்கில் ரசிகர்கள் தங்களை முழுதும் ஈடுபடுத்திக் கொள்வது குலமகள் ராதை படப்பாடலில் தான். ஒவ்வொரு வரியும் காதலில் தோல்வியடைந்தவர்கள் தங்கள் உள்மனதை வெளிப்படுத்தும் வகையில் உணர்ந்து பாடலோடு ஐக்கியமாகி விடுவதே இப்பாடலின் இமாலய வெற்றிக்குக் காரணம்.
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடல் இரு திலகங்களின் சங்கமத்தின் சிகரம் எனலாம். எவ்வாறு நடிகர் திலகம் மெல்லிசை மன்னர்கள் இணைந்த எங்கே நிம்மதி இறவாப் புகழ் பெற்றதோ அதற்குச் சற்றும் குறையாத பெருமை வாய்ந்த பாடல் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாடல்
நடிகர் திலகத்தின் நடை..
இதைப் பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளது.
ஆனால் இப்பாடலில் காதல் தோல்வியைத் தன் நடையிலேயே சித்தரிக்கும் உன்னதத்தை என்னென்பது. அந்த மேட்டில் ஏறும் போதே அவருடைய நடையில் அந்த்த் துயர் தெரிய ஆரம்பிக்கிறது. அசரீரியில் அவருடைய குரல் அவளைப் பற்றிக் கூற நடையில் மெல்ல மெல்ல அதன் வீச்சு அதிகமாகிறது. அந்த அசரீரி முடியும் தருவாயில் வலது காலை வைத்த பின்னர் இடது காலை சற்றே தாமதித்து எடுத்து வைக்கும் போது அவர் வெளிப்படுத்தும் உணர்வு...
கோபம் கொப்பளிக்க பாடகர் திலகத்தின் குரல் துவங்குகிறது. ராதா ராதா... என ஒலிக்க அந்த இடி மின்னலுடன் துவங்குகிறது பாடல் காட்சி..
அந்த இடி மின்னலில் எவ்வளவு தான் உரத்த குரல் கொடுத்தாலும் காதில் கேட்காது என்பது நாயகனுக்குத் தெரியும் இருந்தாலும் அவனுடைய ஆற்றாமை அவள் காதில் விழவேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கிறான். அந்த ராதா என்கின்ற குரலுக்கு தன் உதட்டசைவில் அழுத்தம் அளித்து தன் நடிப்பு ராஜ்ஜியத்தைத் துவக்குகிறார் நடிகர் திலகம்.,
அக்கார்டின் இசை, இடி ஓசை, கண்ணைப் பறிக்கும் மின்னல் இவற்றினூடே சற்றும் கவலைப் படாமல் அந்த இடி மின்னலை நோக்குகிறார் நடிகர் திலகம். உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பல்லவியை துவக்குகிறார். இரண்டாம் முறை பாடும் போது பாடலின் வரிகளுக்கேற்ப தன் முகத்தை சுழற்றும் போது அதில் அந்த விரக்தி வெளிப்படுவதைப் பாருங்கள்.
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி வரிகளின் போது இரு கைகளையும் விரித்துப் பின் வலது கைகை மேலே தூக்கி கடவுளைச் சுட்டிக் காட்டி அவரைக் குற்றம் சாட்டும் போது அந்த கோபம் கடவுளின் மீதே வெளிப்படுத்துவதைத் தன் முகத்திலும் உடல் மொழியிலும் கொண்டு வருவதைப் பாருங்கள்.
இப்போது முதல் சரணத்தின் பின்னணி இசை துவங்குகிறது. மெல்ல அந்த மண்டபத்தை நோக்கிச் செல்கிறார். ஆஹா.. தொடர்வது கண்களையும் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் அந்த அற்புத போஸ்...
மின்னல் பளிச்சிட உடனே ஸ்டைலாகத் திரும்பி மின்னலை நோக்கியவாறு, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என அந்த மின்னலுக்கே சவால் விடும் அலட்சியமான பார்வை,

உடனே திரும்பி நடை.. இரண்டு மூன்று ஸ்டெப்புகள்.. மண்டபத்தில் கால் வைக்கிறார். உடனே மின்னல்.. இன்னும் அதிக அளவில் அந்த அலட்சிய நோக்கு..
இப்போது வலது கையைத் தூணின் மீது வைத்து ஒரு கோபமான நிற்றல். நின்று பார்ப்பதிலும் ஒரு ஜீவனைக் கொணடு வருவது நடிகர் திலகம் மட்டுமாகத் தான் இருக்க முடியும்.
மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை..
திரையரங்கை அதிர வைக்கும் வரிகள்... அதைப் பாடும் போது பாடகர் திலகத்தின் குரலில் வெளியாகும் கோபம்...அதைச் சொல்லும் போது இவர் முகத்தில் வெளிவரும் உணர்வு...
இதற்கு அடுத்த வரிகள் கொட்டகையின் கூரையை உடைத்து சீறிட்டுக கிளம்பும் வகையில் கரகோஷத்தை உருவாக்கும்..
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை..
இந்த வரியை இரண்டாம் முறை கூறும் போது தன் வலது கை சுட்டு விரலால் அனாயாசமாக கடவுளைச் சாடும் உடல் மொழி...
இப்போது பல்லவியில் காலம் செய்த கோலமடி வரிகளின் போது இரு கைகளையும் அகல விரித்து இரண்டையும் மேலே தூக்கும் போது கடவுளின் மீதுள்ள கோபத்தை இரு மடங்காக சித்தரிக்கிறார் நாயகன்.
அந்த கோபத்தைப் பாருங்கள்

இப்போது கோபத்தைக் கொட்டிய பிறகு மனம் உடைகிறது. விரக்தி திரும்புகிறது. நடை தளர்கிறது.
இப்போது மின்னலைக் காண கண்ணும் மனதும் கூசுகின்றன. கை தன்னையறியாமல் கண்ணை மூடுகிறது.. மெல்ல கண்களின் அந்த ஒளி வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியாக விரல்களால் கண்களைத் துடைத்துக் கொண்டே வர, நடை சற்றே வேகம் பிடிக்கிறது... இந்த நடையைப் பாருங்கள்..
இதில் தளர்வு, விரக்தி வெளிப்படுகிறது...
இப்போது அந்த சூழலை சற்றே மாற்றும் வகையில் திரை இசைத் திலகம் தன் மேதைமையை வெளிப்படுத்துகிறார். மழை நீர் சொட்டும் ஓசைக்காக அவர் பயன் படுத்தும் இசைக் கருவியின் ஒலியோடு இணைந்து ஒளிப்பதிவாளர் அந்த்த் தண்ணீர்ப் பரப்பை அப்படியே நகர்த்திச் செல்வது ... ஆஹா.. என்ன கவிதைத்துவம்... கருப்பு வெள்ளையில் காவயமே படைத்து விடுகிறார்கள் இந்த இடத்தில்...
இப்போது ஒலிக்கிறது அந்த வைர வரிகள்..
உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்...
அந்த மழை நீரின் வீச்சையும் தாண்டி அந்தக் குளிரான சூழலிலும் கண்களில் அனல் தெறிக்கிறது நாயகனின் முகத்தில்.. அதைப் பாருங்கள்.. நடிகர் திலகத்தின் கண்கள் அந்த சூழலிலும் கோபத்தையும் உஷ்ணத்தையும் வெளிப்படுத்துவதையும் அதை அவ்வளவு அருமையாக ஒளிப்பதிவாளர் படம் பிடித்துள்ளதையும்.. அவருக்கு ஒரு சபாஷ்...
அந்த வரிகள்.. கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி..
ஆஹா கவியரசின் வரிகள் அண்டம் முழுதும் எதிரொலிக்கும் ஆரவார கரகோஷத்தைத் திரையரங்கில் பெறுகின்றனவே...

மழையென்றும் வெயிலென்றும் பாராமல் நாயகன் தவிக்க, காதலியோ தன்னை மறந்து நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாள்.. இந்த இடத்தில் திரை இரண்டாகப் பிரிக்கப் பட்டு நாயகன், நாயகி இருவரையும் சித்தரிக்கிறது..
இருவர மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி..
கடவுளை நேரடியாக அட்டாக் செய்து விடுகிறார் கவியரசர்.
அதை தீர்க்கமாகத் தன் குரலில் கொண்டு வருகிறார் பாடகர் திலகம்.

தன் சுட்டு விரலின் வேகமான அசைவுகளால் அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்து இறைவன் மீது காதலர்களுக்குக் கோபத்தை வரவழைக்கிறார் நடிகர் திலகம் தன் நடிப்பின் மூலம்..
காதல் தோல்விக்கு கடவுளைச் சாடும் இரு பாடல்களில் ஒன்றான இந்தப் பாடல் சாகா வரம் பெற்றதில் வியப்பென்ன..
குலமகள் ராதை எப்போது மறுவெளியீடு கண்டாலும் சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி காதல் வயப்பட்டு தோல்வியுற்ற ஆண்களையும் திரளாக வரவழைக்கும் உன்னதத் திரைக்காவியமாக விளங்கி மாபெரும் வெற்றி காண்பதின் ரகசியம் புலப்படுகின்றதல்லவோ..
இறுதியில் நமக்குத் தோன்றும் வரிகள்..
நீ ஏன் எப்போது பார்த்தாலும் சிவாஜி சிவாஜி என்று அலைகிறாயோ தெரியவில்லை. என சிலர் கூறுவதோடு,, செல்லமாக, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை கடவுள் செய்த குற்றம் என கடவுளையும் திட்டும் அளவிற்கு ரசிகர்களை உருவாக்கிய பாடல்...
பாடலைப் பாருங்கள்.. அணுஅணுவாக ரசியுங்கள்..
கவியரசரின் வரிகளை, திரை இசைத் திலகத்தின் உயிரோட்டமான இசையை. பாடகர் திலகத்தின் ஜீவனுள்ள குரலை..

பல்வேறு தலைமுறைகளைத் தாண்டி ஏன் இன்னும் ரசிகர்களை நடிகர் திலகம் பெறுகிறார் என்பதற்கு அத்தாட்சியான பாடலை...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
31st May 2015, 06:10 AM
#444
Junior Member
Platinum Hubber
எம்ஜிஆர் பாடல்கள் என்றென்றும் ...
உற்சாகம்
நேர்மறை சிந்தனை
எளிமையான வரிகள்
சமூக சீர் திருத்த கருத்துக்கள்
இனிமையான இசை
மனதில் ஊடுருவும் எம்ஜிஆர் பிம்பம
நினைவில் நிலைத்து நிற்கும் காட்சிகள் .
இப்படி பல காரணங்கள் சொல்லி கொண்டே போகலாம் . என்னதான் உயர்கல்வி பெற்று , உயர்ந்த இடத்தில இருந்தாலும்
வயது ஏறிக்கொண்டே போனாலும் ,,இயற்கை குணங்கள் ( ஆத்திரம் , வன்மன் , கோபம் , எரிச்சல் ,தூண்டுதல் } கொண்டோர்களை மக்கள் திலகம் தன்னுடைய பாட்டின் மூலம் அறிவுரை கூறியுள்ளார் . திருந்துபவர்கள் உணர்வார்கள் .திருந்தாத உள்ளங்கள் ?
கடவுள் செய்த பாவம் .....
கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம்
யாவும் என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
மனிதன் கொண்ட கோலம்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான் ..........
கடவுள் செய்த ................
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே
முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
கடவுள் செய்த ................
கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........
கடவுள் செய்த ................
-
31st May 2015, 06:47 AM
#445
Senior Member
Seasoned Hubber
வாங்க எஸ்.வி ஜி.
நலம்தானே
காலை வணக்கம் எல்லோருக்கும்
-
31st May 2015, 06:59 AM
#446
Senior Member
Seasoned Hubber
இசையரசியின் அருமையான பாடல்களின் வரிசை. அருமை மற்றும் அரிதானவை
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
31st May 2015, 07:00 AM
#447
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
31st May 2015, 07:07 AM
#448
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி
இதோ இசையரசியும் ராட்சசியும் கலக்கும் படல்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
31st May 2015, 08:13 AM
#449
Senior Member
Diamond Hubber
ஜி!
'பொண்ணு குடிச்சா' பாட்டை போன வாரம் கூட நடைப் பயிற்சியின் போது கேட்டுக் கொண்டே நடந்தேன். இப்போது நீங்கள் பதித்தே விட்டீர்கள். thanks.
-
31st May 2015, 08:20 AM
#450
Senior Member
Diamond Hubber
விஜயா, சோவின் 'ஒரு அசடாட்டம்', சொர்ணாவின் 'நன்றி சொல்ல வார்த்தை இல்லை கண்ணனே', சௌகார் சுஜாதாவின் 'மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு, 'என் செல்லக்கிளி' என்று விஸ்வரூபம் எடுத்து விட்டீர்களே ஜி! அனைத்தும் அரிதானவைதான்.
கொண்டாங்க உங்க முதுகை. சொறிந்து விடுகிறேன்.
புரியுதா?
Bookmarks