-
3rd June 2015, 07:10 PM
#11
Junior Member
Seasoned Hubber
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
நானும் அரசியல் பற்றிய கட்டுரைகளில் தகவல் பிழைகள் இருந்தாலும் சுட்டிக்காட்ட விரும்புவதில்லை. நண்பர் திரு.குமார் அவர்களுக்கு நீங்கள் அளித்துள்ள விளக்கத்தில் புரட்சித் தலைவர் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதால் சொல்ல விரும்புகிறேன். அதில் தகவல் பிழை என்று சொல்லவில்லை. ஆனால், தவறான அர்த்தம் வரும் அபாயம் உள்ளது.
//தஞ்சை தொகுதியை தேர்வு செய்ததும், முதலில் ஆதரவு தருவதாக சொன்ன எம்ஜிஆர் அவர்கள் பிறகு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்திராகாந்தி அவர்கள் வேட்பாளராவதற்கு தருவதாக சொன்ன ஆதரவை விலக்கி கொள்ள பிறகு சிங்காரவடிவேலு போட்டியிட்டது பற்றியெல்லாம் இங்கே நிறைய பேசியிருக்கிறோம். //
என்று கூறியுள்ளீர்கள். இந்திரா காந்தி அம்மையாருக்கு முதலில் ஆதரவு தருவதாக சொன்ன புரட்சித் தலைவர் பின்னர் ஆதரவு தர மறுத்தது (தஞ்சையில் மட்டும்) உண்மை. தஞ்சையில் இந்திரா காந்தி போட்டியிட்டால் அவரை எதிர்த்து கருணாநிதி போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகின. அப்படி போட்டியிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்திராகாந்திக்கு (தஞ்சையில் மட்டும்) ஆதரவு தர முடியாது என்று புரட்சித் தலைவர் கூறினார்.
அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு இந்திரா காந்தி அம்மையார் வந்தபோது நடந்த கொலைவெறித் தாக்குதலும் பலர் படுகாயமடைந்ததும் திரு.நெடுமாறன் அவர்கள் இந்திராவை காப்பாற்றியதும், காங்கிரஸ் பிரமுகர் அப்துல் காதர் என்பவருக்கு கண்பார்வை போனதும் யாவரும் அறிந்ததே. அதுபோன்ற பயங்கரம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதால்தான், தஞ்சையில் (மட்டும்)இந்திராவுக்கு புரட்சித் தலைவர் ஆதரவு தர மறுத்தார். நிலைமைகளை புரிந்து கொண்டு இந்திராவும் போட்டியிடவில்லை.
அதே நேரம், சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்திக்கு புரட்சித் தலைவர் ஆதரவு தந்ததோடு திரு.முசிறிப்புத்தன் தலைமையிலான குழுவை தேர்தல் பணிகளுக்காக அனுப்பி வைத்தார். அவர்களது தேர்தல் பணிகளுக்காக பின்னர், அவர்களை இந்திரா காந்தி பாராட்டினார் என்பதும் உண்மை.
‘சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தஞ்சையில் இந்திராகாந்தி அம்மையாருக்கு ஆதரவை புரட்சித் தலைவர் விலக்கிக் கொண்டார்’ என்று மட்டுமே சொன்னால், அவர் வார்த்தை மாறிவிட்டார் என்பதுபோல தவறான அர்த்தம் வருகிறது. அப்படியே புரிந்து கொள்ளப்படும் அபாயமும் உள்ளது. என்பதற்காகவே இதை சுட்டிக்காட்ட வேண்டி வந்தது.
நீங்களும் சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
3rd June 2015 07:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks