-
3rd June 2015, 06:33 PM
#571
Senior Member
Diamond Hubber
சி.க,
'நஸர் உத்தார்னேகேலியே' பழைய கவிதை என்றாலும் புதுக் கவிதை வகையை சார்ந்தது. நன்னாயிட்டு. உம்முடைய 'வியட்நாம் வீடு' பதிவு மனதை பிசைகிறது. ஒன்று இப்படி இம்சிக்கிறீர். இல்லை 'ஜம்'சிக்கிறீர்.
ரெண்டுமே டாப்தான்.
-
3rd June 2015 06:33 PM
# ADS
Circuit advertisement
-
3rd June 2015, 06:34 PM
#572
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd June 2015, 06:52 PM
#573
Senior Member
Senior Hubber
//உம்முடைய 'வியட்நாம் வீடு' பதிவு மனதை பிசைகிறது. ஒன்று இப்படி இம்சிக்கிறீர். // ஓய் ஒம்ம அளவுக்கு ந.தி பத்தி எழுத வராதுங்காணும்.. நன்னா இருக்கா இல்லியா..
-
3rd June 2015, 07:04 PM
#574
Senior Member
Diamond Hubber
கலை,
நன்றி! ஷார்ப் அண்ட் ஷார்க் இரண்டுக்கும் சொந்தக்காரரை, எதிரணி தலைவராய் இருந்தாலும் அவருடைய பிறந்த நாளில் அவரை மறக்காமல் நினைவு வைத்து அவர் இயற்றிய பாடல் அதுவும் மிக அரிதான, கூடவே எனக்கும் பிடித்த பாடலை அளித்தததின் மூலம் நிஜமாகவே அறிவில் பெரிய மனிதர் (தப்பிச்சுட்டேன்)
என்று நிரூபித்து விட்டீர்கள்.
அருமையான பாடலைத் தந்திருக்கிறீர்கள் கலை. நன்றிகள். ராதா அட்டகாசம். ஆனால் இந்தப் பாடலில் ஏனோ குள்ளமாய்த் தெரிவார்.
இன்னும் சிரிக்க வைத்தபடி யோசிக்க வைக்கும் சில வரிகள்.
கலக்கம் வருது எதனாலே
கலயம் பொங்குது அதனாலே
சொர்க்கம் தெரியுது எதனாலே
மயக்கம் வருது அதனாலே
கண்ணைக் கவருது எதனாலே
இவ கன்னிப் பெண்ணு அதனாலே
'கன்னிப் பொண்ணு ம்ம்ம்' (என்று இழுப்பார் 'ரகளை'ராகவன்)
கேலியான கேள்விகள் வினயமான பதில்கள் என்று வித்தியாசப் பாடல் அவருடைய தனி முத்திரையோடு.
இந்தப் படத்தில் இன்னொரு அருமையான பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. புகழ் பெற்ற பாடல் இல்லை. ஆனால் என் நெஞ்சில் நிலைத்து நின்று விட்ட பாடல்.
ராட்சஸி குழுவினருடன் பாடிய
அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு
நீ விளையாட பல்லவத்தில் மடி இருக்கு
தலை காக்க நரசிம்மன் துணையிருக்கு
கண்ணே கனியமுதே உன்னால் எந்தன் உயிர் இருக்கு.
ஐலேசா ஐலசா ஐலேசா
என்ன அழகான மீனவ சமூகப் பாடல்!
இதோ நீங்கள் கேட்ட பாடல்.
பாடல் 1.07இல் ஆரம்பிக்கும் கலை சார்.
Last edited by vasudevan31355; 3rd June 2015 at 07:06 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd June 2015, 07:11 PM
#575
Senior Member
Senior Hubber
ரவி கோவிச்சுக்காதீங்க கோவிச்சுக்காதீங்க. கலையோடு டூ விட்டுட்டேன் அவரோட வயச பேசற விஷயத்தில. நிறுத்திட்டேன். அப்புறம் உங்க வயசைப் பத்தி பேசுனா கோபால் அண்ணாத்தை மட்டுமில்லை, சாதுவா இங்க இருக்கிற பலரும் சேதுவா மாறிடுவாங்க. அதனால இப்ப விட்டுடறேன். இந்தாங்க பிடிங்க இன்னொரு பூவின் பாடல்
பூவின் பாடல் 22: "பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி. பூவ பறிக்கவும் நேரமிருக்கா."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~
சரத்குமாரும், அழகான மீனாவும் ஆட சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைத்து பாடும் நிலாவும் பாட்டை நிறுத்தி மறைந்த நிலா சொர்ண லதாவும் பாடியிருக்கிறார்கள். நல்ல பாடல்தான். அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் டெம்போ ஏற்றிக் கொண்டு போயிருக்க வேண்டுமோ. என்னவோ தெரியவில்லை. பாடல் முடிந்தபின் சற்று ஏமாற்றமாக இருப்பது போல் ஒரு உணர்வு. மத்தபடி நீங்க கேட்காத பாட்டையா இங்க நான் போட்டுட்டேன், எனக்கு எதுவும் கூலி தர.
Last edited by kalnayak; 3rd June 2015 at 07:20 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
3rd June 2015, 07:14 PM
#576
Senior Member
Diamond Hubber
//வாசு சார் 4 நாட்களுக்கு முன் , ‘மதுரகானம் திரி இளைப்பாறும் திரி. அங்கு சண்டை போட முடியாது. பாரபட்சம் காட்ட முடியாது’ என்று இன்னொரு திரியில் கூறியிருந்தார்//
கலை சார்,
நடிகர் திலகம் திரியை மற்ற சாதாரண திரிகள் போல 'இன்னொரு திரி' என்று தாங்கள் சாதரணமாக குறிப்பிட்டிருக்க வேண்டாம் என்பது தாழ்மையான கருத்து. 'நடிகர் திலகம் திரி' என்றே தாங்கள் குறிப்பிட்டிருக்கலாம். ஹப்பில் எப்போதும் கொடி கட்டிப் பறக்கும் முதன்மையான திரியை 'இன்னொரு திரி' என்று பொத்தம் பொதுவாக நீங்கள் அறியாமல் சொல்லியிருந்தால் கூட என் மனது என்னவோ அதை ஏற்க மறுக்கிறது அது தவறு இல்லை என்று தெரிந்த போதும் கூட.
தவறாக ஏதும் பட்டால் மன்னித்து விடுங்கள்.
என்ன சார் செய்வது? நாங்கள் தொழும் தெய்வம் ஆயிற்றே! அப்படியே பழகி விட்டேன்... இல்லை 'விட்டோம்'.
Last edited by vasudevan31355; 3rd June 2015 at 07:19 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd June 2015, 07:32 PM
#577
Junior Member
Seasoned Hubber
வாசு சார்,
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். உள்நோக்கத்தோடு சொல்லவில்லை. வேகமாக எழுத்து வேகத்தில் வந்து விட்டது. உங்கள் மனம் புண்படும்படி கூறியதற்கு மன்னிக்கவும். நடிகர் திலகம் திரி என்றே குறிப்பிட்டிருக்கலாம். இனி அப்படியே குறிப்பிடுகிறேன். மன்னிப்பு கோர வேண்டியது நான்தான். நீங்கள் அல்ல. மீண்டும் மன்னிக்கவும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd June 2015, 07:34 PM
#578
Senior Member
Senior Hubber
ரவி,
கருவின் கருவில் உங்கள் புண்ணியத்தில் நல்ல ஆன்மீக கதைகளும், அருமையான தெலுங்கு, மலையாளப் பாடல்களும் கேட்டு தாயைப் பற்றி நிறையவே சிந்தித்து அதிகமாக புண்ணியம் செய்து கொள்கிறோம். நன்றி.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
3rd June 2015, 07:40 PM
#579
Senior Member
Senior Hubber
ராஜேஷ் ஜி,
மன்னிக்கவும் உங்கள் பக்திப் பாடல் தொடருக்கு என்னுடைய கருத்துக்களை உடனடியாக பதியாததற்கு. நிஜமாக பக்திப் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். நிச்சயமாக இவ்வளவு விவரங்களோடு என்னால் எழுதி இருக்க முடியாது. உங்களுக்கே தெரியும் தப்பும் தவறுமாய் நான் எழுதி, நீங்கள் திருத்தவோ வாசு கூடுதல் விவரம் தரவோ கேட்டுக் கொண்டிருந்திருப்பேன். இதெல்லாம் இல்லாமல் அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது நீங்கள் எழுதும் பக்தி தொடர். வாழ்த்துகள் மற்றும் நன்றியுடன்.
நிறைய எழுத வேண்டும் என ஆசை. ஆனால் நேரமின்மை, இந்த சிறிய பாராட்டு மற்றும் நன்றி அறிவித்தலோடு முடிக்க வைக்கிறது.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
3rd June 2015, 07:41 PM
#580
Junior Member
Seasoned Hubber
அவசரத்தில் நன்றி சொல்ல மறுந்து விட்டேன் வாசு சார். பாடலை தரவேற்றியதற் நன்றி. நானும் திரு.ராதா குள்ளமாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். சற்று முன்னோக்கி வளைந்ததால் இருக்குமோ?
கல்நாயக், டூ விட்டாலும விடுவீர்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். அப்படித்தானே?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks